இன்றில் இருந்து தினமும் இல்லாவிடினும் அவ்வப்போது உலகில் இலவசமாக கிடைக்கும் தொழிநுட்பம் சார்ந்த மின் புத்தகங்களை இலவசமாக கணணிக்கல்லூரி வழங்க உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இதில் தொழிநுட்பம் சார்ந்தவை சில. அதிலும் அனைவருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கும் புத்தகங்களை இங்கே வெளியிடலாம் என நினைக்கிறேன். உங்களால் எந்நேரமும் முன்பு வெளியிடப்பட்ட புத்தகங்களை Tab பாரில் உள்ள Free Ebook பகுதி ஊடாக பெற கூடியதாக இருக்கும். நீங்கள் இத்தளத்தில் இணைந்து புதிய தகவல்களை பெற முடியும்.அனைத்து உலாவிகளிலும் PDF files திறக்க முடியாத காரணத்தால் தரவிரக்கமாகவே வழங்குகிறோம். 1 அல்லது 2 MB அளவிலே இவை உள்ளன. உங்கள் தரவிரக்கங்கள் சுயமாகவே கண்காணிக்கப்படும். உங்கள் ஆர்வத்தை பொறுத்து தொடர்ந்து இவ்வாறான புத்தகங்களை தமிழில் வழங்க முடியும். நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Joomla பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? CMS என்றால் என்ன என்று தெரியுமா? Joomla'இலே அதிகளவான இணைய பக்கங்கள் இயங்குகின்றன.. இவற்றில் பெரும்பாலும் வலைப்பூக்கள், புகைப்பட தளங்கள், இணைய சஞ்சிகைகள் என பல உள்ளன. open Source வகையில் அமைந்த இலவச மென்பொருளான ஜூம்லா பற்றி அனைவரும் அறிந்து இருக்க வேண்டியது அவசியமாகும்.
இது தொடர்பான முழு விபரங்களையும் இந்த புத்தகம் தருகிறது. நீங்களும் படித்து பாருங்கள்.
தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள் : THE COMPLETE BEGINNERS GUIDE TO JOOMLA