Instagram என்பது நமது புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் சேர்த்து நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான மொபைல் மென்பொருள் ஆகும். பிரபலமான இந்த மென்பொருளை பேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 500 கோடி 5000 கோடி) கொடுத்து வாங்கியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபோன் (iphone), ஐபேட்(ipad) மற்றும் ஐபோட் டச்(ipod touch) ஆகியவற்றுக்கு மட்டுமே இருந்த இன்ஸ்டாக்ராம் மென்பொருள் சமீபத்தில் ஆன்ட்ராய்ட் போன்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த மென்பொருளில் ஐபோனில் மட்டுமே 30 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.
ஆனால் என்ன இப்போது facebook கணக்கு வைத்து இருப்பவர்களால் மாத்திரமே இதை பயன்படுத்தலாம். அதிலும் பலரிடம் இம் மென்பொருள் போய் சேர பல நாட்கள் எடுக்கும். facebook கணக்கு இல்லாத பலரிடம் இம் மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று ஆசை. இதை மென்பொருள் என்று சொல்வதை விட Web Application என்று சொல்வதே பொருத்தமானது.
எனினும் நாம் இந்த குறையை Pixlr-o-matic உடன் இணைந்து நிவர்த்தி செய்துள்ளோம். இப்போது நீங்களும் Instagram பயன்படுத்தும் அனுபவத்தை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.
இங்கே நீங்கள் உங்கள் வெப் காம் மூலம் அல்லது கணனியில் உள்ள புகைப்படத்தை தரவு ஏற்றி நீங்களும் முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு பொத்தானும் ஒவ்வொரு விதமான வரைகலைகளை தருகிறது. இறுதியில் உங்கள் வடிவமைக்கப்பட்ட புகைப்படத்தை தரவிறக்கி கொள்ளுங்கள்.
இங்கு வந்த நீங்கள்
- உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
- கருத்துக்கணிப்பில் பங்கு பெறலாம். (Top Right Conner of this Site)
- எங்களுடன் இணைத்து பதிவுகளை உடனுக்குடன் பெறலாம்.
நீங்களே எங்கள் உலகம்!