பல Operating System (OS) களை நிறுவ வேண்டிய அவசியம் என்ன?
Testing Purpose
அதாவது இருக்கும் OS இல் இருந்து புதிய ஒன்றுக்கு மாற விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு பிடிக்குமா என பார்க்க. Windows 7 இல் இருக்கும்நீங்கள் Windows 8 க்கு மாற முதல் W7 இருக்கவே W8 இனை நிறுவி பயன்படுத்தி பார்த்து பிடித்தால் W7 இனை அழித்து விட்டு W8 உடன் வாழுதல்.
Preview / Beta Testing
இது கணனியில் கொஞ்சம் ஆர்வ கோளறு உள்ளவர்களுக்காக. முன்பு Windows 8 preview வெளியான போது நாமும் அதை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டையும் நிறுவுதல்.
Open Source Testing
இப்போது Windows OS இல் இருக்கும் நீங்கள் Opensource வகையை சேர்ந்த Ubuntu, Kubuntu OS களை நிறுவி உங்கள் Hardware ஒத்து போகிறதா என பார்க்க இரண்டையும் ஒன்றாக நிறுவ வேண்டி வரும்.
மேலும் சில
ஒரு மென்பொருளுக்காகவே ஒரு OS நிறுவ வேண்டி கூட வரும். உதாரணமாக Adobe Premiere CS6 எப்போதும் Windows 7 Home premiere க்கு மேற்பட்ட X64 கட்டமைப்பில் மட்டுமே இயங்கும். இதற்காக ஏனைய மென்பொருட்களை நாம் X64 இல் இயங்க வைக்க சிரம பட வேண்டி வரும். இதனாலே தான் ஒரே ஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவ வேண்டி வரும்.
ஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவுதல்.
அடிப்படை தேவைகள்
- இதற்கு விசேடமாக எதுவும் தேவை இல்லை. நீங்கள் நிறுவ விரும்பும் இயங்கு தளத்துக்கு அவசியமான Hardware இருந்தாலே போதும்.
- நிச்சயம் Hard Disk இல் ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு partitions தேவை. எத்தனை Os தேவையோ அத்தனை பிரிப்புக்கள் அவசியம்.
நிறுவும் முறை
வழமையாக OS நிறுவுவது போல நிறுவுங்கள். நிறுவும் போது ஏற்கனவே OS இருக்கும் partition தவிர்ந்த வேறு ஒரு partition இல் நிறுவுங்கள்.
நிறுவிய பின்னர் மீள கணணியை இயக்கும் போது கணணி கீழே உள்ளது போல 30 விநாடி நேரத்தில் நீங்கள் எந்த OS இல் பயணிக்க விரும்புகிறீர்கள் என கேட்கும். நீங்கள் Keyboard மூலம் தெரிவு செய்து Enter அழுத்தினால் சரி. இல்லாவிட்டால் Default OS மூலம் அதுவாகவே இயங்க ஆரம்பிக்கும்.
நிறுவிய பின்னர் :
Boot அமைப்புகளை மாற்றுதல்
இது கட்டாயமான ஒன்றல்ல. விரும்பினால் செய்ய. default OS, Waiting time இவற்றை மாற்ற எந்த Windows OS லும் Run இல் சென்று msconfig என type செய்து Enter அழுத்தினால் வரும் Dialog Box இல் Boot Menu tabஇல் விரும்பியதை அவதானமாக மாற்றுங்கள்..
ஏற்பட கூடிய சிக்கல்கள்
பொதுவாக அரிதாக அவதானிக்கும் பிரச்சனை புதிய OS நிறுவிய பின்னர் பழைய OS மறைந்து விடும். இதை எடுப்பது சற்று சுலபம். பழைய OS install Disk or Repair Disk மூலம் Automatic Repair பகுதியை தெரிவு செய்தால் போதும். கணணி தானாகவே பழைய OS னை கண்டு பிடித்து தானாக ஆரம்ப பகுதிக்கு எடுத்து செல்லும்.
மேலும் சில தகவல்கள்
- இதை விட வேறு பிரச்சனைகள் அரிதாக நிகழ வாய்ப்பு உண்டு.
- Desktop கணனியில் Mac OS இனை நிறுவுவது கடினம் / நிறுவ முடியாது.
- பழைய Hard Disk என்றால் இரு இயக்கு தளங்களின் வேகமும் குறைய வாய்ப்பு உண்டு. இதன் பிரதான காரணம் பழைய hard disk களில் வாசிக்கும் வேகம் குறைவாக இருப்பதே.
- பல இயங்கு தளங்களை நிறுவுதல் என்பது ஒரு மென்பொருள் நிறுவுவதை போல மிக இலகுவான விடயம் தான்.
- பெரும்பாலான softwares களை ஒரு இயங்கு தளத்தில் நிறுவி விட்டு மற்ற OS இல் இருந்து இயக்க முடியாது. மீள நிறுவ வேண்டி இருக்கும்.