பதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Temporary Block இல் இருந்து பாதுகாப்பு பெறுங்கள் - Cancel All pending Friend Request in One Click

Facebook இப்போது கடுமையான கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்து உள்ளது. கட்டுப்பாடுகளின் விளைவாக தற்காலிகமாக பல தடைகளையும் சில சமயங்களில் நிரந்தரமாவும் உங்களை தடை செய்கிறது. தானாக கண்டறியும் Facebook இன் algorithm பற்றி யாரும் அறிந்தது இல்லை.  ஆனால் பலரது அனுபவங்களை கேட்கும் போது ஓரளவு ஊகிக்க கூடியதாக உள்ளது. இதில் பிரதான பிரச்சனை பதில் அளிக்கபடாத friend request அதிகரிக்கும் போது நீங்கள் 2 நாளில் இருந்து 1 மாதம் வரை புதிய நண்பர்களை நீங்களாக இணைக்க தடை விதிக்கப்படும். இவ்வாறு பதில் அளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்குவது பற்றியும், கணக்கு இடை நிறுத்த படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் சில வழிகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

உங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - YouTube Feed Widget to Blogger

இப்போது youtube பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் கவனமும் திரும்புகிறது. நீங்கள் உங்களுக்கு உரிய வலைப்பூக்களில் போடும் பதிவுகளை எவ்வாறு இன்னொரு வலைப்பூவில் feed மூலம் காட்சி படுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் YouTube channel இல் நீங்கள் தரவேற்றும் காணொளிகளை உங்கள் வலைப்பூக்களில் feed போல காட்சி படுத்தும் ஒரு முறையை இப்பதிவில் காணுங்கள்.

Wordpress - Self Hosting இல் ஓர் அறிமுகம்

Wordpress பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. CMS என சுருக்கமாக அழைக்கப்படும் Content Management System இல் இதுவும் ஒன்று.பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட wordpress என்பது wordpress.com இல்  subdomain மூலம் பயன்படுத்த கூடிய சேவையே ஆகும். ஆனால் இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த சேவையை விட Blogger எவ்வளவோ மேலானது.  இப்போது பார்க்க போவது self hosting wordpress சேவை. இப்பதிவின் பின்னர் முதலாவது உங்கள் Wordpress தளத்தை உருவாக்க முடியும்.

Copy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு

இது ஒரு தொழில்நுட்ப பதிவல்ல. இப்பதிவின் நோக்கம் இத்தளத்தில் இருந்து copy - paste செய்யும் தளங்களின் அட்டகாசங்களை குறிப்பிடுவதே ஆகும்.இத்தளத்தில் பிரதி செய்வதை தடுக்கும் எந்த முறைகளும் இல்லை. ஆனால் எதை எங்கிருந்து பிரதி செய்து எங்கு paste செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் முறை உள்ளது. அவ்வாறு கண்காணித்ததில் இந்த மானம் கேட்ட பிழைப்பை தொடர்ந்து நடத்தும்  http://tamilspace.com  யின் நடவடிக்களை குறிப்பிடுகிறேன்.

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Nobelprize.orgNobel Prize பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அறிவியல் துறையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புக்களை கௌரவிக்கும் விதமாக Dynamite வெடி பொருளை உலகுக்கு அளித்து அதில் கிடைத்த பெரும் தொகையான பணத்தை வருடம் தோறும் வழங்குமாறு செய்தவர் Alfred Nobel ஆவார். வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருது ஏனைய விருதுகளில் இருந்து முக்கியம் பெறுகிறது. இவர்கள் தமது இணைய பக்கத்தில் சாதாரண மக்களும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை கற்க வேண்டுமென்ற நோக்கோடு பல online games களை தமது தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவை தொடர்பாக கொஞ்சம் பார்ப்போம்.

2012 இல் வெளியாகிய Animated - Interactive Google Doodle களின் தொகுப்பு

இந்த ஆண்டில் மட்டும் Google ஏராளமான Doodle களை  வெளியிட்டது. இதிலும் பல நாடுகளுக்கு பிரித்து பிரித்து வெளியிட்டது. பொதுவாக படங்களாகவும் அவ்வப்போது இயங்கும் சின்ன சின்ன படங்கள் அல்லது animations களாகவும் வெளியிட்டது. பொதுவாக ஒரு வேறு நாடுகளில் தோன்றியதை நீங்கள் காண  வாய்ப்பு கிடைத்து இருக்காது. அத்துடன் தினமும் இணையத்தில் இணையாதவர்கள் இதை தவர் விட்டு இருப்பார்கள் .  உங்கள் அனைவருக்கும் இந்த ஆண்டில் வெளியாகிய இயங்க கூடிய Doodles களில் மிகவும் கவர்ந்த சில பல Doodles தொகுப்பை இங்கே தொகுத்து வைத்து உள்ளேன். நீங்களும் இவற்றை இயக்கி அல்லது விளையாடி பாருங்கள்.

2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2

2012 இறுதியில் இருக்கிறோம். இப்போது பல தளங்களும் இந்த வருடத்தில் என்ன சாதித்தோம் என்பதை சொல்கின்றன. Google லும்  தான் செய்த சாதனைகளை குறிப்பிடுகின்றது. அவ்வாறே  அவ்வப்போது Google தனது  முகப்பில் அன்றைய நாளின் சிறப்பை குறிக்கும் விதமாக ஒரு Doodle  றிமுகப்படுத்தும்.  இந்த வருடம் அறிமுகமாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்த, அதிகம் கவனிக்கபட்ட  Doodles பட்டியல் படுத்தபட்டு உள்ளது. இது வரை நீங்கள் சில சமயம் இவற்றை தவற விட்டிருக்கலாம். பெரும்பாலும் இவை நீங்கள் இயக்கி / விளையாட கூடிய வகையில் HTML5 இல் அழகாக வடிவமைத்து இருப்பார்கள். நீங்களும் இங்கே தவற விட்ட Doodles களை விளையாடி பாருங்கள்.

வலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள்

இன்று பலரும் வலைப்பூக்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் அனைவரின் தெரிவும் Blogger தான். ஆனாலும் தமக்கு தெரிந்த வேறு பலரின் வலைப்பூக்களை முன்னுதாரணமாக கொண்டு தமது Blogger இனை வடிவமைக்கிறார்கள். இவ்வாறு அழகு என்ற பெயரில் அலங்கோலமாக வடிவமைப்பது வாகர்களுக்கு இடைஞ்சலை தரும். பொதுவாக வண்ண தெரிவு, ஒழுங்கமைப்பு பற்றி இதில் குறிப்பிடவில்லை.  சில அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி விளக்குகிறேன்.

2012 இல் பிரபலமான Google Doodles -10 (பாகம் 1)

அவ்வப்போது Google முகப்பில் அன்றைய நாளின் சிறப்பை குறிக்கும் விதமாக ஒரு Doodle அறிமுகப்படுத்தும். கிட்டதட்ட 2012 முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த வருடம் அறிமுகமாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்த Doogles பட்டியல் படுத்தபட்டு உள்ளது. இது வரை நீங்கள் சில சமயம் இவற்றை தவற விட்டிருக்கலாம். பெரும்பாலும் இவை நீங்கள் இயக்கி / விளையாட கூடிய வகையில் HTML5 இல் அழகாக வடிவமைத்து இருப்பார்கள். நீங்களும் இங்கே தவற விட்ட Doogles களை விளையாடி பாருங்கள்.

Virtual Clone Drive என்றால் என்ன? முக்கியத்துவம் + பயன்பாடு

Virtual Clone Drive என்றால் என்ன?, Virtual Clone Drive இன் முக்கியத்துவம் என்ன? இதை எவ்வாறு பயன் படுத்துவது தொடர்பாக இந்த பதிவில் காணுங்கள். அதற்கு முதல் .iso என்னும் வகை files தொடர்பாக அறிந்து இருப்பீர்கள். சுருக்கமாக சொன்னால் iso வகை files இனை திறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் Virtual Clone Drive.

அங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்கம் + உதவி - Rovio Angry Bird Games Full Download + Help

Angry Bird பற்றி அதிகளவு பகிர்ந்து விட்டோம். பலருக்கு முன்னைய , அதாவது Angry Bird Session, Space, Rio மற்றும்  Bad piggies விளையாட்டுக்களை விளையாடும் ஆர்வம் வந்து விட்டது. இதனால் முன்னைய அனைத்து  விளையாட்டுக்களையும் தொகுத்து புதிய பக்கத்தில் இங்கு  இணைத்தேன். அவ்வாறு செய்தது பலருக்கும் பயன் அளித்தது.  தினமும் வயது வேறு பாடு இன்றி தரவிறக்கி விளையாடுகிறார்கள்.என்றாலும் பலரால் patch முறை தொடர்பாக விளங்கி கொள்ள முடியவில்லை.  அவர்களுக்காக இதோ..

தொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4

ஒரு சிறு இடைவெளியின் பின்னர் சந்திக்கிறேன். கடந்த வாரத்தில் நிகழ்ந்த பயனுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இப்பதிவு, என் Twitter பக்கத்தில் பகிர்ந்த செய்திகளின் விரிவுகளே இங்கே உள்ளன. இப்பதிவில், Adsense தொடர்பாக வந்துள்ள மாற்றங்கள் , Nasa வெளியிட்ட சில புகைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பல செய்திகளை கீழே காணுங்கள்.

Do Not Track Me ! உங்கள் தகவல்களை இணையத்தில் மறையுங்கள் !

DNT1Windows 8 வரவுக்கு சில காலம் முதல் Do Not Track Me என்ற சொல்லாடல் இணையத்தில் அதிகளவு அடிபட்டது. ஆனால் இன்று சற்று குறைந்து விட்டது. இந்த பதிவின் மூலம் Do Not Track Me என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு எவ்வாறு இணையத்தில் உறுதி படுத்த படுகிறது? இதன் எதிர் காலம் என்ன? என்பவை தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம்.

ஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில் Golden Gate & Tower Bridges

பிரம்மாண்ட பாலங்கள் என்றவுடன் ஞாபகம் வருவது இங்கிலாந்தில் உள்ள Tower Bridge , மற்றும் அமெரிக்காவில் உள்ள Golden Gate Bridge. இவை இரண்டுமே வரலாற்றிலும் சரி, பொறியியலிலும் சரி சிறப்பு தன்மை வாய்ந்தவை. இப்பாலங்களை Google தனது Street View இல் இணைத்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும் பலர் இதை பார்த்தது இல்லை. இங்கே நீங்கள் அந்த இரு பாலங்களையும் காணுங்கள்.

Google Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக்க - Save to Drive Extension

Google தரும் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை. Google chrome மற்றும் Google Drive பயன்படுத்துபவர்களுக்கான ஒரு அவசிய  Extension  பற்றி பார்ப்போம். ஆயிரக்கணக்கான  Extensions,  Google chrome பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கிறது.  அவரில் மிகவும் அவசியமான ஒரு Extension  தான் Save to Drive. இதன் மூலம் என்ன செய்யலாம்? இதன் பயன்கள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இவை தொடர்பாக இப்பதிவில் காணுங்கள்.

மிருககாட்சிச்சாலையிலும் சுற்றி பார்க்கலாம் - Taronga Zoo -Australia on Google Street View

Google, தனது street view இல் தினமும் புதுமைகளை செய்து வருகிறது. அனைத்து கண்டங்களையும் உள்ளடக்குகிறது.. அண்டவெளியை கூட கண்முன் விரிக்கிறது... கடலுக்கு அடியில் சுற்றி காட்டுகிறது.. மலையில் கூட ஏறுகிறது. இப்படி பற்பல புதுமைகள்... ஆனால்இப்போது  பார்க்க போவது புதுமை அல்ல.. Australia நாட்டில்  உள்ள   மிருக காட்சி சாலை - Zoo  ஒன்றை முழுவதுமாக தனது  street view இல் அடக்கி உள்ளது.இதற்கு முதல் Amazon  காடுகளில் நம்மை கூட்டி சென்றாலும் அங்கு வன விலங்குகளை காண முடியவில்லை.

ஆர்டிக்கையும் இனி சுற்றி பார்க்கலாம் - Google Street View on The Arctic

Google Street View Travels To The Arcticகடந்த June மாதம் முதல் கனடாவை அண்டிய பகுதிகளில் உள்ள ஆர்டிக் சமுத்திரத்தில் Google street view குழுவினர் அங்குள்ள இயற்கை காட்சிகளை தமது Google map இல் இணைக்க ஆரம்பித்தனர். இப்போது இந்த திட்டம் ஓரளவு முடிவடைந்து விட்டது. அதன் இறுதியாக இப்போது பொது மக்கள் பார்வைக்கு காட்சி படுத்தி உள்ளனர். அந்த இயற்கை காட்சிகளை நீங்களும் கண்டு களியுங்கள். வழமையான Mouse அசைவுகள் மூலம் இவற்றை காணுங்கள். இவற்றை பார்க்கும் போது கொஞ்சம் குளிர்ச்சியாக தான் இருக்கிறது -கண்களுக்கு

அட்சென்ஸ் - அட் ப்லோக்கர் - அனல்ய்டிக் Adsense - Ad Blocker - Analytic

நீண்ட நாட்களின் பின்னர் Google Analytic தொடர்பான பதிவில் சந்திக்கிறேன். தலைப்பை பார்த்து தடுமாறுகிறீர்களா? அதன் அர்த்தம், Google Adsense  பாவனையாளர்களின் எதிரி ஆகிய அட் ப்லோக்கரை பயன்படுத்தும் பாவனையாளர்களை Google Analytic  மூலம் கண்டறிதல் ஆகும். கண்டறிந்து என்ன செய்வது? இவர்களை தடுக்க வேண்டாமா? தடுக்கும் முறைகள்  பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் இதற்கு முதல் Adblock  பாவனையாளர்களை உங்கள் பக்கங்களில் இருந்து தடை செய்வது குறித்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவில் குறிப்பிட்ட முறை காலபோக்கில் புதிய Browers versions  இல் இயங்குவது நின்று விட்டது. இப்போது பல புதிய முறைகள் அறிமுகமாகி உள்ளது.

தொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 3

இந்த வாரமும் கடந்த வாரத்தில் நடை பெற்ற சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்கள், செய்திகள் மற்றும் சில தகவல்களுடன் இப்பதிவு மூன்றாவது தடவையாக உங்களை சந்திக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் தொகுத்து தந்து உள்ளேன். பெரிதாக இருந்தால் நீங்கள் சலித்து விடுவீர்கள்  என்பதால் சுருங்க சொல்லி தேவையானவர்கள் - ஆர்வமுள்ளவர்கள் தொடர இணைப்புக்களை வழங்கி உள்ளேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking

நீங்கள் எந்த உலாவியை பயன்படுத்தினாலும் நீங்கள் பார்க்கும் பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றி உங்கள் இணைய இணைப்பு வேகத்தினை பாதிப்பதுடன், உங்கள் தகவல் பரிமாற்ற அளவுகளில் பெரும்பகுதியை வீணடிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் உங்கள் உலாவியை அடிக்கடி செயல் இழக்கவும் செய்கின்றன. இந்த பதிவு நீங்கள் எந்த Browser பாவித்தாலும் இவ்வாறான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்வது தொடர்பாக விளக்குகிறது.

தொழில்நுட்ப துளிகள் - செய்திகள் - மாற்றங்கள் - 2

சில முக்கிய Technology மாற்றங்கள் மற்றும் சில தொழில் நுட்ப அறிமுகங்கள் தொடர்பாக 2 வது தடவையாக உங்களை சந்திக்கிறேன். வழமை போல புதிய விடயங்கள் பலவற்றை தொகுத்து தர முயற்சித்து உள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்பதிவை  ஒரு நாள் பிந்தி வெளியிட வேண்டியதாகி  விட்டது. அடுத்த வாரம் சரியாக வெளியிட முயற்சிக்கிறேன்.

Windows 8 - Keyboard Shortcuts

Windows 8 அறிமுகமாகியது பழைய கதை. இப்போது மெல்ல மெல்ல பலர் மாற ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு உதவும் நோக்குடன் இந்த keyboard   குறுக்கு விசைகளின் தொகுப்பு. Right click  செய்து சேமித்து கொள்ளுங்கள். நாளடைவில் பழக்கமாகி விடும்.

Windows 7 பாவனையாலர்களுக்கான Internet Explorer 10 வெளியாகியது

Internet Explorer 10 Release PreviewMicrosoft பலத்த எதிர் பார்ப்புடன் Windows 8  இனை அறிமுகம் செய்தது. என்றாலும்  Windows 7 பாவனையாளர்களை நிராகரிக்க முடியவில்லை. அத்துடன் Internet Explorer  பாவனையை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டி தேவை ஏற்பட்டது. அதனால் Windows 7 பாவனையாலர்களுக்கு IE 10 இனை முற்பார்க்கை நிலையில் நேற்று அறிமுகப்படுத்தியது. அனைத்து Windows  7 பாவனையாலர்களும் இலகுவாக தரவிறக்கி நிறுவக்கூடிய வகையில் இதை வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதை நிறுவ பின்வரும் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட கணணி அவசியம்.

தொழில்நுட்ப துளிகள் - இந்தவார முக்கிய தொழில்நுட்ப செய்திகள் - மாற்றங்கள் - 1

முன்பை போல இப்பொழுது பதிவுலகுக்கு அடிக்கடி வர முடிவதில்லை. பெரிதாக சொல்லுவதற்கு நிறைய இருந்தாலும் சொல்ல முடிவதில்லை. தினமும் நடைபெறும் தொழில்நுட்ப மாற்றங்களை சேர்த்து அவ்வப்போது போது வெளியிடலாம் என்று எண்ணி இதை பதிகிறேன். இதில் அனைத்தும் நான் Twitter பக்கத்தில் சொன்னவை தான். பலர் twitter பாவிப்பதே இல்லை. இனி facebook இலும் இதை பகிர முடியும் என நினைக்கிறேன். சில முக்கிய Technology மாற்றங்களை இப்போது பார்ப்போம்.

உங்கள் விமர்சன பதிவுகளுக்கு கூகிள் தேடலில் நட்சத்திரங்களை நீங்களே இணைப்பது எப்படி? Add (Star) Rating to Your Reviews on Google Search Result

இன்று வலை பதிவுகளை எழுதும் தமிழ் பதிபவர்கள் அதிகரித்து உள்ளனர். பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுபவர்கள், கவிதை எழுதுபவர்களை அதிகம் காணலாம். பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இந்த விமர்சனம் எழுதுபர்கள் கூகிள் தரும் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். மென்பொருள் என்றாலும் சரி,புத்தகம் என்றாலும் சரி தமது விமர்சனத்துக்குரிய Rating புள்ளியை Google Search result  பகுதியில் தெரிய வைக்கிறார்கள். இவ்வாறே நீங்கள்  இனி எழுதும் விமர்சனங்களுக்கு எவ்வாறு இந்த வசதியை சேர்ப்பது என்று பார்ப்போம்.

புதிய Angry Birds Star Wars - இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்

Angry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. பல million தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படித்தவை இவ்வகை விளையாட்டுக்கள். என்னதான் பற்பல Video Games பல GBகளில் வந்தாலும் வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது..இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் விளையாட ஆசை இலவசமாக இல்லை?

மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch Youtube streaming in Slow Internet Speed

அனைவருக்கும் Youtube இல் காணொளிகளை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் பல சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.பொதுவாக YouTube homeஇரவில் தான் நேரம் கிடைக்கும் ஆனால் இந்நேரம் இணைய இணைப்பு வேகத்தில் சுருங்கி விடும்.அடுத்தது  coverage பிரச்சனை. Network   Receiver, Busy என்றால் tower தானாகவே coverage தூரத்தை  குறைந்து கொள்ளும். இப்படி பல பிரச்சனைகள். ஆனாலும் youtubeஇல் பல தரமான காணொளிகள் , திரைப்படங்கள் என பல உண்டு. இவற்றை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.

விண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - Searching Tips in Windows 7

Windows 7 என்றாலே புதுமை. அதில் ஒரு சிறப்பான வசதி உடனடியாக தேடக்கூடியமை ஆகும். உங்கள் கணனியில் அதிகளவு files சேரும் போது  அவற்றில் உங்களுக்கு வேண்டியதை தேடுவது சிக்கலானது. பொதுவாக இணைய தேடு இயந்திரங்கள் எப்படி சில விசேட கட்டளைகளை பயன்படுத்தி தேடுடி மிக துல்லியமான முடிவுகளை தருகின்றனவோ அதே போல தான் windows 7 இலும் அதே வசதி உள்ளது.windows 8 அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் இதை பற்றி  பலர் அறிந்தது  இல்லை.  உங்கள் தேடல்களை இலகுவாக்க இங்கே சுருக்கமாக இதை காணுங்கள். சில தடவைகள் ப்யன்படுத்தும்  மனபபாடமாகி விடும். விரும்பினால் Right click மூலம் உங்கள் கணனியில் இந்த படத்தை சேமித்து அவ்வப்போது நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software

alternatives to audacityஇன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில்  Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும்  oscar விருதிலும்  இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா? நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.

இப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு - நீங்களும் சுற்றி பாருங்கள்

முதலில் கூகிள் data centers என்றால் என்ன என்று தெரியுமா? இதை அறியாத இணைய பாவனையாளர்கள் இருக்க முடியாது.  நீங்கள் தரவேற்றும் காணொளி என்றாலும் சரி புகைப்படம் என்றாலும் சரி இவை அனைத்தும் கூகிள் செவேர்களில் சேமிக்கப்படும். இவ்வாறான சேவர்கள் பல சேர்ந்த இடம் தான் data centers. இவை மிகுந்த பாதுகாப்பு உடையவை. Google இன் பிரதான data servers அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அதே போல facebook servers கிரீன்லாந்து பகுதியில் கடலுக்கு அடியில் உள்ளது. சாதாரண மக்கள்  நுழைய முடியாத இப்பகுதிகளை கூகிள் முதன் முறையாக தனது streetview இல் காட்சி படுத்தி உள்ளது. அத்துடன் தனது servers எப்படி பாதுகாக்கப்படுகின்றன? , எப்படி அங்கே வேலை செய்கிறார்கள்?, எப்படி சூழலுக்கு இயைபாக்கமாக servers அமைந்து உள்ளது? இப்படி பல தகவல்களை வழங்குகிறார்கள்.

காணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet

காணொளி, ( video) என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்து காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் பைட்டுகளிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகிறன. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம். நீங்கள் பலவிதமான வீடியோக்களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இவை பற்றிய அடிப்படை அறிவு அனைவரிடமும் இருக்கிறதா என்றால் இல்லை என்றாய் கூற வேண்டும் .

வலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடிவமைத்து இணைப்பது எப்படி? Google Custom Search Engine to Blogger


Google Custom Search Engine பற்றி அறிந்து இருப்பீர்கள். நீங்கள் உங்கள் வலைபூக்களுக்கு Google தரும் Search Engine   Widget மூலம் இதை இணைத்து இருப்பீர்கள். ஆனாலும் இவை பெரும்பாலும் உங்கள் வலைதளங்களில் இருந்து மட்டும் தேடல் முடிவுகளை தருவதில்ல்லை. அத்துடன் இவற்றை உங்களால் வடிவமைக்கவும் முடிவதில்லை. இப்பதிவின் மூலம் உங்கள் தேடும் பொறியை நீங்களே வைடிவமைத்து உங்கள் தளத்தில் இணைப்பது பற்றி அறிய முடியும்.

உங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை

நீண்ட காலத்தின் பின்னர், உங்களுடன் ஒரு HTML5 இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.இணையத்தில் இப்படி ஏராளமாக உள்ளன. அதில் அனைத்தும் அனைவருக்கும் பயன்படுவதில்லை.அதேபோல இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. உங்கள் பொது அறிவையும் நுண் அறிவையும் பரிசோதிப்பதே  இப்பக்கத்தின் நோக்கம். ஆனால் சற்று வித்தியாசம். நீங்களே என்னவென்று பாருங்கள்.ஒவ்வொரு படியும் முடிய அடுத்த படிக்கு செல்லுங்கள். hint கூட கிடைக்கிறது. முடியாவிட்டால் தானாகவே பதில் தரப்படும். இங்கு HTML5 பயன்படுத்தப்பட்டு இருப்பதால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணரலாம்.

உங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உடனடியாக அறியவது எப்படி?

Google Map இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு அவசிய இணைய பக்கம் ஆகி விட்டது. நெடுந்தூர பயணங்களில் கூட வரும் நண்பனாகிறது. பல இணைய வரைபடங்கள் இருந்தாலும் நமது ஊரின் சந்து பொந்துகள் எல்லாம் அளந்து எமக்கு தூரத்தை தருவது இது மட்டும் தான். அதை விட வேறு சில plugin உதவியுடன் உங்கள் காணியின் பரப்பளவை அளத்தல், கட்டிடங்களின் உயரத்தை அளவிடுதல், நீர்பம்பிகள் அமைக்க பொருத்தமான இடங்களை தெரிவு செய்தல் இப்படி பல வசதிகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் இது பற்றி பலர் அறிந்தது இல்லை. முன்பெல்லாம் 2008 அளவில் எடுத்த புகைப்படங்களே வரைபடமாக இருந்தன. இப்போது அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு உங்கள் வீட்டு பகுதி வரைபடம் புதுப்பிக்கப்படும் போது உடனடியாக அறிவிப்பை பெறுவது எப்படி என்று இந்த பதிவு விளக்குகிறது.

அனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் - FireFox & Chrome Shortscuts

இணையத்தை பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் இன்று பலரும் Firefox அல்லது Google Chrome உலாவியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த குறுக்குவிசைகளை பயன்படுத்துவோர் மிக குறைவு. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shorts cuts உதவுகின்றன.உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில்  Firefox & Chrome Shorts cuts களை   காட்சிப்படுத்தி உள்ளேன்.  நினைவில் வைக்க முடியாவிட்டால் right-click செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.

Bad Piggies -Rovio விமர்சனம் + Free Download

யாருக்கும் Bad Piggies என்றாலோ அல்லது Rovio பற்றியோ தெரியாது. ஆனால் Angry Bird பற்றி நன்றாக தெரியும். அனைவரும் விளையாடி இருப்பீர்கள். பல பதிப்புக்கள் வந்தது. இது பற்றி நாம் இங்கு ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இப்போது angry bird விளையாடி பலருக்கும் அலுத்து விட்டது. தொடர்ந்தும் தமது செல்வாக்கை தக்கவைக்க புதிதாக Rovioஆல்  அறிமுகமாகிய விளையாட்டு தான் இது. இந்த விளையாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம். இறுதியில் உங்களால் தரவிறக்கவும் வழி செய்து உள்ளேன்.

கூகிள் அறிமுகப்படுத்தும் கடலுக்கு அடியில் சுற்றுலா -

புதுமைகளை அள்ளித்தந்த வண்ணம் இருக்கும் Google தனது Google Map - Street View வில் இதுவரை நிலப்பரப்புக்களை சேமித்துக்கொண்டது. பல கண்டங்களை ஒன்றிணைத்தது. என்றாலும் ஈரான் போன்ற நாடுகளின் படங்களை இந்த நூற்றாண்டில் காணலாம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இப்போது விடயத்துக்கு வருவோம்.  Google இப்போது கடலுக்கு அடியிலும் தனது Street View சேவையை விரிவாக்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக Underwater panoramic புகைப்படங்கள் இப்போது Google map இல் இணைக்கப்பட்டு உள்ளன. அவர்களுடைய Twitter பக்கத்தில் "விரைவில் உங்களை 5 சமுத்திரங்களுக்கும் கூட்டி செல்வோம்" என்று சொல்லி இருக்கிறார்கள்.

முக்கியமான Smiley (நகைமுகம்) Keyboard குறியீடுகள்

Smiley.svgFacebook பயனடுத்தாத மனித ஜந்துக்களை இப்பூமியில் காண்பது அரிது. அதிலும் Chat வசதி ஒரு அற்புதமான தொழில்நுட்பம். இது தான் நவீன வரலாற்றின் தொட்டில். இதை நான் சொல்லவில்லை. பயன்படுத்தியோர் சொல்லுகிறார்கள். இப்போது விடயத்துக்கு வருவோம்.நகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (☺/☻) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையை குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம் (emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிற புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயை குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும்.

அனைவரும் அறிய வேண்டிய போட்டோஷாப் குறுக்குவிசைகள் - Photoshop Shortscuts

போட்டோஷாப் பயன்படுத்ததவர்கள் இருக்க முடியாது. பட்டி தொட்டி எங்கும் adobe நிறுவன பிளாஷ் பிளேயர், ரீடர், மற்றும் போட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் Photoshop அதிகளவு திரை கட்டளைகளை கொண்டது. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shortscuts உதவுகின்றன. உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில் அனைத்து shortcutகளையும்  காட்சிப்படுத்தி உள்ளேன். நினைவில் வைக்க முடியாவிட்டால் rightclick செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.

"குறுக்கு விசை இன்றி அமையாத போட்டோசோப்"

திருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்பக்கங்களில் இருந்து நீக்குவது எப்படி?

அனைவருக்குமே பதிவுத்திருடர்கள் பெரும் தலைவலி. இப்பதிவின் ஊடாக பதிவு திருடர்கள் எதை திருடி எங்கு போட்டார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் பிளாக்கரில் பிரதியிட்டு இருந்தால் அதை நீக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு முந்திய பதிவுகளில் கூகிள் அனல்ய்டிக் தொடர்பாக அதிகம் சொல்லி இருந்தேன். அதன் துணையுடன் தான் இப்போது பதிவு திருடர்களை கண்டு பிடிக்க போகிறோம். ஒரு வேளை நீங்கள் அது தொடர்பாக அறிந்தி இராவிட்டாலும் நீங்கள் ஏதோ ஒரு விதமாக உங்கள் பதிவு வேறு ஒரு வலைத்தளத்தில் இருப்பதை கண்டாலும் உங்களால் அப்பதிவுகளை அவர்களிடம் இருந்து நீக்க முடியும்.

Google Docs - அனைவருக்குமான பாவனையாளர் கையேடு

google-docs-tipsGoogle Docs இன் வருகை பலரது தேவைகளை ஒன்றாக்கி இணைத்து குறுக்கி விட்டது. ஒன்லைன் applications பல நன்மைகளை அள்ளி வழங்கி வருவதால் பலரும் அதற்கு மாறி விட்டனர். இதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் தனது 2013 officeஇனை இணைய இயக்கத்தை முன் நிறுத்தி வெளியிட்டமை அனைவரும் அறிந்தது. எவ்வாறாயினும் கூகிள் வழங்கும் சேவை அனைத்திலும் இருந்து மாறுபட்டது. அனைத்து கூகிள் products  உடனும் இயக்கும் தன்மை வேறு எதிலும் காண முடியாத சிறப்பு. இதற்கு உதாரணமாக புதிய ஜிமெயில் தொடர்பான அறிவிப்பை கூகிள் கலண்டர் உதவியுடன் விசேட ஸ்கிரிப்ட் உதவியால் SMS மூலம் பெறக்கூடியமையை குறிப்பிடலாம். இதை விட இன்னும் பல உள்ளது. இப்போது கூகிள் டாக்ஸ் இன் ஆரம்பமாக அதன் குறுக்கு விசைகள் மற்றும் அதன் அடிப்படை தகவலகள் சிலவற்றை இங்கே காணுங்கள்.

அனைவருக்குமான சிறந்த இலவச Photoshop plugins

 Exposure 4
அனைவரும் போட்டோசோப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அநேகமானோருக்கு தெரிந்தது அடிப்படை விடயங்கள் தான். அதில் ஆழமாக செல்வதென்றால் நிச்சயம் அதை படித்து இருக்க வேண்டும். ஆனாலும் படிக்காத மக்களுக்காக- புகைப்பட பிரியர்களுக்காக பல plugins கட்டணத்துக்கும் சில இலவசமாகவும் கிடைக்கின்றன. இப்பதிவின் ஊடாக உங்களுக்கு அவசியமான பல இலவச plugin பற்றியும் சில முக்கியமான கட்டண plugins பற்றிய தகவல்களுடன் இலவசமாக தரவிறக்கும் இணைப்பையும் இணைத்து உள்ளேன். நீங்களும் விரும்பியதை தரவிறக்கி மகிழுங்கள்.

தமிழ் சோதிட மென்பொருட்கள் - 2

இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அப்பதிவை பார்க்கும் போது தெரிந்தது அது இன்னும் ஒழுங்கமைக்கப்படவில்லை என. எனவே அதில் உள்ள பல மென்பொருட்களை நீக்கி புதியவற்றுடன் சேர்த்து இங்கே மீண்டும் பதிவிடுகிறேன்.

பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி? Auto Read More to Blogger



பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது  என்றால் என்ன?நீங்கள் சமூக வலைத்தளங்களை பாவிப்பவரா? நீங்கள் ட்விட்டர் அல்லது  Facebook  அல்லது G+  இவற்றில் ஒன்றை நிச்சயம் பயன்படுத்தி இருப்பீர்கள். இவற்றில்  நீங்கள் அடி வரை உருட்டி செல்லும் பொது தானாகவே பழைய போஸ்ட் திறப்பதை கண்டு இருப்பீர்கள்.  இதே போல தான் உங்கள் வலைப்பூவிலும் முதல் பக்கத்தில் இதை ஒரே கிளிக் மூலம் எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி இப்பதிவு அலசுகிறது.

Google Analyticகான All in One Script (Google analytic - 6)

All in One Google Analytic  ஸ்கிரிப்ட் பற்றி முன்னர் குறிப்பிட்டு இருந்தேன். அதை பற்றி சிலர் வினவி இருந்தீர்கள். இறுதிப்பதிவில் இதை வெளியிடுகிறேன். அனைத்தையும் ஒன்றாக முடியவில்லை. மொத்தம் 6 உள்ளது. இணைப்பதில் எவ்வித சிக்கல்களும் இருக்காது.

Twitter தொடர்ந்து செயற்படாதவர்களை unfollow செய்ய

The Social Media Guideஉங்கள் ட்விட்டர் Following அதிகளவில் இருந்தும் உங்களுக்கு அவர்களில் எவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்று அறிந்து அவர்களை நீக்க வேண்டுமா? இதை எப்படி இலகுவாக செய்வது என்பதை இப்பதிவு விளக்குகிறது. பலர் ட்விட்டர் பக்கம் வருகிறார்கள். வந்து பார்த்துவிட்டு திரும்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் இரவிரவாக டுவீட்டிகொண்டு இருக்கிறார்கள். தமது சொந்த தகராறுகளை timelineஇல் போட்டு அடிபடுகிரார்கள். இவர்களால் நாம் முக்கிய tweetகளை தவற விடுகிறோம். இப்படி பட்ட அராஜகர்களை ஒழிப்பதுக்கு உதவும் பல இணைய செயலிகள் பற்றி இப்பதிவு சுருக்கமான விளக்கத்தை தருகிறது.

தலைக்கு மேலே செல்லும் செய்மதிகளை பற்றி அறிய

நீங்கள் சிறு வயதில் வானில் செல்லும் செய்மதிகள் பற்றி உங்கள் பெற்றோர் சொல்லும் கற்பனை கதைகளை கேட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று உங்கள் தலைக்கு மேலே செல்லும் செய்மதி பற்றி அறிய அனைவர்க்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. பகலிலும் சரி, இரவிலும் சரி உங்கள் தலைக்கு மேலே எப்போது எத்தனை செய்மதிகள் செல்லும் என்பதை கீழே உள்ள இணைய தளங்கள் இலவசமாக சொல்லுகின்றன. அவற்றை பற்றிய முழு தகவல்களும் உங்களுக்கு கிடைக்கிறது. இவை ஒன்றும் புதிதல்ல. எப்போது அறிமுகமான வசதிகள். இப்போதே உங்களுக்கு கிடைக்கிறது.

வெளிச்செல்லும் கிளிக்களை கண்காணித்தல் - Google Analytic 6

நீண்ட காலத்தின் பின்னர் உங்களை  Google Analytic (GA) பதிவில் சந்திக்கிறேன். பலர் ஆவலுடன் எதிர்பார்க்கும்  All in One GA Script உங்களுக்கு அடுத்த பதிவில் வழங்க முடியும் என நினைக்கிறேன். இந்த பதிவு உங்கள் தளத்தில் செய்யப்படும் கிளிக்களை துல்லியமாக கண்காணிப்பது பற்றியது. இதற்கு நிச்சயம் நீங்கள் GA பயனாலராக இருக்க வேண்டும்.

தேடுபொறி உகப்பாக்கம் - Meta Tag (SEO:2)

அண்மைக்காலங்களில் Meta Tag என்பது சில வலைபூக்களில் அதிகளவு கதைக்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான காரணம்  பிளாக்கரில் perment link அறிமுகப்படுத்தப்பட்டமையே ஆகும். எவ்வாறாயினும் இன்றைய கால கட்டத்தில் இந்த Meta Tag என்பது பயனற்ற ஒன்று. பொது அறிவிற்காக இதை பதிகிறேன். இறுதியில்  இது ஏன் பயனற்றது என்பதை பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்னர் இவ் விடயமே SEOவின் உயிர் நாடி. இன்று பயனற்ற ஒன்று. ஆரம்பத்தில் தேடுயந்திரங்கள் இவற்றை  ஆராய்ந்தே தேடுபவரின் keyword உடன்  எந்த  meta tag கொண்ட இணைய பக்கம்  அதிக அளவில் ஒத்து போகிறதோ அவையே முன்னையில் Seach Engineஇல் தோன்றுச்செய்யும்.

பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Methord)

கணணிக்கல்லூரியில் இதுவரை பதிவு திருடர்களை கண்காணிக்கும் முறை, எதை திருடினார்கள் எனபதை கண்டுபிடிக்கும் நுட்பம், பதிவு திருடர்களை தடுத்தல் என்ற வரிசையில் இறுதியாக பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு என்ற தலைப்பில் ஒரு நிரந்தர தீர்வை வழங்குகிறேன்.இதை எழுதி நீண்ட காலம் ஆகி விட்டது. ஆனால் இதை பயன்படுத்தி இதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து உங்கள் முன் கொண்டுவரவே நீண்ட காலம் ஆகிவிட்டது. இப்போது இதில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். எதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

Disqus Comment Box பயன்படுத்துவது எப்படி?

வலைப்பூக்களுக்கு என்று பிளாக்கர் தவிர மூன்று தளங்கள் இலவச கமெண்ட் பாக்ஸ் சேவையை வழங்கி வருகிறார்கள். இதில் பரவலாக அனைவராலும் பயன்படுத்த ஆரம்பித்து இருப்பது இந்த DIsqus எனப்படும் சேவையை தான். எனினும் இன்னும் தமிழ் தளங்களில் இது பிரபலமாகவில்லை. Disqus பற்றியும் இதன் சிறப்புக்கள் பற்றியும் இதை இணைக்கும் முறை பற்றியும் எழுதிய பதிவை இத்தளத்தில் இங்கே சென்று காணுங்கள்.

Dear Tamil Computer College Readers, கணணிக்கல்லூரி வாசகர்களே,

அன்புள்ள கணணிக்கல்லூரி வாசகர்களே,
இந்த பதிவில் வாசகர்களாகிய உங்களுடன் சில தகவல்களை , அறிவிப்புகளை பகிர வேண்டி உள்ளது.

1) இன்றுடன் 100 Friend Connect  இணைப்பை பயன்படுத்துபவர்கள் இணைந்து உள்ளார்கள். நீண்ட காலமாக 98 இருந்த போதும் இன்று தான் 100ஐ தொட முடிந்ததது. இதற்கு வழிசமைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதை விட feed Burner மூலமும் (91)   ட்விட்டர் (176) மூலமும் G+ மூலமும் இணைந்த வாசகர்களுக்கு நன்றிகள்.

தேடுபொறி உகப்பாக்கம் - அறிமுகம் (SEO:1)

SEO என்றால் என்ன? "தேடுபொறி உகப்பாக்கம் அல்லது தேடல் பொறி உகப்பாக்கம் (Search Engine Optimization -SEO) என்பது தேடுபொறிகளின் வழியாக ஒரு வலைத்தளம் அணுகப்படும் எண்ணிக்கையையோ அணுகுதலின் தரத்தையோ மேம்படுத்தும் செயல்முறையாகும்" என்று விக்கிபீடியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இங்கே சென்று மேலதிக தகவலை இது பற்றி அங்கே பெறுங்கள். SEO அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே தேடும் தகவல்களுக்கு ஏற்ப வலைத்தளங்களைத் துல்லியப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டமையே ஆகும்.

SEO -தொழிநுட்பத்தொடர்:0

SEO பற்றி தொடர் பதிவு எழுதலாம் என்று பல மாதங்களுக்கு முன்னரே எண்ணினேன். பலர் கூட அதை ஆவலுடன் கேட்டு இருந்தீர்கள். ஆனால் அதன் பின்னர் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. நீண்ட இடைவெளியின் பின் இந்த SEO எனப்படும் Search Engine Optimizing  பற்றி எழுத தொடங்குகிறேன். உண்மையில் இது முதல் பகுதி அல்ல. வெறும் முன்னோட்டம் தான். இனி தான் ஒவ்வொன்றாக பார்க்கலாம். முன்னோட்டத்தில் சில விவரனங்களை இணைத்து உள்ளேன்.

ஆச்சரியம் மிக்க HTML5 கண்கவர் 404-Error Page வடிவமைப்புகள் ஒரே பார்வையில்

இணைய பக்கங்களில் குறித்த டொமைனின் கீழ் நீங்கள் சென்ற பக்கம் இல்லை என்றால் தோன்ற செய்யப்படும் பக்கங்கள் Error page என அழைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பிளாக்கர்களில் கூட இதை வைப்பது பற்றி பல பதிவுகள் இணைய வெளியில் தமிழில் உலாவுகின்றன. அதனால் அது பற்றி எதுவும் இங்கே தேவை இல்லை. இணைய வடிவமைப்பாளர்களின் சிம்ம சொர்ப்பனமாக விளங்கும் HTML5 மூலம் பல இணைய தளங்கள் தமக்கு என்று பல விதமான கண்கவர் 404- Error pageகளை வடிவமைத்து உள்ளன. நான் இதில் மிகவும் கவர்ச்சி மிக்கதும் இயங்ககூடியதுமானசில error pageகளை அவற்றின் இயங்கு நிலை உடனே இங்கே இணைத்து உள்ளேன். ஒவ்வொன்றிலும் உங்கள் மௌஷை கொண்டு செல்லும் போது எதோ மாற்றம் வரும். ஒவ்வொன்றின் கீழும் முடிந்தளவு சிறிய விளக்கத்தை கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கும் இது பற்றி வேறு தளங்கள் தெரிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மெக்சிக்கோ பிரமிட்கள் இப்போது Google Street Viewவில்

பிரமிட்டு என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
எல் காஸ்ட்டிலோ பிரமிட் ( El Castillo) என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.
9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.

இங்கே Olympics Google Doodles Games -தவறவிட்டவர்கள் விளையாடி மகிழுங்கள்

ஒலிம்பிக் நடைபெற்ற காலம் ஒரு இக்கட்டான காலம். பல பரீட்சைகள் நடைபெற்றன. பலரால் கணணி பக்கம் கூட வர முடியவில்லை. இதனால் ஒலிம்பிக் பிவேர் பலரை ஆட்டிபடைக்கவில்லை. நான் கூட அப்படி தான். ஒரு சில காரணங்களால் ஒலிம்பிக் நிகழ்வுகளை தவறவிட்டேன் ஆனால் அனைத்தும் யு ட்டுப் இல் உள்ளது. ஒவ்வொன்றாக பார்த்து முடிக்கலாம். ஆனால் கூகிள் கூட தன் பங்கிற்கு பல HTML5 வித்தைகளை தனது முகப்பில் காட்டியது. முக்கியமாக 4 விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை. அதை தவறவிட்டவர்கள் இங்கே அவற்றை விளையாடி மகிழலாம். இங்கே எப்படி விளையாடுவது என்று கூட ஓரளவு எழுதி இருக்கிறேன்.அது உங்களுக்கு தேவை இல்லை. ஒரே கிளிக் இல் அவர்களே சொல்லி தருகிறார்கள்.

செவ்வாயில் எப்படி கியுறியொசிட்டி தரையிறங்கியது? - இயங்கு நிலை விவரணம்

அண்மையில் செவ்வாய் கிரகத்தில்  curiosity விண்கலம் தரையிறங்கியது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையொட்டி நாசா அதிகளவு விவரனங்களை வெளியிட்டது. அதில் முக்கியமாக இது எவ்வாறு தரையிறங்கியது என்பதை HTML5 மூலம் அழகாக வெளிப்படுத்தி உள்ளது. இது நடைபெற்று நீண்ட காலம் ஆகிவிட்டது. எனினும் பிரபல தமிழ்  பதிபவர்கள் இது பற்றி எதுவுமே பதிவிடாத காரணத்தாலே  சிறு இடைவெளியின் பின்னர் இதை வெளியிடுகிறேன்.
நீங்களும் இதை இயக்கி பாருங்கள். நவீன தொழிநுட்ப உலகின் மிகப்பெரும் சாதனை பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Google Analytics பயன்படுத்தும் அனைவருக்குமான வழிகாட்டி இலவச கைநூல்

googleanalytics-240
இந்த தளத்தில் பல பாகங்களாக வெளி வந்த Google Analytics தொடரினை வாசித்த வாசகர்களுடைய கருத்துகளை வாசித்த போது சிலரால் அது தொடர்பாக புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் தொடரை எழுத ஆரம்பிக்கும் போது அடிப்படையில் இருந்தே எழுத ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நான் உயர்மட்டத்தில் இருந்து ஆரம்பித்தது தவறுதான். என்னை போல அனைவரையும் எண்ணியது என்னுடைய மிகப்பெரும் பிழை. அதனாலேயே SEO பற்றிய தொடரை ஆற அமர இருந்து ஒவ்வொரு வரியாக செதுக்கி கொண்டு இருக்கிறேன். பலர் ஆவலாக இருக்கும் அந்த தொடர் விரைவில் பிரசுரமாக ஆரம்பிக்கும். இப்போது விடயத்திற்கு வருவோம்.

kennedy விண்வெளிநிலையத்தை சுற்றி பார்போம்

அண்மையில் கூகிள் கேனடி விண்வெளி நிலையத்தின் 6000 புகைப்படங்களை உள்ளடக்கிய பரந்து அகன்ற பக்கபடங்களை கொண்ட கணணி சுற்றுலாவை கூகிள் ஸ்ட்ரீட் view ஊடாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் முக்கியமாக Saturn V ரொக்கெட் படங்களையும் உள்ளடக்கி உள்ளது. இதை விட ரொக்கெட் தயாரிப்பு இடங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளது. உயர் பாதுகாப்பு மிக்க இந்த இடங்களை சாதாரண மக்கள் பார்வைக்கு கிடைக்க வழி வகுத்து உள்ளது சிறப்புக்கு உரியது. நீங்களும் இங்கே சென்று முழு சுற்றுலாவையும் பாருங்கள்! இங்கே சில அதி முக்கியமான படங்களை இங்கே காணுங்கள்.

Google Map உதவியுடன் வானில் பறந்துகொண்டிருக்கும் விமானங்களை எப்படி கண்காணிப்பது?

aircraft-view.jpg
Google மக்களுக்கு புதுமைகளை அள்ளி தந்தவண்ணம் உள்ளது. அதில் புதிய முயற்சியாக இப்போது வானில் பறந்தபடி உள்ள விமானங்களை உங்கள் கணணி உலாவி மூலம் கண்காணிக்கும் வசதியை வழங்கி உள்ளது. நீங்கள் குறித்த விமான இலக்கத்தை வழங்கினால் அந்த விமானம் இருக்கும்   இடத்தை காட்டுகிறது. உங்கள் நாட்டை காட்டினால் வரும் போகும் விமானங்களை காட்டுகிறது. விமானத்தை கிளிக் செய்தால் அதன் வேகம், தரை இறங்க எடுக்கும் நேரம், வானிலை தகவல்களை தருகிறது.

Adsense பாதிக்கப்படுவதை தடுக்க பார்வையாளர்களிடம் உள்ள Adblocker இயக்கத்தை எப்படி நிறுத்துவது?

வணக்கம் நண்பர்களே, நீங்க காலத்தின் பின்னர் உங்களை சந்திக்கிறேன். ஆர்வக்கோளாரில் ஒரு வலைப்பூவை தொடக்கி, எனக்கு என்று ஒரு என்னை பின் தொடரும் கூட்டமாக உருவாகிய உங்கள் அனைவருக்கும் என்னால் கடந்த ஒரு மாதங்களாக ஒரு பதிவை கூட இட முடியவில்லையே என்பது என் நீண்ட கவலை. இந்த பதிவும் அனைவருக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்க வில்லை நான்.