முதலில் seach பகுதியில் mouse என்று தேடி கிடைக்கும் தெரிவில் முதலாவதை தெரிவு செய்யுங்கள்.
இப்பொது நாம் பார்க்க போவது இடம் வலம் கிளிக் தொடர்பான மாறுதல்கள்
இது பொதுவாக புதிதாக கணணி பழக விரும்பும் (இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள் ) அனைவருக்கும் தான் ஏற்றது. ஏனையோர் இதற்கு இசைவாக்கம் அடைந்து இருப்பீர்கள்.
இதை மேற்கொள்ள படத்தை பாருங்கள்.
அவ் இடத்தில் டிக் இடுவதன் மூலம் மாற்றி கொள்ளுங்கள்.
அடுத்து Windows 7 Aero cursors களை மாற்றும் முறை பற்றி பார்ப்போம். இதை மாற்றுவதன் மூலம் இடது பக்கம் திரும்பிய சுட்டி வடிவங்களை பெறலாம். மாற்றிய பின் சிறிது காலம் ஒவ்வாமையாக தோன்றினாலும் பின்பு சிறப்பாக இருக்கும்.
இதற்க்கு முதலில் இங்கு சென்று மௌஸ் fileலை தரவு இறக்குங்கள். அடுத்து முதல் திறந்த செட்டிங் பகுதிக்கு சென்று pointer பகுதியை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து ஒவ்வொரு சுட்டியாக தெரிவு செய்து browse பகுதி ஊடாக தரவிரக்கிய பகுதியில் உள்ள புதிய சுட்டிகளை பிரதி வையுங்கள்.
நீங்கள் தரவிரக்கிய பகுதியில் பின்வரும் ஆறு புதிய சுட்டிகள் பிரதி வைக்க கூடியதாக இருக்கும்,
- Normal Select: aero_arrow_left.cur
- Help Select: aero_helpsel_left.cur
- Working in Background: aero_working_left.ani
- Busy: aero_busy_left.cur
- Handwriting: aero_pen_left.cur
- Link Select: aero_link_left.cur
இப்போது apply செய்து வெளியேறுங்கள். உங்கள் இடது கை நேய மௌஸ் சுட்டி தயார்.
எவ்வாறாயினும் பல ஏரோ தீம்கள் வலது கை பாவனையாளர்களுக்கு மட்டுமே வடிவமைக்க பட்டுள்ளன. தொடர்ந்து புதிய விடயங்களை எதிர் பாருங்கள் .
- இப்பதிவு இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்.
- அருகில் உள்ள கருத்துக்கணிப்பில் உண்மையான தகவல்களுடன் பங்கு பெற முயற்சி செய்யுங்கள்
- உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களை வலுவூட்டும்.
இனி கணணி உங்கள் வசம்!