Home » » உலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்?

அவ்வப்போது கணணிக்கல்லூரியின் விஞ்ஞானம் சார்ந்த பதிவுகள் வருவது வழமை. இம்முறை உலகின் மிக அமைதியான அறை பற்றியும், அதன் உள் இருக்கும் மனித உணர்வுகள் பற்றியும் பார்ப்போம்.


மிக அமைதியான இடம் என சொல்லப்படுவது விண் வெளி தான். ஏன் என்றால் அங்கு காற்று இல்லை - அதிர்வுகள் மனித காதை அடையாது. ஆனால் அங்கு சென்று நம்மால் ஆய்வுகளை செய்ய முடியாது. சுவாசிக்க காற்று இல்லையே. அதையும் கொண்டு போனால் தேவை அற்ற ஒலிகளை கேட்க நேரிடும்.

இதை கருத்தில் கொண்டு தான் Minneapolis  இல் உள்ள orfield lab இல் ஒரு அறையை கட்டினார்கள். இது தான் உலகின் மிக அமைதியான இடம். பொதுவாக நாம் அமைதியான இடம் என சொல்வது 30 dB (decibel) ஒலிச்செறிவு மட்டம் (ஒலி செறிவு அல்ல) உள்ள இடத்தை தான். ஆனால் இந்த அறையில் -9 dB இல் தான் ஒலி செறிவு மட்டம் இருக்கும். அதாவது அங்கு கிட்டதட்ட 0.125893 watts தான் ஒலியின் சக்தி இருக்கும்.

 அமைதியான அறையின் சிறப்பு

இங்கு எதிர் ஒலி இல்லை, இரைச்சல் இல்லை. எனவே அமைதியான அறையின் நீங்கள் உட்கார்ந்தால் இருதய துடிப்பு, வயிற்று தசைகளின் இயக்கம், இரத்த பாய்ச்சல் என அனைத்தையும் கேட்க முடியும்.

மயான அமைதி என்பது இது தானோ? இங்கு மனிதனால் அதிக நேரம் இருக்க முடியாது. ஆக கூடியதாக 45 நிமிடங்கள் ஒருவர் இருந்து சாதனை படைத்து உள்ளார். நீண்ட நேரம் இருக்கும் போது, உங்கள் இதய துடிப்பையே நீங்க கேட்பதால் உங்களுக்குள் இனம் புரியாத கலவரம் ஏற்படுகிறது. ஒலிக்கு பழக்கப்பட்ட உங்களால் இங்கு இருக்கவே முடியாது. மனித காதால் 1 dB க்கும் குறைவான சத்தத்தை கேட்க முடியாததால் ஒலியை அதிகப்படுத்த வேண்டி இருக்கும்.

அமைதி அறையின் பயன்பாடுகள்

Anechoic chamber எனப்படும் இந்த அறைகள் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்புக்கள் வெளிப்படுத்தும் சத்தத்தை அறிய பயன்படுத்துகிறார்கள். உதாரணாமாக LED விளக்குகள் எழுப்பும் ஒலியை கணக்கிட பயன்படுத்தி இருந்தனர். மேலும் Wikipedia வில் தெரிந்து கொள்ளுங்கள்.