Updated ** 2013-10-24 18:45
ஏற்கனவே ஜோதிட மென்பொருட்கள் பற்றி இரு பதிவுகள் கணணிக்கல்லூரியில் உள்ளன. அவற்றை மீள புதுப்பித்து சில மென்பொருட்களின் புதிய பதிப்புகளை தாங்கி இப்பதிவு வெளியாகிறது. ஏற்கனவே இவற்றை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து செல்ல தேவை இல்லை. புதியவர்களுக்காக மட்டும்."சோதிடம்" என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும்,எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒருதுறையாகும்.சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.
சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.
இங்கு நான் சோதிடத்தின் உண்மை தன்மையை பற்றி ஆராய வர இல்லை.இப்பதிவு சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் பற்றி விளக்குகிறது.
இணையத்தில் பற்பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் இலவசமாக அல்லது பூரண பயன்பாட்டிற்கு கிடைக்கும் சாப்ட்வேர்கள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
Jagannatha Hora
இது முற்றிலும் இலவசம். ஆனால் இதில் தமிழ் இல்லை. அத்துடன் பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. இது சோதிடத்தை முறையாக கற்று இருப்பவர்களுக்கு சிக்கலான கணித பிரச்சனைகளை தீர்க்க பயன்படும்.
இங்கு கணித ரீதியில் கோள்கள் அமைவு, திசா மாற்றம் போன்றவை குறிப்பிடலாம். இதில் விசேட அம்சம் மிக பெரிய தரவு தளம் ஆகும். உலகின் பெரும் பகுதிகளின் பூகோள அமைப்பு மற்றும் நேர வலய தரவுகளை கொண்டுள்ளது. இதை போல வேறு எதிலும் நான் இப்படியான தரவு தளத்தை காண இல்லை.
---Half million cities in US
---Two million cities in the rest of the world
இதை நிறுவுவது சாதாரணமானது. எனினும் இம் மென்பொருள் தொழில் முறையனவர்களுக்கு பொருத்தமானது. இதன் அப்டேட்இல் புளுட்டோ கிரகம் நீக்கப்பட்டது. இது சோதிடர்களிடம் அதிகம் பேசப்பட்டது.
Home Page: vedicastrologer.org
Download: Jagannatha Hora HERE
Home Page: vedicastrologer.org
Download: Jagannatha Hora HERE
Horoscope explorer
இது தமிழில் சோதிடம், வருஷ பலன் மற்றும் திருமண பொருத்தம் பார்க்க உதவுகின்றது. செவ்வாய் தோஷம் பற்றி குறிப்பிடுவது சோதிடம் பற்றி அறிவு இல்லாதவர்களுக்கும் பன்படுவதாக அமைகிறது. இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர். இது கட்டண மென்பொருள் .. எனவே கிராக் பயன்படுத்துங்கள்.
Download: Horoscope Explorer HERE [Updated on 2017-01-11]
Download: Horoscope Explorer HERE [Updated on 2017-01-11]
Vakyam Horoscope
Kundali
இதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, சாதாரண மனிதர்களுக்கு பொருத்தமானது. இது வெளி வந்து 4 வருடங்கள் கடந்து விட்டன. எனினும் விரும்பினால் முயற்சி செய்யலாம்.
Astro-Vision LifeSign
இது ஆரம்ப பதிப்பு இலவசமானது. இதன் உத்தியோகபூர்வ மென்பொருளை activate செய்ய இணைய இணைப்பு கணனியில் அவசியம். கட்டணம் செலுத்தப்பட்டத்தில் அதிக பலன்கள் , சோதிடத்தை சேமிக்க கூடிய வசதிகள் கிடைக்கும். இன்னும் இதன் Crack வெளி வர இல்லை. தமிழில் பலன் மட்டும் கிடைக்கிறது.
Download: HERE
Download: HERE
இதை விட Astro Office , Kismat போன்ற பிரபலமான மென்பொருட்கள் உண்டு. இவை உங்களிடம் இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.