செயற்கை மழையும் பக்கவிளைவுகளும்

அண்மைக்காலங்களில் இலங்கையை சம்பந்தப்படுத்தி செயற்கை மழை பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன. Bureau of Royal Rainmaking and Agricultural Aviation (BRRAA) of Thailand உதவியுடன் இலங்கையின் முக்கிய நீர்த் தேக்கப் பகுதிகளான Castlereagh, Victoria, Kotmale மற்றும்  Mausakelle ஆகிய இடங்களில் செயற்கை மழை பெய்விக்கப்பட உள்ளது..


செயற்கை மழை 

விசேட வானவியல் நிபுணர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயற்கை மழையை உருவாக்கி வருகிறார்கள், காற்றழுத்தத்தை உருவாக்குதல், மழை மேகங்களை அதிகரித்தல், மழை மேகங்களை குளிரச் செய்தல் போன்ற செயற்பாடுகளூடாக மழையை பொழியச் செய்கிறார்கள். சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் செயற்கை மழையை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் காணப்படுகின்றனர்.

செயற்கை மழை பெய்ய செய்வதில் மூன்று படிநிலைகள்

  1. காற்றழுத்தத்தை உருவாக்குதல்
  2. மழை மேகங்களை அதிகரித்தல்
  3. மழை மேகங்களை குளிரச் செய்தல்
முதலில் வானில் நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும்.

Calcium Carbide - CaC2(கல்சியம் கார்பைட்), Calcium oxide - CaO (கல்சியம் ஒக்ஸைட்,) உப்பும் - (NaCl, KCl), யூரியாவும் - Urea (CH4N2O) சேர்ந்த கலவை/ Ammonium nitrate - NH4NO(அமோனியம் நைட்ரேட்) கலவை என்பன விமானங்கள் மூலம் அந்தப் பகுதியில் காணப்படும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குகிறார்கள். மழை மேகங்களின் கனத்தை அதிகரிப்பதற்காக சமையல் உப்பு (NaCl), Urea, Ammonium nitrate, உலர் பனி (Dry Ice - Solid carbon dioxide CO2) ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூட்டுகிறார்கள். (Calcium Chloride) கல்சியம் குளோரைட்டும் பயன்படுத்துவதுண்டு.) விமான மூலம் இவ்வாறு மேக விதைப்பு நடைபெறுகிறது. இறுதியாக, Silver Iodide - AgI (வெள்ளி அயோடைட்) மற்றும் Dry Ice ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது!

வரலாறு 

செயற்கை மழைக்கான தேவை தொடர்பான எண்ணக்கரும் 1903 ஆம் ஆண்டளவிலேயே விஞ்ஞானிகளிடையே ஏற்பட்டது. எனினும் எந்தவிதமான முன்னேற்றங்களும் சாத்தியப்படவில்லை. 1950களில் அவுஸ்திரேலியாவில் "மழை உருவாக்கம்” என்ற பெயருடன் ஒரு குழு நியமிக்கப்பட்டு தீவிர தேடலில் இறங்கியது. விளைவாக 1957 ஆம் ஆண்டளவில் செயற்கை மழை தொடர்பான ஒரு திடமான எண்ணக்கரு உருவானது. தொடர்ச்சியாக 1960 ஆம் ஆண்டில் முதலாவது செயற்கை மழை பெய்யப்பப்பட்டது.

1970 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் செயற்கை மழைக்கான ஆராய்ச்சிகள் தொடங்கியது. விஞ்ஞானி ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய  Dr. Bernard Vonnegut இருவரும் செயற்கை மழையை பொழிய வைக்க பல வகையான உத்திகளை ஆய்வு செய்து பார்த்தனர். செயற்கையாக கவர்ச்சி மையத்தை உருவாக்க முயன்றனர். பனித்திவலைகளை ஒத்த, ‘Silver Iodide’ இதற்கான மாற்று என கண்டுபிடித்தனர். இவர்களுக்கு பின் வந்த டாக்டர் சிம்சன் போன்றோர் செயற்கை மழை ஆராய்ச்சியை செழுமையாக்கினர். முதல் விமானம் மூலம் மேகத்திற்கும் மேலே சென்று வெள்ளி அயோடை மேகத்தின் மீது தூவி செயற்கை மழை முயற்சிகள் அமெரிக்காவின் Florida, கனடாவின் Quebec போன்ற இடங்களில் நடைபெற்றது.


செயற்கை மழையால் பாதிப்பு உண்டா?

செயற்கை மழையினால் உடலிற்கோ/ தாவரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை! இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம். ஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்யவேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். கால நிலை மேலும் மோசமடையும். செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர் பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்! பாதுகாக்கப்பட்ட Pygmy possum இனங்களுக்காக ஆஸ்திரேலியாவில் செயற்கை மழையானது நிராகரிக்கப்பட்டுள்ளது.

Pygmy possum


silver மற்றும்  silver compounds (from silver iodide)  குறிப்பிட தக்க அளவு நச்சு தன்மையானவை. இவை கலந்த நீரை பருகும் போது ஏற்படும் ஆபத்துக்கள் அளப்பரியது. எவ்வாறாயினும் இது சராசரி தொழிற்சாலைகள் சூழலுக்கு விடும் நஞ்சை விட 99% குறைவானதே. இதே இரசாயனம் மண் மூலம் காய்கறிகள் ஊடக மனிதர்களை சென்றடையும் ஆபத்தும் உள்ளது.

  • செயற்கை மழைக்காக பயன்படுத்தப்படும் Silver Iodide பாலூட்டிளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும்.
  • Silver Iodide அளவானது அதிகரிக்கும்போது தோலின் நிறம் மாற்றம், மறதி போன்றவற்றை உண்டாக்கும்.
  • செயற்கை மழையால் ஏரிகளில் உள்ள தாவரங்கள் பூப்பதில் பிரச்சினைகள் ஏற்படுவதாக சுற்றுசூழல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
  • செயற்கை மழையினை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெய்ய வைக்கும்போது அது மற்ற இடத்தில் ஏற்படும் இயற்கை மழை பொழிவினை பாதிக்கிறது.
  • செயற்கை மழைக்காக முயற்சிக்கும்போது சில நேரங்களில் மழை பெய்வதில்லை. மற்ற சில நேரங்களில் அதிக அளவு மழையானது குறைந்த அளவு நேரத்தில் பெய்து வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகிறது.
  • செயற்கை மழைக்காக அதிக பொருட்செலவு ஆவதும் குறிப்பிடத்தக்கது.
  • அடிக்கடி செயற்கை மழையை பெய்ய அதிகளவு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பினைச் சந்திக்கலாம்.

தமிழுடன் இணைந்த Adsense

இந்த சம்பவம் நிகழ்ந்தே பல நாட்கள் ஆகி விட்டன. சூடு ஆறி விட்டது. எவ்வாறாயினும் உங்களை தெளிவூட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த  தமிழ் தொழிநுட்ப தளங்களில் கணணிக்கல்லூரியும் ஒன்று. ஆனால் இப்போது அனைத்து தளங்களும் செயலிழந்து விட்டன. காரணம் தமிழுக்கு Adsense  இல்லை.



இப்போது தான் Adsense  இருக்கிறதே.. மீளவும் தொடங்கலாமே என்று எண்ணலாம். ஆனால் அது சாத்தியம் இல்லை. காரணம்,

  1. தமிழில் தொழிநுட்ப செய்திகளை வாசிப்பதில் ஆர்வம் இல்லை.
  2. தரமான தொழிநுட்ப செய்திகள் உடனுக்குடன் வழங்க ஆயிரக்கணக்கில் ஆங்கிலத்தில் தளங்கள் உள்ளன.
  3. Facebook போன்ற சமூக தளங்கள் செய்திகளை பிரித்தது அவற்றின் timeline  ல் காட்டுவதால் வாசகர் இணைய பக்கத்துக்கு வர வேண்டியதில்லை.
அப்படியென்றால் இப்போது எப்படியான தளங்களுக்கு  மவுசு?
  1. பலான கதைகள் எழுதும் தளங்கள்.
  2. போலி செய்திகளை காட்டும் சுடசுட- வகை தளங்கள் (நடிகையின் அதுக்கு நடந்தவலிமிகுந்த சம்பவம் - என்று தலைப்பிட்டு, நாய்க்குட்டிக்கு காலில் கல்லு அடிபட்ட உண்மை சம்பவத்தை சொல்லும் தளங்கள்).
  3. நடிகைகளின் ஆபாச கவர்ச்சி படங்களை போடும் தளங்கள்.

அப்படியென்றால் கணணிக்கல்லூரியும் அவ்வாறு மாறப்போகிறதா?

இல்லவே இல்லை. நாம் தொடர்ந்து சில வித்தியாசமான தகவல்களை பகிரப்போகிறோம் - தொழிநுட்பத்தில் - சாமானியர்களுக்கு விளங்கும் வகையில் சில)

உண்மையிலேயே தமிழுக்கு ஆதரவு கொடுக்கிறதா இல்லையா Google?
Adsense  ஆதரவு கொடுக்கவில்லை- இப்போது தான் புதிது என்பதால் தமிழ் விளம்பரங்கள் இல்லை. எல்லாம் ஆங்கிலம் (English) சார்ந்தவை தான். தமிழ் தளங்களில் விளம்பரங்கள் குறைவு.

எவ்வாறான விளம்பரங்கள்Adsense  மூலம் கிடைக்கிறது?

வழக்கமான செவ்வகம் (rectangle), 728 x 90 போல, தன்னியக்கமான வடிவங்கள் (Auto  ads) ஒவ்வொரு பதிவின் அடியிலும் வரும் Feed  Ads, பதிவின் நடுவில் வரும் In -Article ads, துள்ளி எழும் pop -up vignette  ads, நீந்தி எழும்பும் Anchor ads என நீங்கள் அறியாத பல வகை.

இவற்றை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள், இவை சம்பந்தமாக அடுத்த பதிவில் பார்க்கலாம். இவற்றின் மூலம் ஆக குறைந்தது 10$  தினமும் சம்பாதிக்கலாம் என்பது இன்னுமொரு சுவாரசியம்.