Home » » Youtube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் வருகிறது

நீங்கள் நிச்சயம் Olympic 2012  இனை நேரடியாக Youtube மூலம் பார்த்து இருப்பீர்கள். அப்போது இலாப நோக்கற்ற சேவைகள் இதை பயன் படுத்த அனுமதித்தார்கள். 2014 இன் ஆரம்பத்தில் இதை பொதுமக்களுக்கும் கிடைக்க வழி செய்தார்கள். கட்டம் கட்டமாக அனைவருக்கும் இதை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.


எவ்வாறாயினும் சில நாட்களுக்கு முன்னர் தான் எனக்கு அனுமதி கிடைத்தது. சில சமயம் உங்களுக்கு இந்த சேவை கிடைக்க இன்னும் சில நாள் ஆகலாம்.

நன்மை


  • பதிபவர்கள் சந்திப்புக்கள், TweetUp இவை இதுவரை ustream மூலம் தான் நேரடியாக ஒலி - ஒளி பரப்பினார்கள். இனி மிக மிக இலகுவாக Youtube மூலம் ஒளிபரப்பலாம்.
  • புதிய திரைப்படம் வெளியானால் Youtube android app மூலம் நேரடியாக திரையரங்கில் இருந்தபடியே ஒளிபரப்பலாம். (விழும் தர்ம அடிகளுக்கு சங்கம் பொறுப்பல்ல)
  • சமய நிகழ்வுகள் / தேரோட்டங்கள் / திருப்பலிகள் இவற்றையும் Mobile மூலம் ஒளி பரப்பலாம்.
  • Computer Games விளையாடுவதை கூட ஒளிபரப்ப முடியும்.

கிடைக்கும் வசதிகள்

நீங்கள் அடிப்படை தொழிநுட்ப அறிவு உள்ளவராயின் Web camera மூலமே நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.

கொஞ்சம் பெரிய நிகழ்வு என்றால் encoders மூலம் Cricket match போல Multi camera, Voice mixing என கலக்கலாம். இதற்கு கொஞ்சம் மேம்பட்ட Technology அறிவு அவசியம்.

அத்துடன் Adsense சேவை கூடவே கிடைக்கிறது. நேரடி ஒளிபரப்பில் கொஞ்சம் பணமும் சம்பாதிக்கலாம். CPM மூலம் பார்த்தாலே காசு தான்.

Automatic record வசதி தன்னியக்கமாக பதிவு செய்வதால், பின்பு வரும் உங்கள் பார்வையாளர் ஆறுதலாக பார்க்க முடியும்.

மேலும் சில 

  • YouTube Live streams cannot be viewed from Germany.
  • Copyright பிரச்சனைகள் உள்ள channels என்றால் உங்களால் இதை பெற முடியாது. புதிய Channel ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
  • விரைவான இணைய இணைப்பு முக்கியம்
  • மேலும் உதவிகள் இங்கே 
நான் முதன் முதலாக செய்த Live streaming event இல் சில இடை முகங்கள் கீழே. அடுத்து வரும் பதிவுகளில் நீங்களும் எப்படி இதை ஆரம்பிப்பது என பார்ப்போம்.