Home » , , » பதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Temporary Block இல் இருந்து பாதுகாப்பு பெறுங்கள் - Cancel All pending Friend Request in One Click

Facebook இப்போது கடுமையான கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்து உள்ளது. கட்டுப்பாடுகளின் விளைவாக தற்காலிகமாக பல தடைகளையும் சில சமயங்களில் நிரந்தரமாவும் உங்களை தடை செய்கிறது. தானாக கண்டறியும் Facebook இன் algorithm பற்றி யாரும் அறிந்தது இல்லை.  ஆனால் பலரது அனுபவங்களை கேட்கும் போது ஓரளவு ஊகிக்க கூடியதாக உள்ளது. இதில் பிரதான பிரச்சனை பதில் அளிக்கபடாத friend request அதிகரிக்கும் போது நீங்கள் 2 நாளில் இருந்து 1 மாதம் வரை புதிய நண்பர்களை நீங்களாக இணைக்க தடை விதிக்கப்படும். இவ்வாறு பதில் அளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்குவது பற்றியும், கணக்கு இடை நிறுத்த படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் சில வழிகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

Temporary Block for make Friend Request


இது 2 நாளில் இருந்து ஒரு மாதம் வரை  தானாக உங்களுக்கு எதிராக போடப்படும் தடை ஆகும். நீங்கள் உங்களுக்கு தெரியாத நண்பர்களை இணைக்க முயல்கிறீர்கள் என்று facebook கருதும் போது  விதிக்கபடும் தடை. இது விதிக்கபட்டால் உங்களால் எந்த கோரிக்கைகளையும் அனுப்ப முடியாது. ஆனால் பதில் அளித்து பிறரை நண்பர்களாக்க முடியும். தொடர்ந்து தடை விதிக்கப்படும் போது உங்களை உறுதி படுத்தவும் சில சமயங்களில் கோரிக்கை விடுக்கும் நடை முறை உள்ளது.

இத்தடையில் இருந்து பாதுகாக்க சில குறிப்புக்கள்

  1. ஒரு log in session க்கு 2௦ கோரிக்கைகளை மட்டும் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 60 தான் அதிகம்.(முந்தைய கணக்கு- இப்போது விலக்குகள் உண்டு)
  2. Mutual friends 2 க்கு அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் விடுக்கபடும்  கோரிக்கைகளுக்கு தடை விதிக்கபடுவது இல்லை.
  3. Mutual friends இல்லாதவர்களை Msg மூலம் add செய்யுமாறு கோரிக்கை விடுப்பது நல்லம்.
  4. உங்கள் வேலை தளம், கல்வி கூடம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே You May Know பகுதி தோன்றுகிறது. இதில் உள்ளவர்களை add செய்யும் போது விதிகளில் தளர்வு உள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு என்று கட்டுபாடுகள் உண்டு. (2004 படித்தவரை 2011 இல் படிக்கும் ஒருவர் add செய்யும் போது எச்சரிக்கை கிடைக்கும். இதற்க்கு இருவரின் பிறந்த வருடங்கள் கவனிக்கபடுகின்றது.)
  5. நாடு விட்டு நாடு உள்ளவர்களை ஆர்வ கோளாறில் add செய்தால் நிச்சயம் block செய்யபடுவீர்கள். (இந்தியாவில் இருந்து கொண்டு நைஜீரியாவுக்கு request அனுப்பி பாருங்கள். முதலில் எச்சரிக்கை . அடுத்து block)
  6. You may Know பகுதி பாதுகாப்பானது அல்ல. நீங்கள் Microsoft Facebook பக்கத்தை like செய்து இருக்கலாம். அதே பக்கத்தை like செய்த உங்கள் நகரத்துக்கு அண்மையில் உள்ள வேறு ஒருவரும் like செய்து இருந்தால் நிச்சயம் You may Know பகுதி தோன்றும். ஆனால் வேறு எந்த பொதுவான அம்சங்களும் இல்லாவிட்டால் நேரடியாக   Block தான். "நீதானே காட்டினாய்- நான் request  கொடுத்தனா - Waring வந்திச்சு - திரும்ப கொடுத்தனா - ஓ பிளாக் பண்ணிடிங்களா" என்று வசனம் பேச கூடாது. You may Know தான். You should Know அல்ல.
  7. உங்களுக்கு வரும் request  களை உடனுக்குடன் accept செய்யுங்கள். அல்லது reject செய்யுங்கள். தொடர்ந்து later add பயன் படுத்தாதீர்கள். உங்களுக்கு கோரிக்கை விடுத்த நண்பருக்கும் பாதுகாப்பானது.
மேல் கூறப்பட்ட விதிகளை பின்பற்றியும் பலருக்கு அடிக்கடி Waring alert வருவதை காணலாம். இதன் பிரதான காரணம் உங்களால் விடுக்கபட்ட Friend request  பல - நூற்றுகணக்கில் கால காலமாக pending இல் இருப்பதே ஆகும். இது உங்கள் தவறல்ல. உங்கள் நண்பனின் தவறு. துரதிஸ்டவசமாக Facebook அனுமதிக்க படாத இவ்வாறான request களை நீக்க வழி செய்யவில்லை. நீங்கள் ஒவ்வொரு நண்பரின் Page களை திறந்து அனுமதித்தாரா என்று பார்த்து cancel செய்ய வேண்டும். 1, 2 என்றால் சரி. 100, 200  என்றால்?? விடிந்து விடும்.

இவ்வாறான pending request களை நீக்க ஒரு சில வழிகள் உண்டு. அதிலும் மிக இலகுவானது - ஒரே click இல் அனைத்தயும் cancel செய்யும் முறை.

இதை செய்ய chrome அல்லது Firefox இல் நீங்கள் இயங்குதல் வேண்டும்.  இவ் extension இனை Browers இல் நிறுவி விட்டு உங்கள் Facebook பக்கத்தை திறந்தால் தானாக நீங்கள் வழி நடத்தபடுவீர்கள். ஒரே click இல் அனைத்தும் நீக்கபடும்.

Home Page:  unfriendfinder.com
Extension Download : download





2006 காலப்பகுதியில்  account திறந்தவர்களுக்கு இப்படி கட்டுபாடுகள் கிடையாது. senior member  என்று மரியாதை போல இருக்கிறது. ஒரு நண்பர் வெறி தனமாக 6000 நண்பர்களை இணைத்து வைத்து உள்ளார். ஆனால் இது வரை எந்த தடைகளையும் பெற்றதே இல்லை.

இப்படியான தொல்லைகளால் தான் பலர் இப்போது Twitter பக்கம் வருகிறார்கள். அங்கு இப்படி கட்டுபாடுகள் இருக்கின்றது. ஆனால் எதுவும் நமக்கு பொருந்தாது. ஒரு நாளைக்கு 1000 follows , 1000 tweets .. இதெல்லாம்  தனி மனிதனால் சாத்தியம் இல்லை.
இதனால் தான் நான் Facebook இல் தனிப்பட்ட கணக்கு எதையும் திறக்கவில்லை.


இங்கு கூறப்பட்ட அறிவுரைகளில் பல உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் அல்ல. பல நண்பர்களின் அனுபவங்களின் சாரம் ஆகும்.உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக   facebook  பற்றி அறிய முடியும்.