Home » » கம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்

கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது. மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், அதனைத் தீர்ப்பதற்கு அதற்குரிய டெக்னீஷியனை நாடாமல் நாமே ஓரளவில் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். இதற்குக் காரணம் பெரும்பாலான பிரச்னைகள், நாமே தீர்த்துக் கொள்ளும் அளவிலேயே இருக்கும். எனவே நம்மிடம் கம்ப்யூட்டரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம்கள் எப்போதும் இருப்பது நல்லது. இவற்றை ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்துக் கொண்டால், நமக்கும் நம் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். அத்தகைய புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புரோகிராம்கள் அனைத்தும், ஒரு பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் புரோகிராம்களே.
1. சூப்பர் ஆண்ட்டி ஸ்பைவேர் போர்ட்டபிள் ஸ்கேனர் (Super Anti Spyware Portable Scanner): உங்கள் பிளாஷ் ட்ரைவில் இது கட்டாயம் இடம் பெற வேண்டும். அத்துடன் இதன் அப்டேட் பதிப்புக்கு அடிக்கடி இதனை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அடிக்கடி இதற்கான அப்டேட் பைல் வெளியிடப்படுகிறது. வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்பில்லாத கம்ப்யூட்டர் ஒன்றில் டவுண்லோட் செய்து, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றி வைத்துப் பயன்படுத்தலாம். பிரச்னைக்குள்ளான கம்ப்யூட்டரை சேப் மோடில் (safe mode) இயக்கிப் பின்னர் இதனைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைக் காப்பாற்றலாம். இந்த புரோகிராமை http://www .superantispyware.com/portablescanner.html என்ற முகவரியிலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
2. ஹைஜாக் திஸ் (Hijack this): இது ஒரு ஸ்கேனர் அல்ல. போர்ட்டபிள் விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு அலசும் டூல். பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுக்கும். அந்த ரிப்போர்ட்டிலிருந்து, கம்ப்யூட்டரைப் பாதிக்கும் வகையில் மால்வேர் இருந்தால் அறிந்து கொள்ளலாம். பின்னர் தெரிந்து கொண்ட மால்வேரை எப்படிக் கையாள்வது என்று அறிய, http://hjtdata.trendmicro.com /hjt/analyzethis/index.php என்ற முகவரி சென்று தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. ஏ.வி.ஜி. ரெஸ்க்யூ சி.டி. (AVG Rescue CD): விண்டோஸ் இயக்கத்தில் மால்வேர் மற்றும் வைரஸ் அறியும் ஸ்கேனர் புரோகிராமை இயக்க முடியவில்லையா? இந்த புரோகிராம் பயன்படும். இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும். சி.டி.யில் வைத்து இயக்கவும், ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கவும் தனித்தனியே இந்த பைல் தரப்படுகிறது. பெற்று பயன்படுத்தலாம். பெற்றுக் கொள்ள http://www.avg.com/usen/avgrescuecddownload.tplmcr8 என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.
மால்வேர் அல்லது வைரஸ் பாதிப்பு மட்டுமே பிரச்னையாகாது. மேலும் பலவகை பிரச்னைகள், பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படும். பைல்கள் அழிக்கப்பட்டு கிடைக்காத நிலை ஏற்படலாம். ரெஜிஸ்ட்ரியில் தேவையற்ற குறியீடுகள் குவிந்து பிரச்னை ஏற்படுத்தலாம். சாப்ட்வேர் ஒன்றை நீக்குகையில், அனைத்து பைல்களும் அழியாமல் இருக்கலாம். இவற்றிற்கான சில போர்ட்டபிள் புரோகிராம்களை வைத்து இருப்பதுவும் நமக்கு முதலுதவி பெட்டி போல பயன்படும். அதற்கான புரோகிராம்கள் இதோ:
1.ரெகுவா போர்ட்டபிள் (Recuva Portable): அழிக்கப்பட்ட ஒரு பைலை மீண்டும் பெற நமக்குக் கிடைக்கும் புரோகிராம்களில், மிகச் சிறந்த புரோகிராம் இதுவாகும். பிரிபார்ம் நிறுவனம் இதனைத் தயாரித்து அளிக்கிறது. இதுவும் இலவசமே. இதனைப் பெற http://www.piriform.com/recuva/features/portableversion என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. சிகிளீனர் போர்ட்டபிள் (CCleaner Portable): பிரிபார்ம் நிறுவனம் தரும் இலவச புரோகிராம்களில் மிகவும் பிரபலமான, பயனுள்ள புரோகிராம் இதுதான். கம்ப்யூட்டரில் தங்கியுள்ள வேண்டத்தகாத பைல்கள் அனைத்தையும் நீக்கிக் கம்ப்யூட்டரைச் சுத்தப்படுத்தும் புரோகிராம் இது. ரெஜிஸ்ட்ரியையும் இது சுத்தப்படுத்தும். (இந்த வேலைக்கு மிக கவனம் தேவை). புரோகிராம்களை இதன் மூலம் முழுமையாக நீக்கலாம். எதற்கும் அடுத்த புரோகிராம் குறித்தும் அறிந்து கொள்ளவும். போர்ட்டபிள் சிகிளீனர் புரோகிராமினை இலவசமாகப் பெற http://ccleanerportable.en.softonic.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. ரெவோ அன்இன்ஸ்டாலர் போர்ட்டபிள் (Revo Uninstaller Portable): விண்டோஸ் புரோகிராம் ஒவ்வொன்றும், அதனைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும் அன் இன்ஸ்டாலர் புரோகிராமுடன் இணைத்தே தரப்படுகிறது. விண்டோஸ் இயக்கமும் தன்னிடத்தே ‘Programs and Features’ மற்றும் ‘Add or Remove Programs’ போன்ற புரோகிராம்களை இந்த வேலைக்குப் பயன்படுத்தும் வகையில் கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய புரோகிராம்கள், பல பைல்களைக் குப்பையாகக் கம்ப்யூட்டரி லேயே தங்க விடுகின்றன. ஒரு சாப்ட்வேர் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்க வேண்டுமானால், ரெவோ அன் இன்ஸ்டாலர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். ரெவோ இந்த வகையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. http://www.revouninstaller. com/revo_uninstaller_ free_download.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனைப் பெறலாம்.
4. எச்.டி. ட்யூன் (HD Tune): இது தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு போர்ட்டபிள் புரோகிராம் அல்ல. ஆனால் இதனை விண்டோஸ் இயக்கத்தில் இன்ஸ்டால் செய்து, அப்படியே அதன் போல்டரை, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றிப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஹார்ட் டிஸ்க், அதன் பைல் விபரங்கள் குறித்த பல்வேறு தகவல்களைத் தந்து, சிக்கல்களைத் தீர்க்க உதவிடும். http://www.hdtune.com/download. html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
மேற்கண்ட புரோகிராம்களை, ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்திருப்பது நமக்கு பாதுகாப்பு. இவை எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்பது, நண்பர்கள் மத்தியில் ஒரு ஸ்டேட்டஸை அளித்திடும்.


நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலை நமக்குத் தருகிறது. எந்த புரோகிராம் குறித்து சந்தேகம் நமக்கு எழுகிறதோ, அதன் மீது கிளிக் செய்தால், அது பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. வேண்டாதவற்றை தொடங்க விடாமல் முடக்கி வைக்கவும் நமக்கு வசதி செய்து தருகிறது.
சில புரோகிராம்களை, கம்ப்யூட்டர் பூட் ஆகிச் சில நிமிடங்கள் கழித்துத் தொடங்கும்படி அமைத்திடலாம். இதனால், கம்ப்யூட்டரை வேகமாக பூட் செய்திடச் செய்து, நமக்கு உடனே தேவையான புரோகிராம்களை மட்டும் நம்மால் இயக்க முடியும்.
மறைவாக இயங்கும் புரோகிராம் களையும் கண்காணிக்க முடியும். குக்கி புரோகிராம்களை வடிகட்டலாம்; அவை எதற்காகக் கம்ப்யூட்டரில் பதியப்பட்டன என்று அறியலாம்.
மொத்தத்தில் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த புரோகிராம் நமக்குத் தேவையான ஒன்றாகும். இதனைப் பெற http://www.winpatrol.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.