Home » » இந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொகுதி Google Street View இல் இணைக்கப்பட்டுள்ளது. #StreetViewIndia

இனி கூகிள் தினமும் இந்தியாவின் பல இடங்களை சேர்ந்த Street views களை வெளியிட போகிறது. இனி ஒவ்வொரு இடத்துக்கும் தனியாக பதிவில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் பல்லாயிரக்கணக்கில் சென்று விடும். அதனால் ஒவ்வொரு நாளுக்கும் உரிய சுருக்கத்தை வெளியிட கணணிக்கல்லூரி முடிவு செய்துள்ளது. எவ்வாறாயினும் Google வெளியிடும் இந்திய இடங்களில் தெருக்கள் வரப்போவதில்லை. வரலாற்று சின்னங்கள், கோட்டைகள், நிர்வாக அலுவலகங்கள், தூபிகள் தான். இவை ஒவ்வொன்றும் வெளியிடப்படும் போதே உங்களுக்கும் இங்கு காண முடியும்.


இந்தியாவின் Street views வெளியிடப்பட தொடங்கியது, இதுவரை எந்தவொரு இந்திய ஊடகங்களுக்கும் தெரியாது. அத்துடன் இவை இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகவும் இல்லை. இன்னும் 3 மாதங்கள் வரை இவற்றை தொகுத்து வெளியிட காத்திருக்க வேண்டும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் கணணிக்கல்லூரியில் உடனுக்குடன் கண்டு மகிழுங்கள்.
இதுவரை வெளியான இந்திய Street views தொகுப்பு : இங்கே

இன்று இணைக்கப்பட்ட இடங்கள்

  • India Chandragiri Fort
  •  Palli Kondaperumal and Malayadipatti and Shiva Temple
  • Amaravati Buddhist Stupas & Remains
  • Guntupalli Caves
  • Hirakota Fort in India

இவை அனைத்தும் பெரும்பாலும் 2013 December பிற்பகுதியில் எடுக்கப்பட்டவை. பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை Google எதிர் கொண்டு இருக்கலாம் என தெரிகிறது. உதாரணமாகா கோவில்களின் உட்புறம் செல்ல வைணவர்கள் அனுமதிக்கவில்லை போல தெரிகிறது. சில கோட்டைகளின் உட்செல்ல police அனுமதிக்கவில்லை. 
வழமை போல விரும்பிய இடத்தில் உள்ள Marker இனை click செய்து அதன் கீழ் உருவாக்கும் Street view இல் சுற்றி பாருங்கள். இதற்கு நிச்சயம் உங்கள் உலாவி, HTML5 க்கு ஆதரவு தர வேண்டும்.

கீழே உள்ள கருத்து கணிப்புபில் உங்கள் கருத்துக்களை சொல்ல தயங்காதீர்கள்.