கூகிள் தனது street view இல் இயற்கை அழகு நிறைந்த அந்தாட்டிக்கா கண்டத்தின் பல பாகங்களை சில தினங்களுக்கு முன்னர் இணைத்தது. இதற்கு முன்னரும் இங்கு சில இடங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டன. எவ்வாறாயினும் இம்முறையே அதிகளவான இயற்கை காட்சிகளை உள்ளடக்கி அழகான street view ஆக வெளியிட்டு உள்ளது.உதாரணமாகப் பென்குயின்கள் தொடர்பான காட்சிகளை குறிப்பிடலாம்.
அன்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.
கீழே உள்ள இணைப்புகள் மூலம் நீங்களும் கணணி மூலம் சுற்றுலா சென்று பாருங்கள்.