Philippines நாட்டில் நுழையும் Google Street View

Philippines

The Philippines , officially known as the Republic of the Philippines, is a sovereign island country in Southeast Asia situated in the western Pacific Ocean. To its north across the Luzon Strait lies Taiwan; west across the South China Sea sits Vietnam; southwest is the island of Borneo across the Sulu Sea, and to the south the Celebes Sea separates it from other islands of Indonesia; while to the east it is bounded by the Philippine Sea and the island-nation of Palau. Its location on the Pacific Ring of Fire and close to the equator make the Philippines prone to earthquakes and typhoons, but also endows it with abundant natural resources and some of the world's greatest biodiversity.

street view ph 730x410 Google Street View arrives in the Philippines, kicking off in the capital Manila

பூமி நடுக்கங்கள், எரிமலை வெடிப்புக்களுக்கு பெயர் போன ஆசியாவின் எல்லையில் உள்ள பிலிப்பைன்ஸ் street view க்கான அறிவிப்பு நேற்று Google Asia official blog மூலம் அறிவிக்கப்பட்டது. 7,107  தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் இனி நீங்களும் நடத்து சென்று சுற்றி பார்க்கும் உணர்வை பெறலாம்.



இதன் முதல் கட்டமாக  The San Agustin Church, Baluarte de San Diego, Plaza San Luis Complex மற்றும்  Fort Santiago ஆகிய வரலாற்று சிறப்பிடங்களின் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரைவில் உள்ளக மற்றும் தெருக்களை உள்ளடக்கிய காட்சிகள் வெளியாகும் என அறிவித்துள்ளனர். நீங்களும் வழமையான கணணிக்கல்லூரியின் சிறப்பு HTML5 Street view மூலம் கீழே சுற்றிப்பாருங்கள்.

உலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்?

அவ்வப்போது கணணிக்கல்லூரியின் விஞ்ஞானம் சார்ந்த பதிவுகள் வருவது வழமை. இம்முறை உலகின் மிக அமைதியான அறை பற்றியும், அதன் உள் இருக்கும் மனித உணர்வுகள் பற்றியும் பார்ப்போம்.


மிக அமைதியான இடம் என சொல்லப்படுவது விண் வெளி தான். ஏன் என்றால் அங்கு காற்று இல்லை - அதிர்வுகள் மனித காதை அடையாது. ஆனால் அங்கு சென்று நம்மால் ஆய்வுகளை செய்ய முடியாது. சுவாசிக்க காற்று இல்லையே. அதையும் கொண்டு போனால் தேவை அற்ற ஒலிகளை கேட்க நேரிடும்.

இதை கருத்தில் கொண்டு தான் Minneapolis  இல் உள்ள orfield lab இல் ஒரு அறையை கட்டினார்கள். இது தான் உலகின் மிக அமைதியான இடம். பொதுவாக நாம் அமைதியான இடம் என சொல்வது 30 dB (decibel) ஒலிச்செறிவு மட்டம் (ஒலி செறிவு அல்ல) உள்ள இடத்தை தான். ஆனால் இந்த அறையில் -9 dB இல் தான் ஒலி செறிவு மட்டம் இருக்கும். அதாவது அங்கு கிட்டதட்ட 0.125893 watts தான் ஒலியின் சக்தி இருக்கும்.

 அமைதியான அறையின் சிறப்பு

இங்கு எதிர் ஒலி இல்லை, இரைச்சல் இல்லை. எனவே அமைதியான அறையின் நீங்கள் உட்கார்ந்தால் இருதய துடிப்பு, வயிற்று தசைகளின் இயக்கம், இரத்த பாய்ச்சல் என அனைத்தையும் கேட்க முடியும்.

மயான அமைதி என்பது இது தானோ? இங்கு மனிதனால் அதிக நேரம் இருக்க முடியாது. ஆக கூடியதாக 45 நிமிடங்கள் ஒருவர் இருந்து சாதனை படைத்து உள்ளார். நீண்ட நேரம் இருக்கும் போது, உங்கள் இதய துடிப்பையே நீங்க கேட்பதால் உங்களுக்குள் இனம் புரியாத கலவரம் ஏற்படுகிறது. ஒலிக்கு பழக்கப்பட்ட உங்களால் இங்கு இருக்கவே முடியாது. மனித காதால் 1 dB க்கும் குறைவான சத்தத்தை கேட்க முடியாததால் ஒலியை அதிகப்படுத்த வேண்டி இருக்கும்.

அமைதி அறையின் பயன்பாடுகள்

Anechoic chamber எனப்படும் இந்த அறைகள் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்புக்கள் வெளிப்படுத்தும் சத்தத்தை அறிய பயன்படுத்துகிறார்கள். உதாரணாமாக LED விளக்குகள் எழுப்பும் ஒலியை கணக்கிட பயன்படுத்தி இருந்தனர். மேலும் Wikipedia வில் தெரிந்து கொள்ளுங்கள்.

Report from Adsense: How Google Maintain Healthy Advertising Ecosystem?

This post originally shared in Google official blog.

Online advertising helps fund the services we all enjoy, keeps web content free, and helps businesses grow. However, bad ads and bad ad-funded content can ruin our experiences online and damage Google trust in the web as a whole.

2013 BAD CONTENT Publishers & Adsense

  1. Blacklisted more than 200,000 publisher pages from serving ads
  2. Removed more than 250,000 ad-funded publishers' accounts for various policy violations
  3. Disapproved more than 3,000,000 applications to join Adsense network
  4. Disabled bad ads and content coming from more than 150 countries and territories
  5. Stopped ad-serving on tens of thousands of sites and disabled more than 5,000 AdSense accounts for violations of Adsense copyright policy
  6. Disabled ads from more than 400,000 sites hiding malware
  7. Disabled ads for more than 10,000 sites promoting get-rich-quick schemes


Copy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு?

இப்பதிவில் "பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்" என்ற பதிவை திருடிய தமிழ் தளங்கள் பற்றி பார்ப்போம். இது மட்டுமல்ல கணணிக்கல்லூரியின் இனி ஒவ்வொரு மாதமும் பதிவு திருடியவர்களின் அட்டவணை வெளியிடப்படும்.

இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு: Copy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு

முன்னணி திருடர்கள் 

TamilSpace Dot Com

இவர்களுக்கு சூடு சுரனையே கிடையாது. பல தடவை எச்சரித்தும் சுட்டு போடுகிறார்கள். பல தமிழ் தளங்களில் இருந்து சுடுவது தான் பிழைப்புக்கு ஆதாரம். இவர்களை பற்றி ஏற்கனவே  சொல்லி இருந்தோம்.

இதில் Comments, Custom Dropbox hosting என பிரமாதமான பக்க வாத்தியங்கள் கூட இருக்கின்றன. இங்கே சுட்டதை காணலாம்.


  1. Karunkuyill: இவர்களை பற்றி இதுவே முதல் அனுபவம். சுட்டது இங்கே 
  2. Tamil Speed News
  3. naveenamatram கொஞ்சம் தான். மிகுதி எங்கே??
  4. kanini solai பெயர் தான் சோலை. ஆனால் வறட்சி/
  5. thulikal இவர்களின் பிழைப்பே எம்மை நம்பி தான்.
  6. yarl it web பெயரில் மட்டும் யாழ்ப்பாணம்..
  7. alliswellfriendz தளபதி மாதிரி இருக்கிறாப்ல
  8. fun india blog இதெல்லாம் உங்களுக்கு fun?



ஒரு பதிவுக்கே இப்படி என்றால் எம் எல்லா பதிவுகளையும் கணக்கிட்டால்.... ஐயகோ....

கணணிக்கல்லூரிக்கு ஏன் இவ்வளவு கோபம்? 

ஒரு பதிவை எழுதி போடுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.  முதலில் அது தொடர்பான எண்ணக்கரு உருவாக வேண்டும். நாம் பல நாட்கள் ஜோசித்து சில நாட்களாக எழுதி, மூல வளங்களை கண்டுபிடித்து ஒரு பதிவை தேற்றும் போது வெறும் copy - paste  மூலம் நீண்ட கால உழைப்பை இந்த ஈன தளங்கள் திருடுகிறார்கள். Tamilcc பற்றி அறிந்த நண்பர்கள் எமக்கு அறிவிக்கிறார்கள். ஏனைய வாசகர்கள் இதை அறியாமல் மற்றவர்களுடன் பகிர்கிறார்கள். இறுதியில் அந்த பதிவு எழுதியவருக்கே வந்து சேர்க்கிறது வேறு ஒரு தளம் மூலம்.

பதிவை திருடுவதன் நோக்கம்?

Wordpress / Blogger இல் ஒரு Domain வாங்கி 5 பதிவை திருடி போட்டு 5 நாளில் Adsense வாங்கி 50 நாளில் அம்பானி ஆகலாம் என்பது தான் இவர்களின் ஒரே இலக்கு. சொந்தாமாக எழுத துப்பில்லாதவர்கள், மற்றவர்களின் பதிவுகளை (குறிப்பாக முன்னணி சினிமா விமர்சன தளங்களின்) திருடி சமூக தளங்களில் இட்டு பிரபலம் அடைகிறார்கள்.

இதை தடுக்க Tamilcc நடவடிக்கை எடுக்கவில்லையா?

Copy செய்வதை தடுப்பதை Tamilcc விரும்புவதில்லை. ஏன் என்றால் அது சாதாரண வாசகர்களை இடைஞ்சலுக்கு உள்ளாக்கும். அத்துடன் copy செய்வதை தடுக்க முடியாது. Right click disable, Selection Disable, Ctrl + A disable என செய்தாலும் இவை எந்த தொழிநுட்ப அறிவும் இல்லாத ஒருவரை தான் முடக்க முடியும்.

அடிப்படை தொழிநுட்பம் மூலம் மிக மிக இலகுவாக திருடலாம்.

  • Tamilcc இல் அதிகமாக வரும் Streetview பதிவுகளை திருட ஒரு படி மேலே செல்ல வேண்டும். அத்துடன் அவை domain policy மூலம் ஓரளவு பாதுகாக்கப்பட்டு உள்ளன. 
  • Cloud Download எதிர்காலத்தில் registered users க்கு மாத்திரம் அனுமதிக்கப்படும்.
  • முடிந்தவரை ஒவ்வொரு வாசகரும் தனித்தன்மை உள்ளவராக Tamilcc கருதுகிறது. 

எவற்றை Tamilcc அனுமதிக்கிறது?

  1. Tamilcc இலாப நோக்கற்ற பிரதி செய்வதை 100% அனுமதிக்கிறது.முன் அனுமதி பெறப்பட்டு  பதிவின் இறுதியில் Tamil Computer College (www.tamilcc.com{url}) என இணைப்பு கொடுக்கப்பட்ட  பதிவுகள் அனுமதிக்கப்படும்.
 Tamilcc , Creative Common License இற்கு பலத்த ஆதரவு அளிக்கிறது. முன் அனுமதி பெற்ற சில தளங்கள் இதுவரை Tamilcc இன் பதிவுகளை பிரசுரிக்கின்றன.

ஈன பிறவிகளை என்ன செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. செய்ய கூடியவை பற்றி இங்கே காணுங்கள். எம்மை போல நீங்களும் இப்படி ஒரு பதிவை அவ்வப்போது போட்டு மனசை ஆறுதல் படுத்துங்கள். உங்கள் தளங்களில் எவரெல்லாம் சுடுகிறார்கள் என தெரியாவிட்டால் எம்மிடம் சொல்லுங்கள். விலாவாரியாக அறிக்கை சமர்ப்பிக்கிறோம். அதை வைத்து ஒரு பதிவை போட்டுங்கள். இப்படி எல்லா சொந்த பதிபவர்களும் போட்டால் ஈனப்பிறவிகள் திருந்துகிறதோ இல்லையோ, அந்த தளங்களை வாசகர்கள் புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். 

உயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்

Wakeboarding பற்றி அறிந்து இருப்பீர்கள். நீரில் விளையாடும் ஒரு பிரபல விளையாட்டாகும். ஆனா இது விளையாட்டு அல்ல. சித்திரவதை. அவ்வப்போது வித்தியாசமான தகவல்கள் கணணிக்கல்லூரியில் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் இதுவும் ஒன்று. முகத்தில் நீர் ஊற்றுவது தண்டனையா? வலிக்குமா? இப்பதிவில் பார்ப்போம்.

File:Waterboarding.jpg

Waterboarding என்றால் என்ன?

Waterboarding என்பது சித்திரவதையின் ஒரு வகையாகும். தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி இருப்பதுடன் சித்திரவதை செய்யப்படுபவரின் பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் முகத்தில் மூச்சு காற்று செல்லும் வழியில் நீர் ஊற்றப்படும். இது பல  வகையில் செய்யப்படும். பெரும்பாலும் முகத்தில் பழைய துணி ஒன்றை வைத்தே அதன் மேல் நீர் ஊற்றுவார்கள். இது பொதுவாக 14 seconds வரை நீடிக்கும்.
சட்ட அறிஞர்கள், அரசியல்வாதிகள்,  புலனாய்வு அதிகாரிகள், இராணுவ நீதிபதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றால் பரவலாக சித்திரவதை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Waterboarding இன் வரலாறு

Zero Dark Thirty (நள்ளிரவு 12:30) படம் பார்த்தால் இதை நிச்சயம் கண்டு இருப்பீர்கள். ஒசாமா பின்லேடனை கொல்வதை சொல்லும் இப்படத்தில் முக்கிய முஸ்லிம் தீவிர வாதியிடம் இருந்து இவ்வாறு தகவல்கள் பெறப்பட்டதை காணலாம்.  Grand Thefe Auto V விளையாடியவர்கள் இதை காணலாம்.
1500 களில் spain இல் டோக்கோ என்றழைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சித்திரவதையின் வடிவத்தில் நீரின் பயன்பாடானது புலன் விசாரணை நடத்துபவர்களுக்கு ஒரு ஆழமான சமயம் சார்ந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது. உலகப் போர் II க்கு முந்தைய அமெரிக்கக் கைதிகள் உலக போர்கள் மற்றும் அமெரிக்க படையெடுப்புக்களில் இவை அடிப்படை அம்சமாக இருந்தன.

CIA இதைப்பற்றி இப்படி சொல்கிறது.

In this procedure, the individual is bound securely to an inclined bench, which is approximately four feet by seven feet. The individual's feet are generally elevated. A cloth is placed over the forehead and eyes. Water is then applied to the cloth in a controlled manner. As this is done, the cloth is lowered until it covers both the nose and mouth. Once the cloth is saturated and completely covers the mouth and nose, air flow is slightly restricted for 20 to 40 seconds due to the presence of the cloth... During those 20 to 40 seconds, water is continuously applied from a height of twelve to twenty-four inches. After this period, the cloth is lifted, and the individual is allowed to breathe unimpeded for three or four full breaths... The procedure may then be repeated. The water is usually applied from a canteen cup or small watering can with a spout... You have... informed us that it is likely that this procedure would not last more than twenty minutes in any one application

Waterboarding  இல் ஏற்பாடும் அனுபவம்?

இதை வெறுமனே பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தோன்றும்.  ஆனால் உண்மையில் இது ஒரு திகிலூட்டும் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது - தாங்க முடியாத வலியை  ஏற்படுத்துகிறது. சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் தான் கொல்லப்படுவதாக நம்புகிறான்.மூச்சு காற்று செல்லும் வழியில் நீரை ஊற்றினால் கைதிக்கு நீரில் மூழ்கடிப்பதைப் போன்ற புலணுனர்வு ஏற்படும்.

Waterboarding இல் எதிர் பார்க்கப்படுவது?

விரைவாக உடலில் காயங்கள் இன்றி தகவல்களை பெற்று கொள்வதாகும்.US கடற்படையில்  இது பயிற்ச்சி நடவடிக்கையில் ஒன்றாகும்.

Waterboarding இன் பக்க விளைவுகள்?

இந்தக் கடுமையான விசாரணை நுட்பங்களானது தவறாகக் குற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். இதன் போது வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பாடும். அதை விட   பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பல ஆண்டுகள் கடந்த பிறகும்  அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதை எதிர் கொண்ட ஒரு நோயாளியால் குளிக்கவே முடியவில்லை மேலும் மழை பெய்யும் போது மிகவும் பயம் கொள்கிறார்.

நீங்களும் இதை எப்போதாவது உபயோகிக்கலாம் என நினைக்காதீர்கள். இதை செய்வதும் பரிசோதிப்பதும் பயங்கரமான விளைவுகளை கொண்டுவரும்.

Google Earth எளிய அறிமுகம்

இப்பதிவில் Google Earth பற்றியும் அதன் சில பயன்பாடுகள் பற்றியும் மேலோட்டமாக பார்க்க போகிறோம்.

Google Earth

கணனியில் நிறுவி பயன்படுத்த கூடிய Google தரும் இலவச வரைபட மேம்பட்ட மென்பொருள். இதற்குரிய நீட்சி உலாவிகளுக்கும் கிடைக்கிறது. அதை பற்றி இங்கு எதுவும் சொல்லவில்லை. நீங்கள் தொலைபேசியில் Google Earth app பயன்படுத்தினாலும் இப்பதிவு பொருந்தும்.

Panorama படங்கள், காலநிலை, விமான பயணம், 3 D கட்டடங்கள் என அட்டகாசமான வசதிகள் இலவசமாக கிடைக்கிறது.  இதன் வர்த்தக பதிப்பும் உண்டு.

Google Earth , Google Maps என்ன வேறு பாடு?

இருபரிமாண street views, Satellite maps , road maps , buildings இவை தான் Google Maps. ஆனால் Google Earth க்கு கீழே உள்ள படமே போதும்.



Google earth இல் கிடைத்தரையை தெளிவாக பார்க்கலாம். அதாவது முப்பரிமாணம். 3D GPU rendering மூலம் மெய்நிகர் தன்மை சாத்தியமாக்கப்படுகிறது. Flight simulation  விமானம் மூலம் பறந்தபடி கூட பார்க்கலாம். இதை பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

வேற்று கிரகங்களுக்கும் சுற்றுலா செல்லலாம்...

இப்பதிவு பகிர்வதன் நோக்கமே இன்னும் சில நாட்களில் Thaj Mahal ளும் அதை அண்டிய பகுதிகளும் Google Earth இல் வெளியாக இருக்கின்றன. பொதுவாக 2010 க்கு பின் வந்தவர்களுக்கு Google earth பற்றி தெரிய வாய்ப்பு குறைவு.

Google Earth பயன்படுத்துவது எப்படி?

Google எப்பொழுதும் கணனியில் தானே இருக்கும். இதன் மூலம் இடங்களின் தகவல்களை URL மூலம் பரிமாற முடியாது தானே. அதனால் சிறப்பான KML வகை file மூலம் பரிமாறப்படும்.

எதிர்காலங்களில் கணணிக்கல்லூரியில் சிறப்பிடங்கள் பற்றி Google earth பதிவுகளில் இவ்வாறன Files தான் பகிரப்படும். இவை மிக மிக சிறிதாக இருக்கும் (1-3kb) files. இவற்றை Google earth நிறுவிய கணனிகளில் Double click மூலம் திறக்கலாம்.

இதன் அறிமுகமாக Underwater waterfall எனப்படும் Mauritius Island உள்ள இடத்தை பின்வரும் KML கோப்பின் மூலம் காணுங்கள். உண்மையில்  Underwater waterfall  என ஒன்று இருக்க முடியாது. இதை பற்றி ScienceBlogs.com தெளிவாக சொல்லி உள்ளது.
What you’re witnessing, that looks like an underwater waterfall, is actually sand from the shores of Mauritius being driven via ocean currents off of that high, coastal shelf, and down into the darker ocean depths off the southern tip of the island.

Youtube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் வருகிறது

நீங்கள் நிச்சயம் Olympic 2012  இனை நேரடியாக Youtube மூலம் பார்த்து இருப்பீர்கள். அப்போது இலாப நோக்கற்ற சேவைகள் இதை பயன் படுத்த அனுமதித்தார்கள். 2014 இன் ஆரம்பத்தில் இதை பொதுமக்களுக்கும் கிடைக்க வழி செய்தார்கள். கட்டம் கட்டமாக அனைவருக்கும் இதை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.


எவ்வாறாயினும் சில நாட்களுக்கு முன்னர் தான் எனக்கு அனுமதி கிடைத்தது. சில சமயம் உங்களுக்கு இந்த சேவை கிடைக்க இன்னும் சில நாள் ஆகலாம்.

நன்மை


  • பதிபவர்கள் சந்திப்புக்கள், TweetUp இவை இதுவரை ustream மூலம் தான் நேரடியாக ஒலி - ஒளி பரப்பினார்கள். இனி மிக மிக இலகுவாக Youtube மூலம் ஒளிபரப்பலாம்.
  • புதிய திரைப்படம் வெளியானால் Youtube android app மூலம் நேரடியாக திரையரங்கில் இருந்தபடியே ஒளிபரப்பலாம். (விழும் தர்ம அடிகளுக்கு சங்கம் பொறுப்பல்ல)
  • சமய நிகழ்வுகள் / தேரோட்டங்கள் / திருப்பலிகள் இவற்றையும் Mobile மூலம் ஒளி பரப்பலாம்.
  • Computer Games விளையாடுவதை கூட ஒளிபரப்ப முடியும்.

கிடைக்கும் வசதிகள்

நீங்கள் அடிப்படை தொழிநுட்ப அறிவு உள்ளவராயின் Web camera மூலமே நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.

கொஞ்சம் பெரிய நிகழ்வு என்றால் encoders மூலம் Cricket match போல Multi camera, Voice mixing என கலக்கலாம். இதற்கு கொஞ்சம் மேம்பட்ட Technology அறிவு அவசியம்.

அத்துடன் Adsense சேவை கூடவே கிடைக்கிறது. நேரடி ஒளிபரப்பில் கொஞ்சம் பணமும் சம்பாதிக்கலாம். CPM மூலம் பார்த்தாலே காசு தான்.

Automatic record வசதி தன்னியக்கமாக பதிவு செய்வதால், பின்பு வரும் உங்கள் பார்வையாளர் ஆறுதலாக பார்க்க முடியும்.

மேலும் சில 

  • YouTube Live streams cannot be viewed from Germany.
  • Copyright பிரச்சனைகள் உள்ள channels என்றால் உங்களால் இதை பெற முடியாது. புதிய Channel ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
  • விரைவான இணைய இணைப்பு முக்கியம்
  • மேலும் உதவிகள் இங்கே 
நான் முதன் முதலாக செய்த Live streaming event இல் சில இடை முகங்கள் கீழே. அடுத்து வரும் பதிவுகளில் நீங்களும் எப்படி இதை ஆரம்பிப்பது என பார்ப்போம்.



நீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது எப்படி?


பொதுவாக அனைவரினும் Blog Archive பெரிதாக நீட்டிக்கொண்டு இருக்கும். அதை எப்படி அழகாக மடித்து சுருக்கு வைப்பது என இப்பதிவில் பார்ப்போம்.

இதன் நோக்கம்?

அதிக பதிவுகளை நீங்கள் பதிவிடும் போது அதன் list, பெரிதாகி, அதாவது blog Archive நீண்டு அலங்கோலமாக இருக்கும். அதை சுருக்கி மடித்து வைத்து இணைய பக்கத்தின் வடிவத்தை பேணுதல்.

யாருக்கு பயனுள்ளது?

மாதம் 5 பதிவுகளுக்கு மேல் எழுதும் பிரபல பதிபவர்களுக்கு தான். Blogger இல் இயங்கும் பதிபவர்களுக்கே இது உரியது. Wordpress, Drupal க்கு பல வழிகளில் இதை செய்யலாம்.

அடிப்படை அம்சங்கள்

இது இரு அடிப்படை அம்சங்களை கொண்டது.

  1. Blog Archive மிக நீண்டதாக இருந்தால் அதை குறிந்த அளவிற்கு மேற்படாமல் காட்டுதல்.
  2. வாசகருக்கு ஆரம்பத்தில் Blog Archive அனைத்தும் திறந்த படி இல்லாமல் இருக்க வைத்தல்.

சுருக்குதல்

இது பின்வரும் CSS மூலம் செய்யப்படும்.  இதை மட்டும் பயன்படுத்தினால் கணணிக்கல்லூரியின் Blog archive போல தென்படும்.


மடித்து வைத்தல்

பொதுவாக நடப்பு மாத Blog archive ஒரு போதும் Blogger இல் மடிக்க முடியாது. அத்துடன் இதுவே ஒவ்வொரு வலைப்பூவிலும் மிக நீண்டதாக காணப்படும். இதை மடிக்க jQuery கட்டளைகள் உதவுகின்றன. 

எப்படி வலைப்பூவில் இணைப்பது?

எதற்காக மேலே இவற்றை பற்றி மேலோட்டமாக சொன்னேன் என்றால்,  உங்களுக்கும் இணைய மொழிகளில் ஒரு ஆர்வம வர வேண்டும். அத்துடன், நீங்கள் இணைக்க போகும் ஸ்கிரிப்ட் பாதுகாப்பானதா, அதன் அடிப்படி அம்சங்கள் என்ன என்பவற்றை அறிந்து இருக்க வேண்டும்.

கீழே உள்ள ஒரு வரி நிரலை நீங்கள் ஒரு HTML Widget  ஆக இணைத்தால் போதும்.

About jQuery Script

  •  If not loaded, script  load it automatically
  • CSS applied with jQuery
  • https used for avoid automatic redirect of Google drive
  • Google drive used as host for long term support
சந்தேகங்கள் / உதவிகள் தேவைப்பட்டால் கருத்துரைக்கு வாருங்கள்.
எதிர் காலத்தில் இப்படி பல பதிவுகளை கணணிக்கல்லூரியில் எதிர் பாருங்கள்.

Blogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன - சரிசெய்வதெப்படி?

Google Reader சேவை செயல் இழக்க செய்யப்பட்டதன் பின்னர், பலரும் மாறியது Feedly சேவைக்கு தான். 2009 களில் தமிழ் பதிவுலகில் புகுந்தவர்களுக்கு, அவர்களின் வாசகர்கள் Feeds மூலமும் Friend connect மூலமும் அணுகப்பட்டனர். ஆனால் 2012 களில் பின்னர் இந்த நிலை மாறி, சமூக வலைத்தளங்களில் இணைப்பை பகிர்வது மூலம் வாசகர் வட்டம் பெருகியது.ஆனால் Feeds மூலம் இன்றும் வலைப்பூக்களை அணுகுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.


அண்மையில் தமிழில் ஜனரஞ்சகமான விமர்சனங்களை வழங்கும் ஒரு தளத்தின் Feeds புதுப்பிக்கப்படவில்லை என வாசகர் ஒருவர் கருத்துரைத்து இருந்தார். அதை ஆராய்ந்த போது தான் சில தொழிநுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டன. அதை உங்களுடன் பகிர்ந்து, இதை எப்படி சரி செய்வது எனவும் இப்பதிவில் பார்ப்போம்.

Feeds Update இல் பிரச்சனை என்றால் என்ன?

உங்கள் Feeds (feedburner) இல் நீங்கள் இடும் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாது, எப்போதோ இட்ட பழைய பதிவு மட்டும் காணப்படும்.

இதனால் உருவாகும் விளைவுகள் என்ன?

Feeds இனை பயன்படுத்தும் சேவைகள் அனைத்தும் நின்றுவிடும் - உங்கள் புதிய பதிவுகள் வாசகருக்கு சென்றடையாது.

  • Friend connect மூலம் இணைந்தவர்களுக்கும் புதிய பதிவுகள் பற்றிய செய்தி செல்லாது.
  • Feeds to Email சேவை நின்றுவிடும்.
  • Feedly போன்றவை உங்கள் தளத்தை புதுப்பிக்கிறது.
  • Android, iOS இல் இயங்கும் feeds apps  உங்களை கைவிட்டு விடும்.
மொத்தத்தில் உங்கள் வாசகரில் 10% பேரை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

இந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும்?

தமிழில் பந்தி பந்தியாக  பக்கம் பக்கமாக பதிவு எழுதுபவர்களுக்கு. நீங்கள் ஒரு பதிவை பெரிதாக எழுதி ஏனையதை சிறிதாக எழுதினாலும், பெரியதுக்கு பிறகுவருபவை எவையும் update ஆகாது.

காரணம் என்ன?

இதை பெரிதாக ஆராய்வது இங்கு பொருத்தம் அல்ல. சுருங்க சொன்னால், feeds க்கு சில மட்டுப்பாடுகள் உண்டு. இவ்வளவு KB இல் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. அதை மீறும் போது உங்கள் feeds புறக்கணிக்கப்படும். குறிப்பாக feedburner சேவை உங்கள் Feed முகவரியை நிராகரித்து விடும்.

தீர்வு

சிக்கலாக பிரச்சனைக்கு மிக எளிதாக தீர்வு. இதன் மூலம் உங்கள் Feeds அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. அவ்வளவே. இனி உங்கள் வாசகருக்கு உங்கள் பதிவின் சுருக்கம் சென்றடையும். முழுவதும் வாசிக்க உங்கள் இணைய பக்கத்துக்கு வந்தே ஆக வேண்டும்.

இதை செய்ய 
Blogger > Settings > Other >  Allow Blog feed > (set to)  Short (from full)
க்கு செல்லுங்கள்.  உதாரணம் கீழே..>



Paypal இலங்கையில் அனுமதிக்கப்படவுள்ளது

Paypal பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. குறிப்பாக இலங்கை மக்களின் நீண்ட நாள் கவலை இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் பணம் பெற முடியாது. சில மாதங்களுக்கு முன் இலங்கை ஜனாதிபதி அவர்கள், Paypal இனை இலங்கையில் உள் அனுமதிப்பது தொடர்பாக சொல்லி இருந்தார்.


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்,  Nivard Cabraal நேற்று இது தொடர்பாக அறிவித்திருந்தார்.

" இலங்கை நிதியியல், தொழிநுட்ப அதிகாரிகள் இலங்கையின் உள் Paypal பண பரிமாற்றத்தை திறந்து விடுவது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடுவதாகவும், விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறி இருந்தார்.

3G கூட அமுலில் வராத இந்தியாவில் Paypal சந்தை திறந்தி இருக்கின்ற போதும், 4G LTE கிராம புறம்  வரை கிடைக்கும் இலங்கையில் Paypal தடை செய்யப்பட்டு உள்ளமை இலங்கையருக்கு சங்கடமான ஒன்று.

190 நாடுகளில் பரந்துள்ள Paypal மூலம் இலங்கையில் இருந்து இதுவரை,  credit card இனை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதியே உள்ளது.

இலங்கையின் உள்நாடு - வெளிநாட்டு சிறு வர்த்தகத்தை முன்னேற்ற Paypal இனை அனுமதிப்பது முக்கியமாகிறது. இலங்கையில் உள்ள எவரும் Ebay மூலம் பொருட்களை விற்ற Paypal இலங்கையின் உள் அனுமதிக்கப்படுவது அவசியமானது.

சில நாடுகள் Paypal மூலம் பணம் பெற அதிக கட்டணங்களை வசூலிக்கிறது. China இனை சேர்ந்த ஒரு வங்கி 30$ இனை அறவிடுகிறது. ஆசியாவில் Hong kong மட்டுமே 0.3 $ என்ற ஆக குறைந்த கட்டணத்தை அறவிடுகிறது.

இலங்கையில் எவ்வாறு இந்த கட்டணங்கள் இருக்கும் என தெரியவில்லை. எவ்வாறாயினும் Paypal மூலம் பரிமாற்ற கூடியஆக கூடிய தொகை மட்டுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர்,  ஆளுநர் (SLCB) Nivard Cabraal  காலத்தில் தான் அதிகளவு நிதி மாற்றங்களுக்கு  விலக்களிக்கப்ப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.


இந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொகுதி Google Street View இல் இணைக்கப்பட்டுள்ளது. #StreetViewIndia

இனி கூகிள் தினமும் இந்தியாவின் பல இடங்களை சேர்ந்த Street views களை வெளியிட போகிறது. இனி ஒவ்வொரு இடத்துக்கும் தனியாக பதிவில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் பல்லாயிரக்கணக்கில் சென்று விடும். அதனால் ஒவ்வொரு நாளுக்கும் உரிய சுருக்கத்தை வெளியிட கணணிக்கல்லூரி முடிவு செய்துள்ளது. எவ்வாறாயினும் Google வெளியிடும் இந்திய இடங்களில் தெருக்கள் வரப்போவதில்லை. வரலாற்று சின்னங்கள், கோட்டைகள், நிர்வாக அலுவலகங்கள், தூபிகள் தான். இவை ஒவ்வொன்றும் வெளியிடப்படும் போதே உங்களுக்கும் இங்கு காண முடியும்.


இந்தியாவின் Street views வெளியிடப்பட தொடங்கியது, இதுவரை எந்தவொரு இந்திய ஊடகங்களுக்கும் தெரியாது. அத்துடன் இவை இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகவும் இல்லை. இன்னும் 3 மாதங்கள் வரை இவற்றை தொகுத்து வெளியிட காத்திருக்க வேண்டும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் கணணிக்கல்லூரியில் உடனுக்குடன் கண்டு மகிழுங்கள்.
இதுவரை வெளியான இந்திய Street views தொகுப்பு : இங்கே

இன்று இணைக்கப்பட்ட இடங்கள்

  • India Chandragiri Fort
  •  Palli Kondaperumal and Malayadipatti and Shiva Temple
  • Amaravati Buddhist Stupas & Remains
  • Guntupalli Caves
  • Hirakota Fort in India

இவை அனைத்தும் பெரும்பாலும் 2013 December பிற்பகுதியில் எடுக்கப்பட்டவை. பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை Google எதிர் கொண்டு இருக்கலாம் என தெரிகிறது. உதாரணமாகா கோவில்களின் உட்புறம் செல்ல வைணவர்கள் அனுமதிக்கவில்லை போல தெரிகிறது. சில கோட்டைகளின் உட்செல்ல police அனுமதிக்கவில்லை. 
வழமை போல விரும்பிய இடத்தில் உள்ள Marker இனை click செய்து அதன் கீழ் உருவாக்கும் Street view இல் சுற்றி பாருங்கள். இதற்கு நிச்சயம் உங்கள் உலாவி, HTML5 க்கு ஆதரவு தர வேண்டும்.

கீழே உள்ள கருத்து கணிப்புபில் உங்கள் கருத்துக்களை சொல்ல தயங்காதீர்கள்.


Pandigital Number ஓர் எளிய அறிமுகம்

கணணிக்கல்லூரியில் கணிதம் சார்ந்த பதிவுகள் தனித்தன்மையானவை. இதுவரை Maths  பகுதியில் இவை தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பிபனோச்சி எண்கள் பற்றிய கட்டுரை அதிக விருப்புக்களை உங்களிடம் இருந்து கொண்டது. அந்த வகையில் இந்த பதிவில் Pan Digital Numbers பற்றியும் அவற்றின் சிறப்பு தன்மை பற்றியும் காணலாம். Pandigital Numbers க்கு பொருத்தமான தமிழ் கிடைக்கவில்லை.

Pandigital Number என்றால் என்ன?

முதல் எண் 0 அல்லாத 0-9 வரை உள்ள அனைத்து இலக்கங்களையும் உள்ளடக்கிய எண் Pandigital Number எனப்படும்.  "zeroless" pandigital  என்றால் அவை 1-9 வரை உள்ள இலக்கங்களால் ஆனவை. இது அடி 10 (base 10) க்கு உரியது. இப்படி எந்த அடியிலும் அந்த அனைத்து இலக்கங்களை உள்ளடக்கிய எண்கள் PanDigital Numbers எனப்படும்.

சில சந்தர்ப்பங்களில் இவற்றில் வந்த எண் மீள வர கூடாது சொல்லப்படுகிறது. பல வகையான விளக்கங்கள் Pandigital Numbers க்கு வழங்கப்படுகின்றன.

இந்த வகையில் மிகச்சிறிய Pandigital No = 1023456789 
மிகப்பெரும் Pandigital No : 9876543210

Examples of pandigital numbers

  • 123456789 = The first zeroless pandigital number.
  • 381654729 = The only zeroless pandigital number where the first n digits are divisible by n.
  • 987654321 = The largest zeroless pandigital number without redundant digits.
  • 1023456789 = The first pandigital number.
  • 1234567890 = The first pandigital number with the digits in order.
  • 3816547290 = The only pandigital number without redundant digits, where the first n digits are divisible by n.
  • 9876543210 = The largest pandigital number without redundant digits.

Pandigital Numbers இன் சிறப்பு என்ன?

இவற்றில் சில சிறப்பு Pandigital Numbers இருக்கின்றன. இவை ஏனையவற்றில் இருந்து எப்படி வேறு படுகின்றன. இவற்றின் சிறப்புக்கள் என்ன என பார்ப்போம்.

வாழ்க்கையில் சில சமயங்களில் இப்படியான எண்கள் , அதாவது 1-9 வரை உள்ள இலக்கங்களை மட்டும் ஒரு தடவை உள்ளடக்கி  சந்தித்து இருப்பீர்கள். உங்கள் சுட்டிலக்கம், தொலைபேசி இலக்கம், கடனட்டை இலக்கம் (பெரும்பாலும் சாத்தியம் இல்லை).

381,654,729

இது  9 இலக்கங்களால் ஆனா எண். முழு இலக்கமும் 9 ஆல் பிரிக்க பட கூடியது.
வலது புறம் 9 இனை நீக்கினால் 381 654 72 . இந்த 8 இலக்க எண் 8 ஆல் பிரிபடக்கூடியது.
இப்படியே ஒவ்வொரு இலக்கமாக நீக்க, அதே பெருமானத்தால் பிரிக்க பட கூடியது. இது Polydivisible number வகைக்குள் அடங்கும் ஒரு Pandigital இலக்கம் ஆகும்.
இதற்கு 0 சேர்த்தாலும் 3816547290 . இது 10 ஆல் பிரிபடும்.

9,814,072,356

இதுவே மிகப்பெரும் வர்க்க Pandigital எண் ஆகும். இதன் வர்க்க  மூலம் 99066.

10,123,457,689

இது தான் மிகப்பெரும் Pandigital எண் ஆக அமையும் முதன்மை எண்.

Pandigital மொத்த எண்கள் எத்தனை?

இலகுவாக 0 அற்ற எண்களின் எண்ணிக்கை என்றால் 9! = 362,880 என சொல்லலாம். 0 உள்ளகட்டக்கிய எண் என்றால் 10! என சொல்லுவீர்கள். ஆனால் முன் வரும் 0 பெறுமதி அற்றது. எனவே 9 * 9! = 3,265,920
Mathematical Wonders happen with Mathematicians

இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites

2014-01-09 முதல் கூகிள் சத்தம் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட Street view காட்சிகளை வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பாக google எந்த செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. எமக்கு Google Engineering பிரிவில் இருந்து கசியவிடப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இவை பிரசுரிக்கப்படுகின்றன.

Google Maps views , Photo spare, Panorama இவை தனிப்பட்டவர்களால் எப்பொழுதோ இந்தியா முழுவதும்  வெளியாகி விட்டது. ஆனால் முதுகில் சுமந்து செல்லும் Camera மூலம்  எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ காட்சிகளே இப்போது வெளியாகி உள்ளன.

  புதியவை வெளியாகும் போது உடனுக்குடன் கணணிக்கல்லூரியில் வெளியாகும்.

இதுவரை:

Tomb of I'timād-ud-Daulah

Tomb of I'timād-ud-Daulah is a Mughal mausoleum in the city of Agra in the Indian state of Uttar Pradesh. Often described as a "jewel box", sometimes called the "Baby Tāj", the tomb of I'timād-ud-Daulah is often regarded as a draft of the Tāj Mahal.

Raigad Fort

Raigad is a hill fortress situated in the near Mahad, Raigad district of Maharashtra, India. The Maratha king Shivaji made the fort his capital in 1674 when he was crowned King of a Maratha Kingdom which later developed into the Maratha Empire eventually covering majority of modern day India.

Aga Khan Palace

The Aga Khan Palace was built by Sultan Muhammed Shah Aga Khan III in Pune, India. Built in 1892, it is one of the biggest landmarks in Indian history. The palace was an act of charity by the Sultan who wanted to help the poor in the neighbouring areas of Pune, who were drastically hit by famine


ஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்

Embedded image permalinkGoogle ஒரே இரவில் நூற்றுக்கணக்கான Street view களை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டது. மிக இரகசியமாக எவ்வித ஆரவாரமும் இன்றி வெளியாகிய இந்த காட்சிகள் உலகம் முழுவதிலுமே கணணிக்கல்லூரியில் தான் முதன் முதலில் வெளியாகிறது. தொடர்ந்தும் இந்திய - தமிழக சிறப்பு Street views கணணிக்கல்லூரியில் வெளியாகும். இதுவரை வெளியான Street views இங்கே காணலாம். தொழினுட்ப பிழைகள், கருத்துக்களுக்கு இங்கே வாருங்கள்.


புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.


1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம்.



தமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்

தமிழ் நாட்டின் குறிப்பிடதத்தக்க சைவ (இந்து) சமய  வரலாற்று சின்னங்களை Google Street view மூலம் காண முடியும்.


இதை பற்றி உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் கூகுளால் வெளியிடப்படவில்லை. எங்களுக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களை வைத்தே இவை திரட்டப்பட்டு, இங்கு பகிரப்படுகிறது. இதை முதலில் தமிழில் மட்டுமல்ல உலகத்துக்கே அறிமுகப்படுத்துவதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது.  அத்துடன் இந்த இடங்களில் நீங்கள் சாதரணமான முறையான Drag & drop மூலம்  சுற்றி பார்க்க முடியாது.

கீழே ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப்பாருங்கள். உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளுக்கு இங்கே வாருங்கள்.

இவை தமிழருக்கு / இந்துக்களுக்கு பரீட்சியமான இடங்கள் என்பதால் இவற்றை பற்றி விரிவாக எதுவும் சொல்லவில்லை.

சில இடங்களில் தமிழர்களின் சிறப்பு தன்மைகள் கூட காணப்படுகின்றன. சில இடங்களில் ஆபாசமான காட்சிகளும் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இவற்றை நீக்க கூகுளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.



வழக்கம் போல HTML5 இல் அமைந்த Street view வில் விரும்பிய இடத்தை Click செய்து கீழே தானாக திறக்கும் பகுதியில் சுற்றிபாருங்கள். தொழிநுட்ப பிழைகளுக்கு இங்கே வாருங்கள்.
  1. திருமயம் மலைக்கோட்டை [wiki]
  2. சித்தன்னவாசல் [wiki]
  3. Rajagiri Fort

Qutub Minar (India), Google Street View இல் இணைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு

File:Qutub Minar Delhi 02.jpgஇந்த வருடம் Google, Indai வின் பல பகுதிகளுக்கான Street view களை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் Thaj Mahal  உட்பட பல பகுதிகள் நிச்சயம் வெளியாகும். நேற்று முன் தினம் தமிழ் நாட்டின் பல சின்னங்கள் வெளியானதாக செய்திகள்  வெளியானா போதும் எம்மால் அவற்றை காண முடியவில்லை. அவ்வாறு தான் Qutub காட்சிகளும், drag & drop மூலம் காண முடியாது. இதற்கு காரணம் Indian street views இனை நிர்வகிக்க Google இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை கணணிக்கல்லூரியில் வெளியான Google Street views முழுவதின் தொகுப்பை இங்கே காணலாம்

புதிய Street view இந்தியாவில் வெளியாகும் போதெல்லாம் உங்களுக்கு Tamilcc.com தெரிவிக்கும்.

Qutub Minar

குதுப் மினார் இந்தியாவில், Delhi 'ல் 72.5 meters (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளிவாயில் தூபி இதுவே ஆகும் அத்துடன்  UNESCO World Heritage Site 'ம் ஆகும்.

The minar is made of red sandstone covered with intricate carvings and verses from the Qur'an. The minar comprises several superposed flanged and cylindrical shafts, separated by balconies carried on Muqarnas corbels. The first three storeys are made of red sandstone; the fourth and fifth storeys are of marble and sandstone. At the foot of the tower is the Quwwat-ul-Islam Mosque, the first mosque to be built in India. Bollywood actor and director Dev Anand wanted to shoot the song Dil Ka Bhanwar Kare Pukar from his movie Tere Ghar Ke Samne inside the minar.

இந்த குதுப் வளாகத்தின் அருகாமையில் நிற்கும் இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும், உலோக ஆக்கத் தொழில் வல்லுனர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்த விஷயமாகும். பரம்பரை பரம்பரையாக மக்கள் நம்புவது என்ன என்றால், ஒருவர் முதுகை இந்த தூணுடன் இணைத்து, தமது கரங்களால் இந்த தூணை அரவணைக்க முடிந்தால், அவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகமாகும். மனிதனின் வியர்வை இந்த தூணை அரித்தழிக்கும் என்பதால் இப்படி செய்யாமல் இருக்க ,இந்திய அரசு இந்தத் தூணை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளது. [wiki]

கீழே Qutub Minar பகுதிகளை சுற்றி பாருங்கள். [Direct Link]


கொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள்

படிமம்:Grand Canyon Horse Shoe Bend MC.jpg

கொலராடோ ஆறு (Colorado River) சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. USA 'ன் தென்மேற்கு பகுதியிலும் Mexico 'ன் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ KM ஆகும். Rocky மலைத்தொடரின் வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. Grand ஏரியில் உற்பத்தியாகி கலிபோர்னியா குடாவில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் Mexico  பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.
629,100 Km ^2 பரப்பு நிலம் Colorado ஆற்றால் வடிகால் வசதி பெறுகிறது.

கடந்த August மாதம் இப்பகுதியில் படகில் சென்ற Google, இதன் மொத்த நீளத்தையும் படம் பிடித்துள்ளது. அதை நீங்களும் கீழே காணுங்கள்.


IT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு

Programming, web development and web designing துறைகள் இப்போது முன்னணியில் திகழ ஆரம்பித்து உள்ளன. கடந்த வருட தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இவர்கள் நாட்டின்  பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள் என தெரியவருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஊதிய அடிப்படையில் இவற்றை வழங்குகிறது.

There is obviously a striking difference in their salaries. For instance, web developers in Denmark are paid three times as much as those who are in Hong Kong. Senior web designers in Australia and Ireland are paid really high while those in India and the Philippines get by with less than 20,000 US dollars a year. We also see that in some countries, web developers get paid way more than the designers.

If you are an employer, this information could be valuable especially when you use it with your decision on where to hire people from. As a developer and designer on the other hand, this could give you an idea how other people in your industry are getting paid. Salary data has been generated from PayScale.com.

நீங்களும் ஒரு programmer, developer அல்லது ஒரு  designer ஆக இருக்கிறீர்களா?? உங்கள் நாட்டுடன் இவற்றை ஒப்பிட்டு பாருங்கள்.