Home » » Gmail வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை பெற

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும். பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மெயிலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.


சில மெயில்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில காப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட காப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் "மிக முக்கியம்' எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான். ஆனால், இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.
Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள் கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல் கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல.


படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும். 

  1. முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும்.
  2. பின்னர், இதில் Tools > Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும். இங்கு “gmail meter” என்பதைத் தேடிக் கண்டறியவும்.
  3. அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். 
  4. இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.
  5. இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். 
  6. இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  7. இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.  

இங்கே சில இடை நிலைகள் காணப்படுகின்றன :                                                                             






நான் இதனைப் பயன்படுத்தத் தொடங்கு கையில் மாத வாரியாக ரிப்போர்ட் தேர்ந் தெடுத்துக் கேட்டேன். உடன் சில நிமிடங் களில், சார்ட், கிராபிக்ஸ் மூலம் பல தகவல் கள் காட்டப்பட்டன. எத்தனை இமெயில்கள் வந்தன; அவற்றில் எத்தனை மெயில் கள், என்னால், முக்கியமானவை எனக் குறியிடப்பட்டன. மெயில் அனுப்பிய நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடியவை எத்தனை; நானாக எத்தனை மெயில்களை அனுப்பினேன் போன்ற பலவகையான தகவல்கள் கிடைத்தன. நம்மை நாமே தணிக்கை செய்து கொள்ளும் இந்த அனுபவம் நமக்கு ஒரு படிப்பினை யாகவும் உள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.



வலது புறத்தில் மேலே உள்ள கருத்துக்கணிப்பில் இது வரை பங்கு பெறா விடின் விரும்பினால் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம்..


இனி இணையம் உங்கள் வசம்!




==================================================================================================
இறுதியாக அண்மையில் வெளியான Adobe Dreamweaver CS6பதிப்பை நாம் தரவிறக்கி பயன்படுத்தும் இடை நிலை.... அனைத்தும் பிரம்மதமாக உள்ளது.



A Very Happy Birthday! "Mark  Zuckerberg" -Foundered the Social Networking Website Facebook  2012.05.14