Automobili Lamborghini S.p.A பரவலாக லம்போர்கினி என்றழைக்கப்படும் இது , Sant'Agata Bolognese, (Italy) இல் உள்ள சிறிய நகரத்தில் அமைந்த ஒரு இத்தாலியன் ஆட்டோமேக்கர். தயாரி்ப்பு காந்தமான Stephan Winkelmann 1963 இல் இந்த நிறுவனத்தை நிறுவினார். இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தை பற்றி விரிவான கட்டுரை
விக்கிப்பீடியாவில் இங்கு தமிழில் உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் கூகிள் Street view இல் இதன் தயாரிப்புகள் அனைத்தையும் கொண்ட காட்சியகம் இணைக்கப்பட்டது.
தினமும் ஏராளமான இடங்களின் Streetview வெளியாகிறது. அவற்றில் முக்கியமானதை Google உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள். வர்த்தக நோக்கம் கொண்டதை அந்த நிறுவனம் அறிவிக்கும். இன்னும் பல சத்தமின்றி இணைக்கப்படும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக அவர்கள் விடுத்த குறிப்பில் 16,000 சதுர அடி பரப்பில் உள்ள அரிய வகை லம்போர்கினிகள் உட்பட அனைத்தும் கொண்ட streetview காட்சிகளை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் உத்தியோகபூர்வ பக்கத்திலும் [
lamborghini.com/museum] இதை காணலாம்.
நாமும் வாங்கவிட்டலும், ஆர்வமாக பார்க்கும் கார்கள் என்பதால் இதை உங்களுடன் பகிர்கிறேன். கீழே காணுங்கள். அல்லது நேரடியாக
இங்கே காணுங்கள்.