உங்களுடைய கடவுச்சொல்லை மற்றவர்கள் ஹேக் செய்யமால் தடுப்பதற்கு

இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை பயன்படுத்த முடியும்.இப்படி நாம் உருவாக்கும் கடவுச்சொல்லை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது. கடவுச்சொல்லை உருவாக்கும் பொழுது கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள், பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters) மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினால் உங்களுடைய கடவுச்சொல்லை யாராலும் கண்டறிய முடியாது.
மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் .exe கோப்பை நிறுவச் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
அடுத்து வரும் இரண்டு விண்டோக்களில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.
அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் நிறுவி விடலாம்.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கான கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த கடவுச்சொல்லை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். 
அடுத்து வரும் விண்டோவில் Password Length என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல் அளவை தேர்வு செய்து(குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை கடவுச்சொல்லாக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும்.
அடுத்து உங்களுக்கான கடவுச்சொல் பட்டியல் வரும்.
இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த கடவுச்சொற்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் கடவுச்சொல் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த கடவுச்சொல் திரும்பவும் வராது. ஆகையால் நம்முடைய கடவுச்சொல் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய கடவுச்சொல்லை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதனால் நாம் கடவுச்சொல்லை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
இது போன்று நமது கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கலாம்.
தரவிறக்க சுட்டி

திட்டமிட உதவும் இணையதளம்

சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொரு செயலையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவார்கள்.இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியும் உங்களுடைய வாழ்க்கையிலும் வரவேண்டும் என்று விரும்பினால் அதற்கு கை கொடுப்பதற்காக டைம்ஸ்லாட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
டூ டூ லிஸ்ட் என்று சொல்லப்படும் செய்ய வேண்டியவற்றை குறித்து வைத்துக் கொள்ள உதவும் வகையைச் சேர்ந்த இந்த தளம் தினசரி வேலைகளை அழகாக திட்டமிட்டுக் கொள்ள உதவுகிறது.
மறதிக்கோ, சோம்பலுக்கோ இடம் இல்லாமல் அன்றாட செயல்களை திட்டமிட்டுக் கொள்ள விரும்புவோர்கள் இந்த தளத்தில் உறுப்பினரானால் அவர்களுக்கு என்று ஒரு அட்டவணை பக்கம் ஒதுக்கப்படுகிறது.
மிக எளிதாக இருக்கும் அந்த பக்கம் காலையில் இருந்து துவங்குகிறது. ஒவ்வொருவரும் அன்றைய தினம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை இந்த அட்டவணையில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த அட்டவணையில் ஒவ்வொரு மணி நேரமாக வேலைக்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரவர் தேவைக்கேற்ப இந்த கால அவகாசத்தை மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு காலை முதல் இரவு வரையான பணிகளை இந்த அட்டவணையில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
அன்றாட அலுவல்களை குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது புதிய யுக்தி அல்ல என்றாலும், வழக்கமாக டைரியில் குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது நடைமுறையில் ஒத்துவரக்கூடியதாக இருப்பதில்லை. அதற்கு மாறாக மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த இணைய அட்டவணை அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாள் முடிவிலும் இந்த அட்டவணையைப் பார்த்து அந்த தினத்துக்கான அலுவல்களை செய்து விட்டோமா என்பதை அலசிப் பார்க்கலாம். இதே போல ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய தினத்திற்கான பணிகளை திட்டமிட்டு செயல்படலாம்.
இந்த அட்டவணையில் நாள் காட்டியும் இணைக்கப்பட்டிருப்பது விசேஷமானது. இந்த நாள் காட்டியில் வரும் காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளையும் குறித்து வைக்கலாம். தொலைபேசி பில் கட்டுவதில் துவங்கி, வங்கி தவணையை செலுத்துவது வரை செய்ய வேண்டிய பணிகளை அந்த தினங்களில் குறித்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் இந்த அட்டவணையானது மிகச்சிறந்த நினைவூட்டல் சேவையாகவும் செயல்படும். நாள் காட்டியை ஒரு பார்வை பார்த்தால் எந்தெந்த தினத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விடலாம்.
இதே போலவே கடந்த வாரம் அல்லது அதற்கு முந்தைய மாதம் என்ன செய்து இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் நினைவுகளை புரட்டிப் பார்க்காமல் இந்த நாள் காட்டியை புரட்டிப் பார்த்தாலே போதும். இவ்வாறு கடந்த கால அலுவல்களின் சேமிப்பு கிடங்காகவும் இந்த அட்டவணை கை கொடுக்கிறது.
மிக எளிமையான வடிவமைப்பும், சிக்கல் இல்லாத அட்டவணையுமே இந்த சேவையின் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அதிக குழப்பங்களுக்கு இடம் தராமல் ஒருவர் தனது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ள இந்த சேவை கை கொடுக்கிறது.
வெற்றி பெற்ற மனிதர்களைப் போலவே தாங்களும் வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், செய்ய நினைத்தவற்றை சோம்பலால் செய்ய முடியாமல் போய் வருந்துபவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
திட்டமிடுவதற்கு கை கொடுக்கக்கூடிய இணையதளங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அவற்றில் மிகவும் எளிமையான தளமாக இந்த டைம்ஸ்லாட் அமைந்துள்ளது.
இணையதள முகவரி
கணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய
உலகில் கோடிக்கணக்கான கணணிகள் இருந்தாலும் ஒவ்வொரு கணணிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கப்படுகிறது.இந்த ஐ.பி எண்ணை வைத்து ஒரு கணணியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் இணைய திருடர்கள் கணணியின் ஐ.பி எண்ணை அடிப்படையாக கொண்டே கணணியை முடக்குகின்றனர்.
கணணியின் ஐ.பி. எண் சுலபமாக கண்டறிய பல இணையதளங்கள் உள்ளன. இந்த ஐ.பி எண்களை நாம் ஓப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். இந்த தளங்களில் ஐ.பி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர் மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.
1. What is my ip address: இந்த தளம் ஐ.பி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐ.பி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணணியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.
What is my ip address
2. What Is My IP: இந்த தளத்தில் நம்முடைய கணணியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். தேவைப்படுபவர்கள் அதை படித்து ஐ.பி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
What Is My IP
3. IP Address World: இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர்.
IP Address World