Home » , » அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுற்றுலா:

நாம் இன்று அமெரிக்காவில் பிரபலமான ஒரு இடத்தை பார்க்க போகிறோம். இங்கு நேரடியாக சென்று பார்க்கவிடினும் ஒரு தடவை கணனியில் சுற்றி பார்க்கலாமே. இவ் இடம் அமெரிக்க வரலாற்றில் மிக மிக முக்கியமானது. முதலில் நாம் இவ் இடத்தின் சிறப்புக்களை பார்ப்போம்.




டைம்ஸ் சதுக்கம்


டைம்ஸ் சதுக்கம் (Times square) என்பது அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் மன்ஹாட்டன் பெருநகரில் பகுதியில் உள்ள ஒரு வணிக மற்றும் பல்நோக்கு சதுக்கம் ஆகும். இது நியூயார்க் நகரின் பிரபலமான ''ப்ரோட்வே'' சாலையும் ஏழாவது அவென்யூவும் சந்திக்கும் சந்திப்பில் உள்ளது. இந்த சதுக்கம் 1904 ஆம் ஆண்டு வரை லாங்கேக்கர் சதுக்கம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நியூயார்க் மாநகரம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வரக்கூடிய இடமாக இந்த டைம்ஸ் சதுக்கம் இருக்கிறது. பல வண்ண மின்னொளிகளால் பிரகாசிக்கும் இந்த இடத்தில பல முக்கிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன. மன்ஹாட்டன் பெருநகரபகுதியில் சுற்றலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக இந்த சதுக்கம் உள்ளது.

கலை மற்றும் வணிகங்களின் சந்திப்பாக உள்ள இந்த சதுக்கத்தில் எப்போதும் மின்னிக்கொண்டிருக்கும் வண்ண விளக்குகளும் ஜம்போட்ரான்களில் ஓடிகொண்டிருக்கும் செய்திவரிகள் இவற்றுடன், ட்டி கே ட்டி எஸ் என அழைக்கப்படும் தள்ளுபடி டிக்கெட் விற்பனை மையம் கோகோ கோலா பானத்தின் விளம்பரபலகை பிரகாசிக்கும் நியான் விளக்குகள்போன்றவை கவனத்தை ஈர்க்கும் காட்சிகள்.

டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரபலமான கட்டிடங்கள்  

  • ஒன் டைம் ஸ்கொயர்
  • பிரில் பில்டிங்
  • தாமஸ் ராய்ட்டர் பில்டிங்
  • டைம்ஸ் ஸ்கொயர் டவர்
  • பேங்க் ஆப் அமெரிக்க டவர்
  • தி ஒரியன்
  • 5 டைம்ஸ் ஸ்கொயர்
  • 3 டைம்ஸ் ஸ்கொயர்

இங்குள்ள முக்கிய அலுவலகங்கள்


  • எம்டிவி நெட்வொர்க்ஸ்
  • தி நியூயார்க் டைம்ஸ் கம்பெனி
  • ஓ'மெல்வெனி & மையர்ஸ்
  • தாமஸ் ராய்ட்டர் (செய்தி நிறுவனம்)

இனி என்ன நாம் சுற்றி பார்க்க போகலாமே ..........





  • நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
  • கருத்துக்கணிப்பில் பங்கு பெறலாம். (Top Right Conner of this Site)
  • எங்களுடன் இணைத்து பதிவுகளை உடனுக்குடன் பெறலாம்.

  • நீங்களே எங்கள் உலகம்!