Home » » தொழில்நுட்ப துளிகள் - June

வழக்கம் போல இம்முறையும் இணையத்தில் இடம்பெறும் பயனுள்ள தகவல்களை தாங்கி இம்மாத "தொழில்நுட்பதுளிகள்" வெளியாகிறது.


  • Google தனது Google Map இன் மேம்பட்ட வசதிகளுடன் புதிய தளத்தை Preview நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கியது. அப்பக்கம் மிக விரைவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.  அதிக Bandwidth இனை அது உட்கொள்வதும் 3'ம் உலக நாடுகளில் உள்ள எம்போன்றவர்களுக்கு இடைஞ்சலான ஒன்றாகும்.
  • Apple தனது கையடக்க பொருட்களுக்கான iOS இன் புதிய பதிப்பாகிய  iOS 7இனை preview நிலையில் வெளியிட்டது. முன்னைய இயங்கு தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் இது வெளியாகியது.


  • Google முன்பு Search தொடர்பான இலவச இணைய கற்கை நெறியை வழங்கியது பலருக்கும் ஞாபகம் இருக்கும். இப்போதும் மேலும் சில Online Courses களை இலவசமாக வழங்குகிறார்கள்.
அவ்வாறான ஒரு கற்கை கீழே - நீங்களும் கற்க விரும்பினால் அங்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். தினமும் திட்டமிட்டு அழகான பாடத்திட்டமாக உங்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்
  1. Mapping with Google - mapping.withgoogle.com
  2. Introducing the AdSense 10 Challenge  services.google.com/fb/
  • நேற்று Mobile Phone களுக்கும் Desktop க்கும்  என வடிவமைத்த இணைய பக்கங்களில் Mobile பக்கத்தில்  பிழைகள் இருக்கும் போதும் அவற்றை search ரேங்கில் அவற்றை பின்னுக்கு தள்ளப்போவதாக அறிவித்து இருந்தார்கள். இதில் Blogger இல் Mobile view template பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்கவும்.
  • அண்மையில் கடந்த வாரம் Piwik தனது 1.20 பதிப்பை வெளியிட்டது. இதில் தொழில்நுட்ப ரீதிரில் கொஞ்ச மேம்பாடுகள் இருக்கின்றன.
  • Adsense இலும் இம்மாதம் முதல் பல மாற்றங்கள் இடம்பெற்றன. நீங்கள் Adsense பாவனையாலராக இருந்தால் உங்களுக்கும் இது தொடர்பான மின்னஞ்சல் கிடைத்திருக்கும். குறிப்பாக Ad unit, Appeal process களில் மாற்றங்கள் வந்தன.
சில தொழில்நுட்ப குறிப்புக்கள்:
  1. யாரும் iphone போன்ற மென்பொருட்களை இணையம் மூலம் Unlock செய்ய முற்படும் போது Ebay மூலம் முயற்சியுங்கள். பாதுகாப்பானதும் நம்பிக்கையனதுமான இடம் Ebay மட்டுமே.
  2. Adsense இல் CPC இல் அதிக பெறுமதியை தரும் இயங்கு தளம் Drupal ஆகும் . இங்கு ஆக கூடுதலாக CPC இல் 4 $ வரை வழங்கப்படுகிறது.

எனது சில கீச்சுக்கள் :