Home » » இலங்கையில் உதயமாகும் Paypal

முன்பு "Paypal இலங்கையில் அனுமதிக்கப்படவுள்ளது"  இல் கொஞ்சம் சொல்லி இருந்தேன். இன்றுவரை Paypal மூலம் இலங்கையில் உள்ள எவரும் பணத்தை பெற முடியாது என்பது தான் உண்மை. ஆனால் பணத்தை அனுப்ப முடியும். எவ்வாறாயினும் விரைவில் இவ் வசதியும் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.


சில வாரங்களாக இலங்கையின் பிரதான தனியார் வங்கிகள் அமெரிக்காவில் உள்ள Paypal தலைமையகத்துடன் கலந்துரையாடலில் Central Bank ஊடாக  ஈடுபட்டுள்ளன என  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்,  Nivard Cabraal  சில தினங்களுக்கு முன் ஒரு சந்திப்பில் சொல்லி இருந்தார். இலங்கையில் இதுவரை இருந்த தடை நீக்கப்பட்டதால் தனியார் வங்கிகள் தமது சேவையில் Paypal இனை இணைக்க மும்முரமாக உள்ளன.

இதன் மூலம் உள் நாட்டு வர்த்தகத்தை சர்வதேச ரீதிரில் திறந்து விட முடியும் எனவும், இவ்வருட இறுதிக்குள் இந்த சேவை அறிமுகம் ஆகும் எனவும் மேலும் ஆளுநர் தெரிவித்தார்.