Google Analytics இல் புதிய மாற்றங்கள் - அடுத்த தலைமுறை Analytic

image of a computer sending data to a gear, where a GA line comes out of the gearGoogle Analytic உலகின் மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தும் இலவச சேவை. இதில் கடந்த மாதத்தில் குறிப்பிட தக்களவு மாற்றங்கள் வந்தன. அவற்றை தொகுத்து சிறு பதிவு. இவர்கள் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் ஏற்கனவே Woopra மற்றும் Piwik இல் அறிமுகமான சேவைகள் தான். அண்மையில் Piwiki தனது 1.11.1 ம் பதிப்பில் real time அனல்ய்டிக் இனை அறிமுகப்படுத்தியது. Woopra தனது v8 analytic முன்னோட்டத்தை வெளியிட்டது. அவ்வாறே Google'ம் தனது புதிய சேவையை வெள்ளோட்டம் விட்டது.

Headphone இல் HD ஒலி - HD Quality Enhancement Software

DFX Audio Enhancer screenshotஇசை இன்றி அமையாதது ஆகிறது. பெரும்பாலும் Audio CD க்களில் பாடல்களை பெறுவது அருகி விட்டது. இலகுவாக Google மூலம் தேடி mp3 வகையில் பாடல்களை தரவிறக்கி கேட்பதுவே இன்றைய நிலை. audio cd இல் இருந்து rip செய்யப்படும் பாடல்கள் தமது தரத்தை இழக்கின்றன. 50 MB -> 5 MB ஆகும் போது நிச்சயம் தரம் இழக்கப்படும். Audio CD இல் கேட்டாலும் போதிய encoder இல்லாவிட்டால்,  ஒலி மிகவும் பாதிக்கப்படும். எவ்வாறாயினும் நவீன தொழில்நுட்பங்கள்,  Headphone இலும்   HD ஒலியை கேட்ட வசதியை தருகின்றன. Acer கணணிகளுக்கு Dolpy விசேட மென்பொருளை வழங்குகிறது. அதே போல அனைத்து கணணிகளிலும் இயங்க கூடிய , மென்பொருள் ஒன்றை பற்றி இப்பதிவு.

Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking

இப்போது வலைப்பூக்களில் video க்களை இணைத்து பதிவிடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் விமர்சனங்கள், விளக்கங்கள் என பல வகையிலும் சொந்தமாக video, Screen recording என பல விதமாக youtube இல் காணொளிகளை தரவேற்றி அதை வலைப்பூவில் இணைக்கின்றனர். Video play செய்யப்பட்ட தடவைகளை Youtube Analytic இல் காண முடியும். ஆனால் Blog post இல் உள்ள video க்கு என தனிப்பட்ட தகவல்களை காட்டாது. எவ்வாறு உங்கள் Google Analytic இல் நீங்கள் இணைத்த காணொளி பார்க்கப்பட்டது என்பதை காணும் முறையை பார்ப்போம்.

Microsoft Mathematics - இலவச உயர்தர கணிப்பான் மென்பொருள்

கணித கேள்விகளுக்கு செய்கை வழியுடன் விடைகளை தரும் இணைய சேவை பற்றி முன்பு இங்கு பார்த்திருந்தோம். அதே போல இல்லாவிடினும், ஓரளவு மேம்பட்டதாக Microsoft வழங்கும் இலவச மென்பொருள் தான் Microsoft Mathematics 4.0 இது பற்றி இணைய உலகில் பெரும்பாலானவர்கள் அறியவில்லை.  சாதாரணமாக Windows உடன் இணைந்து வரும் கணிப்பானை பயன்படுத்தி பழக்க பட்ட உங்களுக்கு நிச்சயம் இது மாறுதல் தான். இதில் அப்படி என்ன விசேடமாக இருக்கிறது, இதன் மூலம் என்னென்ன செய்யலாம்? இதை பெரும் வழிகள் என்ன? இப்பதிவில் தொடர்ந்து...

உலகின் உயரமான இடங்களில்- எவரெஸ்ஸில் கூகிள் மூலம் சுற்றி பார்க்கலாம் - Explore Everest and more with Google Maps Street View

உலகின் உயரமான மலை ஆகிய எவரெஸ்ட் மற்றும் Aconcagua (South America), Kilimanjaro (Africa), Mount Elbrus (Europe) ஆகிய இடங்களில் கூகிள் தனது  Street view காட்சிகளை இணைத்துள்ளது. இவை உலகில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த மலை தொடர்களாகும்.  வழமைக்கு மாறாக இம்முறை இக்காட்சிகளை படமாக்க lightweight tripod பயன்படுத்தி இருக்கிறார்கள். மிகவும் தாழ் வெப்ப நிலை உள்ள கிளிமஞ்சாரோ மலை, உலகின் உயர்ந்த எவரஸ்ட்  என அனைத்து சிறப்பிடங்களையும் காண முடிகிறது.

சமூக வலைத்தள கணக்குகள் Hack செய்யப்பட கூடியதா?

பதிவிக்கு  முதல், கேள்விக்கு  பதில். Facebook server களில் உள்ள உங்கள் கணக்கை ஹக் செய்வது சாத்தியம் அற்றது. உங்கள் கணக்கை உங்கள் நண்பர் ஹக் செய்து உங்கள் இரகசிய இலக்கத்தை காட்டினால் நிச்சயம் அது உங்கள் கவலையீனத்தால் தான் நிகழ்ந்தது. உங்கள் நண்பர்கள் எப்படி உங்கள் இரகசிய இலக்கங்களை கண்டறிகிறார்கள், இவர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பு பெறுவது என்பது தொடர்பாக இப்பதிவு சுருங்க சொல்கிறது.

Google Reader க்கு மாற்றீடான இலவச சேவைகள் -Google Reader Alternatives

Google Reader ரை அதிகமானவர்கள் பயன்படுத்தியிருந்தாலும், அதன் பயன்பாடு கடந்த சில வருடங்களாகவே குறைந்துவிட்டது என்றும், அதனால் அதனை மூடப்போவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. வரும் July ஒன்று முதல் கூகுள் ரீடர் இயங்காது. இதற்கு மாற்றீடாக இணையத்தில் பல சேவைகள் இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவற்றில் தமிழ் தெரிவதில்லை. அதாவது தமிழ் எழுத்துக்கள் தோன்றுவதில்லை. தமிழை ஆதரிக்க கூடிய கணனியில் மட்டும் அல்லாது iOs, Android இயங்கு தளங்களிலும் இயங்க கூடிய சில இலவச சேவைகள் பற்றி இப்பதிவு.

அந்தாட்டிக்காவில் கூகிள் மூலம் சுற்றி பார்க்கலாம் - Antarctica Google Street view updated with new galleries

கூகிள் தனது street view இல் இயற்கை அழகு நிறைந்த அந்தாட்டிக்கா கண்டத்தின் பல பாகங்களை சில தினங்களுக்கு முன்னர் இணைத்தது. இதற்கு முன்னரும் இங்கு சில இடங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டன. எவ்வாறாயினும் இம்முறையே அதிகளவான இயற்கை காட்சிகளை உள்ளடக்கி அழகான street view ஆக வெளியிட்டு உள்ளது.உதாரணமாகப் பென்குயின்கள் தொடர்பான காட்சிகளை குறிப்பிடலாம்.

Hotmail சகாப்தம் முடிகிறது - Outlook க்கு மாறுவது எப்படி?

இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது. இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக நடத்தியது. ஆனாலும், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள், அதைவிட்டு நகர வில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் உலகில் முதல் இடத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதனைக் கண்ட மைக்ரோசாப்ட், சில ஆண்டு களுக்கு முன்னர், ஹாட்மெயில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது. தொடர்ந்து இயக்கியும் வருகிறது.

கூகிள் மூலம் இந்திய அருங்காட்சியகங்களின் உட்புறங்களில் சுற்றுலா - Street view in Indian Museums

இந்தியா பெரும் வரலாற்றை கொண்ட நாடு. இதன் வரலாறுகளில் எஞ்சியவை இப்போது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாள 50 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உண்டு. இதில் தேசிய காந்தி அருங்காட்சியகம், ( டில்லி) மற்றும் அதன் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றை கூகிள் street view மூலம் சுற்றி பார்க்க முடியும். ஏனைய இடங்களில் தமது படப்பிடிப்பை நிகழ்த்த காவல்துறை அனுமதி மறுத்ததாக கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தமக்கு கிடைத்த இரு இடங்களிலும் மிக சிறப்பாக உள்ளக ஸ்ட்ரீட் view இனை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

கூகுளில் ஜப்பானிய நகரங்கள், இயற்கை-செயற்கை பிரமாண்டங்கள் - Japan Wonders in Google Street View !

Google சத்தம் இல்லாமல் பல விடயங்களை செய்து வருகிறது. அண்மையில் ஜப்பான் நகரங்களையும் ஜப்பானின் கலை கலாசார அம்சங்களையும்  இயற்கை அழகையும் தனது Google Street view இல் இணைத்தது! இது தொடர்பான அறிவிப்பை தமது ஜப்பானிய வலைப்பூவில் பகிர்ந்தார்கள். பெரும்பாலான காட்சிகள் பனிக்காலத்தில் எடுக்கப்பட்டவை. உலகப்போரின் பின்னர் ஜப்பான் கண்ட எழுச்சியின் வடிவத்தை ஜப்பானை அழித்தவர்களே படம்பிடித்தமை ஜப்பானியர்களுக்கு பெருமை தான்!