Home » , » Dongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத் எப்படி? 5 பிரச்சனைகளும் தீர்வுகளும்

அடிக்கடி பலருக்கு / சிலருக்கு கணனியில் / இணையத்தில் வரும் சிக்கல்களும் தீர்வுகளும் இப்பகுதியில்  ஆராயப்படுகிறது. நிகழ்காலத்தில் இந்த பிரச்சனைகள் அதிகமானவர்களுக்கு வருகிறது. இதை அனுபவத்தில் தான் கண்டறிந்து தீர்க்க முடியும்.

Youtube Video தடைப்பட்டால் முழு இணையமும் முடங்கிவிடுகிறது

இது குறிப்பிட்ட ஒரு தொகுதி இணைய பாவனையாளர்களுக்கு வருகிறது. அதாவது AVG internet Antivirus பாவிப்பவர்களுக்கு. இதற்கு நீங்கள் கண்டு பிடித்த தீர்வு கணணியை Restart செய்வதே ஆகும். ஆனால் இதை தடுக்கு AVG > Advanced Settings > Web Browser Protection > Online Shield இல் சென்று Enable AVG Accelerator என்ற பகுதியில் உள்ள Tick இனை எடுத்து Save செய்தால் போதும்.


Online Video Streaming இல் காணொளியை தோன்றுவதே இல்லை.

இந்த பிரச்சனை Youtube தவிர்ந்த ஏனைய சில  இணைய பக்கங்களில் வீடியோ play ஆக்குவதில்லை என்பதாகும். இதற்கு காரணம் உங்கள் கணனியில் IDM (internet Download Manager) இருப்பதுடன், Advanced Browser Integration வசதி Active நிலையில் இருப்பதாகும். உண்மையில் இது பயனுள்ள வசதி. ஆனால் சில சமயங்களில் JW player போன்ற Flash Online Video players இன் streaming Link களை இவை பெற்று Download செய்வதாக என தானாக கேட்கும். இதன் போது குறிப்பிட்ட Video player சிக்கலில் மாட்டி  குழம்பிவிட்டு இறுதியில் File Missing என சொல்லி விடும். இதை தடுக்க பல வழிகள் இருந்தாலும், எப்போது இயங்கும் வழி:
தற்காலிகமாக IDM Browser Integration நிறுத்துவதாகும். அதற்கு, IDM > Download >Option > Advanced Browser Integration இல் உள்ள Tick இனை எடுப்பது தான்.  வீடியோ பார்த்த பிறகு மறக்காமல் மீள Tick செய்து விடுங்கள்.


IDM மூலம் Download செய்த Videos, Play ஆவதில்லை

இதை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். VLC உட்பட எந்தவொரு Video player 'ம் இதை ப்ளே செய்வதில்லை. இதற்கு காரணம் Youtube, கூகிள் தனக்கே உரிய WebM வகையை சார்ந்த File Format இல் இயங்குவதாகும். இதை Play செய்ய தரவிறக்கிய வீடியோவை drag & Drop செய்து / Open With மூலம் சென்று Google chrome மூலம் Play செய்யுங்கள். அட்டகாசமாக இயங்கும்.

Windows 8 க்கு Video Driver கிடைப்பதே இல்லை.

Windows 8  இனை 2009 கள் அல்லது அதுக்கு முதல் வந்த கணனிகளில் நிறுவினால் Video driver இல்லாமல், Screen 1280 * 728 default  resolution இல் இருக்கும். திரை அகன்றது / இழுபட்டது போல இருக்கும். இதற்கு Windows Update மூலம் சில சமயங்களில் Driver கிடைக்கும். ஆனால் இதன் போதும் Driver கிடைக்காவிட்டால்  Windows 8 இல் Device Manager என தேடி , Device Manager இன் உள் சென்று Display Adapters இனை Expand செய்து Right Click  > Update Driver Software > Automatic Search இன் மூலம் தேடினால் நிச்சயம் Microsoft தரும் Driver கிடைக்கும். 


Windows 8 இல் பல Internet Dongles இயங்குவதே இல்லை

பல Dongles, Windows 8 இல் நிறுவினால் No Device Found / Device unplugged/ என தான் வரும். இதற்கு காரணம் Windows 7 வரை தான் அதன் Driver இருக்கும். ஆனாலும் நிறுவும் போது Run Comparable with Windows 7  என கொடுத்தாலும் இயங்காது. இதை நீக்க பெரும்பாலும் இணையத்தில் உதவி இல்லை. இதற்கு எளிய ஒரு குறுக்குவழி உண்டு.
இதை எப்படி சரி செய்வதென அடுத்த பதிவில் காணுங்கள்.