Home » » System Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு



கணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன.
இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper.
இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.
பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.
உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல.
கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி