சில பழைய பதிவுகளில் உள்ள விடயங்கள் இப்போது இயங்குவது இல்லை. அப்படி பட்ட ஒன்று தான் இது. சில வருடங்களுக்கு முன்னர், இதே அடிப்படையில் வெளியான பதிவை புதுப்பித்த மீள் பதிவு தான் இது. பழைய பதிவு 301 redirect க்கு மாற்றபட்டு விட்டது.
இன்று யாரிடம் தான் கேமரா இல்லை? ஆனால் நாம் முறையாக அதை பயன்படுத்துவது இல்லை. பட்டப்படிப்புகள் கூட புகைப்பட துறையில் உள்ளன. எனினும் இணைய தளங்களில் அடிப்படை சில பயிற்சிகள் இலவசமாக கிடைக்கின்றன. நான் அவற்றை இங்கே தொகுத்து தந்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் டிஜிட்டல் கமெராக்களை எவ்வாறு கையாள்வது என்பதை சுட்டுகின்றன. இங்கே மொத்தம் 5 வகை ஒத்திசைவுள் உள்ளன. இவற்றை இயக்குவது மிக சுலபம்.
முதல் இரண்டும் சிறுமிகளை கொண்டவை. காற்றாடி விரைவாக சுற்றுகிறது. படம் பிடிக்கும் போது அது சுற்றுவதை எவ்வாறு காட்டுவது? உறை நிலையை எவ்வாறு கொண்டு வருவது? இவற்றை ஷுட்டேர் speed மூலம் கட்டுப்படுத்துவது... இப்படி பல விடயங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக மாற்றி "shap Photo" என்பதை கிளிக் செய்து பயிற்சி பெறுங்கள்.
இரண்டாவது focus பற்றியது. முன்னுக்குள்ள பெண்ணையா இல்லை பின்புல மலையையா கிளிக் செய்வது என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மூன்றாவது இலகுவானது. எந்த விளக்கமும் தேவை இல்லை. அடிப்படைகள் அவை.