Home » » இலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை

கண்டி - திகனை -தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற சம்பவம் பற்றி அறிந்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து Sri  Lanka அரசாங்கம் Viber,  Whatsapp, Facebook  ஆகியவை இடை நிறுத்தப்பட்டன. இது எவ்வாறு சாத்தியப்பட்டது, எவ்வாறு இதை மக்கள் எதிர் கொண்டார்கள், நன்மைகள், தீமைகள்,  எதிர்காலம் ஆகியவற்றை   தொழிநுட்ப ரீதியான பார்வையில் பாப்போம்.


பின்னணி

February  22, 2018 அன்று கண்டியில் சிங்கள நபர் ஒருவர் ஒரு சில முஸ்லிம் நபர்களினால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு மோசமான காயங்களுக்கு உள்ளாகிறார். பாதிக்கப்பட்ட அந்த நபர் மார்ச் 3ஆம் நாள் மரணத்திற்குள்ளாகிறார். March  4 மாலைப் பொழுதில் போர்க்குணமிக்க ஒரு கும்பல் முஸ்லிம்களின்  வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்டியில் நடைபெற்ற இவ்வன்முறைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் சிங்களவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் infertility tablet (கருத்தடை மாத்திரை) கலக்கப்பட்டது என்ற வதந்தியை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இவ்வன்முறையைத் தூண்டியவர்கள், சிங்கள இனம் பெருகுவதை தடுக்க முஸ்லிம்கள் முற்படுவதாகவும் அதன்மூலம் அவர்களது சனத்தொகையை சிங்களவர்களைவிட அதிகரிக்க முற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.  இம்மாத்திரை நிரந்தர மலடாக்கத்துக்கானது என சொல்லப்பட்டது. உடனடியாக மகப்பேறடையாத படி குறைக்கும் மருந்து எதுவும் இல்லையென சுகதார அதிகாரிகளும் மருத்துவ துறையினரும் உறுதிசெய்துள்ளனர். இருந்தபோதிலும் இதனை அவர்கள் நம்புவதாக இல்லை.

TRCSL நடவடிக்கைகள் 

Telecommunications Regulatory Commission of Sri lanka அனைத்து தொலைதொடர்பு சேவைவழங்குநர்களையும் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பேஸ்புக் மற்றும் வட்ஸப், வைபர் பாவனையை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொண்டது. இதேவேளை கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இணையபாவனை முற்றாக இடைநிறுத்தப்பட்டது.

சேவை வழங்குநர்களின் நடவடிக்கைகள்  

March 7ஆம் திகதி காலை நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பான Dialog  இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசத்தின் பாதுகாப்பு நலன்களை கருத்தில்கொண்டு சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது  மறு அறிவித்தல் வரும் வரை  கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற தகவலை வெளியிட்டதுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு Twitter  செய்திகளையும் அனுப்பியிருந்தது.

ஏனைய நிறுவனங்கள் எந்தவொரு அறிவித்தலையும் விடவில்லை. அத்துடன் அனைத்தும் வழமைக்கு திரும்பியவுடன் Dialog  மீண்டும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுந்தகவல் ஒன்றினை அனுப்பி அறிவித்தது.

சமூக தளங்கள் தடைசெய்யப்பட்டதன் நோக்கம் 

இது ஒரு ஆங்கில மொழியை சரளமாக சமூக தளங்களில் பயன்படுத்துபவர்களால் உண்டாக்கப்படட வன்முறை ஆயின் இலகுவாக கட்டுப்படுத்தி இருக்கலாம். ஏன் என்றால் ஆங்கிலகருத்துக்களை  கண்காணிக்கவும் வடிகட்டவும் போதுமான தொழிநுட்பம் அனைத்தும்  சமூக சேவை வழங்குநர்களிடமும் உண்டு. ஆனால் சிங்கள சொற்களை புரிந்து கொள்ள, தேட, வடிகட்டிட பொருத்தமான சொற்களை உள்ளடக்கிய சொற்களஞ்சியம்   இல்லை. அல்லது முழுமை பெறவில்லை.  எனவே இந்த தளங்களை உடனடியாக தடை செய்வதை தவிர வேறு வழிகள் இல்லை.

சில நாட்களின் பின்னர் Facebook  பிரதிநிதிகள் இலங்கை வந்து ஜனாதிபதியின் செயலாளருடன் இணைக்கப்பட்டை எட்டிய பின்னரே சேவை வழமைக்கு திரும்பியது.

மக்களின் செயற்பாடுகள் 

Digital தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளும் ஆளுமையுள்ளவர்கள் Proxy  Server 'களைப் பயன்படுத்துவார்கள். Digital தொழில்நுட்ப அறிவை குறைவாகக் கொண்ட பயனாளர்களே செய்திகள், கருத்துக்கள் மேலதிக தகவல்களை  இழக்கவேண்டியிருக்கும். அவ்வாறான தகவல் வெற்றிடம் காரணமாக வதந்திகள் வேகமாகவும் பரந்துபட்ட அளவிலும்பரவ வழி வகுக்கலாம்.

எவ்வாறு முடக்கப்பட்டது

இது புதிதல்ல. ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் பல பாலியல் இணைய தளங்களை (Adult  pornographic Websites) இனை தடுக்க உத்தரவிட்டது. அவை அனைத்தும் வழக்கமான DNS  இல்  அந்த தளங்களின் முகவரியை அகற்றுவதன் மூலம் செய்யப்பட்டது. இதை பார்க்க வேறு Domain Name  Server  இனை பயன்படுத்துவது போதுமாக இருந்தது. உதாரணமாக Google Public  DNS (8.8.8.8, 8.8.4.4).

ஆனால்  இந்த தடவை ISP Filters மூலம் குறிப்பிட்ட IP  range  அனைத்தும் தடைசெய்யப்பட்டது.இதன் மூலம் இங்கைக்குள் இருந்து குறிப்பிட்ட தளங்களை உங்களை சேவை வழங்குநர்களின் server மூலம் அணுக முடியாது. இதனாலேயே Proxy  /VPN  என வேறு நாட்டு servers  தேவைப்பட்டன.

China  போல Great  Firewall  ஒன்றின் மூலம் இவ்வாறான Proxy, VPN  தளங்களை கூட முடக்கலாம்.

மக்களின் பாதிப்புக்கள்

Developers  பாதிக்கப்பட்டனர்

இலங்கையில் இயங்கும் நூற்றுக்கணக்கான  Developers, Facebook 'ன்   developers.facebook.com/apps/ தளத்தை அணுக முடியவில்லை. பின்னர் VPN  மூலம் அணுக ஆரம்பித்தனர்.

புள்ளிவிவரங்களை அணுகமுடியவில்லை. 

Facebook  analytics, Facebook  Business, audience Network  என Facebook  இணை பிரதானமாக Domain  இல் கொண்ட அணைத்தது  முடங்கியதால் Developers மிகவும் சிரமப்பட்டனர். VPN  இனை அல்லது Proxy  இனை பாவிக்கும் poothu Facebook  பாதுகாப்பு அமைப்பு பலரை பாதுகாப்பு காரணங்களுக்காக உள்நுழைய மறுத்தது.

அதிகரித்த Facebook  விளம்பர கட்டணங்கள் 

வழக்கமாக $0.06 வரை செல்லும் Facebook  Ads  CPC  சற்றும் எதிர்பாராமல் $1.5 வரை எகிறியது. இதற்க்கு காரணம் மிக மிக குறிப்பிட்ட அளவு மக்கள்மட்டுமே  VPN மூலம் Facebook இனை  பயன்படுத்தினார்கள். அவர்களை இலக்கு வைத்து விளம்பரம் செய்வது மிகுந்தசெலவாகி விட்டது. -இதனால் பாதிக்கப்பட்டது Facebook  Ads  Manager  இனை பாவிக்கும் வாடிக்கையாளர்களே.

மக்களை வரவழைக்க Google  இனை நாடிய Facebook  

சடுதியான இந்த பாவனையாளர் சரிவை ஈடுகட்ட, இலங்கையில் Google  வழங்கும் விளம்பர சேவை ஆகிய Adword  மூலம் facebook  மக்களை தனது சேவையை மீள பாவிக்குமாறு விளம்பரங்களை வழங்கியது.

சாமானியர்களின் பாதிப்பு 

சடுதியான Viber, Whatsapp  முடக்கம், வெளிநாடுகளில் வாழும் உறவுகள் இலங்கையில் உள்ளவர்களுடன் கதைக்க முடியாமல் செய்து விட்ட்து. இதனால் மீண்டும் கற்காலத்திக்கே சென்று IDD  எனப்படும் International Direct  Dialling  இனை பாவிக்கும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதன் மூலம்  சேவை வழங்குநர்கள் கொள்ளை-இலாபம் சம்பாதித்தனர். இதுவரை மக்களுக்கு நட்டஈடு வழங்குவதை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமையை சமாளிப்பது எப்படி?

Opera  Proxy  போன்ற இலவச சேவைகளை பயன்படுத்தலாம். VPN  பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இது எதிர்காலங்களில் சட்டவிரோதம் / தண்டனை என அறிவிக்கப்படலாம். அத்துடன் VPN  பாவனையாளர்களை இலகுவாக கண்டறியலாம். எனவே ஆபத்து தான்.

TOR  - Onion  Network  பாதுகாப்பானது. Wikileaks  போன்ற தளங்கள் இந்த கட்டமைப்பை வலுவாக நம்புவதோடு, இவற்றை மேம்படுத்த தங்களால் ஆனா உதவியை வழங்குகிறார்கள்.

இவை சம்பந்தமாக மேலும்தகவல்களை எதிர்கால பதிவுகளில் எதிர்பாருங்கள். உங்கள் கருத்துக்களை Comments மூலம் பகிருங்கள்.