Home » » விளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database மென்பொருள்



>> Sep 21, 2011கணிணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவோர்கள். சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள். விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.


கணிணியில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு Cheat codes வேண்டும் என்றால் நீங்கள் அதனை கூகிளில் தேடி கண்டுபிடிக்கலாம். இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Cheat Books Database. இதில் 20000 க்கு மேற்பட்ட விளையாட்டுகளின் ரகசியச் சொற்கள் கொடுக்கப்பட்ட்டுள்ளன. சில முக்கியமான இடங்களில் எப்படி விளையாட வேண்டுமென்ற குறிப்புகளும் இதில் தரப்படுகிறது.

இது Database என்ற பெயருக்கேற்ப அனைத்து தகவல்களும் இதன் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் PC, Walkthroughs, Playstation, Playstation 2, Playstation 3, Sega, Nintendo 64, Nintendo DS, DVD, Gameboy Advance, Gameboy Color, N-Gage, Nintendo DS, XBox, XBox 360, iPhone, Gamecube, Dreamcast, Super Nintendo, Wii, Sony PSP போன்ற வெவ்வேறு வகையான கருவிகளில் விளையாடக்கூடிய விளையாட்டுகளின் குறிப்புகள் மற்றும் சீட் கோட்களை ஒரே இடத்தில் தொகுப்பாகப் பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் உங்களுக்கு எதேனும் ரகசியச்சொற்கள் தெரிந்திருப்பின் இதிலேயே புதிதாக சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அப்டேட் செய்து கொண்டால் அண்மைய குறிப்புகள் அனைத்தும் இந்த மென்பொருளில் இணைந்து விடும்.

இதில் எளிதாக விளையாட்டுகளின் வரிசைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தேடுவதற்கும் வசதியிருக்கிறது. இங்கிருந்தே குறிப்பிட்ட விளையாட்டுக்கு இணையத்திலும் தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இலவச மென்பொருள் விளையாட்டுப் பிரியர்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.

தரவிறக்கச்சுட்டி: http://www.cheatbook.de/cheatbookdatabase2011.htm