பொதுவாக ஒரு வாசகர் பிரதி செய்வதை தடுக்க Right click Disable, Mouse Select Disable, Keyboard shortcut disable என்பவற்றை JavaScript மூலமோ அல்லது Jquery மூலமோ செய்யலாம். JavaScript நிறுத்தி விட்டு வருபவர்களை கூட தடுக்கலாம். ஆனால் பிரதி செய்வதையே தொழிலாக கொண்டவர்களை தடுக்க முடியாது. மேலே சொன்ன முறைகளை பிரயோகிக்கும் போது சாதாரண வாசகர் பாதிப்படைவார்.
இந்த மானம் கேட்ட பிழைப்பை http://tamilspace.com இந்த தளத்தில் மட்டும் செய்யவில்லை.வேறு பல பொது தளங்களில் இருந்தும் செய்கிறார்கள்.
இத்தளம் பற்றிய தகவல்கள்:
இதில் இன்னும் கேவலமான பிழைப்பு எது என்றால் நான் இங்கு பொதுவாக படங்களை Google இல் தேடி தான் போடுவேன். அதை கூட எடுத்து தமது logo வை போட்டு பிரசுரிக்கிறார்கள். இதுவரை 20க்கும் அதிகமான பதிவுகளை இங்கிருந்து மட்டும் உருவி விட்டார்கள்.
இவ்வாறு மானம் கேட்ட பிழைப்பை நடத்தும் இவர்கள் tamil10 திரட்டியில் Suganiy என்ற பெயரில் பிரசுரங்களை வெளியிடுகிறார்கள்.
இந்த மானம் கேட்ட பிழைப்பை நடத்தியே Alexa Traffic Rank இல் 120800க்கு வந்து விட்டார்கள். என்றாலும் Google இவர்களின் பிரதி செய்த ஆக்கங்களை ஒரு போதும் index செய்யவில்லை. ஆகவே இவர்கள் திரட்டிகளை நம்பியும் social media களை நம்பியும் இந்த பிழைப்பை நடத்துகிறார்கள்.
இவர்கள் ஏதாவது விளம்பர சேவையை பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க முயலும் பொது இவர்கள் தளம் இயங்கவில்லை. இது பற்றி Google cache இல் தேட முடியாது. எதனால் இத்தளம் நின்றது என்று தெரியவில்லை.
copy - paste இங்கு மட்டும் அல்ல . அனைத்து இடங்களிலும் தான். பல தமிழ் கவிதை, விமர்சனம் எழுதும் அனைத்து பதிபவர்களும் copy - paste பற்றி குறைந்தது ஒரு பதிவாவது போட்டு இருக்கிறார்கள். இவர்களின் பதிவுகள் பெரும்பாலும் சமூக தளங்களில் வருவதாக தான் குறிப்பிடுகிறார்கள்.
இதை தடுக்க என்ன தான் செய்யலாம்?
copy - paste செய்வதை தடுக்க முடியாது. page source code பார்த்ததால் இலகுவாக பிரதி செய்ய முடியும்.
எனவே பிரதி செய்த பின்னர் தான் அதை பற்றி கதைக்க முடியும்.
- Google search இல் இருந்து நீக்க அவர்களின் DMCA படிவத்தை பாவிக்கலாம். 95% நீக்குகிறார்கள்.
- Blogger இல் DMCA படிவம் மூலம் இலகுவாக நீக்க முடியும்.
- YouTube தானாக கண்டறிகிறது.
- சமூக தளங்கள் பதிப்புரிமையை கொண்டிருப்பதில்லை. எனவே watermark சிறந்த வழி
- சில முன்னணி Hosting தளங்கள் copyright complaints கோரிக்கைளை ஏற்று குறித்த பக்கங்களை நீக்குகின்றன. Eg:Hostgator
- http://www.chillingeffects.org/ தளத்தை நாடலாம்.
- Anonys கோரிக்கை விடுத்து தாக்கி அழிக்கலாம். ஆனால் அவர்கள் சிறுவர் பாலியல் தளங்களையும் , வணிக, பாதுகாப்பு தளங்களையும் மட்டுமே தாக்குவார்கள். சின்னபிள்ளை தனமான இத்தளங்களுக் க்கெல்லாம் கண்டுக்க மாட்டார்கள்.
- Google தன்னுடைய அனைத்து prodcuts இலும் copyright தொடர்பாக அக்கறையாக உள்ளது. G+ இல் கூட நீக்க DMCA form உதவுகிறது
- இலங்கையில் அவசர கணணி பிரிவு (Sri Lanka Computer Emergency Readiness Team) இலங்கையை சேர்ந்த பதிப்புரிமை செயல்களை நீக்க வழி செய்கிறது . ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதம். இங்கு போய் நீக்கி வரவதை விட வீட்டிலே இருக்கலாம். அலைக்கழிப்பர்கள்
- இதை விட பல விதமாக கெஞ்சி கேட்கலாம்.
இத்தளம் இன்று நண்பகலில் இருந்து suspend செய்யபட்டதாக முகப்பில் தெரிய வருகிறது.