இரண்டு சிம் இயக்க மொபைல் போன்கள் இன்றைய குறைந்தபட்ச நிலை என்பதைக் காட்டிலும், அதுவே கட்டாயத் தேவையாகவும் மாறி விட்டது. முதலில் தொடக்க நிலை நிறுவனங்கள் மட்டுமே அதிகமான எண்ணிக்கையில் இந்த வகை போன்களை வெளியிட்டு வந்தன. காலப் போக்கில் பெரிய வளர்ந்த நிறுவனங்களும், இந்த விற்பனைச் சந்தையில் தங்கள் இடம் குறைந்துவிடக் கூடாது என்ற இலக்குடன் இத்தகைய போன்களை வெளியிடத் தொடங்கி வெற்றியும் பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது மார்க்கட்டில் அதிகம் விற்பனையாகும், பெரிய நிறுவனப் போன்கள் இரண்டை இங்கு பார்க்கலாம்.
எல்.ஜி. தரும் ஏ165:
பட்ஜெட் விலையில் இரண்டு சிம் இயக்கத்தில், எல்.ஜி. நிறுவனத்தின் மொபைல் போன் ஒன்று தற்போது விற்பனையில் உள்ளது. எல்.ஜி. ஏ165 என அழைக்கப்படும் இந்த பார் டைப் மொபைல் போன் 110 x 47.5 x 14.1 மிமீ என்ற அளவில் 81 கிராம் எடையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 14.5 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த ஜி.எஸ்.எம். போனின் நினைவகம் 3.9 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போட்டோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட 0.3 எம்.பி. திறனுடன் கூடிய விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன. எம்.பி.3 பிளேயர், எப்.எம். ரேடியோ, புளுடூத், அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன. சென்னை கடைகளில் 2 ஜிபி மெமரி கார்டுடன் ரூ.2,700க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.
நோக்கியா சி05:
இரண்டு சிம் இயக்க மொபைல் போனையே மக்கள் நாடுவதால், நோக்கியா நிறுவனமும் இந்த பிரிவில், பட்ஜெட் விலையில் சில போன்களைத் தந்துள்ளது. அவ்வகையில் நோக்கியா சி05 மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
74 கிராம் எடையில் 108 x 45 x 14.7 மிமீ அளவில், ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 5.75 மணி நேரம் பேசும் திறனுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் திரை 1.8 அங்குல அகலத்தில் உள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதியுடன் 0.3 எம்.பி. திறனுடன் கூடிய விஜிஏ கேமரா இயங்குகிறது. இதன் உள் நினைவகம் 64 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வகை செய்திகள் அனுப்பிப் பெற முடியும். ஸ்டீரியோ ரேடியோ, எம்.பி.3 பிளேயர், புளுடூத் ஆகியவற்றுடன் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.2,692 ஆகும்.
Home
»
»
Dual SIM Mobiles