![]() ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த தளம் வழி செய்கிறது. அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டாரட்டர் என்று இந்த தளத்தை வர்ணிக்கலாம். கிக் ஸ்டார்ட்டர் புதிய திட்டங்களுக்கான நிதியை இணையவாசிகளிடம் இருந்து திரட்ட கைகொடுக்கிறதோ அதோ போல இந்த தளம் எழுத்தாளர்கள் தாங்கள் வெளியிட விரும்பும் புத்தகத்திற்கான நிதியை அதனை படிக்க விரும்பும் வாசகர்களிடம் இருந்தே திரட்டி கொள்ள உதவுகிறது. கிக் ஸ்டார்ட்டரில் நிதி கோருபவர் தனது திட்டத்தை விவரித்து அதனை ஆதரிக்க கேட்பது போல இதில் எழுத்தாளர்கள் தாங்கள் எழுத உள்ள புத்தகம் பற்றி குறிப்பிட்டு ஆதரவு கோர வேண்டும். ஆனால் ஒன்று கிக் ஸ்டார்ட்டரில் புதிய திட்டங்கள் பற்றி சற்றே விரிவாகவே குறிப்பிடலாம். வீடியோ இணைப்புகளையும் சேர்த்து கொள்ளலாம். தனி மினி இணையதளம் போல ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு தனி பக்கமே ஒதுக்கப்படும். இதிலோ முழு கதையை எல்லாம் சொல்ல முடியாது. புத்தகத்தின் நோக்கத்தை குறிப்பிட்டு மாதிரிக்கு பத்து பக்கங்களை சமர்பிக்கலாம். புத்தக சுருக்கத்துடம் இந்த விவரங்கள் எழுத்தாளரின் பக்கத்தில் இடம் பெறும். வாசகர்கள் அதனி படித்து பார்க்கும் போது பிடித்து போனால் முழு புத்தகம் எழுத தங்கள் ஆதரவை அளிக்கலாம். இப்படி போதுமான வாசக்ர்கள் ஒரு புத்தகத்திற்காக சேரும் போது அவர்கள் நிதி பங்களிப்போடு புத்தகம் வெளியாகும். போதுமான வாசகர் சேரும் வரை நிதி அளிக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட பதிப்பகங்களின் முன் வெளியீட்டு திட்டம் போல தான், ஆனால் இணையதன்மை கொண்டது. முன் வெளியீட்டு திட்டத்தில் வாசகர்கள் ஒரு புத்தக்த்தை முன்கூட்டியே வாங்க ஒப்பு கொள்கின்றனர். மற்றபடி அந்த புத்தக உருவாக்கத்தில் அவர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. இந்த தளத்திலோ வாசகர்கள் தான் புத்தகத்தையே உருவாக்குகின்றனர். அவர்களுக்கு பிடித்தால் தான் புத்தகம் வெளிவரும். அதோடு புதிய எழுத்தாளரை இனம் கண்டு ஆதரித்த திருப்தியையும் பெறலாம். அந்த வகையில் பார்த்தால் வாசகர்கள் தான் பதிப்பாசிரியர் போல புத்தக சுருக்கத்தையும் மாதிரியையும் படித்து பார்த்து அதன் தரத்தை தீர்மானித்து ஆதரிக்கலாம். ஒரு புத்தக கருத்து பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்து ஆதரிக்க கோரலாம். இந்த வகையில் பார்த்தால் இது புத்தக உருவாக்கத்திற்கான சமூக வலைப்பின்னல் தளம் போல செயல்படுவதாக வைத்து கொள்ளலாம். வாசகர்கள் தங்களுக்கு பிடித்தமான பிரிவில் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து பார்த்து எந்த எழுத்தாளரை ஆதரிக்கலாம் என முடிவு செய்து கொள்ளலாம். பதிப்பகம் முன்னிறுத்தும் எழுத்தாளரின் புத்தகத்தை படிப்பதை காட்டிலும் வாசக்ர்கள் தாங்களே புதிய எழுத்தாளர்களை அடையாள்ம் காட்டுவது வாசகர் கைகளில் பதிப்பதிகாரத்தை கொண்டு வந்தது போல தானே. பின்னாளில் பிரபல எழுத்தாலர்களாக கோலோச்சியவரக்ள் கூட ஆரம்பத்தில் பதிப்பிக்கும் வாய்ப்பை பெற திண்டாடிய கதைகள் ஏராளம். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வந்திருக்கிறது இந்த புதுமை பதிப்பு தளம். இணையம் |
Labels:
Web sites