Home » » வலைதளத்தில் பாதுகாப்பான அதிக வசதிகள் கொண்ட Comment பகுதியை இணையுங்கள்

பெரும்பாலும் இத்தளத்திற்கு வரும் நண்பர்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் பிளாக்கர்கள். இந்த பிளாக்கர்கள் பற்றி கூறும் போது அவர்கள் உடைய கமெண்ட் பற்றி கூற வேண்டும். எமது தளத்தில் பதியப்படும் கமெண்ட் இல் 60% ஆனவை உதவி கோரும் நோக்கிலும், 35% தங்கள் தளத்திற்கு இலவச விளம்பரம் போடுபவர்களாகவும் 5% வாழ்த்து சொல்பவர்களகவும் இருக்கிறார்கள். அண்மை காலத்தில் இந்த கமெண்ட் முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில் இந்து மத வாதிகளும் இஸ்லாமிய வெறியர்களும் பால் வேறு பாடு இன்றி மோதிக்கொள்கிறார்கள். ஒருவருக்கோருவர் எச்சரிக்கை விடுவது வசை பாடுவது இவர்களின் தளத்தின் இருப்பை உறுதி படுத்துகிறது.


கூகிள் இவ்வாறான கமெண்ட் களை கட்டுப்படுத்தும் வசதியை அளித்துள்ளது. முழுவதுமாக கட்டுப்படுத்தல் அல்லது பதிவு செய்தவர்களை மாத்திரம் அனுமதிப்பது. இவ் வசதி போதுமானதாக இல்லை. அத்துடன் உண்மையான "பதிபவர் நேய கருத்துரை இடுபவர்"களை இது பாதிக்கும். இவ்வாறு விளம்பரம் போடுபவர்கையும் குறிப்பிட்டவர்களையும் தடுக்கவும் இங்கு வசதி இல்லை. அத்துடன் கருத்துரை இடுபவர்களை கண்காணிக்கும் வசதி இல்லாதது பெறும் குறை.
இவ்வாறானவர்களை கட்டுப்படுத்த ஒரு சிலர் தமது வலை தளத்தில் கூகிள் தவிர்ந்த வேறு கமெண்ட் பகுதிகளை இணைத்துள்ளனர். இவ் வசதி பலரை சென்று அடையவில்லை. அத்துடன் இது தொடர்பான பதிவுகள் வேறு எங்கும் தமிழில் இல்லை. கமெண்ட் என்று தேடினால் வர்ணமயமான கமெண்ட் பெட்டிகளை இணைக்கும் முறைகள் தமிழில் கிடைக்கின்றன. எனவே இது தொடர்பான ஒரு விளக்கத்தை இங்கு தர எண்ணுகிறோம்.

எமது தளத்தில் உள்ள கமெண்ட் பகுதியை பாருங்கள். இங்கு நீங்கள் விரும்பிய அடையாளத்துடன் உங்களை அடையாள படுத்தி கருத்துரை இடலாம். உங்கள் மின்னஞ்சலை கொடுத்து reply பெறலாம். கூகுளில் கூகிள் accountக்கு மட்டுமே இவ் வசதி உள்ளது. அடுத்து  கமெண்ட் பண்ணுபவர்களை கண்காணித்தல். இதுக்கு பலரும் பயன்படுத்துவது கூகிள் அனலிடிக்ஸ். இது மறு நாளே வருகை விபரத்தை தரும். அதிலும் யார் வந்து கமெண்ட் பண்ணினார்கள் என்பதை கண்டு பிடிப்பது சிரமமானது. ஆனால் எம்மால் ஒவ்வொரு கமெண்ட்டர்களையும் கண்காணிக்க முடிகிறது.

அடுத்து விளம்பரம் போடுபவர்கள். கூகிள் லிங்க் உள்ள கோம்மேன்ட்களை கட்டுபடுத்த வசதி அளிக்க வில்லை. நாம் குறிப்பிடும் இச் சேவையில் இது உள்ளது.

DISQUSஇவ்வாறான கமெண்ட் வசதிகளை தரும் இலவச சேவை தான் Disqus  ஆகும் .இச்சேவையை பெற disqus.com   செல்லுங்கள். இங்கு சென்று உங்களை பதிந்த பின்பு install பகுதியை தெரிவு செய்தால் பிளாக்கர் உட்பட பிரபலமான வலைபூக்களுக்கான இன்ஸ்டால் buttion கிடைக்கும், இன்ஸ்டால் செய்வது மிக இலகுவானது. கூகிள் உங்களிடம் permission கோரும் போது அனுமத்தித்தால் சரி. கூகிள் கமெண்ட் பாக்ஸ் நீக்கப்பட்டு disqus கமெண்ட் பாக்ஸ் நிறுவப்படும். எவ்விதமான கோடிங் பகுதிகளையும் நீங்கள் கையாள தேவையில்லை.

முந்தைய கமெண்ட்ஸ் அழிந்து விடும் என்று நினைகிறீர்களா? ஆம், மறைந்து விடும். இதை disqusஇல் பெற tools .> import பகுதியில் சென்றால் சரி. குறுகிய நேரத்தில் அனைத்து பழைய comments புதிய பாக்ஸ்இல் தோன்றும். கமெண்ட் பாக்ஸ்சை கூட நீங்கள் வடிவமைக்கலாம்.Combination Recent Comments,Popular Threads,Top Commenters என பல பாக்ஸ்கள் கிடைக்கின்றன.

இதை விட கம்மேண்டேர்ஸ் tracking வசதி சிறப்பானது. உங்கள் கமெண்ட்ஸ் உடனடியாக ட்விட்டர் facebook போன்ற தளங்களில் உடனடியாக தெரிய செய்ய வசதிள்ளது. கருத்துரை இடுபவர்கள் தமது படங்களை மட்டும் இன்றி files களை கூட தரவு ஏற்ற வசதி உண்டு.

இதில் உள்ள இன்னும் சிறப்புக்கள்:

 • Automatic Closing
 • Pre-moderation (From guest (anonymous) commenters or Comments containing links)
 • Image Uploads
 • Flagged Comments
 • Restricted Words (மிக உபயோகமானது)
 • Blacklists and Whitelists
 • Automatic blocking for  
  • Spamming
  • Violating a site's commenting policy
  • Being clearly unrelated
  • Attacking other commenters personally
 • Analytic
நீங்களும் இவ் வசதியை பெற்ற பின் இவ்வளவு நாட்களாக கூகிள் default comment box பயன்படுத்தியதற்கு வேதனை படுவீர்கள்.
நீங்களும் இன்றே பயன் படுத்தி பாருங்கள் இங்கே விஜயம் செய்யுங்கள்.


 1. அதற்கு முதல் இங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
 2. வலது புறம் உள்ள கருத்துக்கணிப்பில் நீங்களும் பங்கு பெறுங்கள்.


இன்றைய ஆலோசனை:
வலை பூவில் "animated popular post" , "நீங்கள் இங்கே" இவ்வாறான பல விட்ஜெட்களை நீங்கள் இணைத்தால் அது பார்வையாளர்களை கவரும் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. உண்மையில் இவற்றில் பயன்படும் ஜாவா ஸ்கிரிப்ட் தளம் வந்து அடையும் நேரத்தை தாமதப்படுத்தும்.இது பார்வையாலர்களை எரிச்சல் படுத்தும். நீங்களும் tools.pingdom.com/ftp/ தளத்தில் சென்று உங்கள் தள வேகத்தையும் தாமதப்படுத்தும் பகுதிகளையும் அறியுங்கள்.

இனி வலைப்பூ உங்கள் வசம் 
!!!!

கீழே Comment பற்றி சிறந்த கற்பனை