அதன் சூழல் எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக சறுக்கி வரும் மாடிப் படிகள்,விரும்பிய உணவையோ அல்லது பானத்தையோ அருந்தும் நிலையிலுள்ள உணவுக் கூடங்கள்,விளையாடுவதற்கான பிரத்தியேக இடங்கள், சொந்த விவாகாரங்கள் பற்றி தொலைபேசியில் பேசுவதற்கு பிரத்தியேகமான இடங்கள்,ஓய்வு அறைகள், என்பன ஒரு அலுவலகம் என்ற எண்ணத்தையே ஊழியர்களிடம் இல்லாமல் செய்து விடுகின்றது.கூகுளின் பிரமாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறான வசதிகள் நிறைந்த கூகிள் அலுவலகத்திற்கு போக அனைவருக்கும் ஆசை. எனினும் இங்கு பணியாற்றுவது முடவன் தேன்கொம்புக்கு ஆசை படுவது போன்றது. சரி சுற்றி பார்க்கலாம் என்றால் அமெரிக்காவிற்கு போக முடியுமா? கூகிள் street view மூலம் கூகிள் இதை சாத்தியம் ஆக்கி உள்ளது. இங்கே நீங்களும் சுற்றி பாருங்கள்.
அடுத்து உலகிலே அதி சிறந்த திருமண மண்டபமான Plam House சை இங்கு எதிர் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்களே எங்கள் உலகம்