வண்ணாத்திப்பூச்சி விளைவு / பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன?
வண்ணாத்திப்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. Dynamical system ஒன்றில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சுருக்கம்.ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்.
இதன் அடிப்படை ஒழுங்கின்மைக் கோட்பாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ / தொடர் செயற்பாட்டில் ஒரு ஒழுங்கை தேடுவதை விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு.
வண்ணாத்திப்பூச்சி விளைவுவிற்கான விளக்கம்
ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz 1963 இல், இதை
பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு
என்றார். இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதனாலேயே இந்தத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.
சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions)
வண்ணத்துப்பூச்சி விளைவுடன் சேர்த்து Domino effect, Snowball effect விளைவுகளையும் சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) என்ற பொதுவான தன்மைக்குள் அடக்கலாம்.Domino effect
பல சிறிய Domino கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி, ஒன்றைத் தட்டும்போது, எல்லாமே அடுத்தடுத்து விழும். இதுவே Domino விளைவு ஆகும். ஒருவர் பேசுவது எமது காதில் ஒலியாகக் கேட்பதும் Domino விளைவேனலாம்.Snowball effect
இது Domino effect போன்றதுதான், ஆனால் வித்தியாசம் ஒரு செயலால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் விளைவு அனைத்துத் திசையிலும் பரவி இருக்கும்.பனி படர்ந்த மலையின் உச்சத்தில் இருந்து ஒரு கையளவு உள்ள ஒரு பனி உருண்டை கீழே விழும்போது, அந்தச் சிறிய பனி உருண்டை, உருண்டு கீழே போகும்போது அண்மையில் இருக்கும் பனிகளையும் தன்னுடன் சேர்த்து, போகப்போக பெரிய பனி உருண்டையாக மாறுகின்றது. கடைசியில் இது மிகப்பெரிய பனிச்சரிவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
வண்ணாத்திப்பூச்சி விளைவுவின் வரையறைகள்
பட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை.வண்ணாத்திப்பூச்சி விளைவு பொதுவாக சுய சிந்தனை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது ஐயத்துக்குரியது.
Chaos Theory இன் பயன்பாடுகள்
- மருத்துவ துறையில் சீரற்று வரும் காக்கை வலிப்பு சம்பந்தமான கற்கைகளுக்கு
- பொறியியலில் திரவ கொந்தளிப்பு பற்றிய கற்கைகள்
- பங்கு சந்தைகள் மதிப்பீடுகள், சமூக கற்கைகள்
- இலத்திரனியலில் encryption systems, random number generators
திரைப்படங்களில் வண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect]
தமிழ் சொல்லக்கூடிய வகையில் வந்த ஒரே ஒரு படம் தசாவதாரம் தான். கமல்ஹாசனின் பத்து அவதாரங்களில் வந்து மதம் தொடர்பான சர்ச்சைகளை உள்ளடக்கிய படம்.Hollywood இல் Butterfly Effect என பெயரிட்டே 3 பாகங்களில் வெளியானது.
- The Butterfly Effect : ஒர் இளைஞனின் சிறுவயதில் பல துயரமான ம்பவங்களும் வாழ்வின் முக்கிய கணங்களுக்கு பயணம் செய்து அதை மாற்ற முயலும் சந்தர்ப்பமும் அங்கு நிகழும் butterfly effect இன் பாதிப்புகளும் [Download Movie From Torrent Here] [How to Download Movies via Torrent]
- The Butterfly Effect 2: A brain tumor allows a person to change the past by reflecting at relevant pictures. [Download Movie]
- The Butterfly Effect 3 Revelations : ஏனைய இரு படங்களில் இருந்து சற்று ித்தியாசம். Time Travel உடன் இணைக்கப்பட்டு தன் காதலியை கொன்றவனை தேடி செல்லும் கதாநாயகன், இறுதியில் தன் தங்கையே அவளை கொள்கிறாள் என கண்டு பிடிக்கிறார். ஏன் கொள்கிறாள் என்பதை திரைப்படத்தில் காணுங்கள். [Download Movie]
- Happenstance (2000 French) : How, thanks to what's known as the "Butterfly theory", can a young woman and a young man meet ?
இதை விட Run Lola Run , Back to the Future, Frequency , A Sound of Thunder , Fish Story, Hot Tub Time Machine, Mr. Nobody இவை அனைத்தும் Butterfly Effect இன் பாதிப்பில் உருவான படங்கள் தான்.
இப்படங்களில் பெரும்பாலானவை வயது வந்தவர்களுக்கானது என்பதை மறந்து விடாதீர்கள்.