வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு
           
        
அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

உங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்றுவதற்கு
உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பாதுகாப்பு(secruity) கமெரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும்.

விளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database மென்பொருள்>> Sep 21, 2011கணிணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவோர்கள். சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள். விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.


கணிணியில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு Cheat codes வேண்டும் என்றால் நீங்கள் அதனை கூகிளில் தேடி கண்டுபிடிக்கலாம். இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Cheat Books Database. இதில் 20000 க்கு மேற்பட்ட விளையாட்டுகளின் ரகசியச் சொற்கள் கொடுக்கப்பட்ட்டுள்ளன. சில முக்கியமான இடங்களில் எப்படி விளையாட வேண்டுமென்ற குறிப்புகளும் இதில் தரப்படுகிறது.

படம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன??நல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க!! எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்??எத்தனை புகைப்பட
ஆர்வலர்களை சந்திச்சிருப்போம்??? எங்கிட்டு போனாலும் Aperture,shutter,ISO அப்படி இப்படின்னு டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி நம்மள வெரட்டி
விட்டுருவாய்ங்க!!!
அப்படி அவிங்க என்னதான் சொல்ல வரானுங்க அப்படின்னு சில அடிப்படையான சொற்களின் அர்த்தங்களை பார்க்கலாமா???

ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேங்க!! புகைப்படத்துறையை பொருத்த வரை எல்லாமே ஒளி சார்ந்தவை. நாம் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையாகவே பொருட்கள் அல்ல,பொருட்கள் மேலே பிரதிபலிக்கும் ஒளி தான். ஒரு கதவு (Shutter) வழியாக ஒளியை ஒருசில நேரம் லென்ஸ் வழியாக உள்ளே விட்டு அதை ஃபிலிமிலோ அல்லது டிஜிட்டல் சென்சரிலோ பதியச்செய்வது தான் புகைப்படத்துறையின் அடிப்படை.
இப்படி ஒளியை நாம் கேமராவில் பதிக்கும் பொழுது மூன்று விதங்களால் அதன் பதியும் திறன் மாற வாய்ப்பு உண்டு.

முதல் விஷயம் கேமராவின் லென்ஸின் விட்டம்(diameter)். விட்டத்தின் அளவிற்கேற்ப ஒளி உள்ளே வரும் அளவு மாறுபடும். விட்டம் அதிகமானால் ஒளி அதிகம் வரும்,கம்மியானால் ஒளியும் கம்மியாகிவிடும்.

போட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்டோவின் கலரை மாற்றுவது எப்படி ?


போட்டோ ஃபில்டர் பயன்படுதுவதனால் என்ன பயன்?
இந்த Photo Filter மூலம் இதுபோல் டிசைன் செய்வது எப்படி ?
கீழே கொடுக்கப்பட்ட லிங்கில்  Property Box ஐ டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.https://sites.google.com/site/pstopics/topic-61-100/PropertyBox.rar


ஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்லைன் மூலம் எளிதாக 3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
முப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் 3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம் கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே அதுவும் நேரம் ஒதுக்கி ஒன்லைன் மூலம் 3D படம் வரையத் தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.3dtin.com
3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல் இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம் மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும் பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் (Pencil) முதல் பெயிண்ட் பிரஷ் (Paint Brush) வரை அத்தனையும் கிடைக்கிறது ஒன்லைன் மூலம் எளிதாக வரைந்து பழகலாம். 3D பற்றி அறிய விரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Smart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு செய்தியையோ அல்லது நிகழ்ச்சியையோ அல்லது அனுபவத்தையோ மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் பயனளிப்பது சமூக தளங்கள்.சமூக தளங்களில் நாம் பகிரும் தகவல்கள் நண்பர்கள் அனைவருக்கும் அப்டேட்ஸ் செய்தி செல்கிறது. அதன் மூலம் நண்பர்கள் நம் தகவலை பார்க்க முடிகிறது.
ஆனால் சமூக தளங்களில் நம் நண்பர்கள் மட்டுமின்றி உறவினர்கள், தோழிகள் இப்படி பல தரப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டும் செய்தியை அனுப்ப பேஸ்புக்கில் மிகுந்த சிரமம் எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆனால் கூகுள் பிளசிலோ இது மிகவும் சுலபம் தேவையானவருக்குக்கு ஒருவருக்கு மட்டும் கூட செய்தியை அனுப்பலாம். இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் தளமும் இப்பொழுது புதிய வகை friend List வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

விண்டோஸ் 7 டிப்ஸ்

வாசகர்கள் பலரிடமிருந்து தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் வரும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் பார்க்கையில், பலரும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. இதில் கிடைக்கும் புதிய வசதிகள் குறித்தும், முன்பு நாம் இந்த மலரில் கொடுத்த டிப்ஸ் பற்றியும் பலர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள் ளனர். இப்படி ஒரு வசதி யினை, மைக் ரோசாப்ட் இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரவில்லையே என ஆச்சரியப்படும் விஷயங்களும் பல இந்தக் கடிதங்களில் காணப்படுகின்றன.
அதே வேளையில், இந்த தேடல் கடிதங்களில், பல புதிய வசதிகள் சார்ந்த கேள்விகளும் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலானவர்கள் கேட்டுள்ள சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
1. எக்ஸ்பி இயக்க முறை:

பயர்பாக்ஸ் ரகசியங்கள்

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும், இன்டர்நெட் பிரவுசராக பயர்பாக்ஸ் இடம் பிடித்து வருகிறது. இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன. இவை மட்டுமின்றி, பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1.தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள: