Home » » உங்களாலும் சுட முடியும்

என்னடா வன்முறைப்பதிவாக இருக்குமோ என பயப்படுகிறிர்களா? அப்படியில்லை. உங்கள் செல்போனைதான் அப்படி சொன்னன்.சரி விசயத்திற்கு வருவோம்.இன்று கமெராவுடன் கூடிய மொபைல் போன்,டியிற்றல் கமெரா வாங்க கடைக்குச் சென்றால் எத்தனை மெகா பிக்சல் உள்ள கமெரா என்ற விடயத்திற்குதான் முன்னுரிமை கொடுப்பம். அவ்வாறு முன்னுரிமை கொடுப்பதெல்லாம் நம் படங்கள் தெளிவா தெரியவேண்டும் என்ற நப்பாசைதானே? அதுவும் மொபைல் போனில் உள்ள கமெராவினால் கிளிக் செய்தால் சொல்லவே தேவையில்லை. உங்கள் முகங்கள் அந்தளவுக்கு விகாரமாக உருமாறி இருக்கும்.அத்துடன் இருண்டதாகவும் Noise கூடியும் Sharpness குறைந்தும் color, Resolution என எல்லாத்திலும் நாம் எதிர்பார்த்தளவில் இருப்பதில்லை. டியிற்றல்களிலும் இதே நிலை தான்.

நம் படங்களில் உள்ள குறைபாடுகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
  • JPEG compression artifacts;
  • vignetting (darkening of the corners around the image);
  • poor color reproduction;
  • poor contrast;
  • poor sharpness
  • noise.
இப்படி தான் என் போனிலும் டியிற்றலிலும் நான் பட்ட கஸ்ரம் என்னை ஒரு தேடலில் இறக்கியது. அட இவனே குரங்கு மாதிரி. இவன் முஞ்சைக்கு எந்த கமெரா போட்டாலும் தேறாது என நீங்கள் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. சரி இனி எந்த கிறீமையாவது பூசி 3 வாரத்தில் வெள்ளையாகலாம் என பலரைப்போல நான் அலைய தயாரில்லை. ஏன் தெரியுமா? எது பூசினாலும் ஒன்றும் ஆகாதுங்கா.அப்படி நிறம்.சரி இனி நேரே விசயத்திற்கு வருவம்.

இவ்வாறு நாம் பிடித்து வைத்துள்ள படங்களை கணினியை பாவித்து சற்று தரம் கூட்டுவது எவ்வாறு? அதற்கு உதவும் மென்பொருள் எது? என்று பார்ப்போம்.முதலில் நான் சொல்லப்போகும் மென் பொருளின் பயனைத் தெரிந்து கொள்ள இந்த முகவரிக்கு செல்லுங்கள்.இதன் பயன் உணர்ந்தீர்களா? இதன் பெயர் mobilephotoenhancer. இம்மென்பொருள் கொண்டு மாற்றப்பட்ட படங்களை காண இங்கு செல்லவும்.இம்மென் பொருள் வின்டோஸ் கணினிகளில் இயங்கவல்லது. முற்றிலும் இலவசமானது. 6MB அளவுடையது.இதை தரவிறக்க முதல் நீங்கள் அவர்களுடைய தளத்தில் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்து பதிய வேண்டும். பதிந்த பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு இணைப்பு அனுப்புவார்கள்.அதில் சென்று நீங்கள் தரவிறக்க முடியும். பதியும் தளம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

இம்மென்பொருளின் பயன்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
  • Color and contrast ஐ வேண்டியளவு மாற்றலாம்.
  • Jpeg பைல்களை compression செய்யலாம்
  • Camera noise ஐ குறைக்கலாம்
  • Fixing the dark corners செய்யலாம்
  • Filter intensity ஐ கன்ரோல் பண்ணலாம்
  • JPEG, BMP, PNG வடிவங்களில் படங்களை சேமிக்கலாம்
  • இலகுவானதும் கவர்ச்சியானதுமான interface ஐ கொண்டது.
இதில் உள்ள குறைபாடு ஒருசமயத்தில் ஒரு படத்தை மாத்திரமே மாற்றமுடியும். ஒவ்வொன்றாக மாற்றுவதால் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும்.