Home » » பதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2

நான் இதற்கு முந்திய இரு பதிவுகளில் Google Analytic மற்றும் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தும் முறை பற்றி குறிப்பிடேன். அதன் தொடர்ச்சியாக பதிவு திருடர்களை கண்காணித்தல் தொடர்பாக உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். முந்தைய இரு பதிவுகளுக்கும் கிடைத்தஉங்களின் பேராதரவுக்கு நன்றி. எனது முன்னைய பதிவாகிய வலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1இதுவரை வாசிக்கவிடின் இங்கே சென்று வாசியுங்கள்.



அடுத்து பிரதி எடுப்பதை கண்காணிக்கும் முறை பற்றி பார்போம்


நான் அனைவரும் பயன்படுத்த வேண்டிய Google.....பதிவில் குறிப்பிட்ட படி நீங்கள் Google Analytic code இணைந்த இடத்தை அடையுங்கள்.

1. Blogger Dashboard க்கு செல்லுங்கள் 
  2.   இணைக்க வேண்டிய பக்கத்திற்கு  உரிய Blog Title செல்லுங்கள்.
 3.  Template tab பகுதிக்கு செல்லுங்கள் 
4. Click Edit HTML .
5. Click Proceed 

1) அங்கே நீங்கள் இணைத்த கோடிங் பகுதிக்கு மேலே கீழே உள்ள பகுதியை இணையுங்கள்.






2) அத்துடன் இதையும் நீங்கள் இணைக்க வேண்டும். அதாவது உங்கள் analytic கோடின் முடிவு பகுதியில் </script> என்ற பகுதிக்கு மேலே இதை இணையுங்கள்.

 


நான் மேலே சொன்னது விளங்கவில்லையாயினும் உங்கள் codeஇன் இறுதியில் இவ்வாறு தோன்றும். இதை வைத்தே நீங்கள் இணைத்தது சரியா என பாருங்கள். (கீழே உள்ளதை  பிரதி எடுக்க வேண்டாம். இது முன்னுதாரணம் மட்டுமே)





==========================================================================
இது இயங்கும் விதம்:

இதை நீங்கள் இணைத்தவுடன் உங்கள் Google Analyticஇன் Event பகுதி இயங்க ஆரம்பிக்கும். இந்த முறை Highlighted Word Tracking என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது உலகில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதங்களே கடந்துள்ளன. மிக விரைவாக தமிழில் இதை உங்களிடம் சமர்ப்பிப்பதில் கணணிக்கல்லூரி பெருமிதம் அடைகிறது. இவ் கோடிங் ஒவ்வொரு முறையும் உங்கள் தளம் திறக்கப்படும் போதும் இயங்க ஆரம்பிக்கும்.

இப்போது ஒரு திருடர் உங்கள் பதிவை keyboard or Mouse  மூலம் பிரதி எடுக்க முயற்சிக்கும் போதும் அவரை கண்காணிக்க மேலே நீங்கள் இணைத்த ஸ்கிரிப்ட் முயற்சிக்கும். அவர் எதை எல்லாம் copy செய்கிறார் என்பதை உடனுக்குடன் Google Analytic க்கு வழங்கும்.

இதன் அறிக்கை எப்படி இருக்கும்?
இங்கே நான் எனது அறிக்கைகளை இணைத்துள்ளேன். அதை பார்த்தலே உங்களுக்கு விளங்கி விடும். அம்புக்குறிகளால் சுட்டப்படும் இடங்கள் மீது கவனம் செலுத்தி பாருங்கள்:








போயும் போயும் இதை போய் copy பன்னுவர்களா? என்று எண்ணுகிறீர்களா? நான் தான் இது இயங்குகிறதா என பார்க்க சும்மா முயற்சித்தேன். இவ்வாறு ஆகிவிட்டது.



இவ்வாறான ஒரு வரைபும் உங்களுக்கு கிடைக்கும். இதில் இருந்து மகா திருடர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து விடும்.பூரண தகவல்கள் சம்பவம் நடந்து 1 மணி நேரத்தின் பின்னரே பூரணமாக தென்பட ஆரம்பிக்கும்.


இவற்றை சுருங்க சொல்லின்,

  • எதை
  • எங்கிருந்து வந்து 
  • எதில் இருந்து 
  • எப்போது 
எடுத்தார்கள் என்பதை கண்டறியலாம்.

இத்துடன் இப்பதிவு நிறைவடைகிறது.
எனினும் copy பண்ணும் வேறுபட்ட முறைகள் பல உள்ளன. உதாரணமாக Right Click. இதை எவ்வாறு தடை செய்யலாம், இதை எவ்வாறு Google Analytic மூலம் கண்காணிப்பது, பதிவு திருடர்களின் IP முகவரியை பதிவு செய்வது., , இவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்ப்போம். 

இதை விட பதிவு திருடர்கள் உங்கள் பக்கத்தில் திருடும் போது உடனடியாகவே எவ்வித மென்பொருள் துணையும் இல்லாமல் chat மூலம் எச்சரித்தல் முறை தொடர்பாகவும் இங்கே பதிவு விரைவில் இடப்படும். இதன் மூலம் உங்க பக்க பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம்.


இப்பதிவு உங்களுக்கு பயன்பட்டதா? / பயனுள்ளதா? என்பதை தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துக்களே எனது அடுத்த பதிவை சிறப்பாக்கும்.
முடிந்தால் நீங்கள் இப்பதிவை உங்கள் நண்பர்களுடன் G+ அல்லது ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனி எந்நேரமும் பொன் நேரம் ..