Matlab எளிய அறிமுகம் (1)

இலங்கை பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீடங்கள் Matlab உபயோகிப்பதை வரவேற்கின்றன. கட்டாயமாக இல்லாவிட்டாலும் Matlab மூலம் பொறியியல் தேவைகளை நிறைவேற்ற வழி காட்டுகின்றன.  பொதுவாக இலங்கையில் matlab பற்றிய கற்கைகள் இல்லை. எனவே இப்பதிவின் மூலம் Matlab பற்றி தமிழில் தொடராக பதிவதன் மூலம்  ஆக குறைந்தது அதன் அடிப்படைகளையாவது உங்களுக்கு புரிய வைத்து அதன் மூலம் அடிப்படை கணித செய்கைகளை செய்யும் நிலைக்கு உங்களை உயர்த்த முடியும் என எதிர் பார்க்கிறேன்.Matlab மட்டுமின்றி Wolfram Research Mathematica  ம் பொறியியலில் பயன்படுகிறது. ஆனால் Matlab பற்றிய அறிவு போதுமானது.

இந்திய பொறியியல் பாடத்திட்டம், இலங்கை பொறியியலை விட மிக மிக இலகுவானது. இப்பதிவு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  Civil, Electric / Electronic Engineering பாட திட்டங்களுக்கு அமைவாக அமையும்.

அப்படியென்றால் பொறியியலாளர்கள் தவிர பிறருக்கு இப்பதிவு பயன்படாதா? நிச்சயம் பயன்படும். கணிதம் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் Matlab இன் அறிவு பயன்படும்.

அறிமுகம் 

உலகின் பெரும்பாலான கணித்தல்கள், எதிர்வு கூறல்கள், திட்டமிடல்கள் என அனைத்தும் கணனியில்  செய்ய Matlab பயன்படுகிறது. 5+5 என கூட்டுவது முதல் தொலைந்த MH370 விமானத்தை Satellite Images இல் தேடுவது வரை இதில் செய்யலாம்.

பயன்கள்

 • Numeric Computation
 • Data Analysis and Visualization
 • Programming and Algorithm Development
 • Application Development and Deployment
 • Parallel Computing
 • Math, Statistics, and Optimization
 • Control System Design and Analysis
 • Signal Processing and Communications
 • Image Processing and Computer Vision
 • Test and Measurement
 • Computational Finance
 • Computational Biology
 • Code Generation and Verification
 • Application Deployment
 • Database Connectivity and Reporting

பதிவுகளின் உள்ளடக்கங்கள் 

Matlab இல் எண்ணற்ற செய்முறைகள் இருந்த போதிலும், கணணிக்கல்லூரிகளின் பதிவில் அடிப்படை கணிதம், பொறியியல் கணிதம், ஒத்திசைவுகள், பகுப்பாய்வு  பற்றியே எதிர் பாருங்கள்.

தரவிறக்கம்

$2,650 க்கு விற்கப்படும் இதை ஒரு போதும் நாம் பணம் செலுத்தி வாங்க முடியாது. வழமை போல Crack இனை பயன் படுத்த வேண்டியது தான் ஒரே வழி.

கீழே உள்ள Torrent Link இல் இயங்கும் தரமான Matlab R2013a உள்ளது.


Matlab 2014 வெளியான போதும் Matlab 2013 போதுமானது. இது 5GB அளவில் உள்ளது என்பதையும் கவனிக்க.

நிறுவுதல் 

இதன் உள்ளேயே நிறுவும் முறை உள்ளது. மேலதிக தகவல்கள் தேவை என்றால் இங்கே  தொடர்புகொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கைகள்

இது இயங்க Windows 7 /xp ம் 2GB ram ம் அடிப்படை தேவைகள். நிறுவ 10GB க்கு உரிய இடம் தேவைப்படும்.

வரும் நாட்களில் இவை தொடர்பான PDF களை கணணிக்கல்லூரியில் எதிர் பாருங்கள். இப்பதிவுக்கு கிடைக்கும் ஆதரவு, பின்னூட்டங்களை பொறுத்தே அடுத்த பதிவு Matlab அடிப்படை கட்டளைகள் (2) பதிவிடப்படும்.

Colorado River முழுவதும் Google Street View

இதற்கு முதல் இங்கு குறிப்பிட தக்க பகுதிகளை Google Street view இல் வெளியிட்டார்கள். அதை கொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள் பதிவில் சுற்றி பாருங்கள். இப்போது அந்த ஆற்றை முழுவதுமாகவே மிதந்து சென்று பார்க்க முடியும்.6 million years in the making

For over 6 million years, the Colorado River has carved out its place on Earth. It spans over 1,450 miles, beginning in the Rocky Mountains in Colorado and ending the Gulf of California in Mexico. The Colorado River serves as a lifeline in the arid Western United States. It graces 7 states, 2 countries, and 9 national parks, nourishing the lives of 36 million people and endangered wildlife. Millions depend on the river for irrigation, water supply, and hydroelectric power. However, excessive water consumption and outdated management have endangered the Colorado River.

A river endangered

The Colorado River is one of the most dammed, diverted, and plumbed rivers in the world -- by the time the Colorado River reaches the Gulf of California in Mexico, it’s so tapped out that the river runs dry. For these reasons, American Rivers named it America’s Most Endangered River in 2013. While climate change and population growth are factors in the river’s decline, the biggest threat is outdated water management. The river’s water is over-allocated. At this rate, there isn’t enough water to support everyone and everything that depends on it. The Colorado River is in real danger and a recreation economy, water supply, and wildlife habitat hang in the balance.


கீழே நீங்களும் சுற்றி பாருங்கள்.


Google Street View மூலம் ஹவாயின் Oahu தீவுகளின் வரலாற்று அழகியல் அம்சங்கள்

இன்று முதல் Aloha state மற்றும்  Hawaii’s hiking trails, parks, historical sites, மற்றும்  beaches களை  Street View மூலம்  Google Maps இல் காணலாம்.  Hawaii Visitors and Convention Bureau (HVCB) மூலம் பிரபல இடங்கள்  Hawaii (the Big Island) மற்றும் Oahu தீவில் street view திரட்டப்பட்டது.
Hawaii is famous for its spectacular sandy beaches, like Hapunua Beach, but this tropical island paradise has much more to offer to all the outdoor adventurers out there. Hike through a volcanic crater along the Kilauea Iki Trail, learn about Native Hawaiian culture at the Pu'u Loa Petroglyphs, and take in the diverse flora at the Hawaii Tropical Botanical Garden.

வழமையான கனநிக்கல்லூரிக்கே உரித்தான விசேட HTML5 இல் அமைந்த Street view மூலம் கீழே மேலே சொன்ன இடங்களை இலகுவாக ஒரே click இல் சுற்றி பாருங்கள்.

நீங்கள் High End Smart Phone ல் இப்பக்கத்தை பார்வையிடாலும் உங்களால் Street view இல் சுற்றி பார்க்க முடியும் என தெரிந்து கொள்ளுங்கள்.

தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள் - Essential Personal Phone Skills

இப்பதிவில் நீங்கள் ஒரு அழைப்பை எடுக்கும் போது அல்லது இன்னொருவர் உங்களுக்கு அழைக்கும் போது எப்படி அந்த அழைப்பை கையாள வேண்டும் ? எப்படி பதில் அளிக்க வேண்டும்? என சில அறிவுரைகளை காணுங்கள். ஏற்கனவே,
நீங்கள் பல ஆயிரக்கணக்கான அழைப்புகளை கையாண்டு இருப்பீர்கள், எடுத்தும் இருப்பீர்கள். இதெல்லாம் நமக்கு தேவையா? என கேட்கலாம். அவசியம் என்று இல்லை. ஆனால் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

இப்பதிவு தனிநபர் தொலைபேசி உரையாடல்களுக்கான பழக்க வழக்கங்களையே சொல்கிறது. வர்த்தக உரையாடல்கள் வேறு பட்டவை. நிச்சயம் உங்கள் நிறுவனம் அதற்கு பயிற்சி அளித்து இருக்கும்.

Phone Skills.jpg

நீங்கள் அழைப்பை எடுக்கும் போது 

நீங்கள் அழைக்கும் போது எதிர் முனையில் இருப்பவர் பதில் அளிக்கவில்லை

பொதுவாக இந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் விடாமல் 5, 10 தடவைகள் missed calls எடுத்து விடுவீர்கள். பொதுவாக ஒரு Ringing என்பது 1 நிமிடம் வரை செல்லும். ஆனால் அவ்வளவு நீண்ட Ringing தேவை இல்லை. ஆக கூடுதலாக 30 seconds வரை பார்க்கலாம். எப்படியும் அழைக்கப்படும் நபர் அருகில் இருந்தால் 20 seconds உள் பதில் அளிப்பார். இல்லாவிட்டால் அவர் அருகில் இல்லை / வேறு வேலையில் உள்ளார் என அர்த்தம். தொடர்ந்து நீங்கள் Ringing செய்வது அவரை / அவருக்கு அருகில் இருப்பவரை எரிச்சல் படுத்தும்.

அருகில் இருப்பவர் பதில் அளித்தால்

நீங்கள் முக்கிய / அவசிய செய்தியை சொல்ல எடுத்து இருக்கலாம். அல்லது வீண் பேச்சு பேச கூட எடுத்து இருக்கலாம். ஆனால் அழைக்கப்பட்டவர் என்ன நிலையில் இருக்கிறார் என தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பயணித்து கொண்டு இருக்கலாம் / கைது செய்யப்பட்டு இருக்கலாம் / விபத்தில் சிக்கி இருக்கலாம். எனவே எப்போதும் "இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்? உங்களுடன் இப்போது கதைக்கலாமா?" இந்த கேள்விகளை கேட்டு விட்டு கதைக்க ஆரம்பிக்கவும்.

Teaching Telephone®

உங்களுக்கு அழைப்பு வரும் போது

பதில் அளிக்க கூடிய சூழ்நிலை

இதன்போது எதிர் முனையில் இருப்பவரின் மன நிலையை அறிந்து கதையுங்கள். உங்கள் நிலையையும் தெரியப்படுத்துங்கள். அவர் சொல்ல வந்த விடயத்துக்கான முன்னுரிமையில் நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

எப்போதும் Mobile Ring ஆக தொடங்கியதுமே பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். மணி ஒலித்தவுடன் பதில் அளிப்பது நாம் வெட்டியாக இருப்பது போன்றது என முட்டாள் தமிழ் திரைப்படங்கள் கொடூர கருத்தை பரப்பி வருகின்றன.

 முதலில் இது பசங்க (2009) படத்தில் அறிமுகமானது அதன் பின்  OK OK என பல படங்களில் தொடர்கிறது. Figure என்பதற்கு Oxford அகராதியை விஞ்சும் அளவிற்கு வரைவிலக்கணம் தரும் கேவலமான தமிழக இயக்குனர்களிடம் இருந்து நல்ல செய்தியை எதிர் பார்ப்பது எம் தவறு தான்.

உங்கள் நண்பர்  பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அழைப்பை எடுக்கிறார். நீங்கள் முதல் ring இல் பதில் அளித்தால் சரி. இல்லை என்றால் நேரம் செல்ல செல்ல அதாவது 20 - 40 seconds செல்ல செல்ல உங்களுக்கு அழைப்பை எடுத்தவர் உளவியல் ரீதியில் சோர்வடைவார். அதன் பின் நீங்கள் பதில் அளித்தாலும் சொல்ல வந்த விடயத்தின் 30% வரை தான் சொல்லுவார்.

எனவே முடிந்தவரை விரைவாக பதில் அளியுங்கள்.

பதில் அளிக்க முடியாத சூழ்நிலை 

நீங்கள் முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது அது பற்றி அறியாத அழைக்கும் நபர், உங்களை தொடர்ந்து அழைத்த படி இருப்பார். இதன் போது அதை Reject செய்வது பாதகமான விடயம். அவர் சொல்ல வந்த விடயத்தின் மீது கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க தொடங்கி விடுவார். எனவே முடிந்தவரை Phone இனை Switch off  செய்யுங்கள். ஒருபோதும் silent இல் விட வேண்டாம். முடிந்தால் ஒரு குறுந்தகவல் அனுப்பி விடுங்கள். அதில் இந்த நேரத்தின் பின் மீள அழைப்பேன் என சொல்வது இன்னும் சிறப்பானது.

ஆனால் நிச்சயம் உங்கள் கூட்டம் முடிந்ததும், அழைப்பு எடுத்தவருக்கு மீள அழையுங்கள். அது உங்கள் மீது அவர் கொண்டுள்ள நன்மதிப்பை பத்திரப்படுத்தும்.

தொழிநுட்ப விடயங்கள் தொடர்பாக

Loud Speaker

சில வேலை நீங்கள் அழைப்பை Loud Speaker இல் விட்டு கதைக்கலாம். எதிர் முனையில் இருப்பவர், அது பற்றி அறியாமல் சில இரகசியங்களை கதைக்கலாம். எனவே எப்போதும் Loudspeaker (Handfree set / out mic) இல் இருக்கும் போது எதிர் முனையில் இருப்பவருக்கு என் அழைப்பு loudspeaker இல் இருக்கிறது என சொல்லுங்கள்.

Call Record

முன்னைய காலங்களில்  record செய்யப்பட்டால் ஒரு beep ஒலி எதிர் முனையில் இருப்பவருக்கு ஆவர்த்தன இடைவெளியில் செல்லும். இப்போது அப்படி இல்லை. பொதுவாக நிறுவனங்களை அழைக்கும் போது "சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக உங்கள் அழைப்புக்கள் ஒலிப்பதிவு செய்யப்படும் என்பதை கவனிக்கவும்" என்ற Greeting சொல்லப்படும். நீங்களும்  இப்படி சொல்ல பழகுங்கள்.

நீங்கள் Record செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ஒரு செய்முறையில் உதாரணமாக ஒரு தொழிநுட்ப படிமுறைகள் தொடர்பாக நண்பர் தரும் விளக்கங்களை பதிவு செய்யலாம். வேறு சந்தர்ப்பங்களில் record செய்வது அநாகரிகமானது.

இவற்றை விட

 • பயணம் செய்து கொண்டு இருக்கும் போது கத்தி கதைக்காதீர்கள்.
 • குறுந்தகவலில் சொற்சிக்கனம் செய்யலாம். ஆனால் கருத்து சிக்கனம் செய்யாதீர்கள்.
 • Miss call கொடுத்து விளையாடாதீர்கள். புலி புலி என கத்திய கதை ஆகி விடும்.
 • Voice morpher மூலம் குரல் மாற்றி கதைக்காதீர்கள்
 • Customer care / promotional call களில் அசிங்கமாக கதைக்காதீர்கள்.
மொத்தத்தில் உங்களுக்கு என  தொலைபேசியை கையாளும் நல்ல முறைகளை உருவாக்கி கொள்ளுங்கள்.

தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள் சம்பந்தமாக அண்மையில் பொறியியல் பீடத்தில் ஆங்கில விரிவுரையாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரமே இப்பதிவின் உள்ளடக்கம்.