
காரணம் # 1: நீங்கள் அடிமையாகி விட்டீர்கள்
நீங்கள் ஒரு நல்ல மாணவனாக இருக்கலாம். அல்லது நல்ல காதலியாக நல்ல தந்தையாக, நல்ல அம்மாவாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்த Facebook உங்களின் இந்த உறவுநிலைகளில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை விட்டு உங்களால் வெளி வர முடிகிறதா ?
காரணம் # 2 பேஸ்புக் வைரஸ்களால் நிறைந்து விட்டது

நீங்கள் இலவசமாக facebookகை பயன்படுத்துகிறீர்கள். அவர்கள் உங்கள் தரவுகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். உங்கள் ஸ்பாம் மெயில்கள் இதற்க்கு சிறந்த உதாரணம். உங்கள் விருப்பு வெறுப்புக்கள் அறியப்பட்டு உங்களை நிறுவனங்கள் அறிய வழி வகை செய்து கொடுக்கிறார்கள் facebook நிர்வாகம்.
காரணம் # 4 போலி கணக்கு நிறைந்துவிட்டன - நீங்கள் அதில் ஒருவராக இருக்கலாம்
நீங்கள் கூட உங்கள் தகவல்களை போலியானதாக வழங்கி இருக்கலாம். நீங்களும் உங்கள் நிறைவேறா எண்ணங்களை வெளிப்படுத்த இதை பயன் படுத்தலாம்.அண்மையில் ஒரு சம்பவம். என் ஆண் நண்பர் ஒருவரின் facebook திரையை பார்த்தேன். அதில் 500க்கு மேல் நண்பர்கள். அதில் அதிகளவு பெண் நண்பர்கள். ஒரே ஆச்சரியம். அவர்கள் இவருடன் உறவாடிய சொல்லாடல்கள் அவரை நல்லவர் போல ஒரு மாயையை உண்டாக்கி இருந்தன. இச்சந்தேகத்தை அவரிடமே கேட்டேன். அப்போது தான் தெரிந்தது. அவரே பல போலி பெண் கணக்குகளை உருவாக்கி இருக்கிறார். அதன் பின்பு அந்த கணக்குகளில் இருந்து தனது பக்கங்களில் நல்ல பல கருத்துக்களை எழுதி இருக்கிறார். இதை பார்த்த ஏனையோரும் இவர் நல்லவர் என்று இணைத்து இருக்கிறார்கள். இது தான் றால் போட்டு சுறா பிடிக்கிறது என்பது.
இவ்வாறான் கணக்கு பற்றி சிறு புள்ளி விபரம்.:
காரணம் # 5 பாதுகாப்பற்ற Applications

காரணம் # 6 Facebook உடன் நேரடி தொடர்பு கொள்ள வழிகள் இல்லை.

காரணம் # 7 உங்கள் தனியுரிமை உங்கள் எதிரியாக முடியும்

நீங்கள் உங்கள் கணக்கை அழித்த பின்பு தினமும் பல மணி நேரம் மிகுதியாகும்.இது உங்கள் விலை மதிப்பு அற்ற நேரம். இதை பயனுள்ள தளங்களுடனும் அல்லது உங்கள் குடும்பத்துடனும் செலவிடுங்கள்.
தினமும் இணைய வெளியில் உங்கள் நேரத்தை வீணாக போக்க பல தளங்கள் தூண்டுகின்றன. எனினும் ஒரு நாள் என்பது 24 மணித்தியாலங்களை மட்டும் கொண்டது. இது அதிகரிப்பதோ குறைவதோ இல்லை.
நீங்கள் இதில் ஒரு காரணத்தையாவது நிராகரிக்க முடிகிறதா? அப்படி எனில் உங்கள் மோசமான தருணங்களை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்.
இப்போதே உங்கள் கணக்கை நீக்க தயாராகுங்கள். உங்கள் நண்பர்களையும் இதற்கு பரிந்துரையுங்கள்.
நீங்களே எங்கள் உலகம்
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி