Home » » Google Loon இலங்கை - திட்டம் படுதோல்வியா?

கடந்த 2015, ஆனி மாதம், கணணிக்கல்லூரி " Google Project Loon - இலங்கையில் அறிமுகமாகிறது ", என்னும் தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டது. அது நடந்து இரு வருடங்கள் கடந்த நிலையில், எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர், இலங்கையின் மத்திய மலை நாட்டில், ஒரு Loon Ballon தரையில் மோதியது. எனினும் அது பாதுகாப்பான, திட்டமிட்ட தரையிறக்கம் என கூகுளே அறிவித்தது.


இப்போது, Google Loon  இலங்கை - திட்டம் படுதோல்வியா? என பலரும் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.. உண்மையில் நடந்தது  என்ன? இப்பதிவில் காணுங்கள்.

இத்திட்டம் இலங்கையில் பாரிய அளவு வெற்றி அளித்துள்ளது. இலங்கை அமைச்சரவை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இரண்டும் அனுமதி கொடுத்துவிட்டன. அப்புறம் ஏன் இந்த தாமதம்? International Telecommunication Union (ITU)  இன் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதனால் இத்திட்டம் மக்கள் கைக்கு போய் சேரவில்லை.




இது தொடர்பாக இலங்கை அரசாங்கம்  சட்ட   நடவடிக்கைக்கு தயாராகி உள்ளது. Attorney General இன் அறிவுரை பெற காத்து இருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள  'Digital Island' Digital Summit நிகழ்வில் கூகிள் தலைவர் இதை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

இதன் மூலம் இலங்கை முழுவதும் பறக்கும் பலூன் மூலம் இலவச wifi மக்களுக்கு கிடைக்கும். மீதம் இருப்பது இன்னும் ஒரு மாதமே. இந்த திடடத்தின் பாரிய வெற்றி மூலம் Titan drone என்னும் பறக்கும் விமான இணைய திட்டத்தை கூகிள் கைவிட்டுள்ளது.