ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உட னே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்த னை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரி ந்து மனிதன் இறந்து போக நேரிடும். பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடு வதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இத ய ஆபரேஷன்.
இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற் கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.
இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்ய லாம்.
பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக் குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல் லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மை யைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப் படுகிறது.
இதை வாசித்து விளங்குவதை விட நீங்களே செய்து பார்க்கலாம். எத்தனை பேருக்கு இரத்தத்தை கண்டால் பயம்? இதனால் தான் நாம் இந்த வாய்ப்பை கணனியில் இணையம் மூலம் ஏற்படுத்தி தந்து உள்ளோம். நீங்களும் முயற்சிக்கலாம். அடிப்படையில் இருந்து இறுதி வரை அனைத்தையும் விளையாட்டாக அல்லாமல் விஷயத்தோடு சொல்கிறார்கள்.
அவர்களே அறிவுறுத்தல்களை தருகிறார்கள். தவறு நடந்தால் என்ன செய்யலாம் என்பதை நகைச்சுவையாக சொல்கிறார்கள். முதலில் இடது புறத்தில் உங்கள் தகுதியை தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் நேரம் ஆரம்பமாகும். அதன் பின் விரைவாக செயற்படுங்கள்.
நீங்களும் இப்போதே கீழே உள்ள பகுதியில் உங்கள் அறுவை சிகிச்சையை ஆரம்பியுங்கள்.
- நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
- கருத்துக்கணிப்பில் பங்கு பெறலாம். (Top Right Conner of this Site)
- எங்களுடன் இணைத்து பதிவுகளை உடனுக்குடன் பெறலாம்.
நீங்களே எங்கள் உலகம்!