Home » , » Google Reader க்கு மாற்றீடான இலவச சேவைகள் -Google Reader Alternatives

Google Reader ரை அதிகமானவர்கள் பயன்படுத்தியிருந்தாலும், அதன் பயன்பாடு கடந்த சில வருடங்களாகவே குறைந்துவிட்டது என்றும், அதனால் அதனை மூடப்போவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. வரும் July ஒன்று முதல் கூகுள் ரீடர் இயங்காது. இதற்கு மாற்றீடாக இணையத்தில் பல சேவைகள் இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவற்றில் தமிழ் தெரிவதில்லை. அதாவது தமிழ் எழுத்துக்கள் தோன்றுவதில்லை. தமிழை ஆதரிக்க கூடிய கணனியில் மட்டும் அல்லாது iOs, Android இயங்கு தளங்களிலும் இயங்க கூடிய சில இலவச சேவைகள் பற்றி இப்பதிவு.


1. சமூக வலை தளங்கள்


பெரும்பாலனவகள் பயன்படுத்தும் ஒன்று. விரும்பிய தளங்களின் facebook பக்கங்களை Like செய்தும், Twitter இல் follow செய்தும் செய்திகளை உடனுக்குடன் பெறலாம். ஆனால் நண்பர்களால் அதிகளவில் பகிரப்படும் postகளால் முக்கிய  செய்திகள் விடுபட வாய்ப்பு உண்டு!

2.Feedly


இதுவே பெரும் பாலும்  அனைவராலும் விரும்பப்படுகிறது.  அனைத்து கையடக்க இயங்கு தளங்களுக்கு இலவசமான இது Google chrome extension ஆக கிடைக்கிறது. பயன்பாட்டுக்கு மிக இலகுவானது. இதை நிறுவியவுடன் Google Reader உடன் இனைய கோரும். ஆம் என பதில் அளித்த எனக்கு மிகவும் அழகான இடைமுகத்தில் எனது feed களை காட்டியது.



மேலும் சில :

  1. hivemined.org  - இன்னும் பயன்பாட்டில் வரவில்லை- வந்தால் நிச்சயம் 1'ம் இடத்தை பிடிக்கும்.
  2. instapaper சொல்லிக்கொள்ள கூடிய ஒன்று
  3. theoldreader.com - கூகிள் ரீடர் இல் இருந்து Import செய்யும் வசதி இருந்தும் வேலை செய்யவில்லை
  4. netvibes ஆரம்பம் இலவசம்- மேலதிக பல வசதிகள் கிடைக்கின்றன 
இதை விட இன்னும் ஏராளமான சேவைகள் உண்டு. எனினும் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பையும் பல சிக்கல்களையும் கொண்டவை. உங்களுக்கு பொருத்தமானதை பயன்படுத்துங்கள்.