அட்சென்ஸ்'ல் மற்றுமொரு திருப்பம் - Adsense Introduced Asynchronous Ad Code

Adsense இல் தினமும் புத்துப்புது மாற்றங்கள் வருவது சகஜம். ஆனால் இந்த மாற்றம் சற்று விசேடமானது.
அட போங்கப்பா..  நாங்களே அட்சென்ஸ் கிடைக்காம வெறுப்பில இருக்கிறம். இதில நீங்க வேற..
என்று பலர் சொல்லுவீர்கள். ஆனால்  Adsense கிடைத்தவர்களுக்கு இனிப்பான மாற்றம் தான் இது. உலகம் முழுவதும் Developers களின் நீண்ட கால எதிர் பார்ப்பு  -கோரிக்கை நேற்று நள்ளிரவு முதல் நிறைவேறியது. அப்படி என்ன மாற்றம்?? இதுவரை காலமும் Adsense இன் AD code ஆனது synchronous மட்டும் கிடைத்தது. இனி  Asynchronous இலும் கிடைக்கும். இரேண்டுக்கும் என்ன வேறுபாடு? ஒரு "A" தானே?? அப்படியல்ல... பழைய Ad code மூலம் சில சமயங்களில் பக்க வடிவமைப்பு உருக்குலைக்கப்பட்டு இருக்கும். இனி அந்த பிரச்சனை இல்லை.  Asynchronous ஒரு நாள் முழுக்க பாடம் நடத்தலாம். அதை பற்றி இங்கு தேவை இல்லை.  Asynchronous இனை பயன்படுத்துவதால் என்ன நன்மை?  Asynchronous க்கு மாறும் போது கவனிக்க வேண்டியவை என்ன? என்பது பற்றி இப்பதிவு அலசுகிறது.


நன்மைகள்

  1. improved web latency
  2. better user experience for your site’s visitors
  3. Adsense Ads தோன்றுவதில் சிக்கல் வந்தாலும் இணையப்பக்கம் இலகுவாக தோன்றும்.
  4. Mobile பாவனையாளர்களையும் அனுசரிக்கிறது

கவனிக்க வேண்டியவை 

பழைய Adsense code அனைத்தையும் நீக்கி விட்டு மீள அதே AD unit க்கு உரிய Asynchronous Ad Code இனை பயன்படுத்துங்கள்.

மாறும் போது பூரணமாக மாறுங்கள். ஒன்றில் synchronous Ad Code அல்லது Asynchronous Ad Code மட்டும் இருப்பதே நல்லது.

எப்படி மாறுவது?

Adsense பக்கத்தில்  AdSense ad code இனை பெரும் போது புதிதாக  வந்திருக்கும் Drop box இல்  "Asynchronous BETA" இனை தெரிவு செய்யுங்கள்.  புதிய Adcode னை இணைய பக்கங்களில் பயன்படுத்துங்கள்.

இனி புதிய Ads  http://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js மூலம் அழகாக உங்கள் பக்கத்தை அலங்கரிக்கும். இது வரை http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js  தானே  இருந்தது.

Yahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை. அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

அண்மையில் எனக்கும் என்  நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களே இப்பதிவை எழுத வைத்தது.

நடந்தது என்ன?


 IELTS  கற்று கொண்டிருக்கும்   இவருக்கு அண்மையில் தான் பரீட்சை நடந்து முடிந்தது. இவரின்  Default Email ****@yahoo.com . இவரின் பரீட்சை திகதிகள் பற்றி மின்னஞ்சல் அனுப்ப பட்ட போது இவரால் மெயில் box இனை திறக்க முடியவில்லை. பின்பு  தான் புரிந்தது இலங்கைக்கான அவர்களின் servers செயல் இழந்து விட்டது. பின்பு ஒரு நாளின் பின்னர் தான் மீள இயங்க தொடங்கி இருக்கிறது.

இன்னொரு நண்பருக்கும் அப்படி தான்... அவரின் iPhone 5 இல் இன்று வரை yahoo  mail box இனை  configure செய்ய முடியவில்லை.

அதே போல எனக்கும் நடந்தது.. என் yahoo கணக்கு தானாகவே  நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அவர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவே இல்லை. நல்ல வேளையாக அதன் inbox backup  ஒன்று இருந்ததால் அவற்றின் மூலம் பெரும்பாலான Email அனுப்புபவர்களை Gmail க்கு வரவைத்து விட்டேன்.

இவை எல்லாம் தொழில்நுட்ப பிழைகளே.. இவ்வாறு நடக்க என்ன காரணம்?? முன்பு கொடி கட்டி பறந்த Yahoo, Google இன் அபரிமிதமான வளர்ச்சியால் முடிங்கி விட்டது. என்றாலும் இயக்கிய படி தான் இருக்கிறது. இவர்களால் இவர்கள் மெயிலையே கட்டுபடுத்த முடியவில்லை. இது போதாது என்று ovi, nokia mail (இரண்டும் ஒன்று தான்) மெயில் சேவைகளையும் வாங்கி விட்டார்கள்..

Yahoo துரதிஷ்டவசமாக Email forwarding வசதியை இலவசமாக வழங்குவது இல்லை. இது கிடைத்தால் நீங்கள் Yahoo mail க்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக வேறு சேவைக்கு திருப்பி விடலாம்.

நாளை உங்களுக்கும் இப்படி மெயில் காணாமல் அல்லது திறக்க முடியாமல் போகலாம்.

 இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை விரைவாக yahoo  இனை விட்டு வெளியேற வேண்டும்.
  1. நண்பர்களுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள்.
  2. இணைய சேவைகளுக்கு இவர்களின் மின்னஞ்சலின் அடியில் இருக்கும் Update subscription link மூலம் சென்று புதிய முகவரியை பதியுங்கள்.

இதற்கும் மேலாக yahoo க்கு வரும் Mails களை திரட்ட gmx.com இல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் yahoo கணக்கு உயிருடன் இருக்கும் வரை அதற்கு வரும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக gmx.com இலும் சேமிக்க படும்.

இதை விட வேறு சில வழிகளும் இணையத்தில் உண்டு... 
உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு இலகுவான வழி மூலம் உங்கள் மின்னஞ்சல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..

பொதுவாக Gmail சிறந்த ஒன்று. Hotmail இல் சில விசேட சேவைகள் கிடைக்கிறது..

புதிதாய் அடுத்தது என்ன?

அது என்னமோ தெரியல... இணையத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் வலைப்பூக்கள் ஆரம்பித்து 3 வருடங்கள் முடிந்து 4'ம் வருடம் இந்த வருடம் தான் ஆரம்பம் ஆகி இருக்கிறது. நானும் அப்படி தான்... தொடர்ந்து தொழில்நுட்பம் பற்றி எழுதியே அலுத்து vஇட்டதால் அவ்வப்போது கொஞ்சம் வித்தியாசமாகவும் எழுதி வாங்கிக்கட்டி கொண்டேன்..
எவ்வளோ நாளைக்கு தான் கூகிள் கிட்டவே இருக்கிறது... அவங்க பிளாக்கர்'ர நம்பி இருக்கிறது'னு எண்ணி தான் இந்த முயற்சி... வழக்கமா எல்லாரும் பிளாக்கர் வெறுத்துடிச்சுனா.... Wordpress பக்கம் போவாங்க... ஆனா.. நாம கொஞ்சம் வித்தியாசாமா முயற்சிக்கலாமே'னு தான் Blogger'ரும் இல்லாம Wordpress சும் இல்லாம வேறு ஒன்னில ஆரம்பிச்சன்...

நான் ஆரம்பிக்க காரணமே சூரியா தம்பி தான்... அவசர படாதிங்க... அசிங்கம் சூரியா இல்ல...

  மேலும் வாசிக்க...

ஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவுதல்

அண்மையில் ஒரு நண்பர் கேட்டதற்கு இணங்க பலருக்கும் பயன்படுமே என்று இப்பதிவு. அதற்கு முதல் ஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவ விசேட படி முறைகள் எதுவும் இல்லை. வழமையாக நிறுவும் முறைகளே. எனினும்  கவனிக்க வேண்டிய சில விடயங்களையும், நிறுவிய பின்னர் வர கூடிய சில சிக்கல்களையும் பற்றி இப்பதிவு அலசுகிறது.

பல Operating System (OS) களை நிறுவ வேண்டிய அவசியம் என்ன?

Testing Purpose

அதாவது இருக்கும் OS இல் இருந்து புதிய ஒன்றுக்கு மாற விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு பிடிக்குமா என பார்க்க. Windows 7 இல் இருக்கும்நீங்கள் Windows 8 க்கு மாற முதல் W7 இருக்கவே W8 இனை நிறுவி பயன்படுத்தி பார்த்து பிடித்தால் W7 இனை அழித்து விட்டு W8 உடன் வாழுதல்.

Preview / Beta Testing

இது கணனியில் கொஞ்சம் ஆர்வ கோளறு உள்ளவர்களுக்காக. முன்பு Windows 8 preview வெளியான போது நாமும் அதை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டையும் நிறுவுதல்.

Open Source Testing

இப்போது Windows OS இல் இருக்கும் நீங்கள் Opensource வகையை சேர்ந்த Ubuntu, Kubuntu OS களை நிறுவி உங்கள் Hardware ஒத்து போகிறதா என பார்க்க இரண்டையும் ஒன்றாக நிறுவ வேண்டி வரும்.

மேலும் சில 

ஒரு மென்பொருளுக்காகவே ஒரு OS நிறுவ வேண்டி கூட வரும். உதாரணமாக Adobe Premiere CS6  எப்போதும் Windows 7 Home premiere க்கு மேற்பட்ட  X64 கட்டமைப்பில் மட்டுமே இயங்கும். இதற்காக ஏனைய மென்பொருட்களை நாம் X64 இல் இயங்க வைக்க சிரம பட வேண்டி வரும். இதனாலே தான் ஒரே ஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவ வேண்டி வரும்.

ஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவுதல்.

அடிப்படை தேவைகள்


  • இதற்கு விசேடமாக எதுவும் தேவை இல்லை. நீங்கள் நிறுவ விரும்பும் இயங்கு தளத்துக்கு அவசியமான Hardware இருந்தாலே போதும்.
  • நிச்சயம் Hard Disk இல் ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு partitions தேவை. எத்தனை Os தேவையோ அத்தனை பிரிப்புக்கள் அவசியம்.

நிறுவும் முறை

வழமையாக OS நிறுவுவது போல நிறுவுங்கள். நிறுவும் போது ஏற்கனவே OS இருக்கும்  partition தவிர்ந்த வேறு ஒரு  partition இல் நிறுவுங்கள்.

நிறுவிய பின்னர் மீள கணணியை இயக்கும் போது கணணி கீழே உள்ளது போல 30 விநாடி நேரத்தில் நீங்கள் எந்த OS இல் பயணிக்க விரும்புகிறீர்கள் என கேட்கும். நீங்கள் Keyboard மூலம் தெரிவு செய்து Enter அழுத்தினால் சரி. இல்லாவிட்டால் Default OS மூலம் அதுவாகவே இயங்க ஆரம்பிக்கும்.


நிறுவிய பின்னர் :

Boot அமைப்புகளை மாற்றுதல்

இது கட்டாயமான ஒன்றல்ல. விரும்பினால் செய்ய. default OS, Waiting time இவற்றை மாற்ற எந்த Windows OS லும் Run இல் சென்று  msconfig என type செய்து Enter அழுத்தினால் வரும் Dialog Box இல் Boot Menu tabஇல் விரும்பியதை அவதானமாக மாற்றுங்கள்..

ஏற்பட கூடிய சிக்கல்கள்

பொதுவாக அரிதாக அவதானிக்கும் பிரச்சனை புதிய OS நிறுவிய பின்னர் பழைய OS மறைந்து விடும். இதை எடுப்பது சற்று சுலபம். பழைய OS install Disk or Repair Disk மூலம் Automatic Repair பகுதியை தெரிவு செய்தால் போதும். கணணி தானாகவே பழைய OS னை கண்டு பிடித்து தானாக ஆரம்ப பகுதிக்கு எடுத்து செல்லும்.

மேலும் சில தகவல்கள் 

  • இதை விட வேறு பிரச்சனைகள் அரிதாக நிகழ வாய்ப்பு உண்டு.
  • Desktop கணனியில் Mac OS இனை நிறுவுவது கடினம் / நிறுவ முடியாது.
  • பழைய Hard Disk என்றால் இரு இயக்கு தளங்களின் வேகமும் குறைய வாய்ப்பு உண்டு. இதன் பிரதான காரணம் பழைய hard disk களில் வாசிக்கும் வேகம் குறைவாக இருப்பதே.
  •  பல இயங்கு தளங்களை நிறுவுதல் என்பது ஒரு மென்பொருள் நிறுவுவதை போல மிக இலகுவான விடயம் தான்.
  • பெரும்பாலான softwares களை ஒரு இயங்கு தளத்தில் நிறுவி விட்டு மற்ற OS இல் இருந்து இயக்க முடியாது. மீள நிறுவ வேண்டி இருக்கும்.



Google Adsense - ஒரு பார்வை - 10 வருட நிறைவு

Official BlogGoogle இன் பலராலும் அறியப்பட்ட சேவைகளில் ஒன்றாகிய Adsense,  June 18, 2013 அன்று - அதாவது நேற்று தனது பத்தாவது நிறைவு தினத்தை கொண்டாடியது. கடந்த 10 வருடங்களில் adsense எவற்றை சாதித்தது? என்ன மாற்றங்கள் வந்தன? என்னவெல்லாம் நடந்தது என நீங்கள் அறியாத மறு பக்கத்தை பற்றி இரத்தின சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.


  1. Adsense பற்றிய முதலாவது அறிவிப்பு 2003 இதே நாளில் இங்கு - googlepress இல் Google மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
  2. தனியான எந்த Domain பெயரையும் கொண்டிராமல் வெறுமனே adsense.google.com எனும் sub- domain ஒன்றில் இயங்குவது ஆச்சரியமான ஒரு விடயம். இதற்கும் வணிக ரீதியில் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்.
  3. இது வரை  36 மொழிகளில் இயங்கும் இணைய பக்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் adsense சேவை வழங்கப்பட்டு வருகிறது. செம்மொழியான தமிழுக்கு இதுவரை ஆதரவு கிடைக்காமல் இருக்க பிரதானமாக தமிழை முதல் மொழியாக கொண்ட நாடு இதுவரை இல்லாததும், தமிழில் விளம்பரங்களை வழங்க போதிய அளவு விளம்பர தாரர்கள் இல்லாமல் இருப்பதும் ஆகும்.
  4. ஆரம்ப காலங்களில் இலகுவாக Adsense கணக்கை பெற கூடியதாக இருந்தாலும் 2012 இன் பின்னர் வந்த secound step approval முறை adsense பெறுவதை கடினமாக்கியது.
  5. Adsense ன் இறுக்கமான கட்டுப்பாடுகளே அதன் தரத்தை பேணி பாதுகாக்கிறது. 
  6. சராசரியாக ஒரு click க்கு முன்னணி தளங்கள் 1$ முதல் 4$ வரை அள்ளுகின்றன.
  7. Adsense தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில்கள் இங்கு support.google.comஇருக்கின்றன
  8. Adsense இல் ஏற்பாடும் சந்தேகங்களை தீர்க்க அட்சென்ஸ் Community Center உதவுகிறது.
  9. அமெரிக்கர்களுக்கு மட்டுமே பல சிறப்பான சேவைகள் Adsense இல் கிடைக்கிறது.
  10. பாலியல், போதைப்பொருள் பற்றிய விளம்பரங்கள் Adsense இல் இடம் பெறுவதே இல்லை.
  11. என்றாலும் Family Planning (கருத்தடை) தொடர்பான விளம்பரங்கள் மட்டுப்படுதல்களுடன் வெளியாகிறது.
  12. Adsense இன் இன்னொரு பதிப்பாகிய Adsense premium நிபந்தனைகள் அற்ற ஒரு விளம்பர சேவை ஆகும். பல மில்லியன் பக்க பார்வைகளை பெரும் பக்கங்களுக்கு Google இன் விசேட அழைப்பில் இது வழங்கப்படுகிறது. சாதரணமாக Adsense பாவனையாளர் ஒருவர் Premium பகுதிக்கு பொருத்தமானவர் என Google கருதும் போது Google Adsense Team அங்கத்தவர் ஒருவர் நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புதிய சேவைக்கு  உங்களை அழைப்பார். Mashable.com, cnn.com போன்ற தளங்கள் சில உதாரணங்கள் ஆகும்.
  13. ஒரு நாட்டில் நீங்கள் பதிவு செய்த பின்னர் வேறு நாட்டுக்கு ஒரு போதும் உங்கள் Adsense கணக்கை மாற்ற முடியாது.
  14. ஆக குறைந்தது 100$ இருக்கும் போதே உங்கள் வருமானத்தை பெற முடியும்.
  15. Adsense ஆனது Adword தவிர்ந்த ஏனைய பல சேவைகளிடம் இருந்தும் விளம்பரங்களை பெறுகிறது. 
  16. இவ் விளம்பரங்கள் மீது போலியான click களை மேற்கொள்ள பல வழிகள் இணையத்தில் இருந்த போதும் எவையும் பயனளிப்பதில்லை.
  17. ஒவ்வொரு மாதமும் 1 மில்லியன் பேருக்கு பணம் செலுத்துவதாக Adsense குறிப்பிடுகிறது.
  18. தம்மிடம் 2 மில்லியன் மக்கள் உள்ளதாகவும் கடந்த வருடம் 7 millon US Dollers பணத்தை அவர்கள் சம்பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
  19. Adsense நேரடியாக மட்டும் அல்லது Youtube, Blogger என வேறு hosted partners மூலமும் கிடைக்கிறது.
  20. Adsense ஆனது Google Analytics, Google Adwords, Google Webmaster என பல சேவைகளுடன் ஒருங்கினைக்கபட்டு மேலதிக Adsense bots மூலம் இணைய பக்கங்கள் கண்காணிக்கபட்டு பொருத்தமான விளம்பரங்கள் காட்சி படுத்த படுவதுடன் மிக  சிக்கலான Algorityms மூலம் ஒவ்வொரு கிளிக்'கும் கண்காணிக்கப்பட்டு பணம் செலுத்தப்படுகிறது.

"Re-Mission" - வீட்டுக்கு வரும் இலவச Video Game DVD

Image with Quoteநிச்சயம் இந்த விளையாட்டை விமர்சனம் சொல்லாமல் இருக்க முடியாது.  இவ் விளையாட்டை வழங்கும் இத்திட்டம் 4 வருடங்களாக செயற்பட்டு அனைவருக்கும் இலவசமாகவே தபால் மூலம் வீட்டுக்கு DVD யில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அனுப்புகிறார்கள். அப்படி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் அளவுக்கு இதில் அப்படி என்ன இருக்கிறது? இவ்விளையாட்டின் கரு என்ன? நீங்களும் எப்படி DVD இனை இலவசமாக பெறுவது? இப்பதிவில் காணுங்கள்.

தொழில்நுட்ப துளிகள் - June

வழக்கம் போல இம்முறையும் இணையத்தில் இடம்பெறும் பயனுள்ள தகவல்களை தாங்கி இம்மாத "தொழில்நுட்பதுளிகள்" வெளியாகிறது.


  • Google தனது Google Map இன் மேம்பட்ட வசதிகளுடன் புதிய தளத்தை Preview நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கியது. அப்பக்கம் மிக விரைவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.  அதிக Bandwidth இனை அது உட்கொள்வதும் 3'ம் உலக நாடுகளில் உள்ள எம்போன்றவர்களுக்கு இடைஞ்சலான ஒன்றாகும்.
  • Apple தனது கையடக்க பொருட்களுக்கான iOS இன் புதிய பதிப்பாகிய  iOS 7இனை preview நிலையில் வெளியிட்டது. முன்னைய இயங்கு தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் இது வெளியாகியது.


  • Google முன்பு Search தொடர்பான இலவச இணைய கற்கை நெறியை வழங்கியது பலருக்கும் ஞாபகம் இருக்கும். இப்போதும் மேலும் சில Online Courses களை இலவசமாக வழங்குகிறார்கள்.
அவ்வாறான ஒரு கற்கை கீழே - நீங்களும் கற்க விரும்பினால் அங்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். தினமும் திட்டமிட்டு அழகான பாடத்திட்டமாக உங்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்
  1. Mapping with Google - mapping.withgoogle.com
  2. Introducing the AdSense 10 Challenge  services.google.com/fb/
  • நேற்று Mobile Phone களுக்கும் Desktop க்கும்  என வடிவமைத்த இணைய பக்கங்களில் Mobile பக்கத்தில்  பிழைகள் இருக்கும் போதும் அவற்றை search ரேங்கில் அவற்றை பின்னுக்கு தள்ளப்போவதாக அறிவித்து இருந்தார்கள். இதில் Blogger இல் Mobile view template பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்கவும்.
  • அண்மையில் கடந்த வாரம் Piwik தனது 1.20 பதிப்பை வெளியிட்டது. இதில் தொழில்நுட்ப ரீதிரில் கொஞ்ச மேம்பாடுகள் இருக்கின்றன.
  • Adsense இலும் இம்மாதம் முதல் பல மாற்றங்கள் இடம்பெற்றன. நீங்கள் Adsense பாவனையாலராக இருந்தால் உங்களுக்கும் இது தொடர்பான மின்னஞ்சல் கிடைத்திருக்கும். குறிப்பாக Ad unit, Appeal process களில் மாற்றங்கள் வந்தன.
சில தொழில்நுட்ப குறிப்புக்கள்:
  1. யாரும் iphone போன்ற மென்பொருட்களை இணையம் மூலம் Unlock செய்ய முற்படும் போது Ebay மூலம் முயற்சியுங்கள். பாதுகாப்பானதும் நம்பிக்கையனதுமான இடம் Ebay மட்டுமே.
  2. Adsense இல் CPC இல் அதிக பெறுமதியை தரும் இயங்கு தளம் Drupal ஆகும் . இங்கு ஆக கூடுதலாக CPC இல் 4 $ வரை வழங்கப்படுகிறது.

எனது சில கீச்சுக்கள் :

Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி?

இப்பதிவு Mastercard பற்றியும்  இணையத்தில் அதன் முக்கியத்துவம் குறித்தும் அதை எப்படி அனைவரும் இலவசமாக  பெறுவது என்றும் இப்பதிவு விளக்குகிறது. இணைய வணிகத்தில் கால்பதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த Master card பற்றிய அறிமுகம் இருக்கும். இப்பதிவு அறிவு சார்ந்ததே அன்றி வர்த்தக நோக்கம் கொண்டதல்ல.  இவ் அட்டையை பெறுவது, பயன்படுத்துவது அனைத்தும் உங்கள் நாட்டு நிதி துறை சட்டங்களுக்கு கட்டு பட்டது என்பதுடன், இப்பதிவு இலங்கை நிதி சட்டங்களை அடிப்படையாக வைத்து பதியப்படுகிறது என்பதை கவனிக்க.

Master Card பற்றி:

மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது. (Wikipedia)

இணையத்தில் இதன் முக்கியத்துவம்:

இணையத்தில் Visa அட்டைகளுக்கு ஒப்பாக பயன்படுத்தப்படுகிறது. பல நாட்டு வங்கிகளும் இதை வழங்குகிறது. இணையத்தின் பெரும்பாலான சேவைகள்  இவ் அட்டையை ஆதரிக்கின்றன. துரதிஷ்டவசமாக Adsense இவ் அட்டை முறைகள் எதனையும் ஆதரிப்பதில்லை.

இலவச வீட்டுக்கு வரும் Master Card பற்றி:

Payoneer card இணைய தளத்தில் பதிவு செய்து ஒரு வாரத்தில் New York நகரத்தில் இருந்து தபாலில் அனுப்புவார்கள் இலவசமாக

Payoneer Card இன் நன்மைகள்:

  1. Infolinks, Freelancer போன்ற சேவைகள் மூலம் பணம் பெறுபவர்கள் நேரடியாக அருகில் உள்ள ATM இல் சென்று பணம் பெற முடியும்.
  2. வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் master card பெறலாம்.

சில Payoneer Card  மட்டுப்பாடுகள்:

  1. US payment இணைப்பு இல்லாமல் உங்களால் Recharge செய்ய முடியாமல் இருப்பதே இதன் மிகப்பெரும் குறை. என்றாலும் உங்களுக்கு பணம் தரப்போகும் நிறுவனம் அவர்களுடன் இணைக்கப்பட்டது என்பதால் பிரச்சனை இல்லை.
  2. குறிப்பிட்ட சில நிறுவனங்களே இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக அனைவரும் அறிந்த நிறுவனங்கள் Freelancer, Infolinks ஆகும்.
  3. பண மாற்றத்தில் சில மேலதிக சேவை கட்டணம் பெறப்படுகிறது. பொருட்கள் வாங்கும் போது இவை இல்லை.

இணைப்புக்கள்:

  1. About Master Card : www.mastercard.com
  2. Get your Master Card Here from PAYONEER www.payoneer.com 
  3. Payoneer card ஆதரிக்கும் நிறுவனங்கள் - 

 கிடைக்கும்  Card:


மெர்சென் (பகா) எண்கள் - ஓர் அறிமுகம் Mersenne (prime) Numbers

கணிதத்தில் பலவகையனவை எண்கள் உண்டு. அதில் ஒன்று தான் இந்த Mersenne  எண்கள். இதை பற்றி தமிழில் விக்கிமட்டுமே  அறிமுகம் உள்ளது. இதற்கு முதல் பிபனோச்சி எண்கள்  பற்றி இங்கு பார்த்தோம். அதை போல எண் வரலாற்றில் முக்கியமான ஒன்று  Mersenne Numbers. இதை  பற்றி மேலோட்டமாக இப்பதிவு விளக்குகிறது.

மெர்சென் எண்

இதை குறிக்க M பயன்படுகிறது. மெர்சென் எண் என்பது இரண்டின் அடுக்கு எண் கழித்தல் ஒன்று  என்னும் வடிவில் எழுதத்தக்க ஒரு நேர்ம முழு எண்..


        or         M_n=2^n-1,

மேற்கண்டவாறு எழுதத்தக்க மெர்சென் எண் பகா எண்ணாக இருந்தால் அதனை மெர்சென் பகாத்தனி   -  Mersenne prime என்று வரையறை செய்வர்.

பகா எண் என்றால் ஒன்றாலும் தன்னாலும் மட்டும் வகுபடும் எண்கள் எனப்படும் என சின்ன வகுப்பில் கற்று இருப்பீர்கள்.

இவ் எண்கள் பற்றி தமிழில் விக்கிபீடியா தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால் ஆங்கிலத்திலே தான் பூரண புதிய தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளது


முன்னனி Mersenne  primeஎண்கள் :

#pdigitsyeardiscoverer (reference)value
121antiquity3
231antiquity7
352antiquity31
473antiquity127
51341461Reguis (1536), Cataldi (1603)8191
61761588Cataldi (1603)131071
71961588Cataldi (1603)524287
831101750Euler (1772)2147483647
961191883Pervouchine (1883), Seelhoff (1886)2305843009213693951
1089271911Powers (1911)618970019642690137449562111
11107331913Powers (1914)162259276829213363391578010288127
12127391876Lucas (1876)170141183460469231731687303715884105727
13521157Jan. 30, 1952Robinson (1954)68647976601306097149...12574028291115057151



இதன் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட இலக்கம் 48 வது எண் ஆகும். இது இணையத்தில் உள்ள GIMPS எனப்படும்  Great Internet Mersenne Prime Search ஆல் இவ்வருடத்தின் மாசி மாதத்தின் முதலாவது வாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக விசேடமான மென்பொருள் ஒன்று தன்னார்வ தொண்டர்களின் கணனியில் நிறுவப்பட்டு 360,000  processors ஒரு செக்கனுக்கு 150 trillion செய்கைகள்   இணையம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கண்டறியப்பட்டது.

இது முதலாவது Mersenne Number பற்றிய விளங்கப்படுதப்பட்டு  350 வருடங்களின் பின்னர் கண்டறியப்பட்ட 48 வது Mersenne Number ஆகும்.
48 வது mersenne எண் என்னவென்று இன்னமும் சொல்லவே இல்லை என்று நினைக்கலாம். அதை சொல்ல முடியாது. ஏன் என்றால் அது 17,425,170 இலக்கத்தில் உள்ளது. அதாவது 257,885,161 − 1  எண் ஆகும்.

மெர்சென் எண்களின் பயன்பாடு

இவை பெரும்பாலும் கணணி துறையில் தகவல்களை இரகசிய படுத்த பயன்படுத்த படுகிறது. 
கணனியில் விளையாட்டுக்களில் மெய்நிகர் தன்மையை தீர்மானிப்பதிலும் இவையே பயன்படுகிறது. இதன் அடிப்படையில் தான் மக்கள் பயன்படுத்தும் தானியங்கி பணம்வழங்கி முதல், நாளொன்றுக்குப் பல பில்லியன்  dollars கணக்கில் பண மாறாட்டம் நடைபெறும் பங்குச் சந்தைக் கொடுக்கல்-வாங்கல்கள்  நடைபெறுகின்றன.
அத்துடன் ஒழுங்குபடுத்தும் algorithm களிலும் அதிகளவில் பயன்படுகிறது. எவ்வாறாயினும்  பிபனோச்சி எண்கள்  அளவிற்கு இல்லை.

முடிவு


மெர்சென் எண்கள்  என்பது Number theory ல் சிக்கலான ஒன்று. இதுவரை தீர்க்கப்படாத சந்தேகங்களில் ஒன்று. பல இடங்களில் பயன்படும் ஒன்று.
அண்மையில் MATLAB 2013a இல் இயங்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது தான் இதை பற்றி கொஞ்சம் அறிந்தேன் . அறிந்ததை உங்களுடன் பகிர்கிறேன்.