Home » »


உங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்குவதற்கு

உங்களுடைய பெயரில் கூகுளின் இணையதளம் வந்தால் எப்படி இருக்கும். அந்த வசதியை ஒரு இணையதளம் நமக்கு செய்து தருகின்றது.இத்தளத்திற்கு சென்றவுடன் அதில் உள்ள Enter your Name Here என்கின்ற விண்டோவில் உங்களது பெயரை தட்டச்சு செய்யவும்.
அதன் கீழே உள்ள விண்டோவில் விதவிதமான எழுத்துருக்கள் இருக்கும். நமக்கு எந்த டிசைன் தேவையோ அந்த எழுத்தின் கீழே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்து என்டர் தட்டவும்.
சில வினாடிகளில் நமது பெயருடன் கூகுளின் இணைய தளம் ஓப்பன் ஆகும். கூகுளின் லோகோ ஸ்டைலிலும் உங்களுடைய பெயரை கொண்டு வரலாம்.
நீங்களும் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து வேண்டியவர்களுக்கு அதன் லிங்கை அனுப்பி வையுங்கள். அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்கையில் அவர்களுடைய பெயர் அங்கு கிடைக்கும்.
இதை நீங்கள் தொடக்க பக்கமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இணையதள முகவரி








குரோம் உலாவியில் ப்ளாஷ் விளம்பரங்களை தடுப்பதற்கு

கூகுள் குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்கள் சில நேரங்களில் நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.இது போன்ற பிளாஷ் விளம்பரங்களை கட்டுபடுத்த குரோமில் புதிதாக வந்திருக்கும் நீட்சி உதவுகிறது. மிகப்பெரிய இணையதளத்திற்கு சென்றால் கூட நம்மை விடாமல் தொடரும் ஒன்று தான் பிளாஷ் விளம்பரங்கள்.
எதற்காக பிளாஷ் விளம்பரங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றால் விரும்பும் வகையில் அனிமேசன் உருவாக்கி அதை சிறிய அளவிலான கோப்பாக மாற்றி விளம்பரதாரர்கள் மக்களை ஈர்க்கின்றனர்.
பல நேரங்களில் ஒரு சில தளங்களில் தேவையில்லாத பிளாஷ் விளம்பரங்கள் நமக்கு வெறுப்பை உண்டு பண்ணுகிறது. இனி இது போன்ற பிளாஷ் தொல்லைகளை நீக்குவதற்காக குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.
குரோம் உலாவியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை நிறுவிக் கொள்ளவும். அடுத்து Flash ஐகானை சொடுக்கி Block Flash on this Site என்பதை சொடுக்கி பிளாஷ் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் பார்க்கலாம்.
Option என்பதை சொடுக்கி ஏற்கனவே நாம் பிளாஷ் கோப்புகள் பார்க்க வேண்டாம் என்று Block செய்த தளங்களை நமக்கு வேண்டும் போது Unblock செய்யும் ஆப்சனும் இருக்கிறது.
பிளாஷ் விளம்பரங்களின் தொந்தரவை நீக்க விரும்பும் அனைவருக்கும் இணையதளத்தை வேகமாக பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி



வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன.இருப்பினும் இணையத்தில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.
நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.
அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும்.
பின் வீடியோ தரவிறக்கம் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ போர்மட்டுகள் avi, wmv, mpeg1, mpeg2, mp4, mov, flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
தரவிறக்க சுட்டி




உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு

தாவரங்கள் பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் மற்றும் அதன் குண நலன்களை படங்களுடன் அறிந்து கொள்ள ஒரு இணையதளம் உதவி புரிகிறது.இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் தாவரங்கள் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பல அரிய மூலிகைகள் இன்றும் மனிதரின் பல நோய்களை குணப்படுத்தி வருகிறது. இப்படி நமக்கு தெரியாத தாவரங்களை படத்துடன் விபரமாக தகவல்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Search என்ற கட்டத்திற்குள் எந்த தாவரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேடிய தாவரத்தை பற்றிய முழுவிபரமும் நமக்கு கிடைக்கும். இந்த தாவரத்திற்கு வேறு என்ன பெயர்கள் எல்லாம் இருக்கிறது. எந்த நாட்டில் இந்த தாவரம் அதிகமாக காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர்கள் மற்றும் இந்த தாவரத்தினால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் கொடுக்கிறது.
பல இலட்சம் தாவரங்களின் தகவல்கள் இத்தளத்தில் உள்ளது. இனி நாம் எந்த தாவரத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி





பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்" என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.
அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்  கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.
இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.