சிறுவர்களுக்கான வீடியோ இணையதளம்

பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி மிகச் சிறந்த பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பது.குழந்தைகள் கணணியில் வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கென பிரத்தியேக தளமாகவும், சிறுவர்கள் குழந்தைகள் பார்த்து மகிழ்வதற்காக அவர்களுக்கு ஏற்றால் போல பல வீடியோ காட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது Kideos.com.
இந்த தளத்தில் சிறுவர்களின் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப இங்கு வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் கேலிச்சித்திர மற்றும் சிறுவர்கள் குழந்தைகளின் சுவையான வீடியோ காட்சிகள், சிறுவர்களுக்கான திரைப்படங்களில் இருந்து கத்தரிக்கப்பட்ட காட்சிகள் என பல ஏராளமான வீடியோ தொகுப்புக்கள் இங்கு உள்ளன.
இங்குள்ள வீடியோ காட்சிகளை பெரியவர்கள் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது குழந்தைகளின் கள்ளங்கபடமில்ல செயற்பாடுகள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். அத்துடன் நீங்கள் ரசிக்கும் வீடியோ காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பகிரவும் முடியும்.
இணையதள முகவரி
வீடியோக்களை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் மாற்றுவதற்கு

நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது.வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும். அந்த வகையில் இந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும்.
இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான்.
பலவிதமான நுணுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது. ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது.
வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.
தரவிறக்க சுட்டி


புதுமைகள் பல நிறைந்த புத்தக சேவை தளம்

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான நேரம் தான் இல்லை என்று கூறுபவர்களுக்கு என்றே பிரத்யேகமான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் ஆங்கில சொல்லான புக்ஸில் ‘கே’ விற்கு பதிலாக கியூ என்னும் எழுத்து இடம் பெறும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. பெயரில் மட்டும் அல்ல செயல்பாட்டிலும் இதே புதுமை இருக்கிறது.
படிப்பதை இன்னும் செயல் திறனோடு மேற்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த தளம் வாசிப்பதன் மூலம் தேவைப்படும் அறிவை சுலபமாகவும், இலவசமாகவும் பெறுங்கள் என்கிறது.
புத்தகத்தில் உள்ளவற்றை சுலபமாக தெரிந்து கொள்வது என்பது சரி. ஆனால் இலவசமாக தெரிந்து கொள்வது என்றால் என்ன பொருள் என்று குழப்பம் ஏற்படலாம்.
இலவசமாக படிப்பது என்றால் படிக்காமலேயே படிப்பது என்று வைத்து கொள்ளுங்களேன். படிக்காமல் படிப்பது எப்படி என்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டால் முழு புத்தகத்தையும் படிக்காமல் அதன் சாரம்சத்தை மட்டும் சில வரிகளில் தெரிந்து கொள்வது என்று பொருள்.
புத்தகங்களின் சாரம்சம் அல்லது அதன் முக்கிய பகுதியை சுருக்கமாக தருவதுண்டு அல்லவா, அதே போல இந்த சேவை புனை கதை அல்லாத எந்த புத்தகத்தையும் முக்கிய வரிகளாக சுருக்கி தந்துவிடுகிறது.அதாவது மேற்கோள்கள் போல அளிக்கிறது.
புத்தகத்தை முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் பரவயில்லை, அதன் சாரம்சத்தை தெரிந்து கொள்ள முடிந்தால் நல்லது என்று கருதுபவர்களுக்கு புத்தகத்தின் உள்ளடக்க சுருக்கம் மிகவும் பயனுள்ளது. ஆனால் இதையும் கூட படிக்க முடியாமல் திணறுபவர்கள் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் எதையுமே ரத்தின சுருக்கமாக சில வரிகளில் சொல்லும் போது எல்லோரையும் கவரவே செய்யும் தானே.
அதை தான் இந்த தளம் வாசிப்பதை புதுமையானதகாவும் புத்திசாலித்தனமானதாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. அதற்கேற்ப புத்தகங்களில் உள்ளவற்றை கிரகித்து கொள்வதற்கான புதுமையான வழியை உருவாக்கியிருப்பதகாவும் பெருமைப்பட்டு கொள்கிறது.
புனை கதை அல்லாத புத்தகங்களின் உள்ளடக்கத்தை முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கும் வழியையும் இந்த தளம் வழங்குகிறது.
இப்படி பகிரப்பட்ட புத்தகங்களின் முக்கிய வரிகளை முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தக பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் உள்ள புத்தகத்தை கிளிக் செய்தால் அந்த புத்தகத்திற்கான தனி பக்கம் வருகிறது.
அதில் அந்த புத்தகத்தின் முக்கிய வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிகளை படித்தாலே புத்தகத்தின் ஆதார அம்சம் என்னவென்று புரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு சில வரிகளில் ஒரு புத்தகத்தை படித்து விடுவது என்பது சிறந்த விடயம் தானே.
புத்தக பிரியர்கள் தாங்கள் படித்த புத்தககங்களில் இருந்தும் முக்கிய வரிகளை இப்படி பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே இடம்பெற்றுள்ள புத்தகத்தை படித்தவர்கள் தாங்கள் முக்கியமாக கருதும் வரிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புத்தகம் படிப்பதென்பது ஒரு தவம்.அந்த தவத்தின் மூலம் பெறக்கூடிய அறிவையும் புரிதலையும் ஒரு சில வரிகளில் பெற முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் பக்கம் பக்கமாக படிக்க முடியாதவர்களுக்கு புத்தகம் படிப்பதன் ஆர்வத்தையும் அதன் பலனையும் தரக்கூடியது என்னும் விதத்தில் இந்த சேவையை வரவேற்கலாம்.
புத்தகங்களை பார்த்தாலே ஓடுபவர்களில் பலரை புத்த்க உலகின் பக்கம் இந்த சேவை இழுத்து வரக்கூடும்.  மேலும் எதையுமே சில வரிகளில் தெரிந்து கொள்ள துடிக்கும் டிவிட்டர் தலைமுறைக்கு இந்த சேவை மிகவும் தேவை என்றும் சொல்லலாம்.
அதோடு இங்கு சமர்பிக்கப்படும் பட்டியலில் இருந்து புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். அதன் சாரம்ச வரிகளை கொண்டு அந்த புத்தகத்தை படிக்கலாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தீவிர புத்தக புழுக்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது தான் துவக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த தளத்தில் உள்ள புத்தக பட்டியல் பெரிதாக இல்லை. ஆனால் அமைப்பும் உள்ளடக்கமும் கவரக்கூடியதாகவே இருக்கின்றன. பலரும் பயன்படுத்த துவங்கினால் இந்த தளம் சுவாரஸ்யம் மிகுந்ததாக உருவாகலாம்.
இணையதள முகவரி
 

கூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமைப்பான கூகிள் பிளஸில் உள்ளவர்களை தேடிப்பிடிப்பதற்கு ஒரு தேடு பொறி உதவி செய்கிறது.இந்த இணையத்தளம் மூலம் கூகுள் பிளஸில் இணைந்திருப்போரை Name, Profession, Location, Followers, Following, Gender, Relationship போன்ற தரவுகளின் அடிப்படையில் தேடிப்பிடித்துவிடலாம் என்கின்றனர்.
இந்த தளத்தின் மூலம் நிச்சயமாக உலகின் சுவாரசியமான நபர்களின் கூகுள் பிளஸ் சுயவிவரத்தை கண்டுபிடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
இணையதள முகவரிவிண்டோஸ் சிஸ்டத்தில் கிளாசிக் ஸ்டார்ட் மெனுவை பெறுவதற்கு
[ புதன்கிழமை, 20 யூலை 2011, 04:29.52 மு.ப GMT ]
விண்டோஸ் 7 ஓப்ரேட்டிங் சிஸ்டம் முன்பு இருந்த விஸ்டோஸ் விஸ்டா, எக்ஸ்பியினை விட பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.இதில் இருக்கும் ஸ்டார்ட் மெனுகூட சற்று மேம்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மெனுவினை கணணிக்கு புதியவர்களால் எளிதில் பயன்படுத்த முடியாது.
அவர்களால் வேகமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பணியாற்றவும் முடியாது. இந்த குறைபாட்டினை தீர்க்க ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருள் மூலமாக கிளாசிக் மெனுவினை எளிதில் பெற முடியும். சாதாரணமாக உள்ள விண்டோஸ் 7  மெனுவை பெற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் உதவியுடன் பதிவிறக்கம் செய்யவும். பின் இந்த ஜிப் கோப்பை அன்ஜிப் செய்து கொள்ளவும்.
இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். ஆகையால் இந்த மென்பொருளை ஒப்பன் செய்தாலே போதுமானது. ஆனால் கணணியை மறுதொடக்கம் செய்கையில் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.
தரவிறக்க சுட்டி
 

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்குஎல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.
இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஓன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம்.
இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
1. உங்கள் கணணி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.
2. உங்கள் கணணியில் Flash Player நிறுவச் செய்திருக்க வேண்டும்.
3. அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
4. அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
5. அடுத்து உங்கள் கணணி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. உங்கள் கணணி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.
7. அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
8. ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும். நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல. கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.

நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம்
ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் மக்கள்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி கூகுள் டாக்ஸ்(Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில் புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது.
மைக்ரோசாப்ட் பதிலுக்கு இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில் ஆபீஸ் 365, டெஸ்க்டொப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.
சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில்நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது.
இதன் மூலம் இணையம் வழியாக மைக்ரோசாப்ட் வழங்கும் நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. கோப்புக்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம்.
நிறுவனம் ஒன்றின் வேலையை அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல்படுத்தலாம். இதனால் இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டொலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப கட்டணம் அதிகரிக்கும்.
ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.
ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க உங்கள் கணணியில் எம்.எஸ். ஆபீஸ்(ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம்.
இணைய வழி தயாரித்த கோப்புக்களை கணணியில் ஓப்லைனில் இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு கணணியில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கணணியில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.
நிறுவனங்களுக்காக மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள் கவலையை விடுத்து ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன.
இதில் கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று கூகுள் டாக்ஸ் பக்கத்தில் மஞ்சள் நிற டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.
ஆபீஸ் 365 இயக்கத்தில் இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஓடியோ - வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.
ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில் மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள் ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக உங்கள் நிறுவன சர்வரில் கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி எத்தனை மின்னஞ்சல் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொன்றுக்கும் 25 ஜி.பி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும் அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத்தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.

அனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்கு

 
   
 


எண்ணற்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல மென்பொருட்களும் பல இணையதளங்களும் உதவுகின்றன.இருப்பினும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உதவுகின்றன.
TUBGET தளம் அவ்வாறில்லாமல் YOUTUBE, MEGA VIDEO, VIMEO, META CAFE என 27க்கும் மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய உதவுவதுடன் வீடியோக்களை விரும்பிய வடிவிலும், விரும்பிய பகுதியினையும் தெரிவு செய்து தரவிறக்கம் செய்ய உதவுகிறது.
நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய URL ஐ கொப்பி செய்து இந்த தளத்தில் உள்ள ENTER THE VIDEO URL என்பதன் கீழ் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து START என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்யும் வீடியோ TUBGET தளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும். பதிவிறக்கம் முடிந்ததும் தோன்றும் புதிய பக்கத்தில் நீங்கள் விரும்பிய வடிவத்தினையும், தேவையான பகுதியையும் தெரிவு செய்து உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யலாம்.
இணையதள முகவரி

விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்
விண்டோஸ் சிஸ்டத்தில் டாஸ்க்பாரை பயன்படுத்தி பல மாற்றங்களை செய்யலாம்.டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Taskbar என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
1. Autohide the taskbar: இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால் டாஸ்க்பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது.
தவறுதலாக நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க்பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க்பாரை லாக் செய்துவிட்டால் வராது.
2. Use small icons: உங்கள் டெஸ்க்டொப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால் டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மொனிட்டருக்குக் கீழாக இருக்கும்.
டாஸ்க்பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால் சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல டாஸ்க்பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்து விட்டால் உடனே டாஸ்க்பார் மறைந்துவிடும்.
உங்கள் டாஸ்க்பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.
விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் டாஸ்க்பாரினை மொனிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க்பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
முகப்பு

நினைவூட்டும் இணையதளம்
இணைய நினைவூட்டல் சேவைகளில் முன்னணி தளம் என்றோ நட்சத்திர அந்தஸ்து மிக்க தளம் என்றோ குறிப்பிடக்கூடியவையாக‌ எந்த தளமும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் 2ரிமைன்ட்ரஸ் தளத்தை விரிவான நினைவூட்டல் சேவை என வர்ணிக்கலாம். காரணம் இந்த தளம் பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதில் துவங்கி செய்ய வேண்டியவை, திட்டமிட்டவை எம எல்லாவறையும் நினைவில் வைத்திருக்க உதவுகிற‌து.
வண்ணமயமான பின்னணியில் அமைந்திருக்கும் இந்த தளம் தலைவாசல் இலையில் சாப்பாடு போடுவது போல நினைவூட்டல் வசதியை பலவித அம்சங்களோடு வழங்குகிறது. அடிப்படையில் பிறந்தநாளுக்கான நினைவூட்டல் சேவை என்ற‌ போதிலும் இதன் இதர அம்சங்களையும் பயன்பாட்டையும் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம்.
இதற்கு மாறாக எளிமையான நினவூட்டல் சேவையை விரும்புகிற‌வர்கள் எம் எஸ் ஜி மீ.அட், பார் லேட்டர் போன்ற‌ சேவைகளை பயன்படுத்தலாம்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது போல இந்த தளங்கள் மிக எளிமையாக நினைவூட்டல் சேவையை வழங்குகின்றன. மின்னஞ்சல் மூலம் குறித்த நேரத்தில் நினைவூட்டும் பணியை இவை மேற்கொள்கின்ற‌ன.
எந்த விஷயத்தை மறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த விவரத்தை இந்த தளத்தில் குறிப்பிட்டு அதனை நினவூட்ட வேண்டிய நாள் மற்றும் நேரத்தையும் தெரிவித்து விட வேண்டும். பின்னர் நாம் குறிப்பிட்ட நாளில் மின்னஞ்சல் மூலம் நினவூட்டல் அனுப்பி வைக்கப்ப‌டுகிறது.
எம் எஸ் ஜி மீ.அட் இணையதளத்தை பொருத்தவரை முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிற‌கு நினைவூட்டல் வாசகத்தையும் நினைவூட்டல் தினத்தையும் குறிப்பிட்டால் போதுமானது.
பார் லேட்டர் தளம் இன்னும் கூட எளிமையானது. பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் வடிவமைப்பும் மின்னஞ்சல் போலவே இருப்பதால் கொஞ்சம் சுவையானது.
மின்னஞ்சல் போல உள்ள பகுதியில் நினைவூட்டல் தலைப்பையும் அதன் கீழ் நினைவூட்டல் விவரத்தையும் டைப் செய்து விட்டு மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் நாம் குறிப்பிடும் நேரத்தில் அந்த மின்னஞ்சல் நம் இன்பாக்ஸ் தேடி வரும்.
நட்ஜ்மெயில் இணையதளமும் இதே போன்ற‌ சேவையை வழங்குகிறது. நட்ஜ் மெயிலை எளிமையானது என்று சொல்வதற்கில்லை. ஆனால் மின்னஞ்சல் மூலம் நினைவூட்டலை பெறலாம் என்பதோடு நமக்கு வந்த மின்னஞ்சலை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களிலும் செயல்படகூடியது. மீண்டும் மீண்டும் கூட நினைவூட்டலை பெறலாம். கூகுள் நாட்காட்டியுடன் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளன. கட்டண‌ சேவையும் உள்ளது.
இணையதள முகவரி

நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்குஇணையம் உபயோகிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் பயனை அனுபவிக்கின்றனர். இணைய நிறுவனங்களில் கூகுள் தான் எப்பொழுதும் முதல் இடம்.கூகுள் பல வசதிகளை நமக்கு வழங்கி வருகிறது. நம்முடைய செய்திகளை உடனுக்குடன் பகிர Google Buzz, நம்முடைய புகைப்படங்களை பகிர Picasa , தற்பொழுது புதிய வசதியாக இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர Google Plus என இதன் சேவைகள் நீள்கிறது.
நாம் இந்த தளங்களில் தகவல்களை பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த தளங்களில் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்.
இதற்கு முதலில் இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அங்கு உள்ள அனைத்து சேவைகளில் இருந்தும் தகவல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் அங்கு உள்ள CREATE ARCHIVE என்பதை கொடுக்கவும் அல்லது குறிப்பிட்ட ஒரு தளத்தில் பகிர்ந்த தகவல்களை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் Choose Services என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CREATE ARCHIVE கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி தரவிறக்க வசதி வரும். அந்த தரவிறக்க பட்டனுக்கு அருகில் உங்கள் கோப்பு மொத்த அளவு, எண்ணிக்கை ஆகியவை வந்திருக்கும். அடுத்து நீங்கள் Download என்ற பட்டனை அழுத்தவும்.
Download பட்டனை அழுத்தியவுடன் உறுதிபடுத்த உங்களின் பயனாளர் பெயர், கடவுச் சொல் கேட்கும். அதை சரியாக கொடுத்தால் போதும். அடுத்த வினாடி உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.
இணையதள முகவரி

உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு
இணையத்தில் எவ்வளவு தான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும். உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
இத்தகைய ஆபாச தளங்களை உங்கள் கணணியில் தடுக்கலாம். மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும்.
இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
படத்தில் காட்டப்பட்ட இலக்கத்தினை படத்தில் உள்ளது போல் பதிவு செய்து OK பட்டன் கிளிக் செய்யவும்.
இப்போது ஆபாச தளங்களை திறந்தால் கீழே உள்ளது போல் தோன்றும்.
இந்த செயல் முறை விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும். விண்டோஸ் ஏனைய பதிப்புகள், மாக் லினக்ஸ் மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றில் 
ஆபாச தளங்களை தடுக்க கீழே உள்ள தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினை கொடுத்து தளத்தின் உள்ளே சென்று பெறலாம். இணையதள முகவரி
கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.
இரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.
சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை. பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.
யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.
தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்

  இரு வாரங்களுக்கு முன்னர் ஹார்ட்வேர் சார்ந்த சில டிப்ஸ் கொடுத்ததற்குப் பல வாசகர்கள் தொடர்ந்து அவற்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். தங்கள் பிரச்னைகள் பலவற்றையும் தொலைபேசியில் கூறி, அவற்றிற்கான தீர்வினைக் கேட்டுள்ளனர். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இங்கே விளக்கம் தரப்படுகிறது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு, உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால், அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.
1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி. எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
3. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
4. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லா மல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
5. Non System Disk Error: சி.டி. டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க் கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டி ஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப் படாமல் இருக்கலாம்.
6. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் - குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.
7. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.
8. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப் பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பே

உங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (Norton Partitio Magic 8.0 )


உங்கள் ஹார்ட் டிஸ்க் ஜ பல பகுதிகளாக பிரிப்பதற்கு (Norton Partitio Magic 8.0 )
Runs from USB-stick without installation. It is Full version Symantec Norton PartitionMagic 8.0 lets you easily organize your hard drive by creating, resizing, copying, and merging disk partitions. Separate your operating system, applications, documents, music, photos, games, and backup files to reduce the risk of data loss if your system crashes. You can also use multiple partitions to run different operating systems safely and efficiently.Features:

* Divides hard drive into two or more partitions
* Runs multiple operating systems on the same PC
* BootMagic makes it easy to switch between operating systems
* Copy, move, resize, split, or merge partitions
* Guides you through the partitioning process
* Easy to find, copy and paste files in both and Linux ® partitions
* Create and modify partitions up to 300GB*
* Supports USB 2.0, USB 1.1, and external drives**
* Supports and converts partitions among FAT, FAT32, NTFS, Ext2, and Ext3 file systems
* Enlarge an NTFS partition without restarting computer
* Resizes NTFS system clusters to the most effective size

இணைய வேகம் சரிதானா?பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின்http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

சிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Configகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்படுகையிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையிலும், நமக்குக் கிடைக்கும் அறிவுரை எம்.எஸ். கான்பிக் மூலம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே. அது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆக அதிக நேரம் ஆகின்றதா? ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் இயங்கத் தொடங்குவதைக் காண நீங்கள் வெகுநேரம் மானிட்டர் திரையை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதா? காத்திருத்தல் என்பது மனத்தளவில் ஒரு சித்திரவதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் கூறியது அப்போது தான் எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக நமக்குக் கிடைத்திருப்பதுதான் எம்.எஸ். கான்பிக் (MSConfig) என்னும் செயல்பாடு. இந்த பயன்பாட்டில் அடங்கியுள்ள செயல்பாடுகளை இங்கு பார்க்கலாம்.MSConfig என்பது Microsoft System Configuration Utility ன்பதன் சுருக்கமாகும். இதுவே விண்டோஸ் விஸ்டாவில் System Configurationஎன்று அழைக்கப் படுகிறது. இது ஒரு டூல்; சிஸ்டத்தைச் சரிப்படுத்த விண்டோ நமக்கு தரும் சாதனம். விண்டோஸ் 98, எக்ஸ்பி, விஸ்டா ஆகிய சிஸ்டங்களில் இது இணைந்தே கிடைக்கிறது. விண்டோஸ் 2000 சிஸ்டம் வைத்திருப்பவர்கள், இந்த டூலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இப்போது இந்த சிஸ்டத்தினை சிலர் இன்னும் பயன்படுத்தி வருவதால் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.
எம்.எஸ். கான்பிக் விண்டோவினைத் திறக்க, ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்த வேண்டும். உடனே ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று கிடைக்கும்.
ஜெனரல் டேப் General): இது முதலில் காணப்படும் டேப். இதில் மூன்று Normal Startup, Diagnostic Startup மற்றும் Selective Startup – பிரிவுகள் உண்டு. நாம் எதிர்பார்த்தபடி சிஸ்டம் இயங்குகையில் நார்மல் ஸ்டார்ட் அப்பினைப் பயன்படுத்துகிறோம். டயக்னாஸ்டிக் ஸ்டார்ட் அப் பிரிவினை நாம் எதிர்பாராத வகையில் சிஸ்டம் இயங்குகையில், அதனை ஆய்வு செய்திடப் பயன்படுத்துகிறோம். நாம் தேர்ந்தெடுத்த சில புரோகிராம்களின் இயக்கத்துடன், சிஸ்டம் இயக்கத்தினைத் தொடங்கிட செலக்டிவ் ஸ்டார்ட் அப்பிரிவைப் பயன்படுத்துகிறோம்.
பூட் (Boot):இந்த டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நாம் கம்ப்யூட்டரில் அப்போது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டுகிறது. அத்துடன் அந்த சிஸ்டங்களை, நாம் விரும்பும் வகையில் இணைந்து செயல்பட வைத்திட வழி தருகிறது. Safe Boot, Boot Log, Time out Delay ஆகியவற்றை இங்கு மாற்றி அமைக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாதவர்கள், இந்த பிரிவினைக் கவனமாகக் கையாள வேண்டும். எதனையும் தேவையின்றி மாற்றுவதனைத் தவிர்க்க வேண்டும்.
சர்வீசஸ் (Services) : நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இங்கு பட்டியலிடப்படும். மேலும் அப்போது அவை இயங்குகிறதா, நிறுத்தப்பட்டுள்ளதா (Running, Stopped) என்றும் காட்டப்படும். எந்த சர்வீஸ் பிரிவினையும் தேர்ந்தெடுத்து, அந்த இயக்கத்தினை தொடங்கவும், முடக்கவும் (Enable or Disable) செய்திடலாம். “Hide all Microsoft services” என்பதன் முன் டிக் அடையாளம் அமைத்துவிட்டால், மற்றவர்கள் இவற்றில் தேவையில்லாமல் மாற்றங்கள் செய்வதனைத் தடுத்துவிடலாம். மேலும் தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கி நம் மெமரியில் இடம் பிடிப்பதனை, இந்த பட்டியலில் அதன் இயக்கத்தினை முடக்கி வைத்து தவிர்க்கலாம்.
ஸ்டார்ட் அப் (Startup) : இந்த டேப்பில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கத் தொடங்கும் பட்டியல் கிடைக்கும். சிஸ்டம் ட்ரேயில் இருக்கும் புரோகிராம்களும், சிஸ்டம் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களும் இந்த பட்டியலில் இருக்கும். பொதுவாகப் பலரின் கம்ப்யூட்டர்களில் போன்ற புரோகிராம்களை ஸ்டார்ட் அப் புரோகிராம்களாகப் பார்க்கலாம். இவற்றில் தேவை இல்லாததை நீக்கினால், கம்ப்யூட்டர் பூட் ஆவது விரைவில் நடக்கும்.
டூல்ஸ் (Tools) இயக்கத்தினுள்ளாக பல்வேறு டூல்ஸ்களை (எ.கா. System Information, Programs, System Restore போன்றவை) இயக்கு வதற்கான தளம் இது. சரி, அடுத்து எப்படி எம்.எஸ். கான்பிக் இயக்கி, சிஸ்டம் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம். இதனை ஓரளவிற்கு சிஸ்டம் இயங்கும் தன்மையினை அறிந்தவர்கள் மட்டுமே செய்திட வேண்டும். (நமக்கா தெரியாது! என்று முடிவு செய்து பின் சிக்கலில் சிக்கி, கம்ப்யூட்டர் மலர் மீது பழி போட வேண்டாம்.)
முதலில் ஸ்டார்ட் அப் தொடங்கும்போதே தேவையான சர்வீசஸ் எவை எவை என தெரிந்து கொள்ளவும். அதே போல ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் என்ன என்ன வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடவும். இதனை ஓரளவு எண்ணிக்கை குறைவாகவே வைத்துக் கொள்ளவும். அடிப்படையில் மிகவும் முக்கியத் தேவைகளையும், கட்டாயம் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளவும். அடுத்து ரன் மெனு சென்று எம்.எஸ்.கான்பிக் டைப் செய்து பெறவும். சர்வீசஸ் டேப் கிளிக் செய்து தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்களை முடக்கி (Disable) வைக்கவும். “Hide all Microsoft Services” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ள தனை உறுதி செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் அப் டேப் கிளிக் செய்து தேவையற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும் என்ற செய்தி கிடைத்தவுடன், அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடி, விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் அப் நேரம் கணிசமாகக் குறைந்திடும். எந்த அளவிற்கு புரோகிராம்களை நீக்கி, குறைந்த எண்ணிக்கையில் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பிக்கும் வகையில் வைத்துள்ளீர்களோ, அந்த அளவிற்கு நேரம் குறையும். மீண்டும் ஏதேனும் புரோகிராம், ஸ்டார்ட் அப் செய்திடும்போதே தேவை என்றால், எம்.எஸ். கான்பிக் சென்று, ஸ்டார்ட் அப் போல்டரில் அந்த புரோகிராம்களின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு?மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.
புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.
விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.
அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.
நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.
2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.
3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.
4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.
5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.
7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.
8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.
இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.
மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.
விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.

டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்

உங்கள் டெஸ்க்டொப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை உலகோடு பகிர்ந்து கொண்டால் நன்றாகத் தான் இருக்கும்.டெஸ்க்டொப்.லே சேவை இதை தான் செய்கிறது. இந்த சேவையின் மூலம் டெஸ்க்டொப் பிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கிறீன்சேவர் சித்திரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதில் உறுப்பினராவது மிகவும் சுலபம். உறுப்பினரானவுடன் ஸ்கிறீன்சேவர் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் அதனை பார்த்து கருத்து தெரிவிக்கலாம். பிரதானமாக மேக் கணணிகளுக்கான சேவை என்றாலும் மடிக்கணணிகள் டெஸ்க்டொப் என எல்லாவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தங்களுக்கான சுருக்கமான அறிமுகத்தையும் உருவாக்கி கொள்ளலாம். ஸ்கிறீன்சேவை தோற்றங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிய ஸ்கிறீன்சேவர் தோற்றங்களையும் சுலபமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஸ்கிறீன்சேவர் சித்திரங்கள் அழகின் அடையாளம் மட்டும் அல்ல. ஒருவிதத்தில் அவை அதனை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்க கூடியவை. எனவே இந்த சேவை மூலம் புதுமையான ஸ்கிறீன்சேவரை மட்டும் அல்ல அவற்றின் பின்னே உள்ள நபர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். 
இணையதள முகவரி


பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களை பிகாசாவில் பதிவேற்றம் செய்வதற்கு
பேஸ்புக் தளமானது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளை மிஞ்சும் அளவிற்கு இதில் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.பிகாசா தளம் தற்போது கூகுள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த தளம் மூலம் கூகுள் கணக்குடையவர்கள் இந்த தளத்தில் பதிவேற்றி கொள்ள முடியும்.
கூகுள் கணக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றப்படும். நம்முடைய புகைப்படங்களை பெரும்பாலும் பேஸ்புக் தளத்திலேயே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு முகநூலில் பகிர்ந்து கொண்ட உங்களுடைய புகைப்படங்களை வேண்டுமெனில் பிகாசாவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கில் உள்ள புகைப்படங்களை பிகாசா தளத்தில் பதிவேற்ற குரோம் நீட்சி ஒன்று உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது உங்களுடைய பேஸ்புக் கணக்கு மற்றும் கூகுள் கணக்கினை குரோம் உலவியில் திறந்து வைத்துக் கொள்ளவும். தற்போது Move2Picasa என்னும் ஐகானை அழுத்தவும்.
தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய பேஸ்புக் கணக்கில் உள்ள புகைப்படங்கள் வரிசைப்படுத்தப்படும். வேண்டிய புகைப்படத்தினை தேர்வு செய்துவிட்டு பின் Upload என்னும் பொத்தானை அழுத்தவும்.
இணைய வேகத்தை பொறுத்து உங்களுடைய புகைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பதிவேற்றப்படும். பின் சில மணி நேரங்களில் உங்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும். தற்போது உங்களுடைய பிகாசா கணக்கில் பேஸ்புக் கணக்கில் நீங்கள் குறிப்பிட்ட புகைப்படங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும்.
தரவிறக்க சுட்டி
 

ஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்கஓடியோ சீடியிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க பல்வேறு மென்பொருள் உதவி செய்கின்றன.அந்த வகையில் ஓடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் Mp3 to Ringtone Gold.
இந்த மென்பொருளை இலவசமாக நாம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஓடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க இலவசமாக ஒரு மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
இப்போது ட்ரைவில் சீடியினை உள்ளிடவும். தற்போது பாடல்களை இந்த மென்பொருள் வாயிலாக காண முடியும். இப்போது வேண்டிய பாடல்களை தேர்வு செய்து கொண்டு பாடல்கள் சேமிக்கபட வேண்டிய இடத்தை குறிப்பிடவும். தற்போது வெளியீட்டு போர்மெட்டையும் தேர்வு செய்யவும். தற்போது Convert என்னும் பொத்தானை அழுத்தவும்.
சில மணி நேரங்களில் பாடல்கள் மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் ஓடியோ சீடிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
தரவிறக்க சுட்டி

யூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு

கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வருகின்றது. கூகுளின் தேடியந்திரம், ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும் பிளாக்கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங்களை கூகுள் தற்பொழுது செய்துள்ளது.அடுத்து கூகுளின் வீடியோ தளமான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறையில் தான் இப்பொழுது விட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுதல்கள் தேவைபட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய தோற்றத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் விடப்படும். யூடியுபின் இந்த புதிய தோற்றத்தின் திட்டத்திற்கு Cosmic Panda என பெயரிட்டுள்ளது.
இந்த புதிய தோற்றத்தை பெற இந்த லிங்கை Youtube New Look கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள்.
அந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே உள்ள Try it Out என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் யூடியுப் தளம் புதிய தோற்றத்துடன் மாறிவிடும்.
இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகளும் கூகுள் புகுத்தியுள்ளது. புதிய வகை கருப்பு நிறத்தினால் ஆனா நீளமான வீடியோ பிளேயரை இதில் அறிமுகபடுத்தி உள்ளனர்.
உங்களின் Playlist கண்டறிய மிக சுலபமாக வடிவமைத்துள்ளது.  நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவை நிறுத்தாமல் எந்த அளவிலும் (Video Size) மாற்றி பார்த்து கொள்ளலாம்.
வீடியோக்களுக்கு கருத்துரைகள் கொடுத்தால் அவர்களின் ப்ரோபைல் படங்கள் தெரிகிறது. Related Videos பெரிய அளவில் காட்டுகிறது.
மேலும் பல உபயோகமுள்ள வசதிகளை யூடியுப் புகுத்தியுள்ளது. இந்த புதிய தோற்றம் தேவையில்லை என நினைத்தால் Cosmic Panda இந்த தளத்திற்கு மறுபடியும் சென்று அங்கு உள்ள Older Version என்பதில் கிளிக் செய்தால் மறுபடியும் பழைய தோற்றத்தை பெறலாம்.

System Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்குகணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன.
இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper.
இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.
பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.
உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல.
கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

Dual SIM Mobiles

இரண்டு சிம் இயக்க மொபைல் போன்கள் இன்றைய குறைந்தபட்ச நிலை என்பதைக் காட்டிலும், அதுவே கட்டாயத் தேவையாகவும் மாறி விட்டது. முதலில் தொடக்க நிலை நிறுவனங்கள் மட்டுமே அதிகமான எண்ணிக்கையில் இந்த வகை போன்களை வெளியிட்டு வந்தன. காலப் போக்கில் பெரிய வளர்ந்த நிறுவனங்களும், இந்த விற்பனைச் சந்தையில் தங்கள் இடம் குறைந்துவிடக் கூடாது என்ற இலக்குடன் இத்தகைய போன்களை வெளியிடத் தொடங்கி வெற்றியும் பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது மார்க்கட்டில் அதிகம் விற்பனையாகும், பெரிய நிறுவனப் போன்கள் இரண்டை இங்கு பார்க்கலாம்.

எல்.ஜி. தரும் ஏ165:
பட்ஜெட் விலையில் இரண்டு சிம் இயக்கத்தில், எல்.ஜி. நிறுவனத்தின் மொபைல் போன் ஒன்று தற்போது விற்பனையில் உள்ளது. எல்.ஜி. ஏ165 என அழைக்கப்படும் இந்த பார் டைப் மொபைல் போன் 110 x 47.5 x 14.1 மிமீ என்ற அளவில் 81 கிராம் எடையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 14.5 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த ஜி.எஸ்.எம். போனின் நினைவகம் 3.9 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போட்டோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட 0.3 எம்.பி. திறனுடன் கூடிய விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன. எம்.பி.3 பிளேயர், எப்.எம். ரேடியோ, புளுடூத், அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன. சென்னை கடைகளில் 2 ஜிபி மெமரி கார்டுடன் ரூ.2,700க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா சி05:
இரண்டு சிம் இயக்க மொபைல் போனையே மக்கள் நாடுவதால், நோக்கியா நிறுவனமும் இந்த பிரிவில், பட்ஜெட் விலையில் சில போன்களைத் தந்துள்ளது. அவ்வகையில் நோக்கியா சி05 மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
74 கிராம் எடையில் 108 x 45 x 14.7 மிமீ அளவில், ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 5.75 மணி நேரம் பேசும் திறனுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் திரை 1.8 அங்குல அகலத்தில் உள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதியுடன் 0.3 எம்.பி. திறனுடன் கூடிய விஜிஏ கேமரா இயங்குகிறது. இதன் உள் நினைவகம் 64 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வகை செய்திகள் அனுப்பிப் பெற முடியும். ஸ்டீரியோ ரேடியோ, எம்.பி.3 பிளேயர், புளுடூத் ஆகியவற்றுடன் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.2,692 ஆகும்.

OFFICE 2010 SP1

சென்ற ஜூன் மாதம், தன் ஆபீஸ் 2010 அறிமுகமாகி ஓராண்டினை, மைக்ரோசாப்ட் கொண்டாடி யது. இந்த கூட்டுத்தொகுப்பிற்கான சர்வீஸ் பேக் ஒன்றினை அதே நேரத்தில் வெளியிட்டுள்ளது. 32 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=9D2E1282-8B69-418B-AFA0-9F61239EC8BE என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
64 பிட் சிஸ்டத்திற்கான தொகுப்பினைப் பெற http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=E9F3C2D0C3214910A4CEB2F294B42D65 என்ற முகவரிக்குச் செல்லவும்.
இந்த சர்வீஸ் பேக் புரோகிராம் மூலமாக சில முக்கிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதுவரை வெளியான அப்டேட் அனைத்தும் மொத்தமாக இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. நிலையாக நின்று இயங்கும் திறன், பாதுகாப்பு, இயக்க திறன் ஆகியவை கூட்டப்பட்டுள்ளன. அனைத்து ஆபீஸ் புரோகிராம்களும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் புரோகிராமான ஆபீஸ் 365 உடன் இணைந்து செயல்படத் தேவையான மாற்றங்கள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கின்றன. அத்துடன் விண்டோஸ் லைவ் ட்ரைவ் மற்றும் ஒன் நோட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றத் தேவையான மாற்றங்கள் இதில் தரப்பட்டுள்ளன.
ஆபீஸ் தொகுப்பின் ஒவ்வொரு புரோகிராமிலும் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள் குறித்து இங்கே சுருக்கமாகக் காணலாம்.
1. எக்ஸெல் 2010: முந்தைய பதிப்பு களில் உருவாக்கப்பட்டுள்ள ஒர்க் புக்குகளைக் கையாளும்போது பார்மட் மற்றும் பிற கட்டமைப்புகளை, அவற்றிற் குப் பாதகமின்றிக் கையாளுவதற்குத் தேவையான கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பானிஷ், டச், டர்க்கிஷ் போன்ற சில ஐரோப்பிய மொழிகளை, இதில் கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. பவர்பாய்ண்ட் 2010: இத்தொகுப் பில் உள்ள Use Presenter View அதன் மாறா நிலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. முதல் மானிட்டரில் பிரசன்டேஷன் தொகுப்பில் உள்ள நோட்ஸ்களும், துணை மானிட்டரில் பிரசன்டேஷன் ஸ்லைடுகளும் காட்டப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
3. வேர்ட் 2010: இத்தொகுப்பில் Display Map பதிந்து காட்டப்படுகையில், அது சரியாக இப்போது காட்டப்படுகிறது. பாராகிராப் கட்டமைப்பினைச் சரி செய்கையில், ஒரு பாராவின் இன்டென்ட் திருத்தங்களின் போது, இன்னொரு பாராவின் இன்டென்ட் முன்பு மாற்றப் பட்டது. இந்த குறை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.
4. அவுட்லுக் 2010: இந்த தொகுப்பும் ஆபீஸ் 365 தொகுப்புடன் இணைக்கப் படுகிறது. இதனையே மெயில்கள் அனுப்ப, மாறா நிலைத் தொகுப்பாக செட் செய்யப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
5. ஒன் நோட் 2010: விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவில் உள்ள ஒன் நோட் நோட்புக்குகளுடன், ஒன் நோட்புக் 2010 சரியாக ஒருங்கிணைந்து, இணக்கமாகச் செயல்படக் கூடிய வகையில் எஸ்.பி.1 தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. தேடல் முடிவுகளில் உள்ளாக, தேடப்படும் தகவல் ஹைலைட் செய்யப்படுவது இதன் சிறப்பாகும்.
6. அக்செஸ் 2010: அப்ளிகேஷன் பார்ட் காலரியில், சமுதாய தளங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைக்கக் கூடிய வசதியினை சர்வீஸ் பேக் 1 தருகிறது.எக்ஸெல் ஒர்க் புக்கிற்கு ஒரு அக்செஸ் பைலை எக்ஸ்போர்ட் செய்கை யில் ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப் பட்டுள்ளது.
மேலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் ஆபீஸ் 2010 ஒரிஜினல் தொகுப்பினைப் பயன்படுத்து பவராக இருந்தால் மட்டுமே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து, இணைக்க முடியும். உங்கள் ஆபீஸ் 2010 தொகுப்பு கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்புடன் உங்களுக்கு இந்த சர்வீஸ் பேக் 1 மூலம் உதவும்.

கம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்

கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது. மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், அதனைத் தீர்ப்பதற்கு அதற்குரிய டெக்னீஷியனை நாடாமல் நாமே ஓரளவில் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். இதற்குக் காரணம் பெரும்பாலான பிரச்னைகள், நாமே தீர்த்துக் கொள்ளும் அளவிலேயே இருக்கும். எனவே நம்மிடம் கம்ப்யூட்டரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம்கள் எப்போதும் இருப்பது நல்லது. இவற்றை ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்துக் கொண்டால், நமக்கும் நம் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். அத்தகைய புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புரோகிராம்கள் அனைத்தும், ஒரு பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் புரோகிராம்களே.
1. சூப்பர் ஆண்ட்டி ஸ்பைவேர் போர்ட்டபிள் ஸ்கேனர் (Super Anti Spyware Portable Scanner): உங்கள் பிளாஷ் ட்ரைவில் இது கட்டாயம் இடம் பெற வேண்டும். அத்துடன் இதன் அப்டேட் பதிப்புக்கு அடிக்கடி இதனை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அடிக்கடி இதற்கான அப்டேட் பைல் வெளியிடப்படுகிறது. வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்பில்லாத கம்ப்யூட்டர் ஒன்றில் டவுண்லோட் செய்து, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றி வைத்துப் பயன்படுத்தலாம். பிரச்னைக்குள்ளான கம்ப்யூட்டரை சேப் மோடில் (safe mode) இயக்கிப் பின்னர் இதனைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைக் காப்பாற்றலாம். இந்த புரோகிராமை http://www .superantispyware.com/portablescanner.html என்ற முகவரியிலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
2. ஹைஜாக் திஸ் (Hijack this): இது ஒரு ஸ்கேனர் அல்ல. போர்ட்டபிள் விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு அலசும் டூல். பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுக்கும். அந்த ரிப்போர்ட்டிலிருந்து, கம்ப்யூட்டரைப் பாதிக்கும் வகையில் மால்வேர் இருந்தால் அறிந்து கொள்ளலாம். பின்னர் தெரிந்து கொண்ட மால்வேரை எப்படிக் கையாள்வது என்று அறிய, http://hjtdata.trendmicro.com /hjt/analyzethis/index.php என்ற முகவரி சென்று தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. ஏ.வி.ஜி. ரெஸ்க்யூ சி.டி. (AVG Rescue CD): விண்டோஸ் இயக்கத்தில் மால்வேர் மற்றும் வைரஸ் அறியும் ஸ்கேனர் புரோகிராமை இயக்க முடியவில்லையா? இந்த புரோகிராம் பயன்படும். இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும். சி.டி.யில் வைத்து இயக்கவும், ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கவும் தனித்தனியே இந்த பைல் தரப்படுகிறது. பெற்று பயன்படுத்தலாம். பெற்றுக் கொள்ள http://www.avg.com/usen/avgrescuecddownload.tplmcr8 என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.
மால்வேர் அல்லது வைரஸ் பாதிப்பு மட்டுமே பிரச்னையாகாது. மேலும் பலவகை பிரச்னைகள், பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படும். பைல்கள் அழிக்கப்பட்டு கிடைக்காத நிலை ஏற்படலாம். ரெஜிஸ்ட்ரியில் தேவையற்ற குறியீடுகள் குவிந்து பிரச்னை ஏற்படுத்தலாம். சாப்ட்வேர் ஒன்றை நீக்குகையில், அனைத்து பைல்களும் அழியாமல் இருக்கலாம். இவற்றிற்கான சில போர்ட்டபிள் புரோகிராம்களை வைத்து இருப்பதுவும் நமக்கு முதலுதவி பெட்டி போல பயன்படும். அதற்கான புரோகிராம்கள் இதோ:
1.ரெகுவா போர்ட்டபிள் (Recuva Portable): அழிக்கப்பட்ட ஒரு பைலை மீண்டும் பெற நமக்குக் கிடைக்கும் புரோகிராம்களில், மிகச் சிறந்த புரோகிராம் இதுவாகும். பிரிபார்ம் நிறுவனம் இதனைத் தயாரித்து அளிக்கிறது. இதுவும் இலவசமே. இதனைப் பெற http://www.piriform.com/recuva/features/portableversion என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. சிகிளீனர் போர்ட்டபிள் (CCleaner Portable): பிரிபார்ம் நிறுவனம் தரும் இலவச புரோகிராம்களில் மிகவும் பிரபலமான, பயனுள்ள புரோகிராம் இதுதான். கம்ப்யூட்டரில் தங்கியுள்ள வேண்டத்தகாத பைல்கள் அனைத்தையும் நீக்கிக் கம்ப்யூட்டரைச் சுத்தப்படுத்தும் புரோகிராம் இது. ரெஜிஸ்ட்ரியையும் இது சுத்தப்படுத்தும். (இந்த வேலைக்கு மிக கவனம் தேவை). புரோகிராம்களை இதன் மூலம் முழுமையாக நீக்கலாம். எதற்கும் அடுத்த புரோகிராம் குறித்தும் அறிந்து கொள்ளவும். போர்ட்டபிள் சிகிளீனர் புரோகிராமினை இலவசமாகப் பெற http://ccleanerportable.en.softonic.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. ரெவோ அன்இன்ஸ்டாலர் போர்ட்டபிள் (Revo Uninstaller Portable): விண்டோஸ் புரோகிராம் ஒவ்வொன்றும், அதனைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும் அன் இன்ஸ்டாலர் புரோகிராமுடன் இணைத்தே தரப்படுகிறது. விண்டோஸ் இயக்கமும் தன்னிடத்தே ‘Programs and Features’ மற்றும் ‘Add or Remove Programs’ போன்ற புரோகிராம்களை இந்த வேலைக்குப் பயன்படுத்தும் வகையில் கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய புரோகிராம்கள், பல பைல்களைக் குப்பையாகக் கம்ப்யூட்டரி லேயே தங்க விடுகின்றன. ஒரு சாப்ட்வேர் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்க வேண்டுமானால், ரெவோ அன் இன்ஸ்டாலர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். ரெவோ இந்த வகையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. http://www.revouninstaller. com/revo_uninstaller_ free_download.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனைப் பெறலாம்.
4. எச்.டி. ட்யூன் (HD Tune): இது தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு போர்ட்டபிள் புரோகிராம் அல்ல. ஆனால் இதனை விண்டோஸ் இயக்கத்தில் இன்ஸ்டால் செய்து, அப்படியே அதன் போல்டரை, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றிப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஹார்ட் டிஸ்க், அதன் பைல் விபரங்கள் குறித்த பல்வேறு தகவல்களைத் தந்து, சிக்கல்களைத் தீர்க்க உதவிடும். http://www.hdtune.com/download. html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
மேற்கண்ட புரோகிராம்களை, ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்திருப்பது நமக்கு பாதுகாப்பு. இவை எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்பது, நண்பர்கள் மத்தியில் ஒரு ஸ்டேட்டஸை அளித்திடும்.


நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலை நமக்குத் தருகிறது. எந்த புரோகிராம் குறித்து சந்தேகம் நமக்கு எழுகிறதோ, அதன் மீது கிளிக் செய்தால், அது பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. வேண்டாதவற்றை தொடங்க விடாமல் முடக்கி வைக்கவும் நமக்கு வசதி செய்து தருகிறது.
சில புரோகிராம்களை, கம்ப்யூட்டர் பூட் ஆகிச் சில நிமிடங்கள் கழித்துத் தொடங்கும்படி அமைத்திடலாம். இதனால், கம்ப்யூட்டரை வேகமாக பூட் செய்திடச் செய்து, நமக்கு உடனே தேவையான புரோகிராம்களை மட்டும் நம்மால் இயக்க முடியும்.
மறைவாக இயங்கும் புரோகிராம் களையும் கண்காணிக்க முடியும். குக்கி புரோகிராம்களை வடிகட்டலாம்; அவை எதற்காகக் கம்ப்யூட்டரில் பதியப்பட்டன என்று அறியலாம்.
மொத்தத்தில் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த புரோகிராம் நமக்குத் தேவையான ஒன்றாகும். இதனைப் பெற http://www.winpatrol.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
rundll32.exeவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. அடிக்கடி இந்த பைல் குறித்து மட்டும் ஏன் பிழைச் செய்திகள் கிடைக்கின்றன என்று பல வாசகர்கள் நமக்கு கடிதங்கள் மூலம் கேட்டுள்ளனர்.
இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.
rundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம். ராம் மெமரியில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.
கம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும். Adjust Screen Revolution
நம் வேலை அனைத்தும் கம்ப்யூட்டர் வழி ஆன பின்னர், நாளெல்லாம் நாம் காண்பது மானிட்டர் திரையைத் தான். அதில் தெரியும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் சரியாக நமக்குக் காட்டப்படாவிட்டால், நம் பார்வைத் திறனுக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.
திரையில் தெரியும் எழுத்துக்கள் சரியாகக் காட்டப்படுவதற்கு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு வழியைத் தருகிறது. இதில் உள்ள ClearType Text Tuner என்ற டூலைப் பயன்படுத்துவதன் மூலம், டெக்ஸ்ட் அனைத்தையும் நாம் துல்லிய மாகப் பார்க்கலாம்.
இந்த டூலைப் பயன்படுத்துவது, கண் டாக்டர் ஒருவரை நாம் சென்று பார்ப்பது போலத்தான். டெக்ஸ்ட் எப்படிக் காட்டப்பட வேண்டும் என நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எடுத்துச் சொல்லி, திரையில் டெக்ஸ்ட் தோற்றத்தை நமக்கேற்ற வகையில் அமைக்கிறோம்.
ClearType Text Tuner டூலைப் பெறுவதற்கு, உங்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் விண்டோஸ் கீ அழுத்தவும். கிடைக்கும் கட்டத்தில் cttune என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ClearType Text Tuner டூல் பயன்பாட்டுக் கட்டம் கிடைக்கும். முதல் விண்டோவில் ClearType டூலை இயக்க நீங்கள் தூண்டப்படுவீர்கள். ஆனால் அது ஏற்கனவே இயக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டம் மாறா நிலையில் அதன் இயக்கத்தைத் தொடங்கும் வகை யிலேயே வைத்திருக்கும். பின்னர், ClearType Text Tuner உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர் அதன் சரியான ரெசல்யூசனில் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையை மேற்கொள்ளும். அது சரியாக இல்லை என்றால், உங்களிடம் நீங்கள் விரும்பும் வகை என்ன என்று கேட்கப்படும். இயக்கப் பட்டு, திரை ரெசல்யூசன் சரியான முறையில் அமைக்கப் பட்டுவிட்டது உறுதி செய்யப் பட்டவுடன், பல எழுத்து வகைகள் எடுத்துக்காட்டுக்களாக வரிசையாக உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் அப்போது காட்டப்படும் டெக்ஸ்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டியதில்லை. அவை எல்லாம் பல்வேறு எழுத்து வகைகள், உங்கள் மானிட்டர் திரையில் சரியாக, நீங்கள் படிப்பதற்குச் சிரமமின்றி காட்டப் படுகின்றனவா என்று சோதனை செய்திட ஏற்படுத்தப்பட்ட டெக்ஸ்ட். ஒவ்வொன்றாகப் பார்க்கவும்.எந்த வகைத் தோற்றம் சரியானது என்று உங்களுக்கு நிறைவளிக்கிறதோ, அதன் மீது கிளிக் செய்திடவும்.
நான்கு வகையான சாம்பிள் எழுத்து வகைகள் காட்டப்பட்டு, நிறைவான நிலை வந்தவுடன், ClearType சோதனை முடிவுறும். அந்த நிலைக்கு ClearType செட்டிங்ஸ் அமைக்கப்படும்.
இனி, உங்கள் மானிட்டரில் எழுத்து வகைகள் பார்வைக்குச் சிரமமின்றி காட்டப்படும்.
கேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா? டிபிராக் செய்திடக் கூடிய புரோகிராமிலிருந்து இது வேறுபட்டதா? வேறு செயலுக்கு உதவிடுமா?
பதில்: டிபிராக்ளர் குறித்து நீங்கள் சந்தேகப் படுவது ஓரளவிற்குச் சரியே. இதுவும் டிபிராக் செய்திடும் புரோகிராம் தான். வேறு செயலை மேற்கொள்ளாது. இதன் சிறப்பு என்னவெனில், இதனைப் பயன்படுத்தி, ஒரு குறிபிட்ட பைலைக் கூட தனியாக டிபிராக் செய்து, ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்து இருக்கும்படி அமைத் திடலாம். இதன் இன்னொரு சிறப்பு, இது மிகவும் சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம் ஆகும். ஒரு சிறிய .exe பைலாக இது கிடைக்கிறது.
சிகிளீனர் தந்த பிரிபார்ம் (Piriform) என்னும் நிறுவனம், இதனையும் தயாரித்து இலவசமாக வழங்குகிறது. இதனைப் பெற http://www.defraggler.com/ download என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். டிபிராக்ளர், விண்டோஸ் 200, 2003, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது.


* மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக சாப்ட்வேர் தயாரிப்பில் இரண்டாவது நிலையில் உள்ள நிறுவனம் அடோப் ஆகும். OFFICE 365
 
 
 
ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில், ஆபீஸ் 365, டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.
சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில் நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது. இதன் மூலம் இணையம் வழியாக, மைக்ரோசாப்ட் வழங்கும், நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. பைல்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம். நிறுவனம் ஒன்றின் வேலையை, அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல் படுத்தலாம். இதனால், இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டாலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப, கட்டணம் அதிகரிக்கும். ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.
ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே, இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் (ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம். இணைய வழி தயாரித்த பைல்களை, கம்ப்யூட்டரிலும் ஆப் லைனில், இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு, கம்ப்யூட்டரில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து, ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே, எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.
நிறுவனங்களுக்காக, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி, அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள், கவலையை விடுத்து, ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி, எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன. இதில், கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று, கூகுள் டாக்ஸ் பக்கத்தில், மஞ்சள் நிற டேப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.
உலக அளவில், அலுவலகப் பணி களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடு தான் பெரும்பாலான இடங்களில் உள்ளது. எனவே இதனைப் பொறுத்தவரை ஆபீஸ் 365 ஜெயிக்கிறது. சோதனை செய்து பார்க்க ஒரு .docx பைலை, என் கம்ப்யூட்ட ரிலிருந்து கூகுள் டாக்ஸ் மற்றும் வேர்ட் வெப் அப்ளிகேஷனுக்கு அனுப்பினோம். இரண்டிலும் பைலைத் திறந்து படிக்க முடிந்தது. பைலில் போல்டு, இடாலிக்ஸ், அடிக்கோடு என சில பார்மட்டிங் செயல்களை மேற் கொண்டோம். மீண்டும் பைலை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்தோம். வேர்ட் 2010ல் அனைத்து மாற்றங்களுடன் பைல் சரியாக இருந்தது. ஆனால் கூகுள் டாக்ஸ் பைல், வேறு பாண்ட், வேறு லைன் ஸ்பேசிங் எனப் பல வேறுபாடான பார்மட்டிங் செயல்களுடன் காட்சி அளித்தது. ஆபீஸ் 365 இயக்கத்தில், இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஆடியோ - வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.
ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில், மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள், ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவன சர்வரில், கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி, எத்தனை இமெயில் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான, கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ÷ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும், அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத் தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.