Home » » Copy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு?

இப்பதிவில் "பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்" என்ற பதிவை திருடிய தமிழ் தளங்கள் பற்றி பார்ப்போம். இது மட்டுமல்ல கணணிக்கல்லூரியின் இனி ஒவ்வொரு மாதமும் பதிவு திருடியவர்களின் அட்டவணை வெளியிடப்படும்.

இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு: Copy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு

முன்னணி திருடர்கள் 

TamilSpace Dot Com

இவர்களுக்கு சூடு சுரனையே கிடையாது. பல தடவை எச்சரித்தும் சுட்டு போடுகிறார்கள். பல தமிழ் தளங்களில் இருந்து சுடுவது தான் பிழைப்புக்கு ஆதாரம். இவர்களை பற்றி ஏற்கனவே  சொல்லி இருந்தோம்.

இதில் Comments, Custom Dropbox hosting என பிரமாதமான பக்க வாத்தியங்கள் கூட இருக்கின்றன. இங்கே சுட்டதை காணலாம்.


 1. Karunkuyill: இவர்களை பற்றி இதுவே முதல் அனுபவம். சுட்டது இங்கே 
 2. Tamil Speed News
 3. naveenamatram கொஞ்சம் தான். மிகுதி எங்கே??
 4. kanini solai பெயர் தான் சோலை. ஆனால் வறட்சி/
 5. thulikal இவர்களின் பிழைப்பே எம்மை நம்பி தான்.
 6. yarl it web பெயரில் மட்டும் யாழ்ப்பாணம்..
 7. alliswellfriendz தளபதி மாதிரி இருக்கிறாப்ல
 8. fun india blog இதெல்லாம் உங்களுக்கு fun?ஒரு பதிவுக்கே இப்படி என்றால் எம் எல்லா பதிவுகளையும் கணக்கிட்டால்.... ஐயகோ....

கணணிக்கல்லூரிக்கு ஏன் இவ்வளவு கோபம்? 

ஒரு பதிவை எழுதி போடுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.  முதலில் அது தொடர்பான எண்ணக்கரு உருவாக வேண்டும். நாம் பல நாட்கள் ஜோசித்து சில நாட்களாக எழுதி, மூல வளங்களை கண்டுபிடித்து ஒரு பதிவை தேற்றும் போது வெறும் copy - paste  மூலம் நீண்ட கால உழைப்பை இந்த ஈன தளங்கள் திருடுகிறார்கள். Tamilcc பற்றி அறிந்த நண்பர்கள் எமக்கு அறிவிக்கிறார்கள். ஏனைய வாசகர்கள் இதை அறியாமல் மற்றவர்களுடன் பகிர்கிறார்கள். இறுதியில் அந்த பதிவு எழுதியவருக்கே வந்து சேர்க்கிறது வேறு ஒரு தளம் மூலம்.

பதிவை திருடுவதன் நோக்கம்?

Wordpress / Blogger இல் ஒரு Domain வாங்கி 5 பதிவை திருடி போட்டு 5 நாளில் Adsense வாங்கி 50 நாளில் அம்பானி ஆகலாம் என்பது தான் இவர்களின் ஒரே இலக்கு. சொந்தாமாக எழுத துப்பில்லாதவர்கள், மற்றவர்களின் பதிவுகளை (குறிப்பாக முன்னணி சினிமா விமர்சன தளங்களின்) திருடி சமூக தளங்களில் இட்டு பிரபலம் அடைகிறார்கள்.

இதை தடுக்க Tamilcc நடவடிக்கை எடுக்கவில்லையா?

Copy செய்வதை தடுப்பதை Tamilcc விரும்புவதில்லை. ஏன் என்றால் அது சாதாரண வாசகர்களை இடைஞ்சலுக்கு உள்ளாக்கும். அத்துடன் copy செய்வதை தடுக்க முடியாது. Right click disable, Selection Disable, Ctrl + A disable என செய்தாலும் இவை எந்த தொழிநுட்ப அறிவும் இல்லாத ஒருவரை தான் முடக்க முடியும்.

அடிப்படை தொழிநுட்பம் மூலம் மிக மிக இலகுவாக திருடலாம்.

 • Tamilcc இல் அதிகமாக வரும் Streetview பதிவுகளை திருட ஒரு படி மேலே செல்ல வேண்டும். அத்துடன் அவை domain policy மூலம் ஓரளவு பாதுகாக்கப்பட்டு உள்ளன. 
 • Cloud Download எதிர்காலத்தில் registered users க்கு மாத்திரம் அனுமதிக்கப்படும்.
 • முடிந்தவரை ஒவ்வொரு வாசகரும் தனித்தன்மை உள்ளவராக Tamilcc கருதுகிறது. 

எவற்றை Tamilcc அனுமதிக்கிறது?

 1. Tamilcc இலாப நோக்கற்ற பிரதி செய்வதை 100% அனுமதிக்கிறது.முன் அனுமதி பெறப்பட்டு  பதிவின் இறுதியில் Tamil Computer College (www.tamilcc.com{url}) என இணைப்பு கொடுக்கப்பட்ட  பதிவுகள் அனுமதிக்கப்படும்.
 Tamilcc , Creative Common License இற்கு பலத்த ஆதரவு அளிக்கிறது. முன் அனுமதி பெற்ற சில தளங்கள் இதுவரை Tamilcc இன் பதிவுகளை பிரசுரிக்கின்றன.

ஈன பிறவிகளை என்ன செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. செய்ய கூடியவை பற்றி இங்கே காணுங்கள். எம்மை போல நீங்களும் இப்படி ஒரு பதிவை அவ்வப்போது போட்டு மனசை ஆறுதல் படுத்துங்கள். உங்கள் தளங்களில் எவரெல்லாம் சுடுகிறார்கள் என தெரியாவிட்டால் எம்மிடம் சொல்லுங்கள். விலாவாரியாக அறிக்கை சமர்ப்பிக்கிறோம். அதை வைத்து ஒரு பதிவை போட்டுங்கள். இப்படி எல்லா சொந்த பதிபவர்களும் போட்டால் ஈனப்பிறவிகள் திருந்துகிறதோ இல்லையோ, அந்த தளங்களை வாசகர்கள் புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள்.