இலங்கையர்களுக்கு புதிய Adsense payment நடைமுறை - Wire Transfer

இதுவரை காலமும் Adsense / Admob மூலம் பணம் பெறுவதென்றால் Cheque எனப்படும் Over sea draft முறை  தான் இலங்கையில் வசிப்பவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது. உண்மையில் Google Cheque முறையை விரும்புவது இல்லை. இதில் உள்ள மோசடிகளும் இதற்காக அவர்கள் கணிசமான தொகையை ஒதுக்க வேண்டி இருப்பதும் தான் காரணம். 

இதுவரை காலமும் Citi bank (New york) மூலம் அனுப்பட்டும் cheque, நேற்று முதல் - அதாவது April முதல் நேரடியாக Wire transfer மூலம் இலங்கையில் உள்ள HNB / Commercial bank கணக்கில் வைப்பில் இடப்படும் என தெரிய வருகிறது.

இதன் மூலம் வெறும் 3 நாட்களில் உங்களால் Admon / Adsense பணத்தை LKA நாணயத்தில் பெற முடியும்.

இது தொடர்பாக Google இடமும் இலங்கை வங்கிகளிடம் மேலதிக தகவல்களை  கேட்டிருக்கிறேன்... கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன். இது தொடர்பாக Google எந்தவொரு உத்தியோக பூர்வ அறிவிப்பையும் இதுவரை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Essential Skills : Matlab ஓர் அறிமுகம் 2

ஏற்கனவே Matlab பற்றி "Matlab எளிய அறிமுகம் (1)" இல் பார்த்து இருந்தோம்.. உண்மையில் அந்த பதிவு உயர்மட்ட தொழிநுட்ப துறையில் உள்ளவர்களுக்கு தான் பயன்படும்.. ஆனால்  எப்பொழுதும் "இலவசமான IDM தரவிறக்குவது எப்படி?", "கூகுளில் சுற்றி பார்க்கலாம் வாங்க" என சராசரி பதிவுகளை கணணிக்கல்லூரியில் எழுத முடியாது. ஏனைய தமிழ் தொழிநுட்ப தளங்களில் இருந்து கணணிக்கல்லூரி தனித்துவமாக திகழவும் இவ்வாறான உயர்மட்ட பதிவுகளே காரணம் ஆகிறது.. எவ்வாறாயினும் ஏனைய பதிவுகளும் தொடர்ந்து இடம் பெறும்.


Essential Skills

Matlab  ஒரு சமுத்திரம்.. அதில் தேவையானதை மட்டும் கற்றால் போதும். அதன் அடிப்படை என்ற வகையில் Essential Skills தொடர்பாக இப்பதிவு. இதை எழுதுவது என்றால் புத்தகம் ஆகி விடும்.. அத்துடன் செயன்முறை விளக்கம் கிடைக்காது. அதனால் உலகளவில் பிரபலமான Matlab Training Videos மூலம் இதை அறிந்து கொள்ளுங்கள். இது ஏற்கனவே யாரோ ஒருவரால் Youtube இல் இருக்கிறன. இவற்றின் முதல் தொகுப்பை இங்கே காணுங்கள்.


இலங்கையில் உதயமாகும் Paypal

முன்பு "Paypal இலங்கையில் அனுமதிக்கப்படவுள்ளது"  இல் கொஞ்சம் சொல்லி இருந்தேன். இன்றுவரை Paypal மூலம் இலங்கையில் உள்ள எவரும் பணத்தை பெற முடியாது என்பது தான் உண்மை. ஆனால் பணத்தை அனுப்ப முடியும். எவ்வாறாயினும் விரைவில் இவ் வசதியும் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.


சில வாரங்களாக இலங்கையின் பிரதான தனியார் வங்கிகள் அமெரிக்காவில் உள்ள Paypal தலைமையகத்துடன் கலந்துரையாடலில் Central Bank ஊடாக  ஈடுபட்டுள்ளன என  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்,  Nivard Cabraal  சில தினங்களுக்கு முன் ஒரு சந்திப்பில் சொல்லி இருந்தார். இலங்கையில் இதுவரை இருந்த தடை நீக்கப்பட்டதால் தனியார் வங்கிகள் தமது சேவையில் Paypal இனை இணைக்க மும்முரமாக உள்ளன.

இதன் மூலம் உள் நாட்டு வர்த்தகத்தை சர்வதேச ரீதிரில் திறந்து விட முடியும் எனவும், இவ்வருட இறுதிக்குள் இந்த சேவை அறிமுகம் ஆகும் எனவும் மேலும் ஆளுநர் தெரிவித்தார்.

Windows XP சகாப்தம் முடிகிறது

Microsoft நிறுவனத்தின், மிகப் பிரபலமான Windows XP ன் வாழ்நாள் April  8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த System  இனி computer 'களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, Microsoft நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.
2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த Operating System, இன்னும் உலக அளவில் இயங்கும் personnal computer 'களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட Windows 7 system 'ம் தான், இன்னும் 50% computer 'களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், Microsoft நிறுவனத்தின் தற்போதைய இலக்கு Windows 8 அல்லது 8.1 system 'த்தினை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதுதான்.இந்த April 8க்குப் பின்னர், பாதுகாப்பற்ற அபாயமான நிலைக்கு Windows XP வருவதால், இதனை விட்டுச் செல்லும் பெர்சனல் computer 'ன் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகிடும். இந்த நாளுக்குப் பின்னர், குறியீட்டுப் பிழைகளுக்கான தானாக காத்துக் கொள்ளும் patch Filesகள் கிடைக்காது.

ஏன் XP கைவிடப்படுகிறது? Microsoft எதிர்பார்த்த நிலைக்கு மேலாகவே, அதிக விற்பனையான, பயன்படுத்தப்படும் operating system 'மாக XP உருவெடுத்தது. இதனை அடுத்து வெளியான Vista, பரிதாபமாக 4% பெர்சனல் computer 'களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே, தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது XP.

இந்த பிடிப்பினைக் கண்ணுற்ற Microsoft, Vistaவிற்கு வரவேற்பு கிடைக்காததால், XPயைக் கைவிட திட்டமிட்டது. பலமுறை அது போல அறிவிப்பினை வெளியிட்டாலும், மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அதற்கான support Filesகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. Windows 8 வெளியான பின்னர், இனிமேல் முடியவே முடியாது. தொடர்ந்து பாதுகாப்பிற்கான Filesகளை வெளியிடுவது, நிறுவனத்திற்கு அதிக செலவினைத் தரும் என்று கணக்கிட்டு, மொத்தமாக support தருவதை நிறுத்துகிறது.அப்படியானால், என்ன விபரீதங்கள் நடக்கும்? விபரீத விளைவுகள் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து இன்னும் பல computer 'களில் XP இயங்கும். Microsoft நிறுவனமும், Hackers மற்றும் virus 'களுக்கு எதிரான போராட்டத்தினை, April 15, 2015 வரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, தானாக எந்த computer'ரும் பாதுகாப்பு தரும் patch Filesகளை update செய்திடாது. ஆனால், Microsoft தொடர்ந்து Hacker 'ளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பிற்கான Filesகளை வழங்கும்.
சென்ற வாரம், Windows XP பாதுகாப்பிற்கான திட்டங்களுக்கான update Filesகள் வரும் July 14,2015 வரை, அதாவது மேலும் 15 மாதங்களுக்கு வழங்கபப்டும் என அறிவித்துள்ளது. operating system 'த்திற்குப் பாதுகாப்பு தரும், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான, Microsoft Security Essentials program 'மிற்கான update Filesகள் தொடர்ந்து கிடைக்கும். அதாவது, Windows XP இனி பாதுகாப்பு பெறும் operating system 'மாக இருக்காது. system 'த்திற் கான பாதுகாப்பு Filesகள் இனி update செய்யப்பட மாட்டாது. ஆனால்,வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் program 'ம் மட்டும் அவ்வப்போது எதிர்கொள்ளும் malware மற்றும் Virus களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் update செய்யப்படும்.

Microsoft நிறுவனம் ஒரு தர்மசங்கடமான நிலையில் தான், மேலே சொல்லப்பட்ட முடிவினை எடுத்துள்ளது. ஒரு நிலையில், தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், XP system 'த்திலிருந்து விடுபட வைத்து, புதிய கூடுதல் பாதுகாப்பு கொண்ட நிலைக்கு, system 'த்திற்கு தள்ள விரும்புகிறது. இன்னொரு நிலையில், XPயிலேயே தொடரும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை நட்டாற்றில் கைவிடுவது போல, support Filesகளைத் தராமல் இருந்தால், அவர்களுக்கு நல்லது எதுவும் செய்திடாமல் இருப்பது மட்டுமின்றி, ஆபத்தில் தள்ளிவிடும் செயல்பாட்டினையும் மேற்கொள்ளும். எனவே தான், Microsoft பாதுகாப்பிற்கான பைலை மட்டும் July 15, 2015 வரை update செய்வதாக அறிவித்துள்ளது. அது கூட, மால்வேர்களுக்கு எதிரான போராட்டத்தில் வலுவான எதிர்ப்பைத் தருமா என்பது அந்நிறுவத்திற்கே சந்தேகமாக உள்ளது. எனவே தான், கூடுதல் பாதுகாப்பு தரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, நவீன software தொகுப்புகளைப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது. Install  செய்யப்பட்ட அனைத்து  Software program 'ம்களுக்கும் தொடர்ந்து security updateகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை தந்துள்ளது. கூடுதலாக, இற்றை நாள் வரை update செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் program 'ம்களையே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இனி, Windows Operating System உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.
இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, Windows operating system 'த்தை இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. Windows சரித்திரத்தில், XP system 'த்தின் பங்கு, இதுவரை எந்த operating system 'த்திற்கும் கிடைக்காத ஒன்றாகும். Windows OS வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.

1.Windows 1.0 - 1985: Windows operating system 'த்திற்கான அறிவிப்பு முதலில் 1983ல் வெளியானது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தே Windows 1.0, 1985ல், வெளியானது. அதுவரை, MS Docs இயக்கத்தின், கட்டளைப் புள்ளியில் கட்டளைகளை அமைத்து, computer ' இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. கீழ்விரி மெனு பட்டியல், ஸ்குரோல் பார்கள், ஐகான்கள், டயலாக் பாக்ஸ்கள் முதன் முறையாக, Windows 1.0.ல் வெளிவந்து மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தினை அளித்தன. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில், மக்கள் தங்கள் computer ' பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டனர்.

2. Windows 3.0. - 1990: Windows 3 பதிப்பு 1990 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 1992ல் Windows 3.1 பதிப்பும் வெளியானது. இவை இரண்டும் இணைந்த உரிம விற்பனை ஒரு கோடியை எட்டியது. முதன் முறையாக 16 வண்ண graphics அறிமுகப்படுத்தப்பட்டது. Solitaire, Hearts and Minesweeper ஆகிய விளையாட்டுக்கள் மக்களுக்கு உற்சாகம் தந்தன.

3. Windows 95, 1995: விற்பனைக்கு அறிமுகமாகி, ஐந்தே வாரங்களில், 70 லட்சம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் தான், முதல் முதலாக start button அறிமுகப்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, operating system 'த்துடன் இணைந்து இணையத்திற்கான support தரப்பட்டது. Dial up networking முறை அமலுக்கு வந்தது.

4. Windows 98, 1998: வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், பணிமனைகளிலும், Personnal computer ' பயன்பாடு வேகமாக வளர்ந்த போது, இந்த Operating System, நுகர்வோர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதல் முறையாக, டிவிடி மற்றும் USB இதில் support செய்யப்பட்டன.

5. Windows எம்.இ., 2000: Windows எம்.இ. (Windows ME (or Millenium Edition)) பலவகையான வசதிகளைக் கொண்டு வந்தது. Windows Movie maker போன்ற Multimedia சமாச்சாரங்கள் எல்லாம் இதனுடன் வந்தவையே. ஆனால், இந்த system 'த்தினை நம்பி செயல்பட முடியவில்லை. இதனால், மக்கள் இதனை ஒதுக்கினார்கள். Microsoft நிறுவனமும் இதனைக் கைவிட்டது.
6. Windows XP, 2001: எங்கு Windows எம்.இ. தவறியதோ, அங்கு Windows XP. வெற்றி கொடி நாட்டியது. பயன்படுத்த மிக மிக எளிதான system 'ம் என்ற பெயரை எடுத்தது. அத்துடன், நம் நம்பிக்கையை வாரிவிடாமல், நிலையாக நின்று இயங்கியது. வெளியாகி ஐந்து ஆண்டுகளில், 40 கோடி உரிமங்கள் விற்கப்பட்டன. Microsoft தன் Windows பாதையில், மற்ற புதிய பதிப்புகளுடன் முன்னேறினாலும், மக்கள் எங்களுக்கு இதுவே உகந்தது என்ற முடிவுடன் தொடர்ந்து இதனையே வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இப்போதும் கூட மொத்த computer ' பயன்பாட்டில், 30% பேர் இதனையே மிக முக்கியமாகக் கருதி இயக்கி வருகின்றனர்.

7. Windows Vista, 2006: Windows XPக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பலியான system 'ம் என இதனைக் கூறலாம். XPக்குக் கிடைத்த நல்ல வரவேற்பினால், இது மக்களிடையே எடுபடவில்லை. மேலும், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பலர், இதனால், வைரஸ்களின் தாக்கத்தினை எதிர்த்து நிற்க இயலவில்லை எனவும் குற்றம் சாட்டி னார்கள். எனவே, இந்த Operating System மக்களிடையே ஒரு கேலிக்குரிய பொருளாகத் தான் இருந்தது. அதனாலேயே, Apple இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, இதற்குப் போட்டியாக, ""நான் ஒரு மேக் computer ''' என்று ஒரு இயக்கத்தினைத் தொடங்கி வெற்றி பெற்றது.

8. Windows 7, 2009: Microsoft, வெற்றி தராத Windows பதிப்புகளிலிருந்து பல பாடங்களைப் படித்தது. அவற்றின் அடிப்படையில் தன் தவறுகளின் பலவீனங் களை விலக்கி, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், தன் அடுத்த Windows பதிப் பினை, Windows 7 என வெளியிட்டது. மக்களுக்கான விற்பனை பதிப்பை வெளி யிடும் முன், 80 லட்சம் சோதனை உரிமங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் அடிப்படையில், இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டது. வெற்றி கரமாக இது மக்களிடையே சேர்ந்தது. மக்களும் விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், Microsoft நிறுவனத்திற்கு சோதனை வேறு திசையில் இருந்து கிடைத்தது. Microsoft கால் ஊன்றாத மொFiles சாதனங்கள் இயக்கம், அதற்கு நெருக்கடியைக் கொடுத்தது. உடன், Apple நிறுவனத்தின் operating system 'மும் சரியான போட்டியைத் தந்தது.
9. Windows 8, 2012: தனக்கு போட்டியாக நெருக்கடி கொடுக்கும் Apple நிறுவனத்தின் system 'த்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முதல் முதலாகக் கம்ப்யூட்டரில் தொடு உணர் திரை இயக்கத்துடன் Windows 8 system 'த் தினை வடிவமைத்து Microsoft வழங் கியது. operating system 'த்தின் முக அமைப் பினையே மாற்றி அமைத்தது Microsoft. தன்னுடைய டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கிடும் வகையில், இந்த Operating System ஒரு கலவையாகத் தரப்பட்டது.

இது மிகப் பெரிய, துணிச்சலான செயல்பாடு என இத்துறையில் இயங்கும் அனைவரும், ஆச்சரி யத்துடன் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதனைப் பயன்படுத்தியவர்கள்,அதனுடன் மகிழ்ச்சியாக இல்லை. computer ' வேலை களை மேற் கொள்வதில் சற்று எரிச்சல் அடைந் தனர். இது நாள் வரை பழகி வந்த அமைப்பிலிருந்து முற்றிலும் மாறான ஒன்றை ஏற்றுக் கொள்ள மனம் தடுத்தது. இதனால், இதனை அடுத்து வந்த Windows 8.1ல், Microsoft வழக்கமான, தன் பாரம்பரிய டெஸ்க்டாப் முறை இயக்கத்தினையும் சேர்த்து வழங்கியது. தொடர்ந்து மெதுவாக, மக்கள் இதற்கு மாறி வந்தாலும், இது வெற்றியா? தோல்வியா? என்பதனைக் காலம் தான் தீர்மானிக்கும்.

Computer Simulation அறிமுகம்

வழக்கத்துக்கு மாறாக அவ்வப்போது உயர்மட்ட சில பதிவுகள் கணணிக்கல்லூரியில் இடம் பெறுகிறது.. இவை பெரும்பாலும் பொறியியல் மாணவர்களிடம் தமிழில் உயர்மட்ட IT இனை கொண்டு சேர்க்கும் முகமாக பொறியியல் பீட மாணவ நண்பர்களால் எழுதப்படுகிறது. பெரும்பாலும் இவை அறிமுகங்களாகவே இருக்கும்.. ஒவ்வொருவரையும் வழி காட்டி விடுவதே நோக்கம். ஏற்கனவே Matlab பற்றி அறிமுகம் பதிவிடப்பட்டது... தமிழில் இதுவரை Matlab பற்றி எப்பதிவும் இல்லை.

ஏனைய தமிழ் தொழிநுட்ப தளங்கள் போல நாளாந்த Tech News களை கணணிக்கல்லூரி விரும்புவது இல்லை.

இப்பதிவில் Computer Simulation பற்றி பார்ப்போம்..


Simulation

எல்லோரும் Truck Simulator Game விளையாடி இருப்பீர்கள். இப்படி பல Games உள்ளது. அதாவது, கணனியில், நீங்கள் வாகனம் ஓட்டுவது போன்ற மெய் நிகர் அனுபவத்தை தருவது...
ஆனால் இப்பதிவில் games பற்றி பார்க்க போவது இல்லை.

பொதுவாக Mechanical Engineering இல் Autocad  simulation உதவும்..  ஒரு காரை கற்பனையில் பௌதிக விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கி ஓடி பார்க்கலாம்.
Matlab இல் Electrical / Electronic Simulation சிறப்பானது. குறிப்பாக Matrix இல் ஆழமாக இதில் செய்முறைகளை ஆராய முடியும். Matlab என்பது இப்போதெல்லாம் தனி பாடமாக பல்கலைகழகங்களில் கற்பிக்க படுகிறது.

Simulation இன் அவசியம்

  1. பல சமயங்களில் தேவையான components கிடைப்பதில்லை.
  2. அனைவருக்கும் போதிய அளவு உபகரணங்கள் ஆய்வு கூடங்களில் இல்லை.
  3. தவறாக இணைக்கப்படும் போது உபகரணங்கள் Simulation இல் பழுதடைவதில்லை
  4. பௌதிக இடம் மிச்சப்படுத்தப்படும்.

Simulation இன் சிறப்புக்கள்

நம் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.  ஒரு Dual Core processor மூலம் ஒரு car / Motor / Amplifier இனை இயக்கி பார்க்க முடியும். 

நவீன Simulations softwares  ல் உண்மையான சூழலுக்கு இயைபான சூழலில் இயங்க வசதிகள் உண்டு. Eg: ஒரு A/C motor இயங்கும் போது ஏற்படும் வெப்ப விரிவு மாற்றங்களை ஏற்படுத்த முடிகின்றமை.

Simulation இற்கு உதவும் மென்பொருட்கள்

பொதுவாக
  1. Autodesk products
  2. Matlab
  3. National Instruments (Electronic products)
இதை விட பல Open source softwares கிடைக்கிறது.

வேறு வழிகள்:

Online இல் கூட இதை செய்ய பல தளங்கள் இலவசமாக உள்ளன. AutoDesk இன் இலவச தளமும் உள்ளது. தேவையனாவர்கள் Google இல் தேடி பாருங்கள்.

அங்கோர் வாட் உட்பட கம்போடியாவின் சிறப்பிடங்கள் Google Street View மூலம்

புதுமை என்றால் அது கணணிக்கல்லூரி தான்...  சில தினங்களுக்கு முன் கம்போடிய நாட்டின் பல சிறப்பிடங்களின் Street view தொகுப்பு Google இல் இணைக்கப்பட்டது. இதில் நாம் அறிந்த ஒரு இடம் அங்கோர் வாட்.

படிமம்:Angkor Wat.jpg

அங்கோர் வாட்

Angkor Wat என்பது,  கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மத கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாகும்.  இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது.  இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.

 Angkor Wat, Angkor Thom,  Banteay Srei, Ta Prohm சிறப்பு இடங்களை கணணிக்கல்லூரியின் HTML5  ஸ்ட்ரீட் view மூலம்  கீழே சுற்றிப் பாருங்கள். நீங்கள் High End Smart phone இலும் இப்பகுதியை கீழே சுற்றி காண முடியும்.
சமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி

நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சிகள் எந்த வாய்ப்பினையும் விட்டு வைக்கவில்லை. முதல் முறையாக, டிஜிட் டல் ஊடகங்களைச் சிறந்த முறையில் அதிகபட்சம் பயன்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வகையில் ரூ.500 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என மொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை, சமூக மற்றும் பயனுறை வலைத் தளங்களாக இயங்கும் Google, Facebook, Twitter ஆகியவை பங்கிட்டுக் கொள்ள இருக்கின்றன.ஏறத்தாழ 81.4 கோடி வாக்காளர்கள் தேர்தலில் தங்கள் வாக்கினைப் பயன்படுத்த இருக்கின்றனர். இவர்களில் 20 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இதில் 10 கோடி பேர் Facebook, Twitter போன்ற சமூக வலைத் தளங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த தேர்தலில் முதல் முறை வாக்களிக்கும் வயதை எட்டிய இளைஞர்கள் 10 கோடி பேர் உள்ளனர். இவர்கள், இளைஞர்களாக இருப்பதால், இணையப் பயன்பாட்டில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை இலக்காக வைத்தே, அரசியல் கட்சிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
தேர்தலுக்கான மொத்த விளம்பரச் செலவு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 400 கோடி முதல் ரூ.500 கோடி வரை  Digital ஊடகங்களில் செலவிடப்படும்.
சமூக வலைத் தளங்கள் தேர்தலில் என்ன பாதிப்பினை ஏற்படுத்தும், அதனை ஒரு கட்சி எப்படித் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியினர் சென்ற டில்லி மாநிலத் தேர்தலில் காட்டினர். அதனைப் பார்த்த பின்னரே, மற்ற கட்சியினரும் இதில் மிகவும் ஆர்வத்துடன் இறங்கியுள்ளனர்.அண்மையில் எடுத்த கணிப்பின்படி, 543 மக்களவைத் தொகுதிகளில், 160 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பினை, இத்தகைய இணைய தளங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரை உறுதி செய்திடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான், எப்படியும் வெற்றி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கும் பெரிய கட்சிகள், இணைய தளங்களில் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மாநில அளவில் இயங்கும் சிறிய கட்சிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. வாக்காளர்கள் மனதில், தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், அதற்கு சமூக இணைய தளங்கள் நிச்சயம் பெரிய அளவில் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும், வேட்பாளரும் தங்கள் எண்ணப்படியும், தங்களுக்குக் கிடைக்கும் ஆலோசனைப் படியும், தங்கள் Digital தடங்களைப் பதித்து வருகின்றனர். மொத்த செலவில், 5% முதல் 10% வரை இதற்கென செலவழிக்க ஒதுக்கி உள்ளனர்.

Youtube  தளம் இந்த வகையில் பெரும் பங்கு வகிக்கிறது. இது Audio மற்றும் Video கலந்து இருப்பதால், தங்கள் சாதனகளைக் காட்டுவதற்கும், தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கும், எதிர்காலத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை அறிவிப்பதற்கும், யு ட்யூப் வீடியோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சிலர், ஆன்லைன் வழியே, தங்களுக்கு நன்கொடைகளையும் பெறுகின்றனர். கட்சியில் சேருபவர்களிடம் உறுப்பினர் கட்டணத்தையும் Online வழியே வசூல் செய்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் நம் நாட்டினரிடம் நன்கொடை பெறுவதில் இந்த வழிகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. பல கட்சிகள், இதற்கெனவே Digital பிரச்சார Managers'ளை நியமனம் செய்துள்ளன.

நன்றி - தின மலர்

ControlC - Clip Board 'ல் பிரதிசெய்வதை சேமிக்க

நாம் Copy  செய்திடும் Text மற்றும் படங்கள் அனைத்தும் Clip board 'ல் தான் save செய்யப்படுகின்றன. அவ்வப்போது copy  செய்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகன்றுவிடுவோம். எப்போதாவது, நாம் எவற்றை எல்லாம் copy செய்து clip board 'க்குக் கொண்டு சென்றோம் என நீங்கள் எண்ணியதுண்டா? நேற்று copy  செய்தது இன்றைக்கும் வேண்டுமே என எண்ணி, அதனை எப்படி பெறுவது என்று தேடியதுண்டா? இதற்கெனவே, ControlC!  என்ற பெயரில் ஒரு Software application இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை install செய்துவிட்டால்நாம் clip board 'க்குக் கொண்டு சென்றதை எல்லாம் பெற்று பார்க்கலாம்.


இந்த Program, controlc.com என்ற முகவரியில் கிடைக்கிறது. இதனை install செய்தவுடன், இது நம்மிடம் கேட்கும் முதல் தேவை ஒரு password  தான். இதன் மூலம் நம் Data 'வினைச் சுருக்கி வைத்துக் கொண்டு பின்னர் கேட்கும் போது தரும்.
எனவே, ஏதேனும் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்து, அதனையே இந்த Program க்கு Password ஆக  அமைத்துவிடவும். பின்னர், இந்த program 'னைத் திறக்கவும். இது மாறா நிலையில் உங்கள் Computer 'ல் உள்ள, அதாவது நீங்கள் set செய்த browser 'ல் திறக்கப்படும். உடன், நீங்கள் set  செய்த password கேட்கப்படும். அதனைக் கொடுத்தவுடன், browser 'ல், நீங்கள் clip board 'க்கு அனுப்பிய data 'வினைக் காணலாம். நீங்கள் எதனையும் copy செய்திடவில்லை என்றால், காலியாக இடம் காட்டப்படும்.

இந்தப் பக்கத்தின் மேலாக உள்ள Advanced என்ற button 'னைக் click செய்தால், மற்ற setting பக்கத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு Advanced Search Settings, Settings, and Blacklist போன்ற tab களைப் பார்க்கலாம். Advanced Search Settings பகுதியில், நீங்கள் எந்த வகையில் தேடலை மேற்கொள்கிறீர்கள் என்பதனை வரையறை செய்திடலாம். தொடர்ந்து, சார்ந்த பல அமைப்புகளையும் உருவாக்கலாம். Admin Theme என்ற பிரிவில் கிடைக்கும் கீழ் விரி பட்டியல் பெட்டியில், பத்துவகையான கருத்துப் பொருட்கள், உங்கள் தேடலுக்கென கிடைக்கிறது. அத்துடன் உங்களுக்குக் காட்டப்படுபவை எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனையும் இங்கு விருப்பமாக அமைக்கலாம்.

Text, files மற்றும் படங்கள், clip board க்குச் சென்ற பின்னர், எத்தனை நாட்கள் வைக்கப்பட வேண்டும் என்பதனையும் set செய்திடலாம். மாறா நிலையில் இது இரு வார காலமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல விருப்பங்களையும் இதில் அமைக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் உடனே செல்ல தரவிறக்க முகவரி:


நன்றி : தினமலர்

Google Street View மூலம் அஜந்தா, எலிபண்டா குகைகள் உட்பட பல இந்திய இடங்களை சுற்றி பார்க்கலாம்

Ajanta Caves, Aurangabad Caves, Elephanta Caves,  The Residency Lucknow மற்றும்  Lord Cornwallis tomb ஆகிய இடங்களை இப்போது கூகிள் Street view மூலம் சுற்றி பார்க்க முடியும். இந்தியாவில் பல இடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பை இங்கே காணலாம். இவை அனைத்தும் இவ்வருட ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டு, சில நாட்களின் முன் வெளியிடப்பட்டன. எவ்வாறாயினும் Google இது தொடர்பாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்புக்களையும் விடவில்லை.. ஆனால் Tamilcc க்கு இவை அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்டது..

அஜந்தா குகைகள் என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107km தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12km தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன.


எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள Gharapuri தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் UNESCO உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது.
இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப்
போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

கீழே வழக்கம் போல கணணிக்கல்லூரியின் சிறப்பு HTML5 Street view இல் அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள்...