இதற்கு முன்னுதாரணமாக, Godaddy தனது விளம்பரங்களை ஆரம்பித்துள்ளது. இப்போது பொதுவாக நாடு சாராமல் .com , .xxx என மொத்தம் 22 முதன் நிலை Domains (generic top-level domains gTLDs ) பாவனையில் உள்ளது. இப்போது மேலதிகமாக பல சேவைக்கு வரவுள்ளன.
எவ்வாறாயினும் அனைத்து Domains களையும் அனைவரும் வாங்க முடியுமா என தெரியவில்லை. ஏன் ஏனில் இவற்றில் பெரும்பாலானவை, Google, Microsoft வேண்டுகோளுக்காக வழங்கப்படுகிறது. இதில் சில அவர்களின் சொந்த தேவைக்கு தான். உதாரணமாக இப்போது இருக்கும் www.youtube.com/user/powerthaz என்பதை www.powerthaz.youtube என வழங்க Google ஆல் மட்டுமே முடியும். இதை Godaddy இல் வாங்க முடியாது.
ஏற்கனவே சில ஆங்கிலம் அல்லாத gTLDs பாவனையில் உள்ளது. உதாரணமாக www.கணணிக்கல்லூரி.lk மற்றும் www. கணணிக்கல்லூரி.இல . இவற்றை இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக கணணி விஞ்ஞான பிரிவில் பெற முடியும்.
இனிமேல், Arabic, Cyrillic, Chinese பெயர்களும் பாவனைக்கு வரவுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள் : .app.blog .box .cam .camera .chat .click .cloud
இவற்றின் வரவுகள், sub domains களின் தேவைகளை மட்டுப்படுத்தியும், SEO, Ranking இல் பாரிய வேறுபாட்டை கொண்டு வரப்போவதுடன், web masters களுக்கு விருந்தாகவும் அமைய போகிறது.