கணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா?

எப்பொழுதும், Google, Script, Tracking, Developing இப்படி எழுதி எழுதிய எனக்கு சலிக்கும் போது வாசிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும்.. அதனால் ஒரு மாற்றமாக ஒரு கணித வினா ஒன்று இப்பதிவில், அதற்காக எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால் என்றெல்லாம் கேட்க மாட்டேன். விடை தெரிந்தவர்கள் Comment Box இல் சொல்லுங்களேன்.இது மிக நீண்ட காலத்துக்கு முன்னர் உலாவிய ஒரு கணக்கு தான். தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பீர்கள். தெரியாதவர்களுக்காக,

மூன்று நண்பர்கள் ஒரு சாப்பாட்டு கடைக்கு சென்றார்கள் (எதுக்கு? நகை அடகு வைக்கவா? சாப்பிட தான்)
போன மூவரும் திருப்தியாக உணவு அருந்திய முடித்தனர்.
சர்வர் பில்லை கொண்டு வந்து வைத்தார். மூவருக்குமாக சேர்த்து 75 ரூபாய் என இருந்தது.
மூவரும் தத்தமது பர்ஸ்ஸில் இருந்து 25 ரூபாயை எடுத்து சர்வர் இடம்  கொடுத்தனர் (25 * 3 = 75).
சர்வர், முதலாளியிடம் 75 ரூபாயை கொடுக்க , முதலாளி 5 ரூபாய் discount கொடுத்தார். 70 ரூபாயை தான் எடுத்து விட்டு, மீதி 5 ரூபாயை சர்வர் இடம் மீள கொடுக்கும் படி கொடுத்தார்.
சர்வர் தனக்கு என 2 ரூபாய் டிப்ஸ் எடுத்து விட்டு, மிகுதி மூன்று ரூபாயையும் 3 நண்பர்களிடம் 1,1,1 என பிரித்து கொடுத்தார். ஆகவே இப்போது ஒவ்வொரு நண்பர்களும் உணவுக்காக செலவழித்த தொகை 24 ரூபாய்.

இப்பொழுது கேள்வி,

மூவரும் செலவழித்த தொகை  24 * 3 = 72 Rs
சர்வர் இடம் உள்ள டிப்ஸ் : 2 Rs
மொத்தம் : 72 + 2 = 74 Rs.
ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் கொடுத்தது 75 Rs
அப்படியான மீதி 1 ரூபாய் எங்கே??

இதற்கு விடையை நீங்கள், வகையிட்டு சொல்லலாம், தொகையிட்டு கூட சொல்லலாம், அதுக்கும் மேலாக கணித தொகுத்தறிவு மூலம் கூட நிறுவலாம். இதற்கு விடை கண்டு பிடிக்க உங்களுக்கு Supercomputer தேவை என்றால் Nasa விடம் உள்ள Super Computer இனை பயன்படுத்த உங்களுக்கு பயன்படுத்த அனுமதி பெற்று தர நான் தயார்.

எப்படியென்றாலும் சரி, இக்கணக்கை தெளிவு படுத்தினால் சரி? அந்த ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா?

An Accurate Geo Location IP Database from Wikimedia - A Guide for tracking user location

In these days User tracking is most important to every web developers. With HTML 5 Geolocation tracking API helps to track users' location. Unfortunately  Users must allow to website to track physical location of reader. But, We can get user physical location by tracking his IP. Maxmind is famous IP database provider. But They provide low accurate Database for free usage  If you want to track more accurate, You will need to buy a plan from maxmind service.

Temple Run Oz இலவசமாக அண்ட்ரோய்ட்டில் விளையாடுங்கள்! Download Temple Run Oz for Android Free

Temple Run விளையாட்டுக்கள் பிரபலமானவை. இதன் முதல் இரு பதிப்புகளும் இலவசமாக இருந்தது. இதன் இறுதி பதிப்பு Temple Run OZ 1$ க்கு வழங்கப்படுகிறது. Temple Run விளையாடாதவர்கள் எவருமே இருக்க முடியாது. மிகவும் சுவாரசியமான விளையாட்டு. அண்மையில் வெளியாகிய Oz the Great and Powerful என்ற Hollywood படத்தின் கருவை வைத்து அதை வெளியிட்ட  நிறுவனம் வெளியிட்டது. இதை விளையாட ஆர்வம் உள்ளவர்களுக்காக இப்பதிவு.

Google அறிமுகப்படுத்தும் இலவச இணையம் Free Zone - Internet with no data charges

உள்ளடக்கத்துக்கு முதல்,
  • இது இலங்கையில் வசிக்கும் Dialog (Axiata PLC) ISP பாவனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
  • Google இன் சேவைகளை மட்டுமே அணுகலாம்.
  • கையடக்க தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்தலாம்.
இதுக்கு மேலும்  தொடர்ந்து வாசிக்க வேண்டுமா  என்று முடிவெடுத்து தொடருங்கள். 
இலங்கையில் முன்னணி ISP ஆகிய Dialog மட்டுமே இதை வழங்குகிறது. இவர்கள் முன்பு Facebook க்கு என இவ்வாறனதொரு சேவையை அறிமுகப்படுத்தினர். இப்போது கூகிள் தனது தெரிவுசெய்யப்பட சேவைகளை இலவசமாக Data charge இல்லாமல் அணுக  Philippines, South Africa, Indonesia,  Sri Lanka ஆகிய நாடுகளில் அறிமுக படுத்திய சேவை தான் Free Zone

எவ்வாறு அணுகுவது?

  1. முதலில் g.co/freezone க்கு உங்கள் தொலை பேசி மூலம் செல்லுங்கள்.
  2. உங்கள் Google கணக்கு மூலம் உள் நுழையுங்கள்.
  3. இதன் பின்னர் அங்கிருந்து உங்கள் சேவைகளை அணுக முடியும் - இலவசமாக 

சில குறிப்புக்கள்:

  • நீங்கள் தேடும் போது தேடல் முடிவில் வரும் 1'ம் இணைப்பை அணுகுவது இலவசம். அணுகிய முடிவில் உள்ள இணைப்புக்கு கட்டணம்.  உதாரணமாக கணணிக்கல்லூரி என்று தேடி வரும் தேடல் முடிவில் உள்ள www.tamilcc.com க்கு வருவது வரை இலவசம். அதன் பின்னர் இங்குள்ள outlink - (www.tamilcc.com/p/help.html) களை கிளிக் செய்வது பணம்.
  • கட்டணம் அறவிடும் நடைமுறைக்கு செல்லும் போது அறிவிப்பு திரை வந்த பின்னரே அறவிடப்படும் - கொஞ்சம் தப்பிக்கலாம்.
  • Gmail, G+, Search ஆகியன இலவசம்.

இதன் தீமைகள் :

  • 2nd Step verification உள்ள Google கணக்குகள் மூலம் உள் நுழைய முடிவதில்லை.
  • Gmail, G search, G+  மட்டுமே இலவசம்.
  • கணனியில் பயன் படுத்த முடியாது. Opera Emulator மூலம் செல்ல வழி இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கிடைத்தால் நல்லம்.
  • நேரடியாக அணுக முடியாது- g.co/freezone இன் மூலமே உள் நுழைய வேண்டும்.
இது பற்றிய Google இன் அறிவிப்புப்பக்கம் இங்கே - google.com/intl/en_lk/
இது பற்றிய உதவிப்பக்கம் இங்கே : support.google.com

இதனால் கிடைக்க போகும் ஒரே நன்மை G+ இனை பாவித்தால் ஓரளவுக்கு கட்டுபடியாகும். அது மட்டும் தான்.

கணணிக்கல்லூரியின் புது வடிவம் - TamilCC Moved to Responsive design

நீண்ட காலத்தின் பின்னர்,  ஏறத்தாள இரு வருடங்களின் பின்னர், 3'ம் வருட நிறைவை முன்னிட்டு கணணிக்கல்லூரி புதிய தோற்றத்துக்கு மாறுகின்றது. Responsive Design தொடர்பாக கேள்வி பட்டு இருப்பீர்கள். Google responsive design இனை பலமாக ஆதரிக்கிறது. கணணி , கையடக்க தொலைபேசி என இல்லாமல், இரண்டுக்கும் பொதுவாக ஒரே வடிவமைப்பை இணைய பக்கங்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.

எந்த பதிபவரும், mobile வடிவமைப்பு பற்றி கருதுவதே இல்லை. ஆனால் கணணிக்கல்லூரிக்கு வரும் வாசகர்களில் 5:4 என்ற விகிதத்தில் Mobile , அதிலும் Android இல் வருகிறார்கள்.
இவ்வளவு காலமும் நீங்கள் mobile மூலம் வந்திருந்தால் பல widget தோன்றி இருக்காது. இப்போது அனைவர்க்கும் அனைத்தும்..

இவ்வளவு காலமும் கணணிக்கல்லூரி பச்சை, மஞ்சள், நீலம் என color full ஆக காட்சி அளித்தது. அதை விட CSS வெளி இணைப்பில் இருந்து தரவிறங்க நேரம் சென்றதால் புதிதாக வருபவர்களுக்கு அதிகளவில் கணணிக்கல்லூரி விகாரமடைந்து தோன்றிய சந்தர்ப்பங்கள் பதிவாகி உள்ளது.

நீண்ட காலமாக நல்ல  Responsive design தேடி கொண்டு இருந்தேன். ஒருவாறாக ஒன்றை கண்டு பிடித்து modify செய்து இறுதியில் அறிமுகப்படுத்தி விட்டேன்.

மேலும் சில மாற்றங்கள்.
  • Auto Load More - வெகு குறைவானவர்கள் மட்டும் பயன்படுத்தியதால் நீக்கி விட்டேன்.
  • Dom stream record வசதி அறிமுகம் 
  • Twitter  இல் நேரடியாக Summary ஐ பகிர முடியும் (Twitter Card)
இவ்வளவு காலமும் பதிவு திறக்கும் போதே Widget களும் தரவிறங்கியதால் பல சமயங்களில் பதிவு / widget சிதைந்து தோன்றி இருக்கலாம். இனி, அவ்வாறு இல்லாமல், முதலில் பதிவு தரவிறங்கி முடிந்த பிறகே widget தரவிறங்கி உங்கள் நேரத்தை மீதப்படுத்தும் 

அதே போல Comment Box பலரும் பயன்படுத்துவே இல்லை. ஒரு சில நல்ல உள்ளங்களுக்காக தான் இன்றும் அது இருக்கின்றது. விரைவில் நீங்கள் comment இட விரும்பினால் மட்டும் Comment Box, load ஆகுமாறு மாற்றப்படும். அதாவது Comment button இனை கிளிக் செய்த பிறகே, Disqus Comment box தோன்றும். நிச்சயம் இதனால், Page load speed பெருமளவு பாதுகாக்கப்படும்.

இன்னும் சொல்ல போனால் இன்னும் முழுமையாக மாற்றி முடியவில்லை. இன்னும் ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றது.
உங்கள் கருத்துக்களையும். ஆலோசனைகளையும்  சொல்லலாம்..

நீங்களும் பதிபவராக இருந்தால் நீங்களும் Responsive பற்றி சிந்திக்கும் நேரம் வந்து விட்டது...

தமிழ் வானொலிகளை கணனி Music Players மூலம் கேட்க - Listen Tamil Radio Stations in you PC with Music players

வானொலி கேட்பது சிலரின் - பலரின் பழக்கம். இப்போது சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள் இவற்றை குறைத்துள்ளன. இப்போதெல்லாம் பிரயாணங்களின் போது தான் இவற்றை கேட்க  நேரம் இருக்கிறது. பொதுவாக இப்போது வானொலி பெட்டிகளின் வரவு குறைந்து விட்டது. கையடக்க தொலைபேசிகள் இவற்றின் வேலையை செய்கின்றன. என்றாலும், பல இடங்களில் FM signal கிடைப்பதில்லை. இதனால் பலரும் online streaming வானொலி சேவைகளை நாடுகின்றனர். இதற்காகவே பல இணைய பக்கங்கள் உண்டு.

இவற்றின் பெரும்பாலான குறைபாடு இவற்றின் stream link இயங்காமை ஆகும். இதனால் பல website களில் தேடி அலைய வேண்டி இருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு web site ஆக செல்வதால் நேர , bandwidth விரயமாகும். ஆனால் பலருக்கும்   தமது music player ஊடாக பெரும்பாலான வானொலி சேவைகளை கேட்க  முடியும் என்று தெரிவதில்லை. இப்பதிவு, எவ்வாறு மிக இலகுவாக கணனியில் (+ mobile) உள்ள music players ஊடக  வானொலி சேவைகளை கேட்பது என்று விளக்குகிறது.

Google+ Comments Box பயன்படுத்தலாமா?

Google+ Comments Box பயன்படுத்தலாமா? நல்ல கேள்வி! Google+ Comments Box அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஒரு சிலர் மாறி  விட்டனர். பலர் மாற ஜோசிக்கின்றனர். இக்கேள்விக்கு பதில் வேண்டாம் என்பதே ஆகும். Google+ Comments Box பயன்படுத்த தொடங்கியது முதல் இது வரை பல பிரச்சனைகள் கூகுளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இதில் வெளிப்படையாக சில தீமைகள் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியில் பல சிக்கல்கள் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் preview பார்க்கும் போது தோன்றாத பிரச்சனை உங்கள் வாசகருக்கு தோன்றி இருக்கலாம். அவை தொடர்பாக சில...

தொழில்நுட்ப துளிகள்


  1. இன்றில் இருந்து Google + Comment Box அனைத்து Blogger க்களுக்கும் கிடைக்க கூடியதாக இருக்கும் என Google அறிவித்துள்ளது. உங்கள் Blog Domain மற்றும் போது பழைய comments களை இழக்க நேரிடும் என்றும் கூடவே அறிவுறுத்து உள்ளார்கள். இதை பற்றி அவர்களின் உதவி பக்கத்தில்  விரிவாக சொல்லி உள்ளார்கள்.
  2. Wikileaks 6 மாத இடைவெளியின் பின்னர் 2 million  அமெரிக்க இரகசிய ஆவணங்களை கசிய விட்டுள்ளது. PlusD என்ற பெயரில் ஒட்டு மொத்த ஆவணங்களையும் கணணி மயப்படுத்தி Google போன்ற Timegraph வசதியுடன் வெளியிட்டு உள்ளார்கள். இப்போது ஊடகங்களில் அவ்வப்போது இவை பற்றிய தகவல்கள் கசிகின்றன . 1966-01-01 தொடக்கம் 2010-12-31 வரையான ஆவணங்களை நீங்களும் பார்வையிடலாம் இங்கே.

Google Maps சில புதிய street View காட்சிகள்

கூகிள் இன்று புதிதாக Kennedy  space center இன் ஏவுகணை ஏவு தளத்தில் அதாவது 255 அடி உயரத்தில் எடுக்கப்பட்ட streetview காட்சியை இணைத்துள்ளது. MIB III இல் வந்த இடத்தை போல உள்ளது. Google Street view இல் சில சுவாரசியங்கள் மறைந்து இருக்கின்றன. அவற்றை தேடி பிடித்து தருவதற்கு என்றே பல இணைய பக்கங்களும் உண்டு. இன்று இவ்வாறு சுவாரசியம் மிக்க ஒன்றாக ஒருவர் ஒரு பிணத்தை ஏரியில் தள்ள கொண்டு செல்லும் காட்சி பிரபலமாக பேசப்படுகிறது. இது Satellite view  இல் எடுக்கப்பட்ட படம்.

Google Glass Features & Technical Specs

Glass is the  big product  which Google is going to be launch in a upcoming months. it has been revealed that Google Glass will have some promising Features and Hardware Specifications which includes; a microphone, speakers, CPU, video/audio camera, battery and a mini projector. How does it work?  How does the image overlay the image of reality? The following infographic illustrates the optical principle - very simple and easy to understand.



தானாகவே கணக்கை அழிக்கும் வசதி கூகுளில் அறிமுகம் ( - நீங்கள் இறந்தால் )

What Happens To You Online When You Die? நல்ல கேள்வி. "Not many of us like thinking about death — especially our own". இதுக்காக தான் கூகிள் இன்று புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது.  Inactive Account Manager என்ற பெயரில் அறிமுக படுத்தி உள்ளது. (இவ்வசதி ஏற்கனவே Yahoo, Hotmail இல் defualt ஆக இருக்கிறதாம் ?)தினமும் ஒவ்வொரு நிமிடமும் 3 facebook பாவனையாளர்கள் இறக்கின்றனர்.  இதை கருதி நீங்கள் கணக்கை பயன்படுத்தா விட்டால் தானாக உங்கள் தகவல்களை அழிக்கும் செய்யபாட்டை நீங்கள் இப்போது Google இல் செய்ய முடியும். எவ்வாறெனில்

புகைப்படம் எடுக்கும் நுட்பங்களை மெய்நிகராக இணையத்தில் கற்கலாம் - Collection of Online Camera Simulators

சில பழைய பதிவுகளில் உள்ள விடயங்கள் இப்போது இயங்குவது இல்லை. அப்படி பட்ட ஒன்று தான் இது. சில வருடங்களுக்கு முன்னர், இதே அடிப்படையில் வெளியான பதிவை புதுப்பித்த மீள் பதிவு தான் இது. பழைய பதிவு 301 redirect க்கு மாற்றபட்டு விட்டது.

இன்று யாரிடம் தான் கேமரா இல்லை? ஆனால் நாம் முறையாக அதை பயன்படுத்துவது இல்லை. பட்டப்படிப்புகள் கூட புகைப்பட துறையில் உள்ளன. எனினும் இணைய தளங்களில் அடிப்படை சில பயிற்சிகள் இலவசமாக கிடைக்கின்றன. நான் அவற்றை இங்கே தொகுத்து தந்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் டிஜிட்டல் கமெராக்களை எவ்வாறு கையாள்வது என்பதை சுட்டுகின்றன. இங்கே மொத்தம் 5 வகை ஒத்திசைவுள் உள்ளன. இவற்றை இயக்குவது மிக சுலபம்.

Fukushima அணு உலை வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் சுற்றுலா - Street View on Fukushima Exclusion Zone

Chernobyl Diaries (2012)என்ற படத்தை பார்த்து இருப்பீர்கள். ரஷ்யாவில் நடத்த
அணு உலை வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வரும் காலத்தில் சுற்றுலா செல்லும் தம்பதிகள் அனைவரும் இறக்கும் பயங்கர படமாக வெளி வந்தது. அவ்வாறே ஜப்பானில் March 11, 2011, இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் பின்னர் Fukushima அணு உலை வெடித்தது. அதனை தொடர்ந்து அப்பகுதி 21000 மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இரு வருடங்கள் கழிந்த நிலையிலும் வெளியார்கள் இன்னும் அப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை. என்றாலும் Google Street view Team தனது வாகனத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டு அங்குள்ள நிலைகளை தமது Street view இல் சேர்த்து உள்ளனர். பாழ் அடைந்த கட்டிடங்கள், இடந்த கடைகள், பாலங்கள் என அனைத்தையும் காண கூடியதாக உள்ளது.

தொழில்நுட்ப துளிகள்

மிக மிக நீண்ட காலத்தின் பின்னர் தொழில்நுட்ப துளிகள்  வெளி வருகிறது. இம்முறையும் சில சுவாரசியமான தகவல்கள், சில விமர்சனங்கள், அறிமுகங்கள் ஒரு 18+ இன்னும் பல. பெரும்பாலானவை Twitter இல் பகிர்ந்தவை.

Facebook நண்பர்களின் பிறந்த தினங்களுக்கு Google மூலம் SMS இல் நினைவூட்டல்-- Facebook Friends' Birthdays Reminder via Google Calendar

இதற்கு முதல் பதிவு (Facebook நண்பர்கள் பற்றிய தகவல் தொகுப்பை ஒரே தடவையில் பெற) இல் எப்படி நண்பர்களின் விபரங்களை API மூலம் திரட்டுவது என்று சொல்லியது. உண்மையில் API மூலம் அணுகுவது language அறிவு இல்லாதவர்களுக்கு சிரமம் தான் - பொறுமை முக்கியம். ஆனால் இப்பதிவில் மிக எளிமையாக எப்படி உங்கள் முக புத்தக நண்பர்களின் பிறந்த தினங்களை கூகிள் மூலம் sms இல் நினைவூட்ட செய்வது என்று பார்க்கலாம். இது சாதாரண முறைதான். பல வருடங்களுக்கு முன்பிருந்தே இம்முறை இருந்தாலும் இப்போது தான் Google Calendar மூலம் உலகின் எப்பாகத்துக்கும் SMS வசதி கிடைத்தது. அத்துடன் facebook லும் Export இல் சில மாற்றங்கள் வந்தது.


Facebook நண்பர்கள் பற்றிய தகவல் தொகுப்பை ஒரே தடவையில் பெற ( எ.கா-பிறந்த தினங்கள்)

அடிக்கடி முகப்புத்தக  பக்கம் செல்லாததால் நண்பர்களின் பிறந்த தின நினைவூட்டல்களை பெற முடிவதில்லை - பெரும்பாலும் facebook பிறந்த தின நினைவூட்டல்களை தினமும் அறிவிக்கும். எந்நேரமும் Facebook வசம் வசிக்கும் நண்பன் தினமும் பிறந்த நாள் கொண்டடுபவர்களை எனக்கு நினைவூட்டும் மகேசன் பணியை செய்து வந்தான். திடீர் என்று ஒரு நாள் அவன் கவலையீனத்தால் ஒருவரின் பிறந்த தினம் தவறி விட்டது. அதன் பின் தான் நானே நண்பர்களின் பிறந்த தினங்களை திரட்டும் பணியில் ஈடு பட தொடங்கினேன். ஒவ்வொருவரின் Profile ஆக சென்று திறந்து பார்த்து நேரத்தை வீணாக்காது  மிக இலகுவாக பெறும் வழியை உங்களுடன் பகிர்கிறேன்.

See inside of Palace of Versailles with Google Street view


The Palace of Versailles , or simply Versailles, is a royal château in Versailles in the Île-de-France region of France. In French it is the Château de Versailles.
When the château was built, Versailles was a country village; today, however, it is a wealthy suburb of Paris, some 20 kilometres southwest of the French capital. The court of Versailles was the centre of political power in France from 1682, when Louis XIV moved from Paris, until the royal family was forced to return to the capital in October 1789 after the beginning of the French Revolution. Versailles is therefore famous not only as a building, but as a symbol of the system of absolute monarchy of the Ancien Régime.
With history and grandeur, Google streetview takes you inside the spectacular Palace of Versailles

Google இன் சிந்திக்க வைத்த Doodles - The Hitchhiker's Guide to the Galaxy

The Hitch Hiker's Guide to the Galaxy என்ற சொல்லை எங்கோ கேள்வி பட்டு
இருப்பீர்கள். சில காலத்துக்கு முன்பு அதாவது Mar 11, 2013 அன்று Google பக்கம் வந்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். வழமையாக அனைவருக்கும் விளங்கும் படி Doodle களை வைப்பது வழமை. ஆனால் அன்று சற்று வித்தியாசம். அதே போல Nov 23, 2011 அன்றும் ஒரு வித்தியாசமானத்தை Doodle ஆக வைத்து இருந்தனர்.  Mar 11, 2013 இல் வெளியானது ஒரு வானொலி நிகழ்ச்சியில் வந்த  விஞ்ஞான புனை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட Doodle.

Angry Birds Star Wars (V 1.1.2) Gets Cloud City Episode With 20 New Levels - Free Download

Angry-Birds-SW-Cloud-CityAngry Birds Star Wars is an action video game, a crossover between the Star Wars franchise and the Angry Birds series of video games, launched on November 8, 2012. Recently Rovio released new version - 1.1.2. Angry Birds Star Wars currently has 6 worlds on most platforms. They are Tatooine, Death Star, Hoth, Cloud City, Boba Fett Missions, Path of the Jedi  and the Golden Droid bonus levels.
March 28, 2013, introducing a brand new Cloud City episode with 20 new Bespin levels. And if you find 5 mandalorian jetpacks, you will unlock 10 more Boba Fett specific levels. Two new bonus levels are also part of the update.

Now you can Download Angry Birds Star Wars (V 1.1.2) from my cloud. If you  have already installed  Angry Birds Star Wars V1 you don't need to download it. You can update easily from update option in your game. If you are facing any error while updating, you will need to do a fresh install.

சமூக வலைத் தளங்களின் கணக்குகளை நிரந்தரமாக நீக்குதல் - Permenet Deactivation methords for Social Networks


ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய Computer  பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் Facebook மற்றும் Twitter  சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை.

Google உடன் முட்டாள்கள் தினம் - Smelling is believing. Try Google Nose BETA

இன்று முட்டாள்கள் தினம். இதை முன்னிட்டு கூகிள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொன்று செய்கிறது. இம்முறை...... ஒருமுறை கை அசைவுகளை கொண்டு கணணியை கட்டுப்படுத்தலாம் என்று சொன்னார்கள் .  போன முறை 8 Bit Google map. இன்றும் அப்படி ஒன்று........ இங்கே சென்று பாருங்கள்..  தேடல் முடிவுகளை மணக்கலாம்  என்று சொல்லி விட்டு எதை எதை எல்லாம் மணக்க விடுகிறார்கள்..