Home » , » இணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்படி? Search Results with Artificial Intelligence

செயற்கை அறிவு /  செயற்கை ஒட்பம் என்பது இதுவரை நமக்கு கிட்டவில்லை. என்றாலும் அதன் பல கிளைகளில் நாம் தாவி மகிழ முடியும். அதன் ஒரு மிகப்பெரும் படியான இணைய தேடல்களில் அதன் வருவிளைவுகளை எப்படி பெறுவது என இப்பதிவில் சுருக்கமாக காணுங்கள்.

கூகிள், தனக்கே உரித்தான Algorithms மூலம் தேடல் முடிவுகளை வகைப்படுத்துகிறது. இப்பதிவில் wolfram | alpha இணைய தேடு இயந்திரத்தை மையமாக கொண்டு பகுத்தறிவுள்ள  முடிவுகளை பெறுவது எப்படி என காணலாம்.

இதுவரை வாசிக்காதவர்களுக்கு

அறிமுகம் 

Artificial intelligence என்பது எப்பொழுதோ ஆரம்பிக்கப்பட்ட திட்டம். ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை. இன்று  அன்றைய திரைப்படங்களில் காணப்பட்ட சில வசதிகளை இந்த வருடத்தில் இருந்து அனுபவிக்கிறோம்.
உதாரணமாக Google Chrome Voice Search இல் weather today அல்லது  Define Love என உரக்க சொல்லி பாருங்கள். சில வினாடிகளில் ஒலி வடிவில் அதன் காலநிலையை, வரைவிலக்கணத்தை பெறுவீர்கள்.

ரோபோ பற்றி அற்புதமான பாத்திர படைப்பை  கடந்த வருடம் வெளியான Robot and Frank என்ற திரைப்படத்தில்  பார்த்திருப்பீர்கள்.  "Self-Destruct Sequence has been initiated"   என அது  எண்ணுவது சுவாரசியமானது. செயற்கை அறிவு பற்றிய ஒரு விளக்கத்துக்கு அந்த படத்தை பார்க்கலாம்.

Wolfram Alpha பற்றி

இது பற்றி ஏற்கனவே நிறைய கதைத்து விட்டோம். பிரபலமான கணித முறைமகளுடன் இயங்கும் மென்பொருள், இணைய செயலிகளை உருவாக்கும் நிறுவனம். இப்பதிவின் பிரதான பகுத்தறிவுள்ள  முடிவுகளை  தரப்போகும் இணைய பக்கமும் இது தான்.

இது தன்னுள் உள்ளடக்கப்பட்ட கோடிக்கணக்கான தகவல்கள், Algorithms மூலம் நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான முடிவுகளை தருகிறது. 

இது சொற்பொருளியல் [wiki] சார்ந்த தேடல்களை தன்னுள் உள்ள ஆவணங்களில் இருந்து மூலம் நிகழ்த்துகிறது.

Does Wolfram|Alpha use artificial intelligence?

Not in a traditional sense. Wolfram|Alpha isn't mainly based on emulating human reasoning. Instead it uses powerful methods from science and algorithmic computation to get directly to answers. [மேலும்...]

கூகுளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 

கூகிள் Schemes , Knowledge graph, Hummingbird algorithms இவற்றில் இப்போது கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் முடிவுகள் இணையத்தில் இருந்து மட்டும் தொகுக்கப்படுகிறது. 
எ.கா

Wolfram Alpha வில் தேடல்களை மேற்கொள்வது எப்படி?

இதற்கு பின்வரும் உதாரணங்களே போதும். ஒவ்வொரு உதாரணத்தையும் Click செய்வதன் மூலம் அந்த தேடலுக்கு நீங்களும் முயற்சிக்கலாம்.

இங்கே சில உதாரணங்களே உள்ளது. நீங்கள் விரும்பியதை http://www.wolframalpha.com/ இல் சென்று தேடிப்பாருங்கள்.

இதன் சிறப்பே நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது தான். அதாவது கூகுளை போல் அல்லாமல் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.

இதற்கு முடிந்தால் அந்த இணைய தளம் மூலம் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்..
  • பதிவின் இறுதியாக சுவாரசியமான ஒரு கேள்வி : Does God exists? எப்படி சமாளிக்கிறது என்று பாருங்கள்.

இதன் மூலமான ஆழமான தேடல்கள் பற்றி மற்றுமொரு பதிவில் எதிர்பாருங்கள்.