Home » » புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.

ஆங்கிலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான எழுத்துருக்களில் சிறந்த
எழுத்துருவை (Font)  எளிதாக இலவசமாக ஒரே இடத்தில் இருந்து
தரவிரக்கலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கிலத்தின் பலவகையான எழுத்துருக்கள் இலவசமாக
கிடைக்கின்றன ஆனால் அழகான ஆங்கில எழுத்துக்கள்
வித்தியாசமாக உள்ள எழுத்துருக்கள் காசுக்கு தான்
கிடைக்கின்றன. ஒரு சில இடங்களில் தான் இது போன்ற
அரிவகை எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன என்றாலும்
அந்த இடங்களில் கூட எல்லாவகையான எழுத்துருக்களும்
கிடைப்பதில்லை ஒரு சில எழுத்துருக்கள் மட்டும் தான்
கிடைக்கின்றன. இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.ffonts.net
படம் 2
இந்தத்தளத்திற்கு சென்று நாம் விரும்பும் வகையில் எந்த எழுத்துரு
பிடித்திருந்தாலும் உடனடியாக Download என்ற பொத்தானை அழுத்தி
தரவிரக்கலாம். 3D Fonts முதல் Cartoon Fonts வரை , Classic Fonts
முதல்  Crazy Fonts வரை அத்தனை எழுத்துருவும் தனித்தனியாக
வகை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு எந்த வகை எழுத்துரு
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து படம் 2 -ல் காட்டியபடி இருக்கும்
Download என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்கலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கும். 


கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.

கணினியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் அதற்குள்
என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்
கணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை
கொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும் எளிதான வகையில் தீர்வு
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்
கூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,
புரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை
செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று
சொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்
ஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது
இணையதள முகவரி : http://www.errorhelp.com

பிழை உதவி ( Error Help) இதைதான் மையமாக வைத்து இந்தத்தளம்
செயல்படுகிறது. மற்றதளங்களைப்போல அல்லாமல் பிரச்சினையை
நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக்
கொடுக்கின்றனர். இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி
உள்ளனர். எந்ததளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது
அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு
காட்டுகிறது, நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை
என்றால் 48 மணி நேரத்திற்க்குள் சரியான பதிலை கொடுக்க
முயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத்
தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே
காட்டுகின்றனர். கண்டிப்பாக இந்தத் தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். 



மென்பொருட்களின் சீரியல் இலக்கம் தொலைந்து விட்டதா?

எமது கணணியில் பல்வேறு மென்பொருட்களை உள்ளீடு பயன்படுத்திக்கொண்டு இருப்போம். அம்மென்பொருட்களின் வட்டுக்களையும் அதன் லைசன்ஸ் இலக்கங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருப்போம். ஆனாலும் சமயங்களில் கவனக்குறைவாக மென்பொருட்களின் சீரியல் இலக்கங்களை தொலைத்து விடுவதுண்டு. ஏதேனும் ஒரு காரணத்தினால் குறிப்பிட்ட மென்பொருட்களை மீண்டும் கணணியில் உள்ளீடு செய்ய வேண்டி வரும் நேரங்கள் வரும் போது தான் தொலைத்த இலக்கங்களை தேடி அலைந்து கொண்டிருப்போம். இந்த சிக்கல்களில் இருந்து விடுபட ஒரு மிகச்சிறிய 74KB அளவுள்ள License Crawler எனும் மென்பொருள் கைகொடுக்கிறது. இதனை பயன்படுத்தி கணணியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள மென்பொருட்களின் லைசன்ஸ் இலக்கங்களை முன்கூட்டியே பெற்று பத்திரப்படுத்தி வைக்கலாம். இதன் தரவிறக்க தள சுட்டி இதோ.


சிப் பைலாக இறங்கும் இதை இன்ஸ்டால் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சிப் பைலை விரித்தவுடன் மென்பொருளை இயக்கவேண்டியது தான். அதை இரட்டை சொடுக்கு செய்தவுடன் அதன் முகப்பு இவ்வாறு விரியும்.




இதில் Accept பொத்தானை அழுத்தியவுடன் வரும்படம் கீழே உள்ளது.





இதில் உள்ள செட்டிங்க்சில் எந்த மாற்றமும் செய்யாமல் Start search பொத்தானை அழுத்த வேண்டியது தான். உங்கள் கணணியில் உள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து, உள்ளீடு செய்யப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் லைசன்ஸ் இலக்கங்களை பட்டியலிடுகிறது. ஆனால் இது நூறு சதவிகிதம் செயல்படுகிறதா என்பதில் எனக்கு சிறு சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில் எனது கணணியில் உள்ள போட்டோஷாப் மென்பொருளின் லைசன்ஸ் இலக்கம் மட்டும் இதில் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தேன் பலனில்லை. நீங்கள் உங்கள் அனுபவங்களை கூறுங்கள்

 லிங்க் .