Home » » கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்





கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா, கவலை வேண்டாம் புதிய பரிமாணத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணணி ஆசிரியர்கள்.சாதாரண பெருக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும், ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது.
சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதைப்போல் தான் கணித்ததை வேடிக்கையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம்.
இங்கு சென்று சாதாரண பெருக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர். இயற்கணிதம்(Algebra), வடிவியல்(Geometry) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல்.
இணையதள முகவரி